மரங்களின் இருளில் மறைந்து நின்ற கொடியவர்களைப் பற்றியோ, அவர்கள் விளைவிக்கவிருந்த கொடுமையைப் பற்றியோ, கடுகளவும் அறியாமல் நிதான நடை போட்டு வந்து கொண்டிருந்த அந்த வாலிபனுக்கு, ஏற்படவிருந்த விபரீதத்தை நினைத்துக் கூவ முயன்ற கொற்கைக் கோட்டைக் காவலன் மகளின் வாயையும், பின்னாலிருந்தவன் கடுமையுடன் மூடியதன்றி, அவளைத் தோப்பின் விளிம்பிலிருந்து பின்னுக்கும் இழுத்துச் சென்றான். கால்களை மாற்றி மாற்றிச் சுமார் பத்துப் பதினைந்து அடிகள் வைத்து மரக்கூட்டத்தின் காரிருளுக்கு வந்தவுடன், இளநங்கையை நிறுத்திய அந்த மனிதன் அவள் வாயிலிருந்தும் கழுத்திலிருந்தும் கைகளை எடுக்காமலே, “இன்னொரு முறை நீ கூவமுயன்றால் அவன் பிணத்துடன் உன் பிணமும் இந்தத் தோப்பில் கிட
Sandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.
சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.
பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.
கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.
ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.
இரண்டு ராஜதந்திரிகள், இரண்டு மன்னர்கள், இரண்டு இளவரசர்கள், இரண்டு பருவப் பெண்கள், இரண்டு செல்வங்கள், இரண்டு காதல், இரண்டு போர்க்களம் இவையனைத்தும் சேர்ந்து இரண்டு பாகத்தில் இரண்டு மாறுபட்ட உணர்ச்சிகளைத் தரக்கூடிய போருக்கும் காதலுக்குமாக என்னை மாற்றி மாற்றி அலையவிட்டுவிட்டது.
தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்ற வார்த்தைகளை மெய்பிக்கிறது இந்த ராஜமுத்திரை வரலாற்று நாவல்.
பாண்டிய இளவரசன் வீரபாண்டியனின் புத்திசாதூரியத்தைப் போற்றிக் கொண்டாடும் கதையாகத் திகழ்கிறது இப்புதினம்.
பாண்டிய நாட்டின் பொக்கிஷமாகவும் பெரும் செல்வத்தை சேர்க்க காரணியாகவும் இருக்கும் முத்துக்கள் களவாடப்படுகிறது.அக்களவை கண்டறிய தன் தம்பியான வீரபாண்டியனை கொற்கைக்கு அனுப்பி வைக்கிறார் பாண்டிய மன்னன் சுந்தர பாண்டிய தேவர்.
பாண்டிய நாட்டின் இரண்டாம் தலைநகரமாக இளவரசர்களின் ஆட்சியில் இருந்த கொற்கை மண்மூடிய பிறகு வெறும் வியபாரத் தளமாக மாறிவிடுகிறது.
நாட்டின் சிறந்த முத்துக்கள் எல்லாம் அரசாங்க கஜானாவிற்கு வர வேண்டும் என்ற உத்தரவு நிறைவேறாமல் முத்துக்கள் காணாமல் போவதற்குப் பின்னே ஏதோ ஒரு சதி நடப்பதை உணர்ந்த மன்னன் தன் மகளையும் தம்பியையும் வணிகர்கள் மாதிரி கொற்கைக்கு அனுப்பி வைக்கிறார்.
பெருமுத்துக்களை எல்லாம் களவாடிய சேரமன்னன் வீரரவி அதனோட நிற்காமல் கொற்கையின் கோட்டையையும் தன் வசமாக்க கொற்கையிலே இருப்பதை அறிந்த கொண்ட வீரபாண்டியன் அவர்களை வளைத்து பிடித்து விட முயன்றாலும் தப்பித்துப் போனவர்கள் பாண்டிய மன்னன் மகளான முத்துக்குமரியை கடத்தியும் சென்றுவிடுகின்றனர்.
கொற்கை கோட்டை அதிகாரியின் மகளான இளநங்கையிடம் காதலில் வீழ்ந்து போன வீரபாண்டியன் அவளையே தனக்கு உபதளபதியாக நியமித்து சேரனுடன் போர் தொடுக்கும் முடிவை எடுக்கிறான்.
சேரனிடம் இருக்கும் ஆட்பலத்தை விடத் தங்களிடம் குறைவே என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல் திட்டங்களை வகுக்கும் வீரபாண்டியன் முதலில் கோட்டாற்றுக் கரைக் கோட்டையை சேரர்களிடமிருந்து கைப்பற்றுகிறான்.
பாண்டிய வீரர்களுடன் வீரராகப் புகுந்து ஒற்று வேலையைப் பார்த்து பாண்டிய மகளைக் கடத்திய போசளர் படைத்தலைவனான சிங்கணனை பிடித்த வீரபாண்டியன் அவனைக் கொண்டே சேர மன்னன் வீரரவியுடன் போர் புரிய ஆயத்த வேலை செய்கிறார்.
கோட்டாற்றுக் கரைக் கோட்டையைப் பிடிக்கும் திட்டங்கள் நுணுக்கமாகவும் அதில் இருக்கும் குறைகளால் ஏற்பட்ட சறுக்குகளைச் சாமர்த்தியமாக வீரபாண்டியன் சரிசெய்வதையும் தன் மனம் விரும்பிய இளநங்கையை அக்கோட்டையிலே காந்தர்வ மணம் புரிந்து இரண்டுநாள் அவளுடன் வாழ்ந்த பிறகு சாவின் வாசலை தொட்டவனை அம்மனைவி மீட்டெடுக்கும் விதத்தையையும் விவரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது இம்முதல் பாகத்தில்.
சிங்கணனை கொண்டு சேரனை பிடிக்க வீரபாண்டியன் போட்ட திட்டத்தில் இருக்கும் சிறு ஓட்டைகளைக் கொண்டு சிங்கணன் வீரபாண்டியனையே அழிக்க செய்யும் திட்டத்தை அவனுடன் இருந்து பார்த்தது போல புரிந்து கொண்டு தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் இளவரசனின் ஆளுமையை உலகிற்குப் பறைசாற்றுவது போல் தன் மொத்த நடவடிக்கையையும் எவரும் அறியாமல் பெரும் சேர படையை வெற்றிக் கொள்கிறான் வீரபாண்டியன்.
பாண்டிய இளவரசியை சேரமன்னன் வீரரவி தன் நாட்டிற்குக் கடத்தி வந்ததில் இருந்து தொடங்குகிறது இரண்டாம் பாகம்.
வீரத்துடன் இணைந்த சாதூரியமே வெற்றியை பறிக்க வழிவகுக்கும்.
பாண்டிய இளவரசியைக் கடத்தி போவதை அறிந்து அவர்களைத் தொடர்ந்து வந்த பாண்டிய உபசேனாதிபதி இந்திரபானு தன் அழகிய முகத்தை விகாரமாக்கி அடையாளத்தையே துறந்து சிறைபட்டிருக்கும் இளவரசியை தந்திரமாகத் நெருங்கினாலும் சேரமன்னன் கண்ணில் இருந்து தப்பமுடியாமல் போகிறது.
இந்தப் பாகம் முழுவதும் சேர மன்னன் வீரரவியே ஆக்கிரமித்திருக்கிறார். மன்னனின் வீரங்கள் சிலவற்றை மட்டும் கோடிட்டு காட்டி அவரின் கயமை சூழ்ச்சிகளும் தன் அதீத கோபத்தில் நிலை தடுமாறி எடுக்கும் முடிவுகளால் எதிர்கொள்ளும் அவதிகளுமே அதிகம் காட்டப்பட்டிருக்கிறது.
இந்திரபானுவுக்கு உதவிய சேர குருநாதர் பரதபட்டரை தன் கண் பார்வையிலே வைத்துக் கொண்டு மக்களிடம் அவருக்கு இருக்கும் அபிரிமிதமான செல்வாக்கை தேசதுரோக பட்டத்தின் மூலம் மன்னன் முறியடிக்க முயன்றாலும் அதில் தோல்வியே தழுவுகிறார்.
கோட்டாற்றுக் கோட்டை வீரபாண்டியனின் வசம் போனதை தெரியாத சேரமன்னன் தன் பெரும் படை அங்கே வென்றுவிடும் என்று காத்துக் கொண்டிருக்கக் காலம் கடந்து வந்து சேர்ந்த செய்தியும் ஏமாற்றத்தையே அளிக்கிறது.
சேரநாட்டைக் காப்பாற்ற குருநாதர் பரதபட்டர் போட்ட திட்டங்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு அவரைச் சிறையிலடைத்துக் காரியங்களை நிறைவேற்றும் வீரரவியால் வீரபாண்டியனின் திட்டங்களை அசைக்கக் கூட முடியாமல் போகிறது.
கோட்டாற்றுக் கோட்டையில் இருந்து தன் படைகளுடன் சேர தலைநகர் பரலியை நோக்கி முன்னேறுபவர் போடும் திட்டங்கள் அனைத்தும் சேரமன்னன் திட்டங்களை ஒத்தே அதற்கான பதிலடியாக அமைந்ததே சேரமன்னன் வீரரவி மரணத்தைத் தழுவ காரணமாகிறது.
இப்பாகம் முழுவதும் போர் நுணுக்கங்களும் அதற்கான காரியத்தை உண்டாக்கும் சம்பவங்களும் என்று அனைத்தும் சேர மண்ணிலே நிகழ்கிறது.
அதர்மத்தின் பாதையில் மன்னன் பயணிப்பது அவர்களின் குருநாதரையே எதிராகத் திரும்பச் செய்துவிடுகிறது.
கோட்டாற்றுக் கோட்டை காவலரின் மகளான குறிஞ்சி வீரபாண்டியனுக்கு முழுநேர ஒற்றனாகவே மாறிவிடுகிறாள்.
வீரரவியின் வீரமரணத்திற்குப் பிறகு பரலியை இந்திரபா���ுவிடம் ஒப்படைத்து பாண்டிய இளவரசியையும் அவனுக்கு மணமுடித்து வைத்துவிட்டு கொற்கைக்கே திரும்பி விடுகிறார் பாண்டிய இளவரசன் வீரபாண்டியன்.
if u want know more about pearls read this ! Excellent narration ! At the end of 1st part u ll keep ur fingers crossed ! and the 2nd part answers to all the questions that would raise in 1st part. over all a good book to read :)
A beautiful tamil romantic love story...I realy enjoy the character VEERA PANDIYAN...Because he is very bold...He dont know about panic...He THEFT my HEART...I LOVE HIM.....
This book is an excellent introduction to "Sandilyan". His ability to explain warfare and introduce characters, especially female characters, is unmatched in Tamil literature, in my experience. The story grips you from the first page to the last, maintaining your interest throughout. Sandilyan writes about warcraft with such vividness that it feels as if he has experienced it himself. Every character is essential to the story, with each one playing a significant role. The book resembles an Indian commercial movie, featuring action, romance, and a bit of everything.
சாண்டில்யனின் கடல்புறா படித்த பின் ஆர்வம் அதிகம் இருந்தபடியால், தேடிப்பிடித்து ராஜமுத்திரை வாங்கி வைத்தேன்.
இது வித்தியாசமான கதையாய் இருக்குமென்று கேள்விப்பட்டிருந்தேன். புதினத்தின் ஆரம்பமே முத்தங்காடியில் தொடங்கிற்று.
கதையின் முக்கியப் பாத்திரங்களின் பெயர்கள் 'கடல்புறா' பாத்திரங்கள் அளவிற்கு ஈர்க்கவில்லை. பாத்திர வடிவமைப்போ சற்று சுமாராகத்தான் இருந்தது.
தோப்புக்குள் நடக்கும் மர்ம சண்டைக்காட்சி ஒரு பரபரப்பை அளித்தது. அதன் பின்னர், கதையின் போக்கு அவ்வளவு சுவாரசியம் ஊட்டவில்லை. பாண்டியர்களின் எழுச்சி நாயகர்கள் பற்றியும் முத்துக்களவு பற்றியும் கதை அமைக்கப் பெற்றுள்ளது.
வழக்கம் போல் கதையின் முக்கிய ஆட்கள் - இளநங்கை/வீரபாண்டியன் இடையே ஒரே நாளில் காதலோ/காமமோ தெரியாது, ஒன்று உருவெடுக்கிறது, கதை நெடுகிலும் அது அப்படியே செல்கிறது. இடையே முத்துக்குமரி/இந்திரபானு காதலும் ஓடுகிறது. எப்படி அவ்வளவு லேசில் காதல்/காமம் எல்லாம் தோன்றுகின்றன என்று எனக்கு விளங்கவில்லை.
போர்க் காட்சிகளும், ஆங்காங்கு வீரபாண்டியன் தீட்டிய திட்டங்களும் படிக்கும் ஆர்வத்தை தூண்டின. கதை பாதிக்கு மேல் குமரி இந்திரபானுவைக் காணவில்லை, மற்ற இருவர் வைத்து, கோட்டாற்றுக் கோட்டை வைத்தே கதை நகர்ந்தது,அவர்கள் சம்பாஷணைகள் இழுவையாய் சென்றன. போர் தந்திரங்கள் நன்றாக இருந்தன. இறுதிக்காட்சி சுமார் தான். அடுத்த பாகம் எப்படி இருக்குமோ?!
It's about how Pandiyan kingdom started expanding. This story is mainly about how pandiyan brothers conquered cheran. First part of book goes at high speed with very interesting twists. Second part is bit dragging but best book of sandilyan