சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வரும் ஷேன் யாங்க் லீ திட்டம் போட்டு இதயாவை காதலிக்கிறான்.அதை தெரிந்துகொண்டு இதயாவின் அப்பா வெங்கடேஷ்வரன் காதலர்களை பிரித்து, தனது தங்கை மதுமதியின் மகனான ஹரிபிரசாத்திற்கு நிச்சயம் செய்கிறார்.
ஆனல் லீ இதயாவை சட்டப்படி திருமணம் செய்துகொண்டு மறைமுகமாக வாழ்க்கை நடத்துகிறான்.அது தெரிந்ததும் ஹரிபிரசாத் இதயாதான் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து லீயை பழிவாங்கத் துடிக்கிறான்.
அதன்பின்தான் லீ யாரென்கிற உண்மை தெரியவருகிறது.அதனால் இதயா லீயை வெறுக்க ஆரம்பிக்கிறாள்.
உண்மை தெரிந்து குடும்பங்கள் பிரிந்துவிடுகிறது.அதிலிருந்து எல்லோரும் எப்படி மீள்கின்றனர் என்பதே குளிர்நகை விலோசனம் நாவலின் கதை.