மொழிபெயர்ப்புக் கலை குறித்து அறிமுகமும், அதன் தோற்றம் குறித்தும், தேவைக் குறித்தும், அறிஞர்களின் மேற்கோள்களுடன் விரிவாக பேசுகிறது இந்தப் புத்தகம். அதனைத் தொடர்ந்து சிறார் இலக்கியத்தில் மொழிப்பெயர்ப்புப் படைப்புகள் குறித்தும் இந்தப் புத்தகம் வாசகர்களுக்கு நல்லதொரு அறிமுகம் தருகிறது.
"சிறார் கலை இலக்கியச் சந்திப்பு" என்ற பெயரில் செப்.2020-இல் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கம் இணைய வழியே தொடர் கருத்தரங்கை நடத்தியது. பத்துத் தலைப்புகளில் நடந்த இந்தக் கருத்தரங்கில் பலரும் கலந்துகொண்டனர். சிறார் கலை மற்றும் இலக்கியத்தின் தற்காலப் போக்கினை ஆவணப்படுத்தும் நோக்கில் இந்தக் கருத்துரைகளைச் சிறு சிறு புத்தகங்களாக தற்போது &