அஜிதா1950 இல் கோழிக்கோட்டில் பிறந்தார். அரசியலில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த மந்தாகினி நாராயணன் - குன்னிக்கல் நாராயணனின் மகள். சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 1968 முதல் ’81 வரை நக்சலைட் இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். புல்பள்ளி காவல்நிலையத்தின்மீது தாக்குதல் தொடுத்த வழக்கில் 1968 முதல் 1977 வரை சிறைத்தண்டனை அனுபவித்தவர். தற்போது அனேஷி வுமன் கௌன்சலிங் சென்டரின் தலைவர்.குளச்சல் யூசுப்தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட இவர், குமரி மாவட்டத்தின் கடற்கரை நகரான குளச்சலில் பிறந்தவர். இலக்கியம் மற்றும் சமூகப் பிரச்சனைகள் சார்ந்து முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை மலையாளத்திலிருந்து தமிழிலும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்காக நாலட&