What do you think?

இரவு [Iravu]
இரவு
இந்த இரவில்
இப்புவியில்
எத்தனை கோடி உயிர்கள் உறவு கொள்கின்றன!
காட்டில் கரிய பெரும் யானைகள்
மண்ணுக்குள் எலிகள்
நீருக்குள் மீன்கள்
பல்லாயிரம் கோடி புழுக்கள் பூச்சிகள்
நாளைய புவி
இங்கே கரு புகுகிறது
நிறைவுடன்
சற்றே சலிப்புடன்
பெருமூச்சு விட்டுக் கொண்டு
திரும்பிப் படுக்கிறது
இரவு
இந்த இரவில்
இப்புவியில்
எத்தனை கோடி உயிர்கள் உறவு கொள்கின்றன!
காட்டில் கரிய பெரும் யானைகள்
மண்ணுக்குள் எலிகள்
நீருக்குள் மீன்கள்
பல்லாயிரம் கோடி புழுக்கள் பூச்சிகள்
நாளைய புவி
இங்கே கரு புகுகிறது
நிறைவுடன்
சற்றே சலிப்புடன்
பெருமூச்சு விட்டுக் கொண்டு
திரும்பிப் படுக்கிறது
இரவு
- GenresFiction
322 pages, Kindle Edition
First published December 1, 2010
About the author
Jeyamohan
212 books881 followersB. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 30 of 41 reviews
May 29, 2011
This is a typical book of modern tamil lit where there are no limits for anything. There is nothing forbidden in the modern tamil literature. Here 'Iravu' (Night), portrays the story about the people who live only in the night. No it is not about the people who has to live in the night due to their work. The book deals about people who chose to live in the night for philosophical reasons.
Te beautiful explanations of the scenaries in the night on the backwaters of Kochi and various other things like the temples, the sea and forest, all are facinating. Jeyamohan one of the reputed contemporary tamil writers and I could understand why.
If you know to read tamil, don't miss it.

August 16, 2014
ஒரு அற்புதமான புதினம் என்றா என்னத்தை தந்து சாதாரணமாக நவல்அக முடிகிறது. குறிப்பாக முகர்ஜி,பிரசண்டனந்த கதாபாத்திரங்கள் தேவியாற்றுதாக தோன்றுகிறது, இல்லை அதை புரிந்துகொளும் வயதோ/அனுபவமோ எனக்கில்லை என்று பட்டது.
சரவணனின் கதாபாத்திரத்தின் மனமாற்றம் மிக இயல்பான ஒன்று.இரவின் மிது ஒரு புதிய பார்வையை விசசெய்கிறார் ஜெயமோகன்.

June 1, 2024
இரவு.
நான் வாசித்த ஜெயமோகனின் இரண்டாவது புத்தகம் இது...
பகலில் உறங்கி, இரவில் கண்விழித்து வாழும் ஒரு சமூகத்தின் கதை...
கதையில் இரவின் அழகையும் ஆழத்தையும் விவரித்த இவரின் வர்ணனை, மொழிநடை, நம்மை ஒரு கணம் "நாமும் இரவு வாழ்க்கை வாழ்ந்து பார்த்தால் என்ன?" என்னும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது...
முற்றிலும் இரவு வாழ்க்கை வாழும் நிஜ மனிதர்களை பற்றிய கதை என்று நினைத்தே இதை தேர்வு செய்ய எண்ணம் ஏற்பட்டது...
சில அத்தியாயங்களுக்கு பிறகு இது ஒரு "Romantic drama" genre போல் கதையின் போக்கு சென்றது...
சற்றே மாறுபட்ட கதைக்களம் என்று எண்ணிக்கொண்டு வாசித்துக்கொண்டு செல்கையில், பாதி கடந்த பின்பு, மற்ற சாதாரண கதைகள் போலவே ஓட்டம் எடுத்து விட்டதோ என்று தோன்றியது...
ஆரம்பத்தில் இரவை பற்றிய பிரமிப்பு ஏற்படுத்தி நம்மை உள்ளிழுத்து சென்ற கதை, முடியும் பொழுது சாதாரண கதைக்களம் போலவே முடிந்தது சற்று வருத்தம் அளித்தது...
இரவின் நாம் அறியா வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக ஒருமுறை வாசிக்க வேண்டிய புத்தகம்❤️

June 7, 2018
ஜெயமோகனை படிக்க ஆரம்பிப்பவர்கள் இப் புத்தகத்திலிருந்து ஆரம்பிக்கலாம் என ஜெயமோகனே ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்.
எந்தச் சிக்கலும் இல்லாமல் நேரடியாகவே நகர்ந்துகொண்டு போகின்ற கதையில் இந்த இரவு, நீலிமா எல்லாம் ஏதோவொன்றின் குறியீடுகள் என்பதை உணரும் கணத்தில் நீங்கள் ‘இரவு’ஐ உண்மையாக புரிந்துகொள்ள ஆரம்பிக்கின்றீர்கள்.

November 8, 2017
இரவின் வண்ணங்களை முழுக்க மனிதனே தீர்மானிக்க முடியும் ஆனால் பகல் அப்படி அல்ல பிரம்மாண்டமான வானத்தால் மனிதனை ஒரு பொருட்டாக்காமல் அவன் மீது கொட்டப்படுவது - ஜெயமோகன்
August 16, 2018
#இரவு ஒரு #யானை <3
ஒருவன் தன் வாழ்நாளை சுருக்கி சொன்னால், தான் மூழ்கிய தருணங்களை மட்டும்தான் சொல்வான். நான் ஆழ்ந்து மூழ்கிய தருணம் இது.
பொதுவாகவே நிலா விரும்பியாகிய நான் இரவை (இரவு நாவலை) இரவில் மட்டுமே வாசித்தேன்... ஒவ்வொரு இரவிலும், இறுக்கத்தில் தனிமையாக தத்தளித்த என்னை இரக்கம் சூழ்ந்தது...
இருப்பை அறிந்துக் கொள்ளவும், இறுமாப்பை அகற்றவும் இரவில் வாழும் மனிதர்களின் கதையை இனிதே அரங்கேற்றி உள்ளார் ஜெயமோகன்...
இரவின் இனிமையையும் இரவுலாவிகளின் வாழ்வியலையும் இயற்க்கை எழில் கொஞ்சும் கேரளத்தில் சரவணன் என்னும் தமிழ் பேசும் ஆடிட்டர் மூலமாக இரவின் கதை ஆரம்பமாகிறது....
காயலுக்கு அருகில் இரண்டு தனிமையான வீட்டில் ஆரம்பிக்கும் கதை, அந்த இரண்டு வீடும் காலியாகி முடிகிறது..
இரவில் தான் மனிதன் வாழனும், காட்டில் கூட அனைத்து விலங்குகளும் இரவில் தான் வாழும் எனவும், மென்மையான அடக்கமான அழகுள்ள நிறங்கள் யாவும் இரவில் தான் காண முடியும் எனவும், தேவையான அளவு தேவையான இடத்தில் மட்டும் ஒளியை விழ செய்து அழகை ரசிக்க இரவில் மட்டுமே முடியும் என இரவின் சிறப்புகளின் வாசிப்பில் மனம் மயங்கி இரவில் மூழ்கி கதையில் பயணப்பட்டேன்.
விஜய் கமலா என்னும் தம்பதிகளின் மூலமாக இரவுலகத்தில் பயணப்படும் சரணவன், இருளில் நெருங்க நெருங்க கண்களுக்கு காட்சிகள் புலப்படுவது போல, வாசிக்க வாசிக்க அதிசயங்களும் ஆச்சிரியங்களும் கிறங்கடிக்கின்றது..
விஜய் கமலாவின் வாழ்க்கையின் ருசியை வாசிப்பில் சுவைக்கும் பொழுது, அவர்களை மாதிரி கடைசி காலத்திலாவது இரவில் மட்டும் வாழ வேண்டும் என்றும், கமலா மாதிரி ஒரு துணை வேண்டும் என்று ஆசையில் அலைந்தது என் எண்ண ஓட்டங்கள்.
கடைசியில் அவர்களுக்கு இடையில் ஏற்படும் துரோகத்தை எனக்கு ஏற்பட்ட துரோகம் என எண்ணி, என் மனம் உருகி உருகி துயரமே இல்லாத தூய சோகம் ஆட்கொண்டு அழக்கூடாது அழக்கூடாது என என் போதம் தடுக்கத் தடுக்க நான் கண்ணீர் விட்டேன் கட்டுப்பாடு இன்றி.!
அந்த நிலவும் அடங்கும் இரவை போன்ற பெண் இங்குண்டோ என்று எண்ணி இருந்தேன், வந்தால் அவள் நீலிமா! <3
“உலகத்திலே எல்லாப் பொண்ணும் ஆம்பிளைங்களை அருவருக்கிறா. எந்த பொண்ணுக்கும் ஆண் உள்ளூர ஒரு பொருட்டே இல்லை” என நீலிமா மனம் திறக்கும் பொழுது என் மனதை பறிக்கொடுத்து விட்டேன்..
நாவல் கற்பனை கதாபாத்திரம் என்பதை தாண்டி நீலிமாவை நிஜமாகவே பார்க்க மனம் ஏங்கியது...கவன சிதறலில் தான் அதீத கவன ஈர்ப்பு உருவாகும் என்ற என் நம்பிக்கை மேலும் வலுப் பெற்றது…
எனக்கு உக்கிரம் தேவையானது, அது இல்லாமல் என்னால் இனிமேல் வாழ முடியாது என்பதை போல் ஆனது... இமைக்காத மயக்கும் விழிகள் போல மயங்கினாள் நீலிமா.
இரவில் ரகசியம் ஏது? ஒவ்வொரு இரவும் நான் தனியாக இல்லை, இரவு என்னும் நீலிமா என்னுடன் இருந்தாள். அவள் தன் தனிமையை பற்றி என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்....
இருட்டு கனத்த கம்பிளி போல உடலை அழுத்தி மூடியது... விழிப்பு நிலையை தாண்டி கனவு நிலையுடன் பேச முடிந்தது அந்த இரவின் அரவணைப்பில்....
ஒரே ஒரு விளக்கொளியில் நடந்துக் கொண்டே புத்தகத்தை படிக்கும் பொழுது, வெளிச்சம் வந்து வந்து போகும். அது போல, இரவு வாழ்க்கை சாத்தியமா என்ற எண்ணம் வந்து வந்து சென்றது வாசிக்கும் பொழுதே.... சரவணனுக்கும் வந்தது, அப்பொழுது அவன் நீலிமாவால் ஆட்கொண்டு இருந்தான் என்னை போல...
நல்ல தத்துவ யானி மத்தவங்கள குழப்பிட்டு தான் தெளிவா இருப்பாங்க என்ற மாதிரி ஒரு சாமியார், பாதிரியார் இந்த கதையில் உண்டு..
அவர்கள் இருவரை வைத்து இந்து மதத்தை உசத்தியும், கிறிஸ்துவ மதத்தை மிகவும் பழிப்பதுபோல முதலில் தோன்றி, பின்பு இரண்டிலும் உள்ள நிறை குறைகளை நேர்த்தியாக விமர்சித்திருப்பர் ஆசிரியர்...
மேலும்,
அவர்கள் இருவரும், சரவணன் இரவில் இருந்தும், நீலிமாவை விடுத்து நீங்க நினைக்கும் பொழுது ஒருவருக்கு ஒருவர் முரண்பாடாக சரவணனுக்கு ஆலோசனைகள் கூற, நாமே குழம்பி போவோம்... குறிப்பாக, " உண்மையை அறிந்த பின்பு, பொய்யில் உன்னால் வாழ முடியாது. நீலிமா ஒரு தேவதை", " அதாவது நான் உன்னை தடுத்து இதிலேயே நிறுத்தி வைக்கவேண்டிய தர்க்கங்களை நான் சொல்ல வேண்டும் என ஆசைப்படுகிறாய்?! "
கடைசியில், " நீ ஒரு பெண்விரும்பி,, பெண்வெறுப்பு உன் நாளில் ஐந்து நிமிடங்களை எடுத்துக் கொள்ளட்டுமே. அது உன் விருப்பத்தை இன்னமும் உண்மையானதாகவும், தீவிரமானதாகவும் ஆக்கும்" என்பதை போன்ற வரிகளை கேட்கும் பொழுது மனம் நீலிமாவால் நிறைந்திருக்கும்....
மனம் ஒரு ஊஞ்சல் மாதிரி, எந்த அளவுக்கு ஒரு பக்கம் எழுகிறதோ, அதே அளவுக்கு மறுபக்கமும் செல்லும். சென்றாக வேண்டும்.
காமமும் நிர்வாணமும் இன்னமும் நமக்கு எளிதானவையாக இல்லை.
“உடல் அதன் புராதனச் சடங்கைச் செய்ய ஆரம்பித்தது” என்று கலவியை எளிமையாக விவரிக்கும் ஆசிரியர், சில இடங்களில் இந்த ஆட்களுக்கு உண்மை உண்மையாக சொன்ன மட்டும் போதாது. அது அறையனும் அதிர வைக்கணும் என சில இடங்களில் அறைந்தும் அதிரவும் வைத்துள்ளார்...
தனிமையின் உக்கிரத்தில் இரவில் மட்டுமே படித்த நாவலின் வாசிப்பு முடிவை எட்ட,
சிந்தனைகள் சிக்கலின்றி சிறகடிக்க, உண்மை அகங்காரமாக ஓங்கி அடிக்க, வலியுடன் நம்பிக்கை எழ, கொடுங்கனவிற்கு திரும்பி செல்ல இயலாமையில் தன்னிரக்கம் தழுவிக் கொண்டது....
நான் மிகவும் துயரமானவனாக, மிகப் பிரியத்திற்குரிய ஒன்றை இழந்தவனாக, திரும்ப அது கிடைக்கவே கிடைக்காது என்று அறிந்தவனாக என்னை உணர்கிறேன்... என் இரவையும் நீலிமாவையும்!! <3
#sjk கார்த்திகேயன் <3 #நீலிமா #யட்சி <3

October 28, 2019
Beautiful book describing beauty of night life.
Anyone who reads this fiction will definitely fall in love with the "night" & "night-life". Author portrays the beauty of night in such a beautiful manner in each and every page of the book.
I would like to recommend the book to anyone who's interested in fictional works.

February 13, 2013
ஜெயமோகனின் "இரவு" நாவல்,..இருளும் இருள் சார்ந்த பகுதிகளையும் அழகான வர்ணனைகளோடு கண் முன் நிறுத்தி காட்டுகிறது .இரவு வாழ்க்கையில் சரவணன் கதாபாத்திரம் படும் அலைகளிபுகளில் நமது மனமும் அலைகளிக்கபடுகிறது .இரவு உங்களை வரவேற்கிறது ....இரவுக்கு ஆயிரம் கண்கள்........
April 6, 2013
இரவு பற்றிய புது பார்வை
வித்தியாசமான வர்ணனைகள்.
வித்தியாசமான வர்ணனைகள்.
July 8, 2013
மனதின் ஆழத்தை வருடி செல்லும் கதை.
March 19, 2014
One of the characters in the novel say that "night life is nothing but a cheap romanticism"
Felt the same about the novel too.
Felt the same about the novel too.
January 12, 2015
"தனிமையை
இரவால் போர்த்திக்கொள்ள முடியும்.
தனிமையின் ஒவ்வொரு சொல்லுடனும்
தாயின் கனிவோடு உரையாட
இருளால் முடியும்."
இரவால் போர்த்திக்கொள்ள முடியும்.
தனிமையின் ஒவ்வொரு சொல்லுடனும்
தாயின் கனிவோடு உரையாட
இருளால் முடியும்."
August 27, 2018
Simply mesmerizing...
September 4, 2026
The book starts with the introduction of the night community and the community members of the night life.
At that point of the time, I felt that it was over romanticism of the night life and i couldn't relate with their pov and disconnected. But felt that, that was the whole point. We often lead to easily judge people or even demonize them when we contradict our ideologies or lifestyle, as we are living the life that is constructed with virtual and materialistic things like money, country, religion, political ideologies. We call new technology called virtual technology when we are already in one. At one point, a conversation between 2 characters about this was very thoughtful.
So Some who are different from the rest of the people, like the people in this night community, think that they are special and are genuinely better humans and special than the others. The author also acknowledges this fact and says that both perceptions are wrong.And at the later point, one of the lead characters acknowledge the over-romanticism of the nightlife.
The reading itself was beautiful and had giggles throughout the pages. There were moments that made me uncomfortable to read, but it was concluded with the justification to bring closure to the story and resolve the contradiction it had in the beginning.

March 1, 2020
இரவுக்கு மட்டும் தான், என்னவோ;
மனித மனம், பண்பு, குணாதிசயம் சற்று இளகியே கிடக்கும். தனிப்பட்ட முறையில், இரவில் தான் நான் ஆசைப்படும் எழுத்து வேலை; கவிதை, கதை என எழுதுவதுண்டு. அப்படிப்பட்ட, தனி சிறப்பு இரவு என்னும் சூழலுக்கு உண்டு.
இதைப்பற்றி எழுதுகையில், உங்களுக்கு கூட இந்நாவலில் ஒரு கதாபாத்திரம் பேசும் வசனம் மாதிரி தான் இருக்கும். " Night life is nothing but a Cheap Romanticism ". இருக்கட்டும்.
நான் இதனைப் படித்து
இரவுத் தோழி என்ற ஒருத்திக்கு
கவிதைகளென எழுதி திரியும்
நானும் கூட ஒரு Cheap Romanticist தான்.
இதோ, எழுதிய கவிதைகள்;
1.இரவில் தான்
நான் உலாவுகின்றேன்,
அறைகளுக்குள் அங்குமிங்கும்.
கூடவே தான்
நூல்களும், எழுதுகோலும்
சிந்தனையும், செதுக்கலும்
என இன்னும் பல
ஆக்கபூர்வமான ஓட்டங்களில் கழிக்கின்றேன்.
என்னுள் தனிமை குடியேற
இரவு ஒரு தோழியாக
எனக்கு போதிக்கிறது,
நட்சத்திர கூட்டங்கள் நடுவிலிருக்கும்
அதன் தனிமைப் பற்றி...
நாங்கள் மாற்றி மாற்றி
சொல்லிக்கொண்டிருக்க...
இப்படியே தான்,
யானும் யாசகனாகி போனேன்
இரவும் சேர்ந்து யாசகம் கொள்கிறது.
#சிவசங்கரன்
2. இரவென்னும்
தோழி அவளோடு
பாய்மரக்கப்பலில்
ஒரு குறுகிய பயணம்.
இருபக்கமும்
இருளின் கரிய ஒளிக்கு
எங்களை சிதறி, நீந்திக் கிடந்த
சருகுகளும், பளபளப்பான மீன்களும்
பரவசமூட்டி ஓருடலாய் ஆக்கி
நிலவென்ற ஒன்றை மறந்து
முடிகோதும் காற்றை மட்டும்
உண்ந்தவாறு
ஓராயிரம் கண்களைக் கொண்டு
அவளை பார்த்து அழைத்த போது,
" அச்சமாய் இருக்கிறதா? " என வினவ
காலம் கைநழுவிப் போக
மெல்ல மெல்ல பிறையின்
மெல்லிய ஒளியை
ஆகங்களின் நடுவே சேர்த்து
கைகளை விரித்தால்
பஷ்பமாகி போனேன்.
நீ அழிக்கும்
' யட்சி 'யா என்றவாறு...
#சிவசங்கரன்
3. இரவு தோழி
அவளின் முன்னிறுத்திய
கொடுங்கேள்விகள்;
வெண் காகிதங்களில்
நீல நிறம் பரப்பி, நிரப்புகிறேன்
கவிதையோ, கதையோ
அவளிடம் உறவாட?
அவளோடு கொண்டாட?
என அவளுடன் உம்மை
சந்திக்க ஆசைபடுகிறேன்.
" அவளை என்
முன் நிறுத்து " என்று வினவ
படகோரம் இருந்த
என்னை நுனிவிரல்
நகங்களோடு கடலில் வீசிவிட்டாள்.
நடக்க முயன்ற, யானோ?
மூழ்காது, உணர்ச்சிப்பெருக்கில்
யானே கடலுக்கு ராஜா?
யானே எழுத்துக்கும் உயிர்?
என்றவாறு மிண்டும்
அந்த கேள்வியை முன்னிறுத்தினேன்.
நீர்க்குமிழிகள் எண்ணிக்கையில்
அதிகரிக்க உள்ளே இழுக்கப்பட்டேன்.
இரவுத் தோழியின்
மங்கலான முகம் தென்பட
ஒரு சில வரிகள் கேட்டதாய் உணர்ந்தேன்;
' ஆசை மட்டும் போதும் ' என......
#சிவசங்கரன்
இனி இது தொடரும் என கண்டிப்புடன் மனம் Unconsciousஆகவும், Consciousயுடனும் முன்வைக்கிறது.
என்னிடம் வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று கேட்டால்,
" ஆசைகள் ஒரு படியும், ஏக்கங்கள் ஒரு சில படியும், அதீத ரசனை பல படியும், அனுபவங்கள் பல படியாக இருக்க வேண்டும் " என முடித்துவிடுவேன்.
கண்டிப்பாக படித்துப் பாருங்கள்.
புது அனுபவமாக
இருக்கும், இதற்காகத்
தானே எல்லாம்!!
இரவு - ஜெயமோகன்
தமிழினி பதிப்பகம்
விலை : 220ரூபாய்
ஆன்லைனில் வாங்க: https://www.commonfolks.in/books/d/iravu

February 18, 2026
ஜெயமோகனின் "இரவு" ஒரு சிறிய நாவல், ஆனால் அதன் ஆழம் சிறியதல்ல. பகல் முழுவதும் தூங்கிவிட்டு இரவில் மட்டும் விழிக்கும் ஒரு சிறு சமூகத்திற்குள் நுழையும் சரவணன் என்ற கதாநாயகனின் கண்களில் இருந்து கதை நகர்கிறது. கேரளாவின் காயல் நீர்நிலைகள், மழை, பழைய கட்டடங்கள், மங்கிய விளக்குகள் என்ற இயற்கைச் சூழல் வெறும் பின்னணி அல்ல — அவை நாவலின் உயிர்மூச்சாக இயங்குகின்றன. உண்ணிகிருஷ்ணன், நீலிமா, மேனன், கமலா, முகர்ஜி, பிரசண்டானந்தா என்ற கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான "இரவை" சுமந்து நிற்கிறார்கள்.நாவலின் கட்டமைப்பு கவிதை நடையிலான அத்தியாயத் தலைப்புகளோடு பிரிக்கப்பட்டிருக்கிறது. இது வெறும் அழகியல் அலங்காரமல்ல — ஒவ்வொரு தலைப்பும் அந்த அத்தியாயத்தின் உள்ளடக்கத்தின் அடையாளமாக இயங்குகிறது.
இந்த நாவல் வெளிப்படையாக ஒரு பயண அனுபவம் போலத் தொடங்கினாலும், அதன் உள்ளடக்கத்தில் அது ஒரு ஆன்மிகத் தேடல், உடல்-மனம்-மதம் ஆகியவற்றின் குழப்பமான சந்திப்பை பதிவு செய்கிறது. கதாநாயகன் ஒரு வெளிப்பார்வையாளர்; காயல், ஆசிரமம், கமலா, மேனன், தாமஸ் போன்றோரின் வாழ்க்கையை அவன் கவனிக்கிறான். ஆரம்ப அத்தியாயங்களில் இயற்கை விவரணைகள் அதிகம் – காயலின் நீர், தென்னைமரங்கள், படகுப் பயணம், இரவின் அமைதி – இவை சூழலை உருவாக்குகின்றன. ஆனால் அந்த அமைதிக்குள் உள்ள மனிதர்களின் உள்ளார்ந்த கலக்கம் மெதுவாக வெளிப்படுகிறது. மத உரையாடல்கள் மேற்பரப்பாக இல்லை; அவை மனிதன் ஏன் நம்புகிறான், ஏன் மாற்றம் தேடுகிறான் என்பதைக் கேட்கின்றன. ஆன்மிக மௌனத்தின் பின்னால் ஒலிக்கும் கடல் சத்தம் போன்ற உருவகங்கள் இலக்கிய வலிமையை காட்டுகின்றன. 'யட்சி' போன்ற நாட்டுப்புற நம்பிக்கைகளையும் நவீன உளவியலையும் இணைத்து அவர் உருவாக்கும் மாய யதார்த்தவாதம் (Magic Realism) ஆச்சரியமளிக்கிறது. இரவு என்பது வெறும் நேரமல்ல, அது ஒரு மனநிலை என்பதை நாவல் தர்க்கரீதியாக நிறுவுகிறது.
இந்த நாவல் மதத்தின் அரசியல், ஆன்மிகத்தின் வணிகமயமாக்கல், தனிமனிதனின் வெற்றிட உணர்வு ஆகியவற்றை பேசுகிறது. மேனன் போன்றவர் தியானத்தில் நம்பிக்கை இல்லை என சொன்னாலும், அந்த மையத்தில் தங்கி இருக்கிறார்; இது நடுத்தர வர்க்கத்தின் உளவியல் முரண்பாட்டைக் காட்டுகிறது. கமலாவின் ஆன்மிக ஈடுபாடு மற்றும் அவளைச் சுற்றியுள்ள ஆண்களின் பார்வை – குறிப்பாக இரவுக் காட்சிகளில் அவளின் உடல் அழகை கவனிக்கும் விதம் – பெண்ணை ஆன்மிக சின்னமாகவும், உடல் ஆசையின் பொருளாகவும் இரண்டாகப் பிளக்கும் சமூக மனநிலையை வெளிப்படுத்துகிறது.
ஜெயமோகனின் மிகப்பெரிய சாதனை என்னவென்றால், "இரவு" என்ற சொல்லை ஒரு பன்முக குறியீடாக மாற்றியதுதான். நாவலில் இரவு என்பது வெறும் நேரமல்ல — அது மனித மனத்தின் ஆழத்தில் உள்ள இருண்ட, ஆராயப்படாத, வெளிச்சம் படாத பகுதிகளின் உருவகம். பகலின் ஒழுக்கங்கள், கட்டுப்பாடுகள், சமூக நெறிகள் — இவை எல்லாம் இரவில் உருக்குலைகின்றன. அந்த உருக்குலைவின் ஆழத்தில் என்னிருக்கிறது என்பதை நாவல் ஆராய்கிறது. கதையின் கால ஓட்டம் சில இடங்களில் குழப்பமாக இருக்கிறது — எது நடந்தது, எது கனவு, எது நினைவு என்ற வரையறை இல்லாமல் கலைந்துகிடக்கிறது. இது வேண்டுமென்றே செய்யப்பட்ட உத்தியாக இருந்தாலும், வாசகனை அலட்சியப்படுத்தும் அளவுக்கு போய்விடுகிறது.
நாவல் ஒரு துணிச்சலான கேள்வி கேட்கிறது — நவீன சமூகம் "பகலில்" வாழ்வதற்கு மட்டுமே அமைக்கப்பட்டிருக்கிறதா? ரயில், பத்திரிகை, தொழிற்சங்கம், ஆட்டோ என்று நகரத்தின் பகல் கட்டமைப்புகளை பட்டியலிட்டு விட்டு, அந்த கட்டமைப்புகளுக்கு "எதிர்பக்கம்" என்று இரவை வரையறுக்கிறது. இது ஒரு சக்திவாய்ந்த சமூக அவதானிப்பு. நவீன நகர வாழ்க்கை மனிதனின் ஆழ உணர்வுகளை பகலில் அமுக்கிவைக்கிறது, அவை இரவில் மட்டும் வெளிப்படுகின்றன என்ற வாதம் உளவியல் ரீதியாகவும் உண்மையானது.ஒரு தமிழ் மனிதன் கேரளாவில் உணர்வது என்ன என்பதை நாவல் நுட்பமாக காட்டுகிறது. இது "வெளியாள் பார்வை" அல்ல — ஏனென்றால் ஜெயமோகன் இரண்டு கலாச்சாரங்களிலும் ஆழமாக வேரூன்றியவர். அதனால் ஒப்பீடு பரிசீலனையாக இருக்கிறது, கேலியாக இல்லை.
கதை நேரடி மோதல் இல்லாமல் நீள்கிறது. சில அத்தியாயங்களில் விவரிப்பு அதிகமாக இருப்பதால் கதை நகர்வு மந்தமாகிறது. கதாநாயகனின் உளவியல் நிலை சில இடங்களில் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. நாவல் முழுக்க, பெண் கதாபாத்திரங்கள் கதாநாயகனின் "உணர்வுகளை தூண்டுவதற்கான" கருவிகளாக மட்டுமே இருக்கின்றன என்ற குறை இருக்கிறது. மேலும் சில காட்சிகளில் பெண் உடல் விவரிப்பு அதிகமாக இருப்பது கதை நோக்கத்துக்கு மேலானதாகத் தோன்றுகிறது; அது வாசகருக்கு அதிர்ச்சி அல்லது கவர்ச்சி தரலாம், ஆனால் அவசியமா என்ற கேள்வி எழுகிறது.
வர்க்க வேறுபாடுகள் நாவலில் கவனிக்கப்படுகின்றன, ஆனால் ஆழமாக ஆராயப்படுவதில்லை. கேரளாவில் ஒரு வீட்டில் தங்கும் நடுத்தர வர்க்க நகர மனிதன், சாதி மற்றும் சமூக படிநிலைகளை கவனிக்கவே மறந்துவிடுகிறான். ஒரு மலையாளி வீட்டில் வேலை செய்யும் மக்கள், சேவை வழங்குவோர் — இவர்களைப் பற்றி எந்த கேள்வியும் எழுப்பப்படுவதில்லை.நாவலில் பல இடங்களில் தமிழ், மலையாளம், ஆங்கிலம் என்று மொழி மாறி மாறி வருகிறது. இது யதார்த்தத்தை காட்ட வேண்டும் என்று தோன்றுகிறது, ஆனால் ஒரு வாசகனுக்கு — குறிப்பாக மூன்று மொழியும் நன்றாக தெரியாதவனுக்கு — இது வாசிப்பு அனுபவத்தை குழப்புகிறது. மதம் மற்றும் தத்துவம் பற்றிய முகர்ஜி உரையாடல்கள் — சாக்தம், சிவம், சக்தி, இந்திய மதங்களில் இருக்கும் ஆற்றல் கோட்பாடுகள் — இவை அறிவியல் சர்ச்சையை வேண்டுமென்றே தவிர்த்து, ஒரு நம்பிக்கையாளரின் உள் அனுபவமாக சொல்லப்படுகின்றன. இது ஒரு நேர்மையான சித்தரிப்பு.நாவலில் ஒருவிதமான இருண்மையும் (Gloominess), மனித உறவுகளின் சிதைவும் அப்பட்டமாகச் சித்தரிக்கப்படுகின்றன. சில இடங்களில் கதாபாத்திரங்களின் தர்க்கங்கள் மற்றும் உரையாடல்கள் மிக நீளமாகவும், சாதாரண வாசகனுக்குக் கடினமான தத்துவச் சுமையாகவும் மாறுகின்றன. மனித மனத்தின் விகாரங்களையும், அடக்கி வைக்கப்பட்ட ஆசைகளையும் 'அசிங்கம்' என்று சொல்லத்தக்க அளவிற்குத் துணிச்சலாகவும், சில இடங்களில் அருவருப்பாகவும் நாவல் பதிவு செய்கிறது. ஒழுக்க விழுமியங்களுக்கு அப்பாற்பட்டு மனிதர்கள் இயங்கும் தருணங்கள் சமூக ரீதியாக அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.
நாவலில் "இரவு விரும்பிகள்" என்று சித்தரிக்கப்படுவோர் எல்லாரும் படித்தவர்கள், நடுத்தர-உயர் வர்க்கத்தினர். இரவில் உழைக்கும் தொழிலாளர்கள் — கடைக்காரர்கள், ஆட்டோ ஓட்டுனர், வீட்டு வேலையாட்கள் — இவர்களின் "இரவு" எப்படிப்பட்டது என்ற கேள்வி நாவலில் எழுப்பப்படவே இல்லை. "இரவை தேர்வு செய்தல்" என்பது ஒரு சுதந்திரம் — அந்த சுதந்திரம் யாருக்கு இருக்கிறது என்ற கேள்வி கேட்காமல் போனது ஒரு குறை. நாவலின் இறுதி திறந்த கேள்வியாக நிறைவடைகிறது — இரவின் இரவு யோக ஆழமா அல்லது காம மோகத்தின் ஆழமா? இந்த திறந்த தன்மை கலை ரீதியாக சரிதான், ஆனால் சமூகவியல் அடிப்படையில் ஒரு நிலைப்பாடு இல்லாமல் போவது வாசகனை ஒரு தொங்கும் நிலையில் விட்டுவிடுகிறது.நாவலில் ஒரு குறிப்பிட்ட வகை "இரவு விழிப்பு" மகிமைப்படுத்தப்படுகிறது — அது படித்தவர்களுக்கும், கலை-ஆன்மிக ஆர்வமுள்ளவர்களுக்கும் மட்டும் உரியதாக காட்டப்படுகிறது. இது ஒரு வகையான எலிட்டிசம் (elitism). சாமானியர்களின் இரவு அனுபவம் — உழைப்பினால் வருகிற தூக்கம், வறுமையின் இரவு, குடும்ப கஷ்டங்களின் இரவு — இவை எல்லாம் இந்த நாவலின் "இரவு" கோட்பாட்டிற்கு வெளியே நிற்கின்றன. இந்த மௌனம் நாவலின் சமூகவியல் பரிமாணத்தை குறுக்குகிறது.
யானை உரை நாவலில் மிகவும் சக்திவாய்ந்த பகுதி.
இந்த நாவல் வாசிக்க மதிப்புள்ளது, ஆனால் ஒரே இரவில் வாசித்து முடிக்கும் படைப்பு அல்ல — சிறிது சிறிதாக ரசித்து படிக்க வேண்டியது."இரவு" என்ற குறியீட்டை இவ்வளவு ஆழமாக, இவ்வளவு அழகாக கட்டியெழுப்பிய படைப்பு தமிழ் இலக்கியத்தில் அரிதானது. கேரளாவின் காயல் வர்ணனை, யானை உரையின் தத்துவ ஆழம், நீலிமாவின் குறைந்த வார்த்தைகளில் சொல்லப்படும் உணர்வுகள் இவை எல்லாம் சேர்ந்து ஒரு தனித்துவமான வாசிப்பு அனுபவத்தை தருகின்றன.இரவில் மட்டும் வாசிக்கப்பட வேண்டிய ஒரு நாவல் இது — ஏனென்றால் இரவில் வாசிக்கும்போது மட்டுமே நாவல் சொல்வது முழுமையாக உணரமுடியும்.இலக்கிய மொழி மற்றும் சமூக விமர்சனம் வலிமையானவை; ஆனால் கட்டமைப்பு மற்றும் சுருக்கமான தொகுப்பில் சீரமைப்பு இருந்தால் இது மேலும் உயர்ந்த படைப்பாக இருந்திருக்கும்.
ஜெயமோகனை முதல் முறை படிப்பவர்களுக்கு இந்த நாவல் மிகவும் பொருத்தமான நுழைவு வாயில். விஷ்ணுபுரம், வெண்முரசு போன்ற பிரமாண்ட படைப்புகளுக்கு முன்னால் இரவு வாசிக்கப்பட வேண்டியது.

August 18, 2024
ஜெயமோகனின் 'இரவு' நாவல், இரவைப் பற்றியதும், இரவில் விழித்து பகல் முழுதும் உறங்கி ஒரு தலைகீழ் வாழ்க்கையை வாழும் ஒரு சிறு சமூக குழுவைப் பற்றியதுமான கவித்துவமான மொழிநடையில் எழுதப்பட்ட படைப்பு. மேலோட்டமாக நாவலின் கதை , பல்வேறு காரணங்களுக்காக இரவு வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் சில மனிதர்களின் வாழ்வும், இதனுள் எதேச்சையாக நுழையும் ஒருவனுக்கு அந்த மனிதர்களுடன் ஏற்படும் உறவும் என கொண்டிருக்கிறது. ஆனால் நாவலின் உள்ளடுக்கில் நிகழும் பல பகுதிகளான இரவு குறித்து வரும் விவரணைகள், இரவு VS பகல் குறித்தான உரையாடல்கள், புது வாழ்வை தேர்ந்தெடுக்கும் பொது ஏற்படும் மனக்குழப்பங்கள், இரவு வாழ்க்கை ஒரு படிமமாக உருமாறுவது போன்றவை வாசகனுக்கு ஒரு புதிய வாசிப்பனுவத்தையும், ஒரு வித அக எழுச்சியையும் அளிக்கிறது.
நம் மனத்தின் வழியே நாம் நம் உலகை உருவாக்குகிறோம், மனத்தின் நீட்சிதான் நாம் காணும் உலகம், நம் மனம் முடிவுறும்போது (இறக்கும் போது) நம்முடன் சேர்ந்து நம்முடைய உலகமும் முடிவுறுகிறது. இவ்வாறு மனத்திற்கு அப்பால் தொடர்ச்சியில்லாததை மாயை (Illusion) என்றும், உண்மை (reality) என்பது தனி நபரின் மனதை தாண்டிய தொடர்ச்சி கொண்டது என்றும் ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. அனால் இந்நாவலில் வரும் பொது மாயை (Common Illusion) என்னும் சொல், உண்மையின் வரையறையை முழுவதுமாக கேள்விக்குள்ளாக்குகிறது. உண்மை பொதுவானதா அல்லது தனி மனித மனத்திற்குரியதா என்றொரு தத்துவ கேள்வியை முன்வைக்கிறது.
ஆசிரியர் தன் மொழியாளுமையால் சொற்களால் விவரிக்க முடியாத உணர்வுகளை சொற்களின் வழியே கடத்திவிடுகிறார். கதை நிகழ்விடத்தை விவரிக்கும் மொழி உருவாக்கும் மனக்காட்சிகள், தத்துவ விசாரணைகள் மற்றும் உரையாடல்கள் தரும் மன எழுச்சி, முற்றிலும் புதிய சூழலை எதிர்கொள்ளும் கதாபாத்திரத்தின் குழப்பங்கள் அளிக்கும் மன சஞ்சலங்கள், வழமையிருந்து விடுபட்டு புது வாழ்வை கோரும் உந்துதல், போலியிலுருந்து விலகி உண்மையை நோக்கி நகர விளையும் இலட்சியம் என இந்நாவல் பலவித உணர்வெழுச்சியையும், தனித்துவமான வாசிப்பனுவத்தையும் வாசகனுக்கு அளிக்கிறது.
கனவின் வழி நிஜ வாழ்வில் பெரும் விடுதலை, இயல்பு மீறல்களின் சாதாரணத்தன்மை, அறியாமையின் ஒளி, அறிவின் இருள், இரவின் வெளிச்சம், பகலின் இருட்டு என்று இந்நூல் உணர்த்தும் முரண்கள், நாம் இதுகாறும் கொண்டிருந்த நம்பிக்கைகளை அசைத்து பார்த்து ஒரு புதிய பார்வையை முன்வைக்கிறது.

August 15, 2017
ஒரு சில ஆசிரியர்களால் மட்டுமே படிப்பவரை கதைக்களத்திற்க்கு கொண்டு செல்ல முடியும் . படிக்கும் போது கதையில் வரும் சுவாரசியத்தையும் படப்படப்பையும் வாசகர்களுக்கு ஏற்றுவதை அனைத்து ஆசிரியர்களாலும் செய்ய முடியாது, நீலிமா வை பார்க்கும் போதும் ஆசிரமத்திற்க்கு செல்லும் போதும் சரவணவிற்க்குள் ஏற்படும் அதிர்வு நமக்குள்ளும் ஏற்படும். வாசித்த அனைவருக்கும் கண்டிப்பாக ஒருநாளாவது அந்த இரவு வாழ்க்கையை வாழ்ந்துவிட ஆசை தோன்ற வைக்கும் நாவல். இரவை பற்றி புதிய பரிணாமம், வர்ணனை படிப்பவரை கவர்ந்து கட்டி போடக்கூடிய நாவல்👏👏👏
February 8, 2014
இரவு, யட்சி, பிரக்ஞை, காயல், சமூகம், உக்கிரம் போன்ற சொற்கள் திரும்ப திரும்ப வருகின்றன, கான்செப்ட் செம, கதை கொஞ்சம் இழுவை போல தெரிகிறது எனக்கு.
July 6, 2014
a magical journey...
சில இடங்கள்ல (முக்கியமா முடிவு) 'காடு' ஞாபகம் வந்தது... இன்னொரு முறை நிதானமா படிக்கனும்.

This entire review has been hidden because of spoilers.
Want to Read
July 27, 2015nothing
June 7, 2016
ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகபடுத்தியது. இரவு வாழ்க்கை பற்றி ஒரு விதமாந ஏக்கத்தை நமக்கு விட்டு செல்கிறார்.
Read
July 11, 2021Mesmerizing!
December 8, 2025
Iravu, a masterful novel by Jayamohan, is a profound exploration of lives shrouded in darkness—both literal and metaphorical. It delves into the raw, unfiltered emotions of those who inhabit the margins, painting a world where vulnerability coexists with unwavering strength.
The characters are strikingly unique: individuals who exude absolute confidence, untouched by the guilt or moral hesitation that often defines ordinary existence. They stand apart from the mediocrity of conventional human frailty, embracing life with a clarity and conviction that feels almost elemental.
Reading Iravu is an immersive experience—its narrative pulses with intensity, challenging perceptions of morality and identity. In their boldness and philosophical depth, these characters evoke comparisons to the towering figures in Ayn Rand’s works, embodying ideals that transcend societal norms.
An extraordinary read that lingers long after the last page.

October 10, 2024
பகலில் உறங்கி, இரவில் கண்விழித்து வாழும் ஒரு சமூகத்தின் கதை...
கதையில் இரவின் அழகையும் ஆழத்தையும் விவரித்த ஆசிரியரின் வர்ணனை, மொழிநடை, நம்மை ஒரு கணம் "நாமும் இரவு வாழ்க்கை வாழ்ந்து பார்த்தால் என்ன?" என்னும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஒரே ஒரு விளக்கொளியில் நடந்துக் கொண்டே புத்தகத்தை படிக்கும் பொழுது, வெளிச்சம் வந்து வந்து போவது போல, இரவு வாழ்க்கை சாத்தியமா என்ற எண்ணம் வந்து வந்து சென்றது வாசிக்கும் பொழுது.
கேரள மண் சார்ந்த வாழ்க்கை, உணவு, யட்சிகளின் கதைகள், மொழிகளின் வரலாறு, கொடுங்கநல்லூர் கோவிலின் சிறப்பு அம்சங்கள், ஏராளமான உளவியல் தகவல்கள் என்று கதையை தாண்டியும் அள்ளி அள்ளி கருத்துகளை கொடுக்கிறார் இந்நூலின் ஆசிரியர் ஜெயமோகன்.
சற்றே மாறுபட்ட கதைக்களம் என்று எண்ணி வாசித்துக்கொண்டு செல்கையில், பாதி கடந்த பின்பு, மற்ற சாதாரண கதைகள் போலவே ஓட்டம் எடுத்து விட்டதோ என்ற எண்ணம் தோன்றியது.
இரவு வாழ்க்கை பற்றி ஒருவிதமான ஏக்கத்தை நமக்கு விட்டு செல்கிறது இந்த இரவு.

July 2, 2026
Another fantastic book by Je. After reading the novel, I long to join the community of night society. Are there really some people who exist like that?
The descriptions of the backwaters will take you to Kerala. So many melodious songs are mentioned in the novel. I heard them and fell in love with 80s Malayalam songs.
Neelima is such a powerful character. She is beautiful, bold and very clear in what she wants.
Climax was a bit forced. But that doesn't take out the joy of reading this wonderful novel. So many philosophical questions. Only Je can bring this in a romantic novel. A good read for all and must read for Je fans.

December 15, 2022
இந்நாவலில் இரவில் வாழும் மனிதக்குழுக்களின் பார்வையைச்சொல்லுகிறது அவர்களுக்கிருக்கும் இயற்கை மற்றும் மனிதர்களின் பற்றிய பார்வை பற்றி இந்த நாவலில் ஜெயமோகன் விவரிக்கிறார்
.
.
இதை படிக்கும் போது நான் இந்த நாவலை வேகமாக படித்து முடித்து விடக்கூடாது என்ற எண்ணம் எனக்குள் இருந்த கொண்டே இருந்தது
.
.
இக்கதையில் sex , extensial crises , lust , spirituality , social structure , religion , god என்ற பல்வேறு விஷியங்களை உரையாடுகிறது
.
.
நாவலை முடித்தவித்த விதம்
Cliche வாக இருந்தாலும் நிறைவாக இருந்தது

May 31, 2021
இரவு மிதான நிண்ட வர்ணனைகளுடன் இரவு சமுகத்தைப்பற்றிய நாவல். காயல் பயணத்தின் முலம் உளவியல் ரீதியாக கூறுவது மறக்கமுடியாது. இரவவை பற்றிய பல்வேறு தருணங்களை மனதை சலனபடுத்தும்படி சொல்லப்பட்டுள்ளது.இரவு கண்ணுக்குள் தார்போல படிந்துஅகத்துக்குள் சென்றுவிடும்படியாக உணர்வு ஏற்படுத்தும் கதையாடல்,வாசித்து நெஞ்சில் நிலைத்துக்கொள்ளும்படியான படைப்பு.
August 11, 2019
இரவின் வர்ணனை.. இரவோடு உலாவ தூண்டும்..
ஆம் மனிதன் இரவில் இளகித்தான் போகிறான்..
ஆழ் மனதின் ஏக்கங்கள் செயல்களாக வெளிப்படும் ஒரு அழகிய கால நிலை இரவு..