Kanagathin Kural is a translation of Jack London's Call of the wild. It explores the story of dog called Buck and its adventures in artic region. It serves to different masters and at the end it got the ultimate aim of its soul, freedom!
John Griffith Chaney, better known as Jack London, was an American novelist, journalist and activist. A pioneer of commercial fiction and American magazines, he was one of the first American authors to become an international celebrity and earn a large fortune from writing. He was also an innovator in the genre that would later become known as science fiction.
London was part of the radical literary group "The Crowd" in San Francisco and a passionate advocate of animal rights, workers’ rights and socialism. London wrote several works dealing with these topics, such as his dystopian novel The Iron Heel, his non-fiction exposé The People of the Abyss, War of the Classes, and Before Adam.
His most famous works include The Call of the Wild and White Fang, both set in Alaska and the Yukon during the Klondike Gold Rush, as well as the short stories "To Build a Fire", "An Odyssey of the North", and "Love of Life". He also wrote about the South Pacific in stories such as "The Pearls of Parlay" and "The Heathen".
ஆசிரியர் - ஜாக் லண்டன் தமிழில் - பெ தூரன் எதிர் வெளியீடு நாவல் 144 பக்கங்கள்
உலகிலே ஒரு விலங்கினை பற்றி அதிக எண்ணிக்கையில் கதைகள் எழுதப்பட்டுள்ளது என்றால் அது நாய்களை பற்றிதான். நாய்கள் இந்த உலகில் பெரும்பான்மையான காலம் மனிதனை சார்ந்தோ அல்லது மனிதனின் அருகிலேயோ தான் வாழ்கின்றன . மனிதனும் எந்த வித எதிர்பார்ப்புமின்றி தன் குடும்பத்தில் ஒருவராக எண்ணும் அளவிற்கு அதன் மேல் அன்பு செலுத்தி வாழ்ந்து வருகிறான் . இருவருக்குமிடையே மொழியை தாண்டி , இனங்களை தாண்டி வெறும் பார்வையாலும் , தொடுதலாலும் மட்டுமே பெயரிடப்படாத ஓர் உன்னதமான உணர்வு காலம்காலமாக தொடர்ந்து வருகின்றது . வெறும் உணவுக்காக மட்டும்தான் நாய்கள் மனிதனை சார்ந்து வாழ்கின்றதா என்று கேட்டால் ? இல்லை என்றுதான் தோன்றுகிறது . தனக்கான உணவையும் , உறைவிடத்தையும் தானே தேடிக்கண்டடையும் திறன் அவைகளுக்கு இருந்தாலும் மனிதனுடன் அன்புக்கட்டளைக்கு அடிபணிந்து வாழ்வதற்கு மேற்கூறிய காரணங்களை தாண்டி நாம் புரிந்து கொள்ளமுடியாது , உணரமட்டுமே முடிந்த ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது . இந்த உணர்வை , இந்த உறவை பக் என்ற நாயின் வாழ்வின் வழியாக கூறும் நாவல் தான் இந்த கானகத்தின் குரல். அமெரிக்காவின் ஓய்வு பெட்ரா நீதிபதியின் வீட்டில் வளர்ப்பு நாயாக வளரும் பக் (buck ), st bernard இனத்தை சேர்ந்தது.அந்த வீட்டில் வளரும் பல நாய்களில் மிகவும் முக்கியமான இடம் வகித்தது . அந்த வீட்டில் அனைவருடனும் நெருக்கமாகவும் , ராஜ மரியாதையுடனும் வளர்ந்து வருகிறது அதே சமையம் மற்ற நாய்களுக்கு மத்தியில் தன் நிலையை உயர்த்திப்பிடித்து ஒரு தலைவனைப்போல் வாழ்ந்து வருகிறது . இவை எல்லாம் ஒரே நாளில் அந்த வீட்டின் வேலைக்காரனின் சூழ்ச்சியால் தலைகீழாக மாறிவிடுகிறது . பணத்திற்காக பக் திருட்டுத்தனமாக விற்கப்பட்டு தொலை தூரத்திற்கு கடத்தப்படுகிறான் . அதன் பயணம் முழுக்க பல சித்ரவதைகளை அனுபவிக்கிறது . இறுதியில் பல மனிதர்கள் கைமாறி ஒரு பனிப்பிரதேசம் சென்றடைகிறது . அப்பொழுதுதான் அதற்கு புரிகிறது அதனை இந்த பனிப்பிரதேசத்தில் மற்ற வேட்டை நாய்களுடன் இழுவை வண்டி இழுக்கும் வேலைக்காக கொண்டுவந்திருக்கிறார்கள் என்று .
அதன் பின் பக் அந்த சூழலுக்கு தன்னை பழக்கப்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறது . மற்ற வேட்டை நாய்களிடம் இருந்து தனித்திறமைகளை ஒவ்வொன்றாக உற்று நோக்கி கவனமாக கற்றுக்கொள்கிறது . குறிப்பாக எங்கு பார்த்தாலும் பனிப்போர்வை போர்த்திய நிலத்தில் ஒரு வளர்ப்பு நாயான பக் எப்படி உறங்க கற்றுக்கொள்கிறது என்று விவரிக்கும் இடம் நம்மை வியக்க வைக்கிறது . ஒவ்வொரு நாளையும் பெரும் போராட்டத்துடன் கடந்து வரும் பக்கிற்கு மிகப் பெரிய அபாயமாக தோன்றுவது எந்த காரணத்தை கொண்டும் வேட்டை நாய்களிடம் சண்டையில் மோதக்கூடாது என்பதுதான் , அப்படியே மோதினாலும் கீழே விழுந்துவிட கூடாது என்பதுதான் , அப்படி விழுந்தாலும் அங்கு வேடிக்கை பார்க்கும் மொத்த வேட்டை நாய்களும் அதன் மேல் பாய்ந்து அதனை கொன்றுவிடும் . இப்படி பயந்து ஒதுங்கி வாழும் பக் ஒரு நாள் தன் குழுவின் தலைவனை ஒரு போட்டியில் கொன்று தலைவனாக மாறுகிறது . கொஞ்சம் கொஞ்சமாக அந்த சூழலுக்கும் , வாழ்கை முறைக்கும் தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டு ஒரு வேட்டை நாயை விட பல மடங்கு சிறந்த ஒன்றாக உயர்கிறது . தனது எஜமானர்களை இழக்கிறது , புதிய எஜமானர்கள் அதனை கொடுமை படுத்த அதனை தக்க சமயத்தில் காப்பாற்றுகிறான் தார்ன்டன் . தார்ன்டன் மீது பேரன்பு கொள்கிறது , அவனுக்காக பல போட்டிகளை வெல்கிறது . இதன் நடுவே பக்கிற்கு காட்டில் இருந்து ஒரு குரல் கேட்டுக்கொண்டே உள்ளது , அதனை பின்தொடர்ந்து செல்கிறது , அந்த தேடலில் அது தன் பூர்வீகத்தை நினைவுகொள்கிறது , தன் முன்னோர்களில் வாழ்வியல் கண்முன் தெரிகிறது , வேட்டையாட தொடங்குகிறது . ஒரு சில நாட்களில் காடும் , வேட்டையும் அத்தனை பழக்கப்பட்ட ஒன்றாக மாறிவிடுகிறது .அது ஒரு புள்ளி மானை வேட்டையாடும் காட்சி நம் கண்முன்னே ஒரு திரைப்படம் போல விரிகிறது . இந்த தேடலின் நடுவே தார்ன்டன் காட்டுவாசிகளால் தாக்கப்பட்டு இறந்துவிடுகிறான் , பக்கால் இந்த இழப்பை தாங்கிக்கொள்ளாமல் அந்த ஒட்டு மொத காட்டுவாசி கூட்டத்தை எதிர்த்து போரிடுகிறது . அவர்கள் அதனை ஒரு பித்து பிடித்த , ராட்சச , பூதம் போன்ற ஓநாய் என்று கூவி அலறியோடுகின்றனர் . அதன்பிறகு காட்டில் தனியே சுற்றி அலையும் பக் ஒரு ஓநாய் கூட்டத்தை எதிர்க்க நேரிட்டு ஒரு ஓநாயை கொன்றுவிட அந்த ஓநாய் கூட்டத்தை வழிநடத்தும் தலைவனாக உருமாறுகிறது . அதன்பின் அங்கு வாழும் பழங்குடியினர் அந்த பள்ளத்தாக்கில் ஒரு பேயுருவம் கொண்ட பயங்கரமான ஓநாய் போன்ற ஒரு உயிரினம் உலவுவதாகவும் அதன் ஊளை மிகவும் நடுக்கம் கொள்ளவைப்பதாகவும் ஒரு உண்மைக்கதை உலாவத்தொடங்குகிறது.
இது வெறும் ஒரு நாயின் கதையா ? என்று நாம் சிந்தித்து பார்த்தால் நிச்சயம் இல்லை . இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரினத்தின் கதை இது . இதே கதையை மனிதர்கள் தங்கள் வாழ்க்கையோடு பொருத்திப்பார்க்க முடியும் . அப்படி பார்த்தால் பக்கிற்கு நடந்த அனைத்தும் நமக்கும் நடக்கிறது . ஆனால் , ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால் இங்கு பக்கை போல போராடி சூழ்நிலையை புரிந்து கொண்டு , வலிகளை தாங்கிக்கொண்டு , தன் பலத்தை மட்டுமே முன்னிறுத்தி , தன்னுடைய நேரத்திற்காக காத்திருந்து தன் திறமைகளை வெளிக்காட்டி தன்னை நிரூபித்துக்கொள்பவர்கள் குறைவே . அவர்களைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்துக்கொள்ளும் . பிறப்பும் இறப்பும் இங்கு யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை , ஆனால் நடுவில் நாம் வாழும் இந்த வாழ்கை முழுக்க முழுக்க நம்மால் மட்டுமே வடிவமைக்கப்படுகிறது . இந்த கதை சிறியவர் முதல் பெரியவர் வரை எவர் வாசித்தாலும் , உலகில் எந்த மூலையில் எந்த மொழியில் வாசித்தாலும் அவர்கள் தங்கள் வாழ்க்கையோடு பொருத்தி பார்க்க முடியும் . இதுவே ஒரு தலை சிறந்த , காலம் கடந்து ஒரு இலக்கிய படைப்பு நிற்பதற்கு காரணம் . பக் என்ற கதாபாத்திரம் தன்னுடைய தொடர் போராட்டத்தாலும் , வாழ்ந்தேயாக வேண்டும் என்ற துடிப்பாலும் , எக்காரணத்தாலும் வீழ்ந்துவிடக்கூடாது துன்ற பிடிவாதத்தாலும் மட்டுமே ஒரு சரித்திர நாயகனாக உருமாறியது . எப்படி ஒரு கானகத்தின் குரல் பக்கிற்கு கேட்டு அதற்கு செவிசாய்த்து அதன் வழி ஒரு தலைவனாக உருமாறியதோ , அதே போல நம் அனைவருக்குள்ளும் ஒரு தனித்த குரல் , நமக்கு மட்டுமே கேட்கும் ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் அதற்கு செவிசாய்த்து வலி மறந்து அதன் வழி செல்வோம் நிச்சயம் அது வெற்றியின் பாதையாகத்தான் இருக்கும் .
இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான போராட்டத்தையும், அந்தப் போராட்டத்தின் ஊடே மலரும் பிணைப்பையும் மி��� நுணுக்கமாகப் பேசுகிறது இந்தப் புத்தகம். வாசிக்கும்போது நாமும் அந்தப் பனிபடர்ந்த சமவெளியில் உலவுவது போன்ற ஒரு பிரம்மையை ஏற்படுத்துகிறது. வாழ்வியலின் ஒரு புதிய தரிசனம்!"