சாதி, பாலினம் ஆகியவை சார்ந்து இந்துத்துவத்தின் கண்ணோட்டத்திலும் அணுகுமுறையிலும் உள்ள பிரச்சினைகளின் வேர்கள் இந்து மதத்தில் இருப்பதைப் பலரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். 'இந்தியாவில் சாதி' என்னும் நூலை அம்பேத்கர் எழுதும்போது இந்துத்துவம் பெரும் அரசியல் சக்தியாக வளர்ந்திருக்கவில்லை. சாதியத்தின் வேர்கள் இந்து மதத்தில் ஆழமாக வேரோடியுள்ளதையும் அதன் கிளைகள் சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் பல்வேறு வடிவங்களில் பரவியிருப்பதையும் அம்பேத்கர் உரிய ஆதாரங்களுடன் எடுத்துக் கூறுகிறார். பாலினம் சார்ந்தும் அதே விமர்சனத்தை முன்வைக்க முடியும் என இந்த நூலில் வந்தனா சொனால்கர் வாதிடுகிறார். இந்து மதம் சாதியத்தில் மட்டுமின்றி ஆணாதிக்கத்திī