ஒரு பெண், நம்மைப் போல் ஒருவள். தானுண்டு, தன் படிப்பு உண்டு என்று இருக்கிறாள். விதியோ, சதியோ அவளுக்கு ஒரு திடீர் திருமணம். அதில் தான் மகிழ்ச்சி உண்டு, இது தான் தனக்கு என்று ஏற்றுக்கொள்ள வேண்டுமா இல்லை எதிர்க்க வேண்டுமா என தன் மண வாழவைத் துவங்குகிறாள். நேரத்திற்கு எழுந்து, கணவனையும், பெற்ற பிள்ளையையும் கிளப்பி, வீட்டைப் பராமரித்து என்று அவள் வாழ்வு செல்கிறது. ஆனால் இது மட்டும் தான் தன் வாழ்வு என்று அவள் ஒரு கட்டத்தில் ஏற்க மறுக்கிறாள். சராசரி வாழ்வு வாழ்ந்து, மடிந்து போவதை விட, தனக்கென்று ஒரு இடம் வேண்டும் என்று நினைக்கிறாள். தனக்கு ஒரு மனம் உண்டு, அந்த மனதுள் எண்ணற்ற ஆசைகளும் லட்சியங்களும் உண்டு என்ற அவளது எண்ணங்கள் ஈடேறுமா..கதையில் காணுங்கள்!