நாம் யார்?
ஃப்ரய்ட் மனித ‘அடிமனம்’ (‘Unconscious’) பற்றி நிறைய எழுதி உள்ளார். அதன் விளைவாகத்தா ன் ‘எடிபஸ் காம்ப்லெக்ஸ்’ ‘எலெக்ட்ரா காம்ப்லெக்ஸ்’ போன்ற மன பதிப்புகள் குறித்து விவாதித்திருக்கிறார். ‘அடி மனம்'(mind’) என்று ஒன்றை உறுதிப்படுத்துகிறது. ‘மனம்’ எனும்போது அது ஒரு ‘abstract’ நிலையில் வைத்துதான் பேசுகிறோம்.
ஆனால் நவீன விஞ்ஞானம் நம் எண்ணங்கள், உணர்வுகள், செயல்பாடுகள் அனைத்தும் மூளையைச் (Brain) சார்ந்துதான் உருவாகின்றன என்பதால், ‘மனம்’ என்கிற ஒரு abstract கருத்தோட்டத்துக்கு இடமில்லை என்கிறது.
மூளை தலைமைக் காரியாலயம் என்றால் , அது கை,கால் போன்ற மனித உறுப்புகளுக்குச் சில அவசர நேரங்களில் தன்னிச்சையாகச் செயல்பட அதிகாரம் அளித்திருக்கிறது. சிவப்பு விளக்கைக் கண்டதும் நாம் ஓட்டும் வாகனத்துக்கு ‘ப்ரேக்’ போடுவது, நடக்கும் போது எதாவது தடுக்கினால், கீழேவிழாமல் சமாளிப்பது போன்ற செயல்பாடுகள். ஆனால் இவை அனைத்தும் பரும(Concrete) நிலையில் இருக்கும் மூளையின் செயல்பாடே தவிர ‘மனம்’ என்ற ஒரு கற்பிதத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்கிறார்கள் இக்கால க்அள்விஞ்அவர்ஞானிகள். ஆகவே ஃப்ராய்ட் குறிப்பிடும் ‘ அடிமனத்தை’ மூளையோடு இணைத்துப் பார்க்க வேண்டுமே தவிர, ‘மனம்’ என்கிற ஒரு abstraction’ தேவையில்லை என்பது அவர்கள் வாதம்.
அதாவது சுருக்குமாகச் சொல்லப்போனால், அவர்கள் கருத்தின்படி, மனிதன் இயற்கையால் உருவாக்கப்பட்ட ஒரு ரோபாட்! (Robot
Indira Parthasarathy's Blog
- Indira Parthasarathy's profile
- 74 followers

