Jump to ratings and reviews
Rate this book

அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு

Rate this book
இப்படி ஒரு நாவல் இனிமேல் தமிழில் வருமா என்பது சந்தேகம்தான். கி.பி. 258ஆம் ஆண்டு வலேறியன் என்ற ரோமைப் பேரரசன் கிறிஸ்துவர்களை வதைத்தான். திருச்சபையின் சொத்துக்களை சூறையாட நினைத்திருந்தபோது இரண்டாம் சிக்ஸ்தூஸ் என்ற போப் திருச்சபையின் சொத்துக்களை விற்று ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்தார். சொத்துக்கள் எதையும் கைப்பற்ற முடியாத வலேறியன் இரண்டாம் சிக்ஸ்தூஸைக் கொன்றுவிடுகிறான். போப்பின் உதவியாளரான லாரன்ஸையும் சித்ரவதைக்கு உள்ளாக்குகிறான். எப்படியென்றால் இரும்புக் கட்டிலில் லாரன்ஸைப் படுக்க வைத்து, கீழே விறகை மூட்டித் தீ வைக்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக லாரன்ஸின் சதை வேக ஆரம்பிக்கிறது. ஆனால் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் இருக்கிறார் லாரன்ஸ். பின் வலேறியனைப் பார்த்து என்னுடைய ஒரு பக்கம் நன்றாக வெந்து விட்டது, வேண்டுமானால் என்னைத் திருப்பிப் போட்டு வேக வைத்துக் கொள் என்று சொன்னார் லாரன்ஸ். இப்படியான முயற்சிதான் சாருவின் இந்த நாவல்.
இந்த நாவலின் வழியாக தான் நம்பிய கோட்பாட்டிற்காக உயிரையும் துச்சமாக நினைத்து தன் சதையை வாட்டி உண்ணக் கொடுத்திருக்கிறார் சாரு. அன்பு குறித்த நம்பிக்கைகள் கட்டுடைக்கப்படும் அதிர்ச்சியுடன் இச்சமூகம் இப்புதினத்தைப் புசிக்கட்டும்.
- வளன் அரசு

314 pages, Kindle Edition

Published February 1, 2023

4 people are currently reading
34 people want to read

About the author

Charu Nivedita

80 books147 followers
Charu Nivedita (born 18 December 1953) is a postmodern, transgressive Tamil writer, based in Chennai, India. His novel Zero Degree was longlisted for the 2013 edition of Jan Michalski Prize for Literature. Zero Degree was inducted into the prestigious '50 Writers, 50 Books - The Best of Indian Fiction', published by HarperCollins. Vahni Capildeo places Charu Nivedita on par with Vladimir Nabokov, James Joyce and Jean Genet, in her article in the Caribbean Review of Books. He was selected as one among 'Top Ten Indians of the Decade 2001 - 2010' by The Economic Times. He is inspired by Marquis de Sade and Andal. His columns appear in magazines such as Art Review Asia, The Asian Age and Deccan Chronicle.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
10 (22%)
4 stars
14 (31%)
3 stars
17 (37%)
2 stars
3 (6%)
1 star
1 (2%)
Displaying 1 - 8 of 8 reviews
108 reviews3 followers
August 25, 2023
சாரு நிவேதிதா அவர்களின் எழுத்து என்றுமே நேரடியானவை!
வசைகள் என்றால் ஏதோ அண்ணியம் என்று எண்ணும் மனிதர்கள் நிச்சயம் வாசிக்க முடியாது!
அன்பினால் நம்மை எவ்வாறு கட்டுப்படுத்துகிறார்கள். அன்பின் அவஸ்தை தான் நாவல் முழுவதும்!
கொக்கரக்கோ தான் அன்றாட அன்பறாக சிந்திக்கிறார்!

நாவலின் பல நிலைகளில் என்னை மறந்த சிரித்தேன். வைதேகி இதை வாசிக்காமல் இருப்பார்களாக.

அன்பு என்னவெல்லாம் பாடு படுத்தகிறது!! எப்பொழுதும் போல சாருவின் எழுத்தில், யாருக்கும் எந்த தயவு தாட்சநியமுமில்லை.

அன்பின் துன்பங்கள்!!
Profile Image for Sivasankaran.
60 reviews9 followers
February 5, 2023
நான் சாருவுக்கு எழுதிய கடிதத்தில் இந்நாவலை பற்றி குறிப்பிட்டு எழுதியுள்ளேன்.

அன்புள்ள சாருப்பாவுக்கு,

என் பெயர் சிவசங்கரன்.
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில் உங்கள் உரையாடலை கேட்பதற்காக மதுரையிலிருந்து சென்னை வரை வந்து, உங்களையும் சந்தித்தேன். இந்த சந்திப்பை என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகவும், உங்களுடைய "அன்பு" நாவலை இன்னமும் நுண்ணியமாகவும் வாசிக்க ஒரு அடித்தளமாக அமைந்ததாக தான் நான் பார்க்கின்றேன்.

ஏனெனில், அன்றைய தினத்தில், டக்கரான ஒரு சட்டையும், பேண்ட்டும் போட்டுக்கொண்டு, பளபளப்பான தேகத்தோடு வயது எழுபதை நெருங்கி கொண்டிருக்கிறதா? என்ற கேள்வியை மறக்கடித்து ஒரு ராக்ஸ்டாரை போல தான் அண்ணா நூலகத்தில் நுழைந்தீர்கள்.
ஆனால், இந்நாவலை படித்த பிறகு தான், அன்பின் பின்னே, அதன் அழகின் பின்னே இருக்கின்ற சிக்கலான ரகசியம் தெரிந்தது.
அப்போது, இரண்டு ஜீன்ஸில் ஒன்றை ஒளித்து வைத்து கொண்டு தான் வந்திருப்பாரா?
கொடுக்கப்பட்ட தலைப்போ - "கலையும் மீறலும்"; நேரமோ - ஒரு மணி நேரம்; எப்படி இவர் ஒரு மணி நேரத்தில் இதனை பேசி முடிப்பார்? முக்கியமான தலைப்பாயிற்றே என்றும், எப்படி ஒரு நரகத்திற்கு இடையில் இருந்து கொண்டு குறிப்பும் எடுத்து டிப்டாப்பாக வந்திருப்பார்? என்ற கேள்வியும் தோன்றுகிறது.

சென்னையைப் பற்றியும் சரி, பணப் பைத்தியத்தில் அலையும் மனிதர்களை பற்றியும் அவ்வப்போது எழுதிக் கொண்டே வருவதும் சரி, பணத்தின் மீதான வெறுப்பை தாண்டி சமகால மனிதர்கள் மீதான அக்கறையும், குறிப்பாக, இளைஞர்களின் தேடல் குறித்துமான ஆக்கப்பூர்வமான விமர்சனங்களாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நான் ஒரு Teetotallerஆக தான் இன்னமும் உங்கள் எழுத்துக்களை வாசிக்கின்றேன். அந்த கெடு கெட்டவர்களால் நிரம்பிய கும்பல் சொல்வதை மறுக்கவே இந்த ஸ்டேட்மண்ட். ஆமாம், சாருவின் வாசகர்கள் குடிகாரர்கள், மோசம் என்று சொல்வதை எல்லாம் பார்க்கும் போது எனக்கும் கூட உங்களுடைய இரண்டு மந்திர வார்த்தைகள் தேவைப்படுகிறது. "மானுட விடுதலையே என் எழுத்தின் குறிக்கோள்" என்று ஆன பின்பு, இந்த மாறி வசைகள் கொடுத்து வன்மத்தை செலுத்துவதில் தவறில்லை என தோன்றுகிறது.

கொக்கரக்கோ போன்ற ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த, உண்மையை கீழே விழுந்து சிதறிய ஒரு ஒயின் பாட்டிலை போல அப்பட்டமாக பேசுபவர்கள், பழகுபவர்களே இன்றைய காலத்தில் ஒரு மனிதன் மேம்பட பெருமளவு தேவையாக இருக்கிறார்கள்.
புவனேஸ்வரியின் சித்தப்பா கதையை படித்த போது, அந்தப் பக்கத்தின் மேலே "இப்படியும் ஒரு ஆள் நடமாடிக் கொண்டிருக்கிறான்." என்று எழுதிவைத்தேன்.

நான் தஸ்தயெவ்ஸ்கியின் 'கரமசோவ் சகோதரர்கள்' படித்திருக்கிறேன். அதில், "மக்களின் சின்ன மூளைக்கு அது எட்டவில்லை. தனிமனிதனுக்கோ அல்லது சமுதாயத்திற்கோ சுதந்திரத்தை சுமந்து கொண்டிருப்பது போன்ற சிரமம் வேறெதுவும் இல்லை." என்று இவர் கூறியிருப்பார்.
தங்களுடைய மொழிபெயர்ப்பு கதைகளில் ஒன்றில், Alejandra Pizarnik "மனித பிராணியின் முழுமையான சுதந்திரம் என்பது மிகவும் பயங்கரமானது" இப்படி கூறியிருப்பதை எழுதியிருப்பீர்கள்.
இந்த அன்பு நாவலில் 'மானுட விடுதலை' என்னும் அத்தியாயத்தில் அன்பு எப்படி வன்முறையாக, கொடச்சல் கொடுப்பதாக அமைந்து உண்டுபன்னும் எதிர்மறை எண்ணங்களை படிக்க முடிந்தது.
படித்து முடித்த பின், எனக்குள் தோன்றிய கேள்வி, " மனதிர்களுக்கு முழுச்சுதந்திரம் அளிக்கப்பட்டால் அதன் விளைவு என்னவாக இருக்கும்? சகமனிதர்கள் அப்போது எப்படி பழகி கொள்வார்கள்?"

இந்நாவலின் வழியே, அவஸ்தைகளின் மத்தியில் தான் ஒரு எழுத்தாளன் உருவாக முடியும் என்றும், அதிலும் குறிப்பாக, அமைதியற்று, லயமற்று சீர்குலைகிற ஒரு சூழலில் தான் ஒரு படைப்பு தன்னை வலுப்படுத்தி கொண்டே வருகிறது என்பதற்கு ஒரு வாரத்தில் எழுதி முடிக்கப்பட்ட இந்நாவல் தான் சாட்சி.
கொக்கரக்கோ சொல்வது போல, இது, ஸ்டாக் ஹோம் சின்ட்ரோம் தான் எனவும் தோன்றுகிறது.

"வாழ்வின் உண்மைகளை இந்த தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும், அடுத்து வரும் யுகத்துக்கும் எழுதி வைக்கிற வேலையை ரத்தம் கசிய செய்து தீர்த்துக் கொண்டேயிருக்கிற ஒரேயொரு உலுத்தன் தமிழகத்தில் எழுத்தாளன் மட்டுமே!"
என தஞ்சை ப்ரகாஷ் கூறியதை நினைவில் கொண்டு முடிக்கின்றேன்.

உங்களையும், உங்கள் எழுத்துக்களையும் தொடர்ந்து நேசிக்கும் உங்கள் வாசகன்.
#சிவசங்கரன்
This entire review has been hidden because of spoilers.
8 reviews1 follower
April 2, 2023
நாவலின் தலைப்பு கொக்கரக்கோ புராணம் என்றிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் (இதை குறையாகச் சொல்லவில்லை ).

அக்கறை காட்டுகிறேன் பேர்வழி என சுற்றம் ஒருவர் மீது செலுத்தும் வன்முறையே நாவலின் கரு. Repetitive அதிகம்,

ஒழுக்கத்தைப் பற்றிய பொதுபுத்தியை கையில் கிடைத்த எல்லாவற்றைக் கொண்டும் அடித்திருக்கிறார். பாசாங்கும், சமரசமும் இல்லாத எழுத்தே சாருவின் பலம். அது இதிலும் தொடர்கிறது.
Profile Image for Prateeksha.
188 reviews2 followers
June 21, 2024
சாரு நிவேதிதாவை புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று நான் முடிவு செய்தபோது, ​​அவருடைய முதல் புத்தகத்தைத் தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் அவருடைய எழுத்தைப் படித்த பிறகு நீங்கள் அவரை விரும்புவீர்கள் அல்லது அவரை வெறுக்கிறீர்கள், இடையில் இல்லை என்று எனது பெரும்பாலான நண்பர்கள் என்னை எச்சரித்தனர். குறிப்பாக என் ஆண் நண்பர்களிடம் இருந்து மட்டும் இதைக் கேட்டு வியந்தேன், ஏன் என் பெண் நண்பர்கள் யாரும் அவருடைய புத்தகங்களைப் பற்றிப் பேசவில்லையே என்று ஆச்சரியப்பட்டேன். அவரது ஆர்வத்தை மேலும் தூண்டியது. இறுதியாக, எனது நண்பர் ஒருவர் இந்தப் புத்தகத்தை எனக்கு பரிசளித்தார்.

இது ஒரு சுயபுனைவு. நிச்சயமாக, அவரது அற்புதமான எழுத்து மூலம், எது உண்மையானது, எது புனைகதை என்பதை நாம் புரிந்து கொள்ள மாட்டோம். அதுவே இந்நூலின் வெற்றி. அன்பு அல்லது பாசம் எப்படி மனிதர்களை அழிக்கிறது என்பதுதான் முக்கிய கருப்பொருள். உங்கள் குழப்பத்தை என்னால் உணர முடிகிறது. காதல் தூய்மையானது என்று நாம் கூறினாலும். காதல் சில நேரங்களில் பல விஷயங்கள�� பல வழிகளில் களங்கப்படுத்துகிறது என்பதை நாம் புறக்கணிக்க முடியாது. சாரு இந்தப் புத்தகத்தில் அதைத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார். கதை நம் ஆற்றலை உறிஞ்சாது. சாருவின் உறுதியான வேர் அவருடைய சிரமமில்லாத எழுத்து என்று நான் நம்புகிறேன்.
அவருடைய எழுத்து எனக்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்பதை என்னால் தீர்மானிக்க முடியவில்லை. பதிலைப் பெற அவருடைய 5 - 10 புத்தகங்களையாவது படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதுவரை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது ​​அவருடைய முதல் புத்தகத்தைத் தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் அவருடைய எழுத்தைப் படித்த பிறகு நீங்கள் அவரை விரும்புவீர்கள் அல்லது அவரை வெறுக்கிறீர்கள், இடையில் இல்லை.
Profile Image for Ram.
93 reviews
November 19, 2025
சாரு நிவேதிதாவின் அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீரமைப்பு மனு என்பது கதை சொல்லுவதைவிட சிந்தனையைத் தூண்டுவதையே இலக்காகக் கொண்ட ஒரு நாவல். இதில் அன்பு என்பது ஒரே நேரத்தில் உடலும், நினைவுகளும், சுதந்திரமும், சிதைவுமான ஒரு சின்னமாக நடக்கிறது. கதாநாயகனின் அனுபவங்கள் வழியாக அன்பு ஒரு நிலையான உணர்வாக இல்லாமல், அடையாளத்தை மாற்றிக்கொள்ளும் திரவமான சக்தி மாதிரி வெளிப்படுகிறது. இந்த சின்னம் முழு நாவலையும் தாங்கும் முதன்மை தத்துவ கருவாக செயல்பட்டு, மனித உறவுகளின் ‘நிச்சயம் இல்லாத தன்மை’யைப் பின்நவீன பார்வையில் நிரூபிக்கிறது.

இந்த நாவல் ஓர் அனுபவ நாவல் அல்ல ஒரு சிந்தனைக் களம். வித்தியாசமான வாசகர்களுக்கு வித்தியாசமான தாக்கத்தை உருவாக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பின்நவீனத்துவ நுட்பங்களை ரசிக்கும் வாசகர்களுக்கு செழுமையான படைப்பு; ஆனால் நேரடியான கதை மற்றும் உணர்ச்சித் தொடர்ச்சி எதிர்பார்ப்பவர்களுக்கு சற்று கடினமான வாசிப்பு அனுபவம்.
Profile Image for Dharshan.
9 reviews
October 11, 2025
இந்த உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் "அன்பு" என்னும் சொல்லுக்கான விளக்கம் அதீதமாக மாறுபட்டு இருப்பதால் அவரைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு அந்த மாறுதல் விளைக்கும் முரண்கள், தொந்தரவுகள் மற்றும் அழிச்சாட்டியங்களை அதீத நகைச்சுவையுடன் எழுதயிருக்கிறார் சாரு நிவேதிதா.

இந்த நாவல் ஆட்டோபபிஃக்சன் என்பதால், தன் வாழ்வில் நடந்தேறிய சில உண்மைகளையும் கற்பனையோடு கலந்து சுவாரசியமாக படைத்திருக்கிறார். நிறைய இடங்களில் என்னை அறியாமல் குபீரென்று சிரித்துக் கொண்டே படித்தேன் என்பதுதான் உண்மை.

ஒரு கதையைப் படிப்பது போன்ற உணர்வல்லாமல் சாருவுடன் ஒரு நேர்காணலை கண்டது போன்ற உணர்வை எனக்கு கொடுத்தது.

பிறர் மீது அன்பை ஒரு பெரும் சங்கிலியிட்டு பொழிவதும் ஒருவிதமான வன்முறையாகத்தான் தோன்றுகிறது
Profile Image for Itadori Yuji.
5 reviews
February 23, 2024
One of the worst shit.. யாரும் நினைக்காதீங்க... நா amateur nu.. Na 150 novels padichavandha.. So good novel bad novel edhunu enaku theriyum.. Karumo.. 4days waste..
Profile Image for Krishnakumar Mohanasundaram.
712 reviews5 followers
November 5, 2025
Charu Nivedita's works are always cheerful and exuberant to read. Be it a serious subject or highly controversial event, Charu manages to pen them in a jolly good way that a reader doesn't need to plough through the writing to get into the subject. This has always been the uniqueness of Charu's writing.

As cheerful as it maybe, one cannot also ignore the fact of the repetitiveness in his works or most pages resembling a day-to-day dairy writing. This is a huge let down. At one point it gets boring, you find that you have read this already in his other books or his blogs or elsewhere. You see that there is nothing new, nothing original, nothing fresh.

This novel is a mix of both and sadly comprises more of the latter. Most of the book reads like a daily Dairy. The crux is how annoying people can be under the pretext of love and care. It borrows events from his friends, from his fans, from his well wishers, from his acquaintances and largely from his wife, that torture him every living day.

All these events are people trying to care for him or love him, and yet, end up torturing him. These people do not realise it. And they do it again and again. And that is what the author writes strongly about. It is not the enemy who he needs to be cautious about, but rather the friends and family whom he cannot escape from. And he writes about them in his own, simple, lively way.

While a decent read, I do crave for the author to give something as ambitious as Exile or Zero Degree.
Displaying 1 - 8 of 8 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.