1934 ம் ஆண்டில் பிறந்த பிரஃபுல்லராய் “ ஜீகாந்தர் ” வங்காளிப்பத்திரிகையின் ஆசிரியராக இருந்துள்ளார் . பின்னர் “ சம்வாத் பிரதின் ” பத்திரிகையிலும் பணிபுரிந்தார் . இவர் நாடுமுழுவதும் பெரும்பாலும் கால் நடையாகவே . சுற்றி மக்களின் வாழ்கையைக் கூர்ந்து கவனித்திருக்கிறார் . 100 க்கு மேற்பட்ட நாவல்கள் . சுமார் 150 சிறுகதைகள் , 10 சிறுவர் கதை , கட்டுரைத் தொகுப்புகள் இயற்றியுள்ளார் . இவருடைய படைப்புகள் ஆங்கிலம் மற்றும் பல இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன . திரைப்படமாகவும் ஆக்கப்பட்டுள்ளன ; பல விருதுகள் பெற்றுள்ளன.
நாட்டின் வடகிழக்குப் பிராந்தியத்தில் பிரிவினைவாத இயக்கத்தில் ஈடுபட்டுள்ள ஒரு போராளி போலீஸ்காரர்களால் துரத்தப்பட்டு , அவர்களிடமிருந்து தப்புவதற்காக ஒரு முன்னாள் சம்ஸ்தான மன்னனின் அரண்மனைக்குள் ஒளிந்து கொண்டு அதில் உள்ளவர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டிக் கொண்டு தங்கியிருக்கிறான் . அந்தவீட்டு மருமகள் அவனை எப்படி சமாளிக்கிறாள் என்பதைச் சுவையாக சொல்லும் இந்த நாவலில் முக்கிய பாத்திரங்களின் உணர்ச்சிகளின் சித்தரிப்போடு நாட்டின் அரசியல் நிலைமையும் விவாதிக்கப்படுகிறது .
மொழிபெயர்ப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி ( 1929 ) சில ஆண்டுகள் கல்லூரியில் பணியாற்றியபின் இந்திய அரசின் தணிக்கைத் துறையில் சேர்ந்தார் . உதவி இயக்குநராகப் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற இவர் அரை நூற்றாண்டு காலமாக தமிழ் , ஆங்கிலம் , வங்காளி மொழிகளில் எழுதியும் , மொழிபெயர்த்தும் வருகிறார் . காஜி நாஸ்ருல் இஸ்லாம் . சரத்சந்திரர் , பிரேம்சந்த் , ஈஸ்வர சந்திர வித்யாசாகர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளைத் தமிழில் எழுதியுள்ளார் . சிலப்பதிகாரம் – ஆங்கில மொழிபெயர்ப்பு , திருக்குறள் – வங்க மொழிபெயர்ப்பு ஆகியவை இவரது படைப்புகளில் முக்கியமானவை . சாகித்திய அகாதெமி விருது ( 1977 ) பெற்ற இந்திரா பார்த்தசரதியின் ” குருதிப்புனல் ” நாவலை தமிழிலிருந்து வங்க மொழியில் “ ரக்தபன்யா ” என்று மொழிபெயர்ப்பு செய்ததற்காக சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்பு விருது 1991 – ல் இவருக்கு வழங்கப்பட்டது .
Prafulla Roy was a Bengali author, lived in West Bengal, India. He received Bankim Puraskar and Sahitya Akademi Award for his literary contribution in Bengali.
புரட்சிகர இயக்கத்தைச் சேர்ந்த ஒருவன் வழக்கொழிந்து போன அரச குடும்பத்தை சில நாட்கள் பினையக்கைதியாக வைத்திருக்கான். அந்த நாட்களில் நடக்கும் நிகழ்வுகள்தான் நாவல்.. சுவாரசியமான சமூக திரில்லர்...