ஆழியின் ஆதவன் நாயகி ஆழினி தான் பழைய வாழ்க்கையை துறந்து புதிய வானில் தன் சிறுகூட்டை அமைத்துக் கொள்ள தன் தோழிகளுடன் வந்தவள் வாழ்க்கையை விதி அதன் விருப்பத்திற்கு இழுத்துச் செல்கிறது. தன் உடலுக்குள் உயிராக துடிப்பவளுக்கு பட்ட நன்றி கடனை தீர்க்க ஒரு சிறு மழலைக்கு அரணாக வருகிறாள் ஆழினி. வந்து இடத்தில் அவள் பழைய வாழ்க்கையின் மிச்சங்களை வைத்து ஒருவன் அவளை மிரட்ட, தன்னை மிரட்ட வந்தவனின் உயிரை எந்தவித தயக்கமும் இல்லாமல் ஒரு நொடியில் எடுக்கிறாள் ஆழினி. யார் இவள், இவள் கதை தான் என்ன? ஆதவன் ஆழினியை நேசிக்க ரத்தக்கரை படிந்த தன் வாழ்க்கையில் காதல் கல்யாணம் இதற்கெல்லாம் இடமில்லை என்று அடியோடு மறுக்கும் ஆழனியை ஆதவன் எப்படி தன் வழக்கு கொண்டு வந்தான்.