தொ.மு.சி. ரகுநாதன்
Born
in India
October 20, 1923
Died
December 31, 2001
Genre
|
தாய்
by
—
published
1906
—
5 editions
|
|
|
புதுமைப்பித்தன் வரலாறு / Puthumaipithan Varalaru
—
published
1951
—
4 editions
|
|
|
பஞ்சும் பசியும்
—
published
1951
—
4 editions
|
|
|
அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்
|
|
|
சேற்றில் மலர்ந்த செந்தாமரை
|
|
|
தாய்
|
|
|
தொ.மு.சி எழுத்துலகம்
|
|
|
தொ.மு.சி எழுத்துலகம் 2 (Tho. Mu. Si Ezhuthulagam 2)
|
|
“பசியொரு புறத்தும், நளிர் குளிரொரு புறத்தும், உயிர் பருகி யழிவுற்ற படியே நிசி யொரு புறத்தும், மிகு நிலையறு பலக் குறைவும் நெடிதுயிர் நசிக்கும் எளியோர் இசையுடன் எழும்பும் வகை எதுவென நினைத்துவகை எழுவதை இயற்று பெரியோய் திசைவளர் புகழ்க்குரிய லெனின் எனும் இயற்பெயர் தினகர விரற்குரவனே!”
― அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்
― அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்
“எனது வாழ்க்கை தொடக்கத்தில் சமயப் பணியில் ஈடுபட்டது. அதனால் பல சமய ஆராய்ச்சிப்பேறு எனக்குக் கிடைத்தது. அவ்வாராய்ச்சி பொதுமை உணர்ச்சியை உண்டாக்கியது. சமயங்களின் அடிப்படையாய் உள்ள பொதுமை - சமரசம் - ஏன் உலகில் பரவவில்லை என்று யான் எண்ணுவேன். சிற்சிலபோது ஆழ எண்ணுவேன். எனக்கு ஒன்றும் விளங்குவதில்லை. சிங்காரவேல் செட்டியார் கூட்டுறவு சிறிது விளக்கம் செய்தது. அவ்விளக்கம் பொதுமையை உலகில் பரப்பி நிலைபெறுத்தவல்லது காரல் மார்க்ஸ் கொள்கை என்ற எண்ணத்தை என் உள்ளத்தில் இடம் பெறச் செய்தது." இதன் மூலம் திரு. வி. க, சமய நம்பிக்கை மிக்கவராக விளங்கிய போதிலும், சமுதாய ஏற்றத் தாழ்வைப் போக்கிச் சமநீதி வழங்கும் சஞ்சீவி மூலிகை மார்க்சியம் ஒன்றேயாகும் என்றே அவர் கருதினார் எனத்தெரிகிறது.”
― அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்
― அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்
“லெனின் காலமானபோது, அந்த மாபெரும் தலைவரின் மறைவுக்குப்பின் உடன் வெளிவந்த சிங்காரவேலரின் லேயர் அண்டு கிசான் கெஜட் பத்திரிகையின் 37-1-1924 தேதியிட்ட இதழ், "தோழர்நிக்கொலாய் லெனின் - நினைவாஞ்சலி" என்ற கட்டுரையை முதல் பக்கத்தில் தாங்கி வெளிவந்தது . அதில் சிங்காரவேலர் இவ்வாறு எழுதியிருந்தார்: "மானிடத் துயரங்களைக் களைய முயன்று வந்துள்ள மனித புத்திரர்களிடையே நிக்கொலாய் லெனின் இன்று ஈடிணையற்று விளங்குகிறார். வறுமையின் காரணம் பற்றியும் அதற்கு முடிவு கட்டுவது பற்றியும் ஏனையோர் யாவரும் தெளிவற்ற கற்பனைகளில் ஈடுபட்டுக் கொண்டும், சமுதாய நீதிக்கான கடைசி எல்லை தானம் தான் என்று உபதேசித்துக் கொண்டும் இருந்த வேளையில், உலகத் துயரங்களுக்கான உண்மையான காரணம் சிலர் பலரைச் சுரண்டி வாழ்வதிலேயே அடங்கியிருந்ததை நிக்கொலாய் லெனின் கண்டறிந்தார்; இந்தச் சமுதாய அநீதியைத் தமது சொந்த நாட்டில் சாத்தியமற்ற தாக்குவதிலும் அவர் வெற்றி கண்டார். உலகத் தொழிலாளர்களிடையே இன்று ரஷ்யத் தொழிலாளி தான் மிகவும் மகிழ்ச்சிகரமாக இருப்பதாகக் கருத முடியும். அவரது தோழர்களான நாம் இப்போது யாருடைய மரணத்துக்காக வருந்துகிறோமோ, அந்த அலுப்புச் சலிப்பற்ற உழைப்பாளியே இதற்குப் பிரதான காரணம்.”
― அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்
― அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்
