நந்தினி" ஒரு உண்மை வரலாற்று காவியத்தை படைப்பது எத்தனை கடினமோ, அதே உண்மை வரலாற்று கதையை தழுவி முழுக்க முழுக்க கற்பனை கதை எழுதுவது அதைவிட கடினமான ஒன்று
உண்மையா கற்பனையா என்ற விவாதத்தை சற்று நேரம் தூரத்தில் வைத்துவிட்டு அமரர் கல்கி அய்யா தொடங்கியது போல "ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி ஆசிரியர் உடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கின்றேன்" வரலாற்றில் சொல்லாமல் விட்டு சென்ற இந்த காதல் கதையை ரசிக்க