பேராசிரியர் தொ.பரசிவன் பற்றி அறிமுகம் தேவையில்லை. நாட்டார் வழக்காற்றியலிலும், தமிழக பண்பாடு மானுடவியல் சார்ந்த ஆய்வுகளில் முன்னோடி. இந்நூலில் "தொன்மை, சமயம் , வழிபாடு, ஆய்வாளர்கள் பற்றிய கட்டுரை தொகுப்புகள் அடக்கம். அதில் சில கீழ்காண்பவை:
1. பூசாரிகள் என்றால் ஆண்களின் அதிகாரம் சார்ந்தே கோவில்களில் காண முடிகிறது. ஆனால், கடவுள் வழிபாட்டின் தொடக்கத்தில் பெண்களும் பூசாரிகளாக இருந்ததற்கான சான்று காமக்கோட்டம் எனும் பெண் தெய்வ கோவில்களில் இருந்துள்ளனர். இதில் - நெல்லை காந்திமதி, காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி கோவில்கள் அடக்கம். பார்ப்பனீயம் ஊடுருவலால், மீனாட்சியிடம் இருந்த அரசையும் செங்கோலையும் பறித்து சுந்தரேஸ்வரருக்கு கொடுக்கப்பட்டது.
2. வைணவமும் ஸ்மார்த்த பிரமாணமும் கருத்தியல் ரீதியாக மோதிக்கொண்ட வரலாறு ஸ்வாரஸ்யமானது. தொண்டரடி பொடியாழ்வார், "பக்தனாக இருக்கும் ஒருவன் பிராமணனாக இருக்க முடியாது" என்று கூறுகிறார். ப்ராமணீயத்தின் சுத்த கோட்பாட்டுக்கு எதிராக நாலாயிர திவ்யா ப்ரபந்தத்திலும், ஆண்டாள் பாசுரத்திலும் கண்ணன் பாடல்கள் (அழுக்கு குழந்தையாக) மூலம் திகழ்கின்றன.
இதுபோன்று பல கட்டுரைகள் நமக்கு புதிய பரிமாணத்தில் வகுப்பு எடுக்கிறது.