Jump to ratings and reviews
Rate this book

Periyar

Rate this book
இந்திய அரசியல் களத்தில் இவரைப் போல் இன்னொரு புயல் உருவாகவில்லை. உருவாகப்போவதும் இல்லை. அதிகாரம், ஆட்சி, கட்சி அரசியல் அனைத்துமே வெங்காயம்தான் பெரியாருக்கு. மதம், தேசியம், மொழி, கற்பு என்று புனிதமாகக் கொண்டாடப்படும் அனைத்தையும் போட்டு உடைத்தவர். யாருக்காகவும் எதற்காகவும் சமரசம் செய்துகொண்டதில்லை பெரியார். கண்முன்னால் ஒரு அராஜகமா? தோழர்களே, திரண்டு வாருங்கள் போராடுவோம்! போராட்டம். அது மட்டும்தான் தெரியும். பெரியார் முன்வைத்த நாத்திகவாதம் ஆக்ரோஷமானது, ஆவேசமானது, அறிவியல்பூர்வமானது. நிலச் சீர்திருத்தத்தில் இருந்து தொடங்குவோம் என்று கம்யூனிஸ்டுகள் சொன்னபோது, அமைதியாக ஒதுங்கிக்கொண்டார். மதம். அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஆணிவேர் இதுவே என்றார்.

இந்திய சுதந்தரத்துக்குக் கறுப்புக் கொடி. காந்தி, அண்ணா, ராஜாஜி போன்றவர்களுடன் கருத்து மோதல். மணியம்மை திருமணம். திமுக மீது காட்டமான விமரிசனங்கள். அதிகாரத்துக்கு அடங்கிப்போக மறுக்கும் குணம். சர்ச்சைகளுக்குச் சற்றும் பஞ்சமில்லா வாழ்க்கை அவருடையது. தீரமிக்க போராட்டப் பாரம்பரியம் பெரியாரோடு தொடங்கி பெரியாரோடு முற்றுப்பெறுகிறது. பெரியாரை நம் கண்முன் நிறுத்தும் இந்நூல், வரலாற்றில் அவர் வகித்த பாத்திரத்தையும் சமூகத்தில் அவர் ஏற்படுத்திய மாற்றங்களையும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறது. நூலாசிரியர் ஆர். முத்துக்குமார் சமகால இந்திய அரசியல் சார்ந்த ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர். NHM மினிமேக்ஸ் பதிப்பின் பொறுப்பாசிரியர்.

160 pages, Paperback

First published January 1, 2009

84 people are currently reading
481 people want to read

About the author

பிறந்தது மயிலாடுதுறையில். படித்தது முதுகலை கணிப்பொறிப் பயன்பாடுகள் (M.C.A) கல்கி பத்திரிகையில் சுதந்தரப் பத்திரிகையாளராக எழுதத் தொடங்கி தற்போது கிழக்கு பதிப்பகத்தில் முதன்மைத் துணை ஆசிரியராகப் பணிபுரிகிறார். இந்தியாவில் நிகழும் அரசியல் பிரச்னைகள் குறித்த இவருடைய கட்டுரைகள் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தேசிய அரசியல் மீது தீவிரக் கவனம் செலுத்திவரும் இவருக்கு தமிழக அரசியல் மீது எப்போதும் கவனம் உண்டு. தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகள் தோன்றி வளர்ந்த கதையைப் புத்தககமாகப் பதிவு செய்திருக்கும் இவர் நியூ ஹொரைஸன் மீடியாவின் இன்னொரு பதிப்பான MiniMaxன் பொறுப்பாசிரியராக இயங்கிவருகிறார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
171 (45%)
4 stars
138 (36%)
3 stars
53 (14%)
2 stars
5 (1%)
1 star
6 (1%)
Displaying 1 - 30 of 45 reviews
Profile Image for Karthick.
371 reviews121 followers
August 4, 2015
பெரியார் - இவரை பிடிக்குமா? பிடிக்காதா? என்று கேட்டால் எந்திரன் வசனம் "Its a hypothetical question" என்றே கூறுவேன்.
செப் 17, 1879 இல் "தமிழக அரசியல் அன்னை" ஈன்றெடுத்த முதல் குழந்தை இந்த ராமசாமி!
குறும்புத்தனமும், அடாவாடியுமாக இருந்த ஒரு சிறுவன் தமிழ்நாட்டின் அரசியல் சரித்திரத்தை மாற்றுவான் என்று யார் கண்டாரோ?
முதலில் தந்தையுடன் வணிகத்தில் ஈர்ப்பு, பின் ஈரோடு நகரசபைத் தலைவர், பின் ராஜாஜியுடனும் காங்கிரஸ் உடனும் கூட்டணி, குடியரசு என்ற பத்திரிக்கை நிறுவியது, நீதிக்கட்சி தலைவராக இருந்தது,
நீதிக்கட்சி பின்னர் "திராவிடர் கழகம்" என்று மாறியதே இன்று தி.மு.க ஆகவும் (அண்ணாதுரை பெரியாரை விட்டு பிரிந்து உருவாக்கிய கட்சி),அ.தி.மு.க ஆகவும் (தி.மு.க, எம்.ஜி.ர் யை துரத்தி, பின் உருவாகிய கட்சி) தமிழகத்தை நாலா புறமும் மாறி மாறி 50 ஆண்டுகளாக நம்மை கும்மு கும்ம்னு கும்மி கொண்டிருக்கிறது!

பெரியாரின் பெண்ணுரிமை போராட்டம், தமிழகத்தில் குலக்கல்வி ( இந்தி ஒழிக, தமிழ் வாழ்க) ஒழிக்க போராட்டம், பகுத்தறிவு வளர வேண்டும் என்று பல கொள்கைகள் பாராட்டுக்குரியது என்றாலும்,

பிராமணர்களை பார்ப்பனர்கள் என்று கூற வேண்டும் என்றும், பாம்பையும், பார்ப்பனரையும் கண்டால் பார்ப்பனை அடி என்றும், விநாயகர் சிலை உடைப்பு , ராமன் சிலைக்கு செருப்பு போன்ற சிக்கலான விஷயங்கள் இந்து மதத்தையும், கடவுள் பக்தர்களையும் எரிச்சல் ஊட்டியது உண்மையே (நியாயமும் கூட)!

ஆங்கில மருந்து போல் உடனடி நிவாரணமாக, "கீழ் மக்களை தீண்டாதே என்ற மேன்மக்களை ஒழி" என்று சமூக பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு கண்டது போன்ற எக்கச்சக்க கொள்கைகள்...

பெரியார் ஒரு தவறு செய்து விட்டார்! கல்வியையும் அவர் கொள்கையில் "Extra fit" போட்டிருக்கலாம்!

இந்து சாதிகளில் உயர்ந்தவர்கள் பிராமணர்!
பிராமணர்களுக்கும் மற்ற சாதியினருக்கும் இருந்த ஒரே வேறுபாடு "கல்வி".
இந்த கல்வி ஒன்று மட்டும் சம உரிமையோடு அனைத்து சாதியினருக்கும் "அன்றே" அமைந்திருந்தால், தமிழ்நாட்டை அசைக்க முடியாத ஒரு மாநிலமாக அமைந்திருக்கும் என்பது என்னுடைய கருத்து. அரசியலும் இன்று உருபட்டிருக்கலாம்..


Profile Image for Shyam Sundar.
112 reviews39 followers
July 2, 2015
கடவுள் இல்லை

கடவுள் இல்லை

கடவுள் இல்லவே இல்லை

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்

கடவுளைப் பரப்பினவன் அயோக்கியன்

வணங்குகிறவன் காட்டுமிராண்டி .

இவைதான் பெரியாரின் முதல் கொள்கைகள் !


தீண்டாமை, சாதி வேற்றுமைகள், மூடநம்பிக்கைகள், மடமைச் சடங்குகள் ஆகியவற்றை இவர் கடுமையாக, வன்மையாகக் கண்டித்து அவற்றை விட்டொழிக்கும்படி வலியுறுத்தி இவர், பொதுமக்கள்மீது அவர்களுடைய லட்சியங்கள், நல்வாழ்க்கை விஷயமாகவும் கொண்டுள்ள பற்றுதலும், ஒரு இனத்தவர்கள் மற்ற இனத்தவர்கள்மீது ஆதிக்கம் செலுத்துவதையும் இவர் வெறுத்தார் .

பெரியாரின் வாழ்வை மிகவும் எளிமையாக விவரிகின்றது இப்புத்தகம் . பெரியாரை அறிந்து கொள்ள படிக்க வேண்டிய புத்தகம்
Profile Image for HanSlick.
6 reviews7 followers
March 24, 2022
“அறியப்படாத தந்தை பெரியாரின் சில முக்கிய பக்கங்கள்”


இந்த புத்தகத்தில் இருக்கும் சில அம்சங்கள் இவை :

அவரது பெற்றோர் பற்றி, பாலியம் பற்றி, மண்டி கடை உரிமையாளர் ,ராஜாஜிக்கும் பெரியாருக்கும் இடையிலான உறவு பற்றி, நீதிக்கட்சி பற்றி, காங்கிரசுக்கும் பெரியாருக்கும் இடையிலான உறவு பற்றி, அண்ணாவுக்கும் பெரியாருக்கும் இடையிலான உறவு பற்றி, கருப்பு சட்டைப் படை பற்றி, இந்தி எதிர்ப்பு பற்றி, பிராமணன் அல்ல பிராமணர்

188 reviews4 followers
October 13, 2017
The book focuses only on incidents where periyar was utmost successful and dint reveal the incidents from unbiased standpoint. To some extent, I agree with periyar thoughts and most I wouldnt agree to it. I agree that, periyar was a really a big icon in history to bringup dravidar group to better civilized society or else where upper caste would have dominated thru out for some more time, but the way he dealt few protests is not good I feel. I read in one of the protests where violence crept in, he asked rebels to have a pocket knife in handy which I would condemn very badly. I dont believe in violence and that would bring solution. Also I read somewhere when things dint turn out as he intended it to be, he asked lower caste people to kill brahmins to remove the clutch from their dominance which again is against ahimsa. Few of the thoughts which he revealed is praised and is achieved only by words which are still existing and dint bring change. Any so called rationalist should have tons of patience to bring change over time whch I feel peiyar failed in some cases. Over all good read to know periyar as rationalist as society claims to be!!
Profile Image for Arun Prakash.
1 review
April 22, 2016
The book discussed the time line of Periyar's life, his various protests, political stances, his relationship with other leaders. But the book missed to explain Periyar's relationship with Ambedkar, Periyar's non political stands, Periyar's thoughts on all issues in detail. The book was more like a life history of Periyar and didn't have the complete view on all social issues Periyar worked on.

A good read for the one who is starting to read about Periyar and his life, but for those who already have enough knowledge on Periyar can avoid this and better go for books which clearly explains what Periyarism had and brought to this society.
Profile Image for வெங்கட் பீமசேனன்.
86 reviews2 followers
May 3, 2025
இந்த நூல் எனக்குச் சில அளவுக்கு ஈ.வே.ரா அவர்களின் வாழ்க்கையை அறிய ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஆனால், ஒரு புத்தக வாசிப்பாளராக என்னைச் சுற்றி பல கேள்விகளை எழுப்ப வைத்தது.

புத்தகத்தை படிக்கும்போது அது ஒரு புது பார்வையை தருமா, ஒரு புதுமையான ஆழத்தைக் கொடுப்பதா என்ற எதிர்பார்ப்பு எனக்குள் இருந்தது. ஆனால், நூலின் ஒட்டுமொத்த அமைப்பே ஏற்கனவே வெளியான ஈ.வே.ரா வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை நேரடியாக நூல் வடிவில் மாற்றியதாகவே தோன்றியது.

திரைப்படத்தை முன்பே பார்த்தவர்களுக்கு, இந்த நூலில் புதிதாகக் கற்றுக்கொள்ள ஏதும் இல்லை என்றே சொல்ல வேண்டிய நிலை உருவாகிறது. வாழ்க்கை வரலாறு என்ற பெயரில், ஒரு திரைக்கதையின் பிரதி வாசிக்க வேண்டிய நிலை வாசகருக்கு ஏற்படக்கூடும்.
Profile Image for Arun Kumar Thiruvel Murugaesan Nehru.
41 reviews5 followers
March 4, 2017
A good read. Author is admirer of Periyar; so there's no criticism but only positive aspects of his decisions. Periyar is the most important person in the last century for all the Tamils. Being the architect of Dravidian moment he has steered the politics of TN till his last breath. Some of his visionary policies were implemented by the subsequent DK parties came to power. His thinking on Women rights were exemplary. Though I don't agree with all his decisions and policies, my admiration for his selfless protests for the weak , poor and downtrodden section of society.
Profile Image for Wiki.
73 reviews9 followers
September 22, 2021
ஒரு நாவலுக்கு தேவையான விறுவிறுப்பு இந்த புத்தகத்தில் இருந்தது. வாழ்க்கை வரலாற்றை 150 பக்கங்களில் அடக்குவது என்பது அசாத்தியமான காரியம் அதுவும் தந்தை பெரியார் வாழ்க்கையை, ஆனாலும் ஆர். முத்���ுக்குமார் மிகவும் திட்டமான வடிவில் நமக்கு கொடுத்துள்ளார். பெரியார் பற்றி மேலோட்டமாக தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இந்த புத்தகம் மிகவும் உதவியாக இருக்கும்.
Profile Image for Gowtham.
249 reviews49 followers
July 10, 2020
தமிழர் அனைவரும் ஒருவரை
அவசியம் வாசிக்க வேண்டும்

அவரிடம் சுயமரியாதை அதிகம் உள்ளது
பிடிவாதம் மிக மிக அதிகம்
புரட்சியோ தூக்கல்

அவர் பார்வை தான் இன்றைக்கும்
தமிழகம் கண்ட ஆக சிறந்த பார்வை

சுற்றி இருக்கும் மாநிலங்கள் வியக்க
வளர்ந்து நிர்க்கும் விதை அவர் இட்டது

இன்னும் எத்தணை வருடம் ஆனாலும்
நமக்கான எல்லைச்சாமி "பெரியார்" ஒருவர் தான்.

அவரை படித்து இறுகப்பற்றிக் கொள்வது நம் கடமை!

கை தடி ஆதிக்கத்தை வெளுக்கும்! அடித்து விரட்டும்! டவுசர் இல்லமால் ஓட விடும்!

வாழ்க பகுத்தறிவு பகலவன்
வளர்க நின் புகழ்!

Book: பெரியார்
Author: ஆர். முத்துக்குமார்

❤️🖤
252 reviews39 followers
Read
August 20, 2020
இந்த புத்தகத்தை குறித்த என் பார்வை …… பெரியார் பிறந்த மண்ணில் பிறந்து, வளர்ந்து இருந்தும் , நான் அவரை பற்றி முழுவதுமாக அறிந்திருக்கவில்லை . 2019 , ஆகஸ்டு மாதம் நடந்த புத்தகக் கண்காட்சியில் இந்த புத்தகத்தை வாங்க நேர்ந்தது .
பெரியார் என்ற சொல்லைக் கேட்டவுடன், நினைவுக்கு வருவது, கருப்பு சட்டை, கள்ளுக்கடை மறியலில் தனக்கு சொந்தமான 500 தென்னை மரங்களை வெட்டி சாய்ந்தது, சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியது, இன்னும் பல……
1879 இல் பிறந்தது முதல் அவர் வாழ்கை நகர்ந்த ஒவ்வொரு கட்டமும், அரசியலில் அவர் சந்தித்த வெற்றி , தோல்வி , அவர் அமைத்த நீதிக்கட்சி (தற்போது திராவிடர் கழகம், கி.வீரமணி தலைவராக இருக்கிறார் ) இன்னும் பல தகவல்களைக் கொண்டது , இந்த புத்தகம் .
அனைத்து பிரிவு மக்களையும் சமமாக நடத்த வேண்டும் என்ற கொள்கை, வ.வே.சு ஐயரின் ஆசிரமத்தில் நடந்த ஏற்றத் தாழ்வுகளை நீக்க பாடுபட்டார். ஆனால் அது நிறைவேறாத காரணத்தால் , காங்கிரசில் இருந்து வெளியேறினார்.
ஈ.வெ.ரா கதர்ப் பிரச்சாரம், மது ஒழிப்பு, வகுப்பு வாரி இட ஒதுக்கீடு , வர்ணாசிரமத்திற்கு எதிராக பேசினார் . ஆனால் காங்கிரஸ் காந்தியை வரவழைத்து வர்ணாசிரமத்திற்கு ஆதரவாக பேசியது, இருவருக்கும் இருந்த பிளவு அதிகமாகி கொண்டிருந்தது .
பெண் என்றாலே அடுப்பங்கரையிலும், பிள்ளை பெற்றுத்தரும் எந்திரமாக எண்ணியிருந்த காலத்தில், பெண்ணுரிமையின் அவசியத்தை , அவர் எழுதிவந்த குடியரசு பத்திரிக்கைகளில் தீயாய் ஏற்றினார். அரசியல் ஆளுமைகளில் பெண்களின் உரிமையைக் குறித்தும், கல்வியைக் குறித்தும் அதிகம் பேசியது அவரே (நான் அறிந்த வரை )
1972 இல் இராஜாஜி இறந்த போது , மயானம் வரை சென்றவர். காதல் மனைவி நாகம்மை இறந்த போது கூட கண்ணீர் வடித்திடதா அந்த கண்கள், நண்பரின் மரணத்தை தாங்காது கண்ணீர் வடித்தது .
24.12.1973 , பெரியார் என்னும் புரட்சித் தீ அணைந்தது .
7 reviews2 followers
January 14, 2023
தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளின் அணைத்து சுவரொட்டிகளில் கட்டாயம் இருப்பவர் பெரியார். யார் தான் இந்த பெரியார் என்று எனக்குள் அடிக்கடி தோன்றியது உண்டு. ஆர்.முத்துகுமார் எழுதியுள்ள இந்த புத்தகம் ஒரு தெளிவை தந்துள்ளது . சுயமரியாதையை உயிர் போல் எண்ணிய பெரியார் தன்னுடைய வாலிப பருவத்தில் யாசித்து உண்றது பேராச்சரியத்தை தந்தது.

அன்றைய சமுதாயம் எந்த அளவிற்கு படு நாசமாய் இருந்தது என்றால் குலக்கல்வியை சட்டமாக இயற்றிருக்கிறது தமிழக அரசு. அதை எதிர்த்து பெரியார் போராட்டம் நடத்தாமல் இருந்து இருந்தால் இன்றைக்கு என்னால் இந்த புத்தகத்தையே படித்து இருக்க முடியாது.

அனைத்து சமுகத்தின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி , பெண்ணியம் போன்ற புரட்சிகர சிந்தனைகளை தமிழ் நாட்டில் விதைத்தவர் இவரே என்பதை அறியமுடிந்தது.

எந்த கட்சியுடனும் சமரசம் இல்லாமல் தமிழ் மக்கள் நலன் மட்டுமே ஒரே குறிக்கோள் என்று வாழ்ந்து மறைந்து இருக்கிறார் பெரியார்.
Profile Image for Sivaraj.
7 reviews
December 2, 2019
A great read for for the people those who want to know periyar's life in a short read. Author didn't have to put on much effort to make sure the book wasn't boring since the job was taken care by periyar himself through his unpredictable actions throughout his life. Wont take more that 4 hrs to complete (160 Pages). Most of the major events in periyar's life is covered without much detailing on any events. Probably the author compelled himself to limit the pages, mostly discussing the positive aspects of periyar's ideology and ignores to mention the detailed counter argument of people who was having different opinion (for ex. C.N. Annadhurai). A good start for getting to know periyar.
Profile Image for Saravanakumar S K.
60 reviews5 followers
July 13, 2025
"திராவிட சமுதாயம் என்று நம்மை கூறிக்கொள்ள கஷ்டமாக இருக்கும்போது தமிழர் என்று எல்லோரையும் ஒற்றுமையாக முயற்சி எடுத்தால் கஷ்டங்கள் அதிகமாகும் .
இங்கேயே பாருங்கள் கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன் , தொழர் அண்ணாத்துரை தமிழர் , எங்களுக்குள் ஆயிரம் சாதிப்பிரிவுகள். என்னை பொறுத்தவரை நான் தமிழன் எனச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் . ஆனால் எல்லாக் கன்னடியர்களும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் . தெலுங்கரும் அப்படியே . எனவே திராவிட சமுதாயத்தின் அங்கத்தினர்கள் நாம் : நம்நாடு திராவிட நாடு என்று வரையறுத்துக்கொள்வதில் இவர்களுக்கு ஆட்செபனை இருக்காது." - பெரியார், சேலம், 1944.
23 reviews2 followers
August 20, 2017
பெரியார் பற்றி அறிமுகம்

வெகு நாட்களாய் பெரியார்ப்பற்றி படிக்க நினைத்திருந்தேன். இந்த புத்தகம் அவரைப்பற்றி அறிய நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது. திமுகவை கண்ணீர்துளிகள் கட்சி என்றழைத்தது, காமராஜருடன் நட்பு பின் முரண், திமுகவையும், எம்.ஜி.ஆரையும் பற்றிய அவரது கருத்துக்கள் முதலாக தெரிந்துக்கொள்ள முடிந்தது. தமிழ் எழுத்து மாற்றம் கொண்டு வந்தது. இவரைப்பற்றி மேலும் படிப்பேன்.
25 reviews2 followers
November 7, 2022
சிறப்பான புத்தகம். தமிழன் அனைவரும் பெரியாரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கான ஒரு வாய்ப்பு.

இந்தி திணிப்பு எதிர்ப்பு, சாதிப் போராட்டங்கள், பிராமணர்களுக்கு எதிரான போராட்டங்கள், விழிப்புணர்வு போராட்டங்கள், குலக்கல்வி எதிர்ப்பு இப்படி பல போராட்டங்களை வாழ்நாள் வரையிலும் செய்து தமிழர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை கொடுத்த தலைவர். திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் தந்தை.
27 reviews1 follower
February 19, 2025
I wanted to know Periyar as a person and his influence on TN politics, this book gave it the best way. It's interesting to know that he supported Congress throughout and was not on DMK's side during the elections, esp even in 1967. I hadn't imagined it that way. After reading this book, I really wonder at the hierarchy of Periyar, Anna, Kalaignar... Feels weird!
6 reviews
January 23, 2018
Good book about a great leader

Written with an hawk's eye view.
Really nice to read, as the flow is very good and suitable for fast reading. The entire book is not only mentioning the life history but also heavily sandwiched with the quotes of periyar.

Thanks for the book
Profile Image for Jude Prakash.
9 reviews1 follower
February 21, 2020
பெரியாரின் வாழ்க்கை வரலாறாக

பெரியாரைப் பற்றிய நல்ல அறிமுகம். அவரின் வாழ்வை அழகாக்க படம் பிடித்துக் காட்டுகிறது. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றின் அரிச்சுவடியை அறிய விரும்பபவர்களிற்கு இது ஒரு நல்ல புத்தகமாக அமையும்.
Profile Image for Sanjeev Duglas.
89 reviews4 followers
March 2, 2021
I have read Periyar books .This does not show any of his ideas deeply but it explore his life at peek interest.Explaining important things at his life.Periyar was portrayed a hero in this book.A small quick history book it is..
5 reviews1 follower
February 18, 2024
Amazing Book

Impressive! This book delves into history, chronicling the necessity for political party formation, the leaders involved, and their early struggles both within and outside the party.
2 reviews
April 6, 2024
Concise insight about Periyar and his life. Great read.

A wonderful book which provides a gist of Periyar, his thoughts, life and politics. Periyar is a great personality who had such a far sightedness and had given his voice for rights of women.
Profile Image for Sivaramakkrishnan.S.K.
84 reviews1 follower
January 4, 2018
Good book about Periyar and his life history. Recommend for any beginners who want to know about him.
Profile Image for VR. ParthaSarathy.
6 reviews
January 8, 2020
பெரியாரின் பிடிவாதம் யாரும் வாதம் செய்யாதவாறு உறுதியாக உள்ளன .... 👌
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Bubesh Kumar.
33 reviews
May 2, 2020
Short and UnbIassed biography of the icon of Dravidian movement PERIYAR..
5 reviews
June 10, 2020
A good start to know about periyar. Every page kept me eager and also kept me awake all night.
16 reviews
August 2, 2020
Knowing the facts make me curious..
..
This book had the unknown facts happened in DK and DMK..
Profile Image for Monish B S.
1 review5 followers
August 24, 2020
Short and Crisp. Most of the major events have been included.

Would recommend for those who wants to have a glance on Periyar's life, origin of DMK and ADMK parties.
1 review
December 7, 2020
Good for reading

பெரியாரைப் பற்றி நிறைய புதிய தகவல்களை அறிந்து கொள்ள உதவுகிறது, மிகவும் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது, சிறப்பான எழுத்து நடை, கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்
Displaying 1 - 30 of 45 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.