கி. ராஜநாராயணன், ஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர். இவரது கதை உலகத்தைத் தமிழ் மண்ணுக்கே உரித்தான ஒரு பழத்தோட்டம் என்று சொல்லலாம். வித்தியாசமான மனிதர்களைக் கதாபாத்திரங்களாக மாற்றும் ஆற்றல் இவர் கலை வன்மை.
கி.ரா. வின் 17 சிறுகதைகளை அடக்கிய தொகுப்பில் இருக்கும் ஒவ்வொரு கதையும் ஒரு மனிதனின் வாழ்க்கையும் ஒரு தம்பதியினருடன் வாழ்க்கையும் ஊரின் வாழ்க்கையும் மிருகங்களின் வாழ்வையும் கடவுளின் வாழ்வையும் என பல வகையான வாழ்வியலை கதைகளமாக கொண்டிருந்தது. இவரின் எழுத்தாற்றல் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருந்ததால் பல வகையான உணர்வு எழுச்சியை மனதில் உசுப்பிக் கொண்டே இருந்தது.
சிறுகதை தொகுப்பை வாசித்து முடித்து பின்பு இப்படிப்பட்ட சம்பவங்களையும் கதாபாத்திரங்களையும் நிகழ்வுகளையும் கதையாக எழுதலாமோ என்ற ஞானம் பெற்றேன். சிறுகதை என்பதற்கு ஒரு வடிவம் இருக்கிறது அதை இப்படித்தான் எழுத வேண்டும் இருக்க வேண்டும் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என பல இலக்கிய விமர்சனங்கள் உண்டு. அதே சமயம் சிறுகதையை இப்படியும் எழுதலாம் என ஒரு வடிவத்தை எனக்கு திறந்து வழிகாட்டினார். நானும் என் மனதில் இருக்கும் சம்பவங்களை கதையாக எழத தோணும்போதெல்லாம் எழுதிக் கொண்டுதான் இருப்பேன் ஆனால் சில நேரங்களில் இப்படியும் எழுதலாமா என்று சந்தேகம் என் மனதில் இருந்து கொண்டு தான் இருந்தது. இத்தொகுப்பை வாசித்த பின் ஒரு கதையை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம், அந்த கதை தரும் உணர்வு தான் முக்கியம் என உணர்ந்தேன். இதில் இருக்கின்ற கதைகள் கதாபாத்திரங்கள் இந்த கதாபாத்திரங்களின் வாழ்வியல் எல்லாம் நம்முடைய வாழ்வில் ஏதோரிடத்தில் கண்ட மனிதர்கள் தான் அவர்களை நாம் சர்வ சாதாரணமாக கடந்திருப்போம். அம்மக்களின் வாழ்வியலை தான் கி.ரா காண்பித்திருக்கிறார்.
கரிசல் இலக்கியத்தின் முன்னோடி எனச் சிறப்பிக்கப்படும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்கள் எழுதிய 17 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து தொகுத்த புத்தகம் தான் "மாயமான்".
கரிசல் நிலத்தின் வரலாற்றையும், விவசாய நடைமுறைகளையும், மக்கள் வாழ்க்கை முறைகளைப் பற்றியும் வெவ்வேறான களங்களில் ஒவ்வொரு சிறுகதையும் தனித்துச் செல்கிறது எனலாம்.
பேச்சு மொழியில் இருப்பதால் வாசிக்க எளிதாகவும் தெளிவாகவும் இருக்கிறது. புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பது போல் கி.ரா வை ஓர் எழுத்தாளராக அடையாளங் காண்பதை விடவும், சிறந்த ஒரு கதை சொல்லியாக இனங் காண்பது முற்றிலும் உண்மையானது.
1. கதவு - வாங்கிய கடனுக்கு ஈடாக கதவைப் பறித்துச் சென்ற கதையும் மீட்கப்பட்ட கதையும். சிறந்த சிறுகதை.
The book is collection of short stories that talks about normal people around south districts of tamil nadu - talks more on life style and poorness - It is very close to aram by jeyamohan
Thoughts on some of the stories that had impact on me - kadhavu - about small kids kadhavu - useless sitting in one place - talks on varumai and kids imagination mayaman - chetiyar - govt scheme - how it becomes a problem and makes the person in debt gomathi - man thinking himself becoming towards female - how world sees that kannimai - girl before and after marriage - character change and situation around it pechchi - girl getting pregnant - what happens purappadu - death of a person who escaped death many times kariverpilaigal - old women and men know for working - in final days vilaivu - playing becomes uncomf situation - komanam guruposai - how a person who destroyed the hill is given more respect compared to a normal person deplited in life nilai niruththam - how a servant is given respect when he brings rain karisal kattil oru samsari - how a miser and person with his simple thoughts improve his generation through his selfishness
More than the stories it is the thoughts that the stories bring - may be owing to the writing style that makes the book very special