What do you think?
Rate this book


160 pages, Paperback
First published January 8, 2009
நான் முதன் முதலில் கைதானது ஓர் அடியாளாக. இப்போது கைதாகி இருப்பது ஒரு போராளியாக.என்று தான் இரண்டு முறை சிறைக்குச் சென்ற அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
'ஜோதி! இங்க வா! இதுதான் பாரதியார் இருந்த சிறை' என்று ஓர் அறையைக் காட்டினார்.
'அப்பிடியா?'
'ஆமா. பாரதியை இந்தச் செல்லுலதான் அடைச்சு வச்சிருந்தாங்களாம். அதோ அங்க கல்வெட்டு இருக்குது பாரு.'
'சரி. இப்ப இங்க இருக்கிறது யாரு?'
'இப்ப யாரும் இங்க இல்ல. இந்துக்களுக்கு மாரியம்மன் கோயில் இருக்கிறது மாதிரி இது கிறிஸ்துவக் கைதிகளின் தேவாலயமாக இருக்குது.'
உள்ளே நுழைந்தோம். மிக நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டு வந்த பூங்காவாக அந்த இடம் இருந்தது. இரு புறமும் பூச்செடிகள். உள்ளே நுழைந்ததும் ஜீன்ஸ் துணியில் 'ஏசு அழைக்கிறார்' என்று நூலினால் எழுதுப்பட்ட வாசகம். உள்ளே அப்படி ஒரு அமைதி.'
'இவ்வளவு சுத்தமாக யார் இதைப் பராமரிக்கிறார்கள்?' என்று கேட்டேன்.
'அதான் சொன்னேன் இல்ல, ஜான் டேவிட்.'
ஜான் டேவிட் மிக அமைதியானவர். எந்த நேரமும் புத்தகமும் கையுமாகவே இருப்பார். மாலை நேரங்களில் மற்ற கைதிகளுடன் கேரம் விளையாடுவார். அவருடைய செல் எப்போதுமே ஒரு மெல்லியத் திரையால் மூடியே இருக்கும். அவருடைய அம்மா, சிறப்பு அனுமதி பெற்று சிறைக்குள் அடிக்கடி வருவார். மற்ற கைதிகளுக்குத் தேவையான மருந்துகளையும் உணவுப் பொருள்களையும் கொண்டுவருவார். எல்லோரிடமும் அன்பாகப் பழகுவார்.
6-Nov-1996 : நாவரசு கொலை செய்யப்பட்டார்தான் செய்தித்தாள் படித்த அனுபவத்தை பக்கம் 56இல் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
11-Mar-1998 : ஜான் டேவிட் குற்றவாளி என்று கடலூர் டிஸ்ட்ரிக்ட் செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பு
5-Oct-2001 : சென்னை உயர் நீதிமன்றம் "போதிய ஆதாரம் இல்லை" என்று சொல்லி ஜான் டேவிட்டை விடுதலை செய்தனர்
20-Apr-2011 : இந்த வழக்கில் சரியான விசாரணை நடத்தாமல், ஜான் டேவிட்டுக்கு கீழ் கோர்ட்டில் விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டதோடு, ''ஜூனியர் மாணவரான நாவரசுவை, ராகிங் என்கிற பெயரில் திட்டமிட்டு சீனியர் மாணவர் ஜான் டேவிட் கொலை செய்தது, ஆதாரப்பூர்வமாகவும், சாட்சிகள் மூலமாகவும் உறுதி செய்யப்பட்டு இருப்பதால், ஜான் டேவிட்டுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. எனவே, ஜான் டேவிட் கோர்ட்டில் உடனடியாக சரணடைய வேண்டும்!'' என்று சுப்ரீம் கோர்ட் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.
பேப்பரைப் பிரித்தேன். துண்டு துண்டாகக் கிடந்தது. ஆங்காங்கே, வெட்டி இருந்தது.பிரேமானந்தா சாமியாரைப் பற்றி நூலாசிரியரின் சிறை நண்பர் கூறியவை.
'என்ன சார்? பேப்பரை வெட்டியிருக்காங்க!' என்று கேட்டேன்.
'அதுவா! ஜெயிலுக்குள்ள பொதுச் செய்தியைத் தவிர வேற எந்தச் செய்தியும் கைதிகளுக்குத் தெரியக்கூடாதுன்னு சென்சார் பண்ணிடுவாங்க தம்பி.'
கைதி தப்பி ஓட்டம், மற்ற சிறைகளில் நடக்கும் சிறைக் கைதிகளின் போராட்டம், சிறைக் கலவரம் போன்ற நிகழ்ச்சிகள் கைதிகளுக்குத் தெரியக்கூடாதென்று நினைத்தது சிறைத்துறை. அப்படித் தெரிந்தால் மற்ற சிறைகளில் உள்ளவர்களும் இது போன்ற செய்லகளில் ஈடுபட்டுவிடுவாரகள் என்று நினைத்து அதுபோன்றச் செய்திகளைத் தணிக்கை செய்து அனுப்பி விடுவார்கள்.
சாமி செல்லவிட்டுட்டு வெளியவே வரமாட்டாரு தம்பி. வாரா வாரம் வியாழக்கிழமை அன்னிக்கி அவங்க ஆசிரமத்து ஆளுங்க வருவாங்க. அன்னிக்கிபூரா அவருக்கு மனு ரூம்லதான் வேலை இருக்கும். ஆசிரமத்து கணக்கு வழக்கு பாக்கிறது, ஆளுங்களை வேலைக்கு வைக்கிறதுன்னு ஒட்டுமொத்த நிர்வாகமும் இங்கேயிருந்தே நடக்கும். வியாழக்கிழமையானா, கடலூர் ஜெயில்ல வேலை பாக்கிறவங்களுக்குச் சம்பளத் தேதி மாதிரிதான். சாமி கையில வியாழக்கிழமைன்னா கத்தை கத்தையா பணம் இருக்கும். சாமி எப்ப தண்டனை வாங்கி இங்க வந்தாரோ, அன்னிக்கே ஆசிரமத்தோட ஆபிஸ் இந்த ஜெயிலுக்குப் பக்கத்துல இருக்கிற ஒரு கட்டடத்துக்கு வந்துடுச்சு. அதுவும் சொந்தக் கட்டடம். என்னமோ, ஏதோ பண்ணிட்டு ஜெயிலுக்குள்ள வந்துட்டாரே தவிர, சாமி ரொம்ப நல்லவரு. யாருக்காவது கஷ்டம்னா உடனே உதவி பண்ணுவாரு. இங்க ஜெயிலுக்குள்ள வந்த சில பேரு ஜாமீன் எடுக்கக்கூட வசதியில்லாத நிலைமைல இருந்தாங்க. அவங்களை சாமி தன்னோட ஆளுங்க மூலமா ஜாமீன்ல எடுத்து உதவி செஞ்சாரு. தண்டனைக் கைதிகளுக்கு ஏதாவது குடும்பக் கஷ்டம்னா பண உதவியெல்லாம் செய்வாரு. உள்ள இருந்த குற்றவாளிங்க வெளியே போறப்போ பல பேருக்கு வேலையே போட்டுக் குடுத்திருக்காரு. எப்பிடிப் பாத்தாலும் சாமியால பலபேரு பொழப்பு ஓடத்தான் செய்யுது.ஒவ்வொரு வருடமும், மஹாசிவராத்திரி இரவில், சிவலிங்கத்தை எடுப்பாராம்.
