இந்த முறை புத்தக கண்காட்சிக்கு வெளியிடப்பட்ட நேரடி நாவல்... கரிகாலனை காதலித்து திருமணம் செய்த நாயகி அக்ஷயாவுக்கு நான்கு வருடங்கள் கழித்து குழந்தை பிறக்கின்றது... குழந்தை பிறக்கும் வரை அவளுடன் நன்றாக இருந்த கரிகாலன் அதன் பிறகு மாற ஆரம்பிக்கின்றான்... அக்ஷயாவை கைக்குழந்தையுடன் வீட்டை விட்டு விரட்டியும் விடுகின்றான்... ஒரு நாள் குழந்தை தன்னுடையது இல்லை எனவும் அக்ஷயாவிடம் இருந்து விவாகரத்து வேண்டும் எனவும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய, டி என் ஏ டெஸ்ட் செய்யப்பட்டு முடிவும் வருகின்றது... அக்ஷயா எதிர்பாராத முடிவு... ஆம் குழந்தைக்கு தந்தை கரிகாலன் அல்ல... ஆனால் மனசாட்சியின்படி அவள் கரிகாலனுக்கு துரோகமும் செய்யவில்லை...