தனது பெற்றோருக்கு திதி கொடுக்க கயா புறப்படுகிறான் நாயகன், தனது உயிர்த் தோழியின் திருமணத்தில் கலந்து கொள்ள பாட்னா செல்கிறாள் நாயகி. உயிராக நேசித்த இருவரும் சில வருட பிரிவுக்கு பின் எதிர்பாராமல் ஒரே ரயிலில் பயணிக்க நேரிடுகிறது. இந்தப் பயணம் அவர்களின் பிரிவை முடிவுக்கு கொண்டு வந்து இணைத்து வைக்குமா?