1991-ல் நாட்டையே பீதிக்குள் தள்ளிய பெரும் விபத்தொன்று, பெங்களூரின் ஒரு சாதாரணக் குடும்பத்திற்கு ஏற்படுத்திய ஆதங்கம், திகில் மற்றும் இயலாமையை ஆவணப்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த நூலை எழுதும் போது அறிந்து கொண்டேன். எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் ‘திடீர்’ என்று எதிர்ப்படும் எதிர்பாராத நிகழ்வு வாழ்க்கை முழுதும் குற்ற உணர்வை தக்கவைத்து விட்டால் எப்படி இருக்கும்? அது போல, அப்படியொரு வலியை அனுபவித்த நாட்களை முப்பத்தியொரு ஆண்டுகள் யாரிடமும் தெரிவிக்காமல் மனதிலேயே வைத்துக்கொள்வது இருக்கிறதே, அது கொடுமையானது. கடைசியில் அதை எல்லோர் முன் சொல்லிவிட முடிவு செய்த வெங்கடேஷ மூர்த்தி ஒருநாள் எனக்கு போன் செய்தார். அதன் விளைவாக, Ôலிஜிஜிணி மூர்த்தி அழைக்கிறார்Õ என்ற இந்தப் புத்தகம் உங்கள் கைகளில் இருக்கிறது. - சிவகுமார் மாவலி