சமத்துவமின்மை, விலக்கல் ஆகிய இரண்டு மனித விரோதப் பண்புகளையும் அடிப்படையாகக் கொண்ட சாதியை வரலாற்று நோக்கிலும் சமகால இருப்புப் பார்வையிலும் அணுகி விவரிக்கிறது இந்த நூல். சாதியைக் கடத்தல் என்பதன் முதல் படி அதைப் புரிந்துகொள்வதுதான். அதற்கு இந்த நூல் பெரிதும் உதவும். பெருமாள்முருகன் இந்தியச் சாதி முறை தனித்துவமான ஒரு சமூக வடிவம். அதன் தோற்றம், நிலைபேறு, மாற்றம் ஆகியவை பற்றி அனைத்திந்தியத் தளத்தில் வைத்துப் பேசுகிறது இந்த நூல். நூலாசிரியர் சுரிந்தர் ஜோத்கா ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர். சாதியின் புறநிலை இயங்கியல் காலகதியில் மாறிவந்தாலும், அதன் அடிநிலைக் கருத்தியல் தளம் அந்த அளவிற்கு மாறவில்லை.
Professor of Sociology at JNU, New Delhi. He researches on caste; agrarian change and contemporary rural India; and community identities. His publications include Contested Hierarchies: Caste and Power in 21st Century India (OBS 2018 with James Manor); A Handbook of Rural India (OBS 2018); The Indian Middle Class (OUP 2016, with Aseem Prakash); Caste in Contemporary India (Routledge 2015); Interrogating India’s Modernity (ed. OUP 2013); Caste (OUP 2012). He is editor of the Routledge India book series on ‘Religion and Citizenship. He is the recipients of the ICSSR-Amartya Sen Award for Distinguished Social Scientists.
சாதி தோன்றிய சுருக்கமும், அது மரபாகி இன்றைய காலகட்டத்தில் சாதி எப்படி வேரூன்றி இருக்குன்னு சொல்கிற புத்தகம் இது, பல ஆங்கிலேய வல்லுநர்கள் இந்தியாவில் சாதி பற்றி களப்பணி செய்து சேகரித்த தகவல்களை வாசிக்கையில் சாதி பற்றிய புரிதல் கிடைக்கிறது, அது அழிக்க முடியாத வேறாய் இருக்க பலரும் பார்த்த வேலைகள் தெரிகின்றன. நிச்சயம் இந்த சிரிய புத்தகம் சாதியை பற்றி ஒரு புரிதலை உங்களுக்கு ஏற்படுத்தும்.