Jump to ratings and reviews
Rate this book

அழகர் கோயில்

Rate this book
மதுரைக்கருகில் அழகர் மலை என்னும் வனாந்தரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருக்கோயில் அழகர் கோயில். திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால் அழைக்கப்படும் இப்பகுதி சமணம், பௌத்த மதங்களின் இருப்பிடமாக இருந்துள்ளது. முருகக்கடவுளோடு தொடர்புடையதாகவும் பேசப்படுகிறது.இம்மலை யாருக்கு உரிமையுடையது, கோயிலுக்கும் அப்பகுதி மக்களுக்கும் உள்ள உறவு, அவ்வுறவுகளால் எழுந்த விழாக்கள், சடங்குகளுக்கான பின்புலங்கள், வைதீக அழகர் கள்ளழகராக அவதாரம் கொண்டதன் காரணம், நாட்டார் இலக்கியமான வர்ணிப்புப் பாடல்களின் அரசியல், அழகர் கோயில் வெளியில் சாமியாடுதல், கிடா வெட்டுதல் போன்ற நாட்டார் கூறுகளை ஏற்றுக்கொண்ட சனநாயகப் பண்பு எனப் பல்வேறு கூறுகளை விரிவாகக் கூறும் இந்நூல் &#

469 pages, Kindle Edition

Published December 1, 2022

59 people are currently reading
568 people want to read

About the author

தொ. பரமசிவன்

34 books231 followers
Tho. Paramasivan (Tamil: தொ. பரமசிவன்; 1950 – 24 December 2020), often known as Tho Pa, was an Indian Tamil anthropologist, writer, folklorist, archeologist and professor. He was the first graduate in his family. He grew up to serve as a professor of Tamil at Manonmaniam Sundaranar University, simultaneously pursuing a writer’s career.

Fondly called as ‘Tho Pa’, he has written more than 15 books which focus on the historical, archaeological and anthropological aspects of Tamil society. His works also dwell a lot on folklore. One of his finest work in this area is Alagar Kovil.

பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் தமிழகத் தமிழறிஞரும், திராவிடப் பண்பாடு ஆய்வாளரும், மானிடவியல் ஆய்வாளரும் ஆவார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டது. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். திராவிடக்கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். கலாச்சாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரியவைத்தவர். எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை தன் கட்டுரைகள் வாயிலாக எடுத்துரைத்து வருபவர். மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றிற்கு மாற்றாக கீழிருந்து வரலாறு எழுதுவதற்கான பயிற்சியை இவரது கட்டுரைகள் தருகின்றன.

அழகர் கோயில் குறித்த இவரது முனைவர் பட்ட ஆய்வேடு கோயிலாய்வுகளுக்கு முன்னோடி நூலாகத் திகழ்கிறது. ஆய்வாளர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் தேடி வாசிக்கும் நூலாகவும் இந்நூல் இருக்கிறது.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
33 (45%)
4 stars
25 (34%)
3 stars
12 (16%)
2 stars
0 (0%)
1 star
3 (4%)
Displaying 1 - 7 of 7 reviews
Profile Image for Vaideki Thayumanavan.
62 reviews
July 24, 2024
அழகர் கோயில்: இந்த தலைப்பை முதலில் காண்போருக்கு இது ஒரு தல வரலாறு நூலாக மட்டுமே தோன்றலாம். ஆனால், அந்த கோயிலின் வரலாற்றையும் தாண்டி அழகர் கோவில் நம் சமூகத்தில் கொண்டுள்ள உறவை தன் அசாத்திய ஆய்வால் இவ்வுலகிற்கு எடுத்துரைத்திருக்கிறார் மறைந்த பண்பாட்டு ஆய்வாளரான ஐயா தொ. பரமசிவன்.

அழகர் கோயிலைப் பற்றி மக்களால் பரவலாகப் பேசப்படும் மரபுக்கதைகளை இலக்கியங்கள் தொடங்கி, நாட்டுப்புறப் பாடல்களையும், நாட்டுப்புற கூற்றுகளையும், கல்வெட்டுகளையும், மற்றும் தன் அயராத களப்பணியாலும், பகுத்தாய்வு மேற்கொண்டு தொகுக்கப்பட்ட ஒரு பிரமாண்டமான கட்டுரை இந்நூல்.

தமிழ்நாட்டில் ஒரு வைணவ பெருந்தெய்வ வழிபாடும், பதினெட்டாம் படி கருப்பர் எனும் சிறுதெய்வ வழிபாடும் ஒரே கோயிலில் இன்றளவும் ஒன்றாக இணைந்து பிணைக்கப்பட்டிருப்பதற்கு ஒரு பெரிய உதாரணம் அழகர் கோயில். இந்த பெருமையை மட்டும் எழுதிவிட்டுச் செல்லாமல், ஏன் அவ்விரு வழிபாட்டு நெறிகளும் பிணைந்து இருக்கிறது என்று அறிவதற்கு தொ.ப ஐயா எடுத்துக்கொண்ட முயற்சிகளை ஒவ்வொரு இயலையும் வாசிக்கும்போது வியப்பளித்தது.

'இக்கோயில் பௌத்த கோவிலாக இருந்தது' என்ற கருதுகோளை வெறுமனே ஏற்றுக்கொள்ளாமல், கோயில் அமைப்பை விவரித்துக்கொண்டே, அங்குள்ள மலைக்குகையில் பொறிக்கப்பட்ட பிராமி எழுத்துக்களையும், 'ஆராமக்குளம்' என்ற பெயரின் அர்த்தத்தைத் தேடி பயணங்கள் செய்து அந்த கருதுகோளின் உண்மைத் தன்மையை ஏற்றுக் கொண்டிருக்கிறார் தொ. ப.

வைணவம் அதன் சமயத்தை அழகர்கோயிலில் நிலைநாட்டிக்கொள்ள இலக்கியங்கள் மூலமாகவும், சுற்றியிருக்கும் சமயத்தார்களிடமும் தன் கொள்கைகளில் சிலவற்றை எப்படியெல்லாம் சமரசம் செய்து, எளிய மக்களை தன் சமயத்தினுள் எப்படி இழுத்தது என்பதனை ஆழமாக ஆராய்ந்திருக்கிறார். அழகர் கோயிலிற்கு இன்று சென்றாலும் அணைத்துச் சாதி மக்களையும், எல்லா பொருளாதார நிலையிலும் உள்ள மக்களையும் ஒருசேரக் காணலாம் என்பதே இதற்குச் சான்று. நாட்டுப்புற மக்களின் நம்பிக்கையையும், அவர்கள்தம் குடும்ப உறவு சார்ந்த உணர்வுகளை உள்வாங்கி சைவமும், வைணவமும் இணைந்து கைகுலுக்கி இருப்பதற்கு சித்திரைத் திருவிழாவே சான்று என்பதனை தன் மதிப்பீடுகள் மூலமாக நன்கு விளங்க வைக்கிறார் தொ. ப. ஐயா.

நாட்டுப்புற வர்ணிப்பு பாடல்கள் இக்கோயிலைப்பற்றிச் சொல்லும் செய்திகள் ஏராளம். ஆனால் அவற்றையெல்லாம் அச்சிடப்படாமல் வெறும் வாய்மொழிப்பாடலாக மக்களிடம் பரவியிருப்பதைக் காண முடிகிறது. அதற்கு ஒரு சான்று: 'சம்பா கதிரடித்து' என்று தொடங்கும் இத்தொகுப்பில் கொடுக்கப்பட்ட தாலாட்டு பாட்டினை என் அம்மாவிடம் நான் வாசித்துக் காட்டியபோது அவர்கள் அந்த பாட்டில் கொடுக்கப்படாத மீதி வரிகளையும் பாடினார்கள். அவர்கள் இதை எங்குக் கற்றுக்கொண்டார்கள் என்று ஆச்சரியத்துடன் கேட்டதற்கு அவர்கள் அப்பத்தா சிறு வயதில் சொல்லிக்கொடுத்தது என்று சொன்னார்கள். அது போன்ற வெறும் வாய்மொழிப் பாடல்களாக இருக்கும் நாட்டுப்புறப் பாடல்களை ஆவணப்படுத்துவது நாட்டுப்புற சிற்றிலக்கியங்களை அழிவிலிருந்து காக்கும் ஒரு நல்ல முயற்சி ஆகும் என்பதனை யோசனையாகக் கூறியிருக்கிறார் தொ.ப. ஐயா.

இத்தொகுப்பில் இருக்கும் ஒவ்வொரு இயலும் அழகர் கோயில் தமிழ்நாட்டில் எல்லா இனத்தவரும் கூடும் ஒரு பெரிய பண்பாட்டுக் களமாக இருக்கிறது என்றும், சமயங்களின் வளர்ச்சியிலும் மிகப்பெரிய பங்கு கொண்டிருக்கிறது என்றும் அறியமுடிகிறது.

நாம் அறியாத அழகர்கோயில் சார்ந்த பல அற்புதங்களை இத்தொகுப்பின் வழியாக வாசித்தவுடன், அனைவரையும் அழகர்கோயில் நோக்கி பயணம் செய்யத்தூண்டும் தொ.ப ஐயாவின் 'அழகர் கோயில்'. அழகர்கோயிலிற்கு நீங்கள் பல முறை சென்றிருந்தாலும், நீங்கள் கண்டிராத பல தகவல்கள் இக்கட்டுரையில் புதைந்து கிடக்கிறது. அப்படி தான் நானும் உணர்ந்தேன். "எப்போது மீண்டும் அழகர் கோவில் பயணம்?!" என்ற ஆவலுடன் இம்மாபெரும் படைப்பை வாசித்து முடித்தேன்! ✨️
Profile Image for Sadhasivam.
37 reviews5 followers
December 30, 2020

alagar kovil - is an evolution of kal alagar. A complex incision executed with mastery.
Thiru. Tho. pa structurally peeled the morphology of alagar kovil from the bootup with precision.



Book starts with latitudes and longitudes of the temple and takes us to a time bound tamil cultural travel. Author questions each and every existence of the temple metaphor. Provides zillions of artifacts and asserts the reality with courage.




Studious work carefully confronts the sublimation of establishment of one religion over another religion.
- How people from different castes united to form a divine particle social commerce. ?
- How rituals originated and for what reason?
- How people/community used to spread religion and keep them united. ?
- How such divine particle social commerce structure is preserved over decades ( story spreads from 12 Century to 19th century )?
- What is the difference and likeness of algar temple with other Vaishnava temples ?
- How Vaishnavism embraces other caste people for a purpose ?
- Who is responsible for managing alagar kovil temple over decades ?
- What are the revenue schemes and models of such divine particle social commerce structure ?
- Types of festivities celebrated & how it uses people under the hoods?
- British people, Kings, Zamindars involvement and their change factor ?
- Current state of the system.



Thiru. Tho.pa deliberately defined god (sivan, vishnu, indira, krishna etc) as a constant and not trying to contradict any of their existence. Book is a research article that defines how alagar kovil evolved over a period of time.


I strongly recommend this book to all tamil young generation folks.
Book is as intense as like The Da Vinci Code but in treatise format with more actuals than fiction. i am proud that south indian society understood the book and religion
Dec .24. 2020 Thiru Tho. Paramasivan passed away.

Profile Image for Anitha Ponraj.
277 reviews45 followers
June 25, 2025
தொ.ப அவர்கள் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் துறை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1976 முதல் 1979 ஆம் ஆண்டு வரை அழகர் கோவில் குறித்து நிகழ்த்திய ஆய்வின் விளைவாக உருவான புத்தகம் இது.

வழக்கமாக கோயில் பற்றிய ஆய்வுகள் நாட்டு வரலாற்றாய்வாக மட்டுமன்றிச் சமூக, பண்பாட்டாய்வுகளாகவும் விளங்கும் திறமுடையன. தமிழ்நாட்டில், கோயில்களில் காணப்பெறும் கல்வெட்டுக்கள் தரும் செய்திகளும், கோயில்களின் கட்டிடக்கலை, சிற்பக்கலைச் சிறப்புகளுமே பெரிதும் ஆராயப்படுகின்றன.

ஆனால் தொ.பவோ ஒரு படி மேல் சென்று அழகர் கோயிலுக்கும் அதனை வழிபடும் அடியவர்க்கும் உள்ள உறவு, கோயிலைப் பற்றிச் சமூகத்தில் வழங்கும் கதைகள், பாடல்கள், வழக்குமரபுச் செய்திகள், அக்கோயிலை ஒட்டி எழுந்த சமூக நம்பிக்கைகள், திருவிழாக்களில் அவை வெளிப்பபடும் விதம் ஆகியவை பற்றிய ஆழமான களப்பணி செய்து இந்த புத்தகத்தை நம் கையில் தந்துள்ளார்.

அழகர் ஆற்றில் இறங்கும் உற்சவம் குறித்தும், ஜிகர்தண்டா குறித்தும் பெருமை பேசாத மதுரைக்கார நண்பர்கள் இருக்கமாட்டார்கள். அப்படி அவர்கள் வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு மதுரை ஜிகிர்தண்டாவை ருசித்த எனக்கு, கள்ளழகரை தரிசிக்கு வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை.

இந்த வருடம் எப்படியாவது ஆற்றில் இறங்கும் அழகரை சென்று பார்த்துவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது நடக்கவில்லை. ஆனால் இந்த புத்தகத்தை வாசித்துவிட்டேன். புத்தகம் வாசித்து முடித்த போது கோவில் குறித்து நிறைய தகவல்களை அறிந்து கொண்ட உணர்வு எழுந்தது.

ஒன்பது இயல்களாக பிரிக்கப்பட்ட இந்த புத்தகத்தின்,முதல் இயலில் அழகர் கோவிலில் அமைப்பை குறித்து விளக்குகிறது‌.

இரண்டாவது இயல் கோவிலின் தோற்றம் குறித்து விளக்குவது. அதன் ஒவ்வொரு பகுதியையும் அதற்கான பெயர் காரணங்களையும் விவரிக்கிறார்‌ ஆசிரியர்.

இது பௌத்த விகாரமாக இருந்து வைணவக் கோவிலாக மாற்றம் பெற்ற கோவிலாக இருக்கலாம் என்று மயிலை சீனி வேங்கடசாமியின் கருத்தை ஆதரிக்கும் சான்றுகளையும் இதில் விளக்கியிருக்கிறார்.

மூன்றாவது இயலில் திருமாலிருஞ்சோலை என்று முன்பு அழைக்கப்பெற்ற அழகர் கோயில் குறித்து இலக்கியங்களில் பாடப்பெற்றுள்ள பாடல்கள் மேற்கோள் குறித்து ஆராய்ந்துள்ளார். இடம்பெறாத செய்திகளையும் சுட்டிக் காட்டுகிறார்.

நான்காம் இயலில் ஆண்டார் சமயத்தார் என்ற இரண்டு சமயத்தை சேர்ந்தவர்கள் குறித்தும் கோவில் பணிகளில் அவர்கள் பங்கு குறித்தும் சொல்கிறார்.

இந்த பகுதியில் குறிப்பிட்டுள்ள பூ முத்திரை அக்னி முத்திரை குறித்து வாசித்த போது வெண்முரசில் சாத்யகி பெற்றுக் கொள்ளும் தொழும்பர் முத்திரையை நினைவு கூர்ந்தேன்.

வைணவத்தில் சங்கு சக்கரம் முத்திரை பதிக்கும் வழக்கம் குறித்து பெரியாழ்வார் திருப்பல்லாண்டில் குறிப்பிடும் பாடலின் மேற்கோள் மூலம் ஆழ்வார்கள் காலத்திலிருந்து இச்சடங்கு நிகழ்வது குறித்து அறிந்து கொள்ள முடிகிறது.

ஐந்தாம் இயலில் அழகர் கோவிலுக்கும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்த நாட்டுப்புற மக்களுக்கும் இருக்கும் சமூகத் தொடர்பை
விளக்குகிறார்.

ஆறாம் இயலில் அழகர் கோயிலில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் குறித்து அறிந்து கொள்ள முடிகிறது. நாமறிந்த சித்திரை திருவிழா அல்லாமல் வருடம் முழுவதும் நிகழும் பிற திருவிழாக்களையும் அதன் வரலாற்றையும் குறித்து இதில் அறிந்து கொள்ள முடிகிறது.

ஏழாம் இயலில் சித்திரை திருவிழாவை குறித்து அக்குவேர் ஆணிவேராக விவரிக்கிறார்.அழகர் ஆற்றில் இறங்குவது குறித்து மட்டுமே இதுவரை எனக்குத் தெரியும், ஆனால் அந்த விழா தோன்றியதன் காரணங்கள், அழகர் கள்ளழகர் வேடம் பூணுவது எதனால், மீனாட்சி திருக்கல்யாணம், மண்டூக முனிவர் சாப் விமோசனம், இவை சார்ந்த, பழங்கதைகள்,நம்பிக்கைகள் பழக்கவழக்கங்கள் குறித்தும், அது எப்படி பல சாதியினர் இடையில் நல்லுறவு கொள்ள ஒரு காரணமாக அமைகிறது என்றும் நாமறியாத பல விஷயங்களை விளக்கியிருக்கிறார்.

எட்டாம் இயலில் அழகர் கோவிலை மையமாகக் கொண்ட வர்ணிப்பு பாடல்கள் குறித்து ஆராய்கிறார்.

பின் சேர்க்கையில் சில வர்ணிப்பு பாடல்களும் இடம் பெற்றுள்ளன. அவை இலக்கிய பாடல்கள் போல் இல்லாமல் சாமானிய மக்களின் பேச்சு வழிக்கில் எளிமையாக நடையில் அமைந்துள்ளதால் வாய்மொழியாகவே இத்தனை காலங்கள் வழக்கில் இருக்கின்றன. அவை ஊர்ப்புறங்களில் பாடப்படும் கும்மிப்பாடல்கள்,திருவிழக்கு பூஜை பாடல்களை நினைவுப்படுத்துகின்றன.

ஒன்பதாம் இயலில் சித்திரைத் திருவிழாவின் நாட்டுப்புற கூறுகள் குறித்து ஆராய்கிறார்.

பத்தாம் இயலில் கோவில் பணியாளர்கள் குறித்தும்,இறுதி இயலான பதினொன்றாம் இயலில் பதினெட்டாம் படி கருப்புசாமி குறித்தும் எழுதியுள்ளார். கருப்பு குறித்த கதைகள்,வர்ணிப்பு பாடல்கள் வாசிக்க சுவாரசியமாக இருந்தது.

பிறசேர்க்கையாக பழமுதிர் சோலை, தமிழ்நாட்டில் பலராமன் வழிபாடு, அழகர் கோயில் குறித்து இடம்பெற்ற கல்வெட்டு குறிப்புகள், வர்ணிப்பு பாடல்கள், கோவில் சார்ந்த பட்டயங்கள், தொழில் அட்டவணை, வேடமிட்டு வரும் அடியார்கள் குறித்த தகவல்களும், கோவில் சார்ந்த புகைப்படங்களும் இடம்பொற்றுள்ளன.

அழகர் கோயில் குறித்து அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒரு அருமையான புத்தகம் இது.
Profile Image for Sanjeev Duglas.
89 reviews4 followers
March 26, 2023
கள ஆய்வு நூல் இது சாதாரண ஆராச்சி நூல் அல்ல.இடையிடையே வரும் தகவல்கள் myths அதற்கான ஆதாரங்கள் வாசிக்க தூண்டுகிறது.ஆனால் கோர்வையான ஒரு நூலாக வாசிக்க முடியாது. தகவல்கள் மிக பெறுமதி வாய்தவை. பௌத்த சமண தடங்களையுடைய கோயில் இந்த அழகர் கோயில் .காலத்துக்கு காலம் பின் சங்க காலத்திலிருந்து இன்றுவரை காலத்துக்கு ஏற்ப பல மாற்றங்களுடன் இருப்பது அருமை.
கர்ணபரம்பரை கதைகள் பதினெட்டாம்பட்டிகருப்புசாமி கதை யாவும் எனக்கு சமயங்கள் வழப்படுத்தப்பட்டு காலத்துக்கு காலம் மாற்றமடைந்து எப்படி வலிமையானவை என்று காட்டுகிறது. ஒரு கோயிலுக்கு இவ்வளவு வரலாறும் பண்பாடுகளும் சேர்ந்திருப்பது என்னை வியப்புக்குள்ளாக்கிறது. கோயில் பற்றிய புதுபார்வையை இந்த நூல் எனக்கு காட்டி நிற்கிறது
5 reviews
January 13, 2021
this is a thesis paper with lot of research, not suitable for casual reading. skim through the book to get overall idea about azhagar koil and how ealier practices vary from current beliefs.
Displaying 1 - 7 of 7 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.