“ஆங் வயிற்று வலி டாக்டர்.. “ என்றாள் பின்னால் வரும் ஆபத்தை அறியாமல்... “ஓ... எத்தனை நாளா இருக்கு?? “ என்றான் அவளை ஆராய்ச்சியுடன் பார்த்தவாறு.. “இப்பதான் டாக்டர்.. “ என்றவள் நாக்கை கடித்துக் கொண்டு மதியத்தில் இருந்து டாக்டர்... ரொம்ப வலிக்குது.. “ என்றாள் தன் வயிற்றை பிடித்தவாறு முகத்தை சுழித்து வலிப்பதை போல ஆக்சன் பண்ணினாள் அதுவரை சிரித்துக் கொண்டிருந்தவள்.... “ஓ.. சாரி... கொஞம் பொறுத்துக்கங்க.. சீக்கிரம் சரி பண்ணிடலாம்.. “என்று வருந்தியவன் “சரி.... அந்த கட்டில்ல ஏறி படுங்க... செக் பண்ணலாம்... “ என்றான் அந்த மருத்துவன்.. அதை கேட்டதும் திக் என்றது மலருக்கு... “ஐயோ.. இதை யோசிக்கலையே.. இப்ப என்ன செய்யறது?? “ என்று தன் தோழியை பார்க்க அவளோ “ நான் அப்பவே சொன்னேன் இல்ல..