Poetry வேட்டையும் கூத்துமே தொல்குடியின், கூட்டுக் குமுகாயத்தின் அடிப்படையாய் அமைந்து, அதிலிருந்தே இசை, இயல், நாடகம் இன்னபிற கலைகள் யாவும் வளர்ந்தெழுந்தன. இந்நிலையில், தமிழ்க் குடிகளின் தூய பாவியத்தை வரைந்தெடுக்கும் முனைப்பாகவே மெளனன் யாத்ரிகாவின் ஊர்க்காரி ஒருத்தியின் காதல் வெளிவந்திருக்கிறது. ஐந்திணைகளில் வாழும் குடிகளின் களவும் காமமும் பெருக்கெடுத்தோடும் ஒவ்வொரு கவிதையிலும் கொலையும் தற்கொலையும் தலைவி, தலைவன் என்னும் தன்னிலைகளுக்குள் கருவிலிருந்து மரணம் வரை உடன் நிழலாகப் பின் தொடர்கின்றது.