தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள் முதல் பகுதிக்கு மிகப்பெரிய வரவேற்பைக் கொடுத்த வாசகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல் பகுதி முழுக்க முழுக்க சமயம் மதம் சார்ந்த வரலாற்றுச் செய்திகளை கொண்டு தொகுத்து இருந்தோம். அதேபோல இந்த இரண்டாம் பகுதி முழுக்க முழுக்க அல்லது முடிந்தவரை பெரும்பாலும் சுதந்திரப் போராட்ட காலத்தை ஒட்டி நடந்த செய்திகள் எல்லாவற்றையும் முடிந்த அளவு தொகுத்துக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறேன், இது நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.
நாமெல்லாம் ஜமீன்தார்கள் என்றால் அவர்கள் எல்லாம் ஏதோ மன்னர் பரம்பரை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம் சேர சோழ பாண்டியர் காலத&#