Jump to ratings and reviews
Rate this book

நிறமற்ற வானவில் [Niramatra Vanavil]

Rate this book
உலகில் எப்படிப்பட்ட இழப்பை சந்தித்த மனிதனும் வாழ்வதற்கு நியாயமான காரணங்கள் பல இருக்கின்றன என்பதை அழுத்தம் திருத்தமாக இந்த நாவலில் முன் வைக்கிறார் சுஜாதா. சந்தோஷம், துக்கம், பரவசம் என்று எந்த மாதிரியான உணர்ச்சிகளையெல்லாம் இக்கதையின் நாயகன் அனுபவிக்கிறானோ, அது நம்மையும் தொற்றிக் கொள்கிறது. நாவலைப் படிக்கப் படிக்க அடுத்து அவனுக்கு என்ன ஆகுமோ என்ற பதைபதைப்பு ஏற்படுகிறது.

208 pages, Paperback

First published January 1, 2009

17 people are currently reading
336 people want to read

About the author

Sujatha

303 books1,375 followers
Sujatha was the allonym of the Tamil author S. Rangarajan, Author of over 100 novels, 250 short stories, ten books on science, ten stage plays, and a slim volume of poems. He was one of the most popular authors in Tamil literature, and a regular contributor to topical columns in Tamil periodicals such as Ananda Vikatan, Kumudam and Kalki. He had a wide readership, and served for a brief period as the editor of Kumudam, and has also written screenplays and dialogues for several Tamil movies.

As an engineer, he supervised the design and production of the electronic voting machine (EVM) during his tenure at Bharat Electronics Limited (BEL), a machine which is currently used in elections throughout India. As an author he inspired many authors, including Balakumaran, Madhan.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
22 (16%)
4 stars
48 (35%)
3 stars
45 (33%)
2 stars
13 (9%)
1 star
7 (5%)
Displaying 1 - 10 of 10 reviews
Profile Image for Avanthika.
145 reviews855 followers
July 20, 2014
After talking about organ donation in Ullam thurandhavan, this man daringly brings out Living-together in Niramatra Vaanavil (1990s release) :O
Sujatha = trend setter \m/
அப்படி என்ன வாத்தியாரே அவசரம் ? ஏன்யா செத்த ?
Felt bad for Aandal Roja Krishnamurthy.
20 reviews1 follower
January 17, 2022
நிறமற்ற வானவில் - சுஜாதா

இன்னும் ஒரு நூற்றாண்டாவது சிலாகிக்க பட வேண்டியவர் வாத்தியார்! அறிவியலையும் நகைச்சுவையையும் இவரை விட சுவாரஸ்யமாக எழுத முடிந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
குமுதத்தில் இவர் எழுதிய கேள்வி பதிலும், ஆனந்த விகடனில் எழுதிய கற்றதும் பெற்றதும் வாரம் தவறாமல் படித்து தொகுத்து வைத்து மீண்டும் மீண்டும் வாசித்த போது தான் எனக்கு வாசிக்க பிடிக்கும் என்றே நான் உணர்ந்தது. அப்படி ஆரம்பித்த வாசிப்பு பழக்கம் தான் அவரின் புத்தகங்களை தேடித் தேடி படிக்க வைத்தது.

வாழ்வில் விபத்து என்பது எதிர்பாராமல் நடப்பது தான் என்றாலும் அது நெருக்கமானவர்களை எப்படி புரட்டி போடுகிறது என்ற தவிப்பை உணர வைக்கிறது இந்த கதை. எல்லாத்தையும் இழந்த பின் விரக்தியில் தற்கொலைக்கு முயன்று பிழைத்த பின் பித்து பிடித்து அலையும் கிருஷ்ணமூர்த்தியின் வாழ்வில் அவன் சந்திக்கும் ஒரு பெண்ணால் ஏற்படும் மாற்றங்கள் தான் இந்த கதையின் ஓட்டம். எப்பேர்ப்பட்ட இழப்பானாலும் வாழ்வதற்கு ஒரு காரணம் கண்டிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையை தரும் புதினம் இது.

“நம்ம மனசிலே அவங்களைப் பத்திய நினைப்புகள் இருக்கிற வரைக்கும் தே டோன்ட் டை !” இந்த கதையில் வாத்தியார் சொன்ன இந்த வார்த்தைகள் அவருக்கும் பொருந்தும். வாசித்து பாருங்கள்!
Profile Image for Sriram Nagarajan.
84 reviews2 followers
September 13, 2025
Book #30 for the year

இந்தப் புத்தகம் திரு. சுஜாதா அவர்களின் இன்னொரு அற்புதமான படைப்பு. 90-களில் நடைபெறும் இந்தக் கதையின் நாயகன் கிருஷ்ணமூர்த்தி என்கிற மூர்த்தி, ஒரு மென்பொருள் வல்லுநர். மென்பொருள் என்கிற விஷயம் மெல்ல இந்திய சந்தைகளில் ஊடுருவிக்கொண்டிருக்கும் காலம். கைநிறைய சம்பளம், வசதியான வாழ்க்கை, அழகான மனைவி, அறிவான குழந்தை என்று சீராகப் பயணிக்கும் வாழ்க்கையை ஒரு கோர விபத்து புரட்டிப்போடுகிறது.

அந்த விபத்தில் தன் மனைவியையும் மகளையும் மூர்த்தி இழக்கிறான். பித்துப்பிடித்து அலைகிறான், தற்கொலைக்கு முயற்சிக்கிறான். அந்த தற்கொலை பலனளிக்காமல் போகவே ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான். அங்கு தன் கணவனை சுழலில் இழந்த சுப்ரியா என்ற பெண்ணை சந்திக்கிறான். அந்தச் சந்திப்பு அவன் வாழ்வில் என்னவெல்லாம் செய்தது என்பது மீதிக் கதை.

ஒரு மிகப்பெரிய எதிர்பாராத இழப்பை சந்தித்திருக்கும் ஒரு கணவன், அப்பாவின் மனநிலையை ஆசிரியர் மிகவும் உருக்கமாக சித்தரித்திருக்கிறார். மனைவியையும் மகளையும் நினைத்து வருந்தும் மூர்த்தியின் நிலையைப் படித்து நம் கண்களில் நீர் துளிர்க்கிறது. இந்த அவல நிலை மாற வேண்டும் என்று நம் உள்ளம் பதைபதைக்கிறது. அதுவே திரு. சுஜாதாவின் எழுத்தின் வெற்றி.

எதிலும் பிடிப்பில்லாமல் தற்கொலைக்கு முயல ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், வாழ்வதற்கு ஒரே ஒரு பிடிப்பு, ஒரே ஒரு காரணம் மட்டும் போதும் என்பதை ஆணித்தரமாக இந்தப் புத்தகம் எடுத்துரைக்கிறது.
Profile Image for Ananya.
19 reviews
March 1, 2024
I was afraid to read this in public in case I started bawling my eyes out of nowhere. It was so beautiful and heart rendering, and ending was perfect for the rhythm and feel of the novel. The protagonist was so well written, we love him, hate him, feel so so sorry for him, regret the decisions he made, and basically walk the entire story so thoroughly through his shoes of grief. I loved it so much, I'm so happy I have this paperback version because I know I would not read it again if it was an ebook.
53 reviews8 followers
May 27, 2017
One line story “நம்ம Life-ல நமக்கு ரொம்ப பிடிச்சவங்க நம்மவிட்டு போனா, நாமும் போனும்னு இல்ல. நமக்கு பிடிச்ச மாதிரி life அமையும்" (அமைச்சுக்கனும்)
But that way he narrated the story is awwww..... tat is sujatha #legend.... #SujathaStyle #Dialogues
26 reviews
April 10, 2024
அருமையான உளவியல் சார்ந்த திரில்லர் நாவல். ஒரே இரவில் தன் குடும்பத்தை இழந்த ஒருவனின் அதன் பிறகான அவனது வாழ்க்கையை இந்த நாவல் சித்தரிக்கிறது.நாவலின் முடிவு மிக மிக அருமை.
Profile Image for Gowtham Mahalingam.
34 reviews3 followers
May 8, 2015
Very Sumaar One from Thalaivar. I liked the way Krishnamoorthy connected with Supriya and was refused to keep away the book when "Live together" plot started.

The cinematic climax is the very big let down for me, which made me feel one of the low standard works from Thalaivar. Even though we can read without single second boredom as always. The conversation thalaivar builds up is always vera level.

Even in this, when Krishnamoorthy keep on attempting for suicide, his boss
Manavaalan says "Atleast nama contract mudiyura varaikumavadhu..."
Krish: "Tharkolai ku muyarchi panadha nu soldringa. Adhana?"
Manav: "I didn't mean that"
Krish:"No Problem Manavalan! Unga kita enaku pudichadhe, neenga unga Suyanalatha oru naalum marachadhilla. Thats a great quality".

Only Thalaivar can :)
Profile Image for Hemalatha.
5 reviews
September 21, 2013
Aandal, Kalyani - Can never forget them. Good twist at the end finding a poor girl and naming her Aandal.
This entire review has been hidden because of spoilers.
Displaying 1 - 10 of 10 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.