Cheraman PerumalTamil: சேரமான் பெருமாள் is the royal title used by the rulers of the Chera dynasty in southern India. The title has sometimes mistakenly been taken to refer exclusively to some kings of the dynasty, particularly Rama Varma Kulashekhara and Rajashekhara Varman, but Hermann Gundert has observed that the title "Cheraman" is simply the name of the dynasty of Chera. The land on which the Cheramun Jami Masjid stands, was donated to the Muslims by Hindu King Cheramun Perumal of Kerala. According to legends, Cherman Perumal, travelled to Madina to visit with the Islamic prophet Muhammad. He died on his way back and is now buried in Salalah, Oman.
Kannadasan (24 June 1927 – 17 October 1981) was a Tamil poet and lyricist, heralded as one of the greatest and most important writers in the Tamil language. Frequently called Kaviarasu (English: King of Poets), Kannadasan was most familiar for his song lyrics in Tamil films and contributed around 5000 lyrics apart from 6000 poems and 232 books,[1] including novels, epics, plays, essays, his most popular being the 10-part religious essay on Hinduism, captioned Arthamulla Indhumatham (English: Meaningful Hindu Religion). He won the Sahitya Akademi Award for his novel Cheraman Kadali in the year 1980 and was the first to receive the National Film Award for Best Lyrics, given in 1969 for the film Kuzhanthaikkaga.
After reading this novel, readers should totally admit that legendary writer Kalki Krishnamurthy has set a style to which our brains are accustomed. Anything that comes out of the syllabus looks monotonous and plain. With Cheramaan Kaadhali, lyricist Kannadasan presents us a cocktail of emotions. Akbar married Jodha in late 15th/16th century, but here is this guy, Cheramaan Perumal III, he who had dared the social norms of the 6th century(assumed). Be it Cheramaan's forceful conquering of the throne or be it the relinquishing, Kannadasan presents it to us in his style. The fuss that inter-religion marriage creates remains the same, no matter how many centuries we have crossed.
After lost love, anyone you meet does not rekindle your spirits. Same is the case after reading Kalki's works. Legendary writers like him set a huge benchmark such that other works almost always looks mediocre. Hopefully time will heal this problem. Kannadasan is one of the lyricist that I like the most. His songs are evergreen. Accordingly his characters in this novel do not talk. They sing. It gives so much pleasure to read this novel. But I feel strong characterization & drama is lacking in it.
To think of inter-religion love and inter-religion marriage during the Chera times and to think of a king (Cheraman Perumal III) who left everything for his love makes one turn the pages. The king who forcefully took a kingdom in the beginning leaves it in the end because of his love towards a Muslim women. This novel also narrates the social pressure the king faced because of his inter-religion marriage. All of it was relevant in 1980's and I believe that is the reason for the Sahitya Akademi Award.
just started...the hero of this book was buried at Salalah where I am living presently...a fantastic piece from Kavignar Kannadasan..Cheraman perumal-Padmavathi-Yugiyana-Savitha....a lovable characters....
AFTER READING WENT TO HIS TOMB AND PAID RESPECTS AT SALALAH,DHOFAR REGION,OMAN
A book which I was longing to read from my early age, but buried in my memories, came to life when my nephew, a student of Engineering, referred about it ! I happened to pass through HB Stall in Chennai and never failed to get the book. Such a wonderful writing of Kavignar Kannadasan. People know about his poems. In this historical novel, his poetic writings add so much of flavor. The story is about the history of Cheraman 3 , a King who reigned the land of Chera those days. The first two parts say how he manages to become the kind of the country, though married, falls in love with a Jewish lady whom he had to send back to her native country on the grounds of some superstitious beliefs! The Third part tells how he once again falls in love with a Muslim lady, under what circumstances he decides to marry her and also starts living with both the Jewish and the Muslim lady, against his own wishes to be loyal to his Country and people. The writer brings out the feelings of the hero so nicely that Hero just lives in flesh in our memories. Simultaneously the author never fails to give us the proper historical details too! The tremendous reading experience filled my mind with love and peace !
Get to know about the liberalist king cheraman of 8th - 9th century, is quite interesting. Though the book failed to deliver the insight of cheraman’s life. The outline itself gives an fascinating perspective of cheraman.
Heard many songs of kannadasan. His depth in the lyrics not in this story characters, is a disappointment. And also the author’s conservative narratives make me uninterested while reading.
Sure the book is a page turner, the author’s narrative gives us the urge to know about the king cheraman.
This is the first novel that I read completely and within very short period of time after my 12th exams are over. My mom used to say I am reading this with more aggression than my 12th public exam held that time. Very interesting story line.
#கதாபாத்திரங்கள் : இரண்டாம் சேரமான் பெருமாள் (எ) குலசேகர ஆழ்வார் ; மூன்றாம் சேரமான் பெருமாள் (எ) பாஸ்கர இரவிவர்மன், செரொட்டி அம்மாள் ((எ)) பத்மாவதி; மார்த்தாண்டவர்மன்,மெல்லிளங்கோதை; யூஜியானா, சலீமா, தரங்கிணி, நாராயண நம்பூதிரி மற்றும் பலர்.
#கதைக்களம் :திருவஞ்சை ((தற்போதைய கருர் ,பழனி, தென்காசி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள்., ))
வேணாடு ((தற்போதைய கன்னியாகுமரி, கொல்லம், திருவனந்தபுரம்,திருவிதாங்கோடு மற்றும் கல்குளம் பகுதிகள்))
#வகைப்பாடு: சரித்திரப்புதினம்.
#மொத்த பக்கங்கள் : 680.
கதை:
நமது கதை ஆரம்பிக்கும் ஆண்டு கி.பி.796. இரண்டாம் சேரமான் பெருமாள் பட்டத்திற்கு வந்து நாற்பத்து இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றிருந்தன. அவர் "பெருமாள்" பட்டம் பெற்று ஏழு ஆண்டுகள் ஆகியிருந்தன.இவர் வஞ்சியின் மன்னராக அரசு கட்டிலில் ஏறியது கி.பி.754ஆம் ஆண்டில். அப்போது பெரியாழ்வாரின் மாணவராக தம்மை வரித்துக்கொள்ளுகிறார். அதன் பொருட்டு தன் பெயரை "இரண்டாம் சேரமான் பெருமாள்" என மாற்றிக்கொண்டார்.பாண்டியர் நாட்டையும், கொங்கு நாட்டையும் அவர் சேர்த்து ஆண்டதால் இவருக்கு "கூடற்கோன்" என்றும் "கொங்கர்கோன்" என்றும் பட்டம் இருந்தது.
இரண்டாம் சேரமானின் ஆட்சி முறை சோழ-பாண்டிய நாடுகளில் இல்லாத விதத்திலே இருந்தது. சேர நாட்டின் ஒவ்வொரு கிராமமும் ஒவ்வொரு நம்பூதிரியின் கையில் இருந்தது. அத்தனை நம்பூதிரிகளுக்கும் சேர்த்து வஞ்சியிலே ஒரு சபை இருந்தது.அந்த சபையின் தலைவர் நாராயண நம்பூதிரி. தற்போதைய நிலையின்படி நாராயண நம்பூதிரி பிரதம மந்திரியாகவும், இரண்டாம் சேரமான் பெருமாள் குடியாட்சித் தலைவராகவும் விளங்கினார்கள்.
இரண்டாம் சேரமான் பெருமாள் வைணவ சமயத்தில் ஈடுபாடு கொண்டு, மகன் மார்த்தாண்டனிடம் ஆட்சிப்பொறுப்பை கொடுத்துவிட்டு "குலசேகர ஆழ்வாராக" மணிமுடியை துறந்து வைணவ ஷேத்திரங்களுக்கு செல்வதோடு, பெரியாழ்வார் போன்ற வைணவப் பெரியார்களை சந்தித்து ஆசி பெற்று, தன்னுடைய அரச வாழ்க்கை, குடும்பம் பற்றிய நினைவுகளை முற்றிலுமாக மறந்து, துறந்து திருக்கண்ணபுரம் என்ற இடத்தில் மரணம் அடைகிறார்.
சேரநாட்டின் தலைநகர் வஞ்சி என்றழைக்கப்பட்டாலும் அது தலைநகரின் ஒரு பகுதிதான்.கொடுங்கோளூர், கொல்லிநகர், மகோதைபட்டிணம் என்று மற்ற பகுதிகள் அழைக்கப்பட்டன.அரண்மனை இருந்த இடம் வஞ்சி ஆதலால் வஞ்சி என்று அழைக்கப்பட்டது.
பாஸ்கர ரவிவர்மன் இரண்டாம் சேரமான் பெருமாளின் மைத்துனரின் மகன், மறைந்த பட்டத்து ராணியாரின் தமையன் மகன். அத்தை பட்டத்து ராணி; மாமன் மன்னன் என்ற முறையில் அரசாங்கத்தில் அவன் பெற்றுக்கொண்ட சலுகைகள் அதிகம். அவையெல்லாம் மன்னர் மனதில் அவனைப்பற்றிய தவறான எண்ணத்தை உண்டாக்கி இருந்தன. பாஸ்கர ரவிவர்மன் மனைவியின் பெயர் பத்மாவதி.
பாஸ்கர ரவிவர்மன் ஒரு புதிர். கொடுமையும், தர்மமும் சம அளவு கலந்த வடிவம். "காலம் கருதிச்செய்யும் அதர்மமும், ஒரு ராஜதந்திரமே " என்று நினைப்பவன். அவனுக்கு சில ஆசைகள் உண்டு. அந்த ஆசைகளிலே எதிலே தவறலாம், தவறக்கூடாது என்பதும் அவனுக்கு தெரியும்.
சேரநாட்டில் அக்கால கட்டங்களில் யூதர்கள், சிரியன் கிறிஸ்தவர்கள் மற்றும் மகமதியர்களும் நிறைந்திருந்தார்கள். வாணிப நிமித்தம் வந்த இவர்கள் சேர நாட்டில் பல இடங்களை கைப்பற்றி தற்பாதுகாப்புக்கென்று படைகளும் வைத்திருந்தார்கள்.
பாஸ்கர ரவிவர்மனுக்கு ஒரு காதலி இருந்தாள். அவள் பெயர் யூஜியானா. அவள் யூத இனத்தை சேர்ந்தவள்.யூஜியானாவின் தாய் அவள் சிறு வயதிலேயே இறந்துவிட்டாள். மகளைக்கருதி அவள் தந்தை யோகோவா திருமணம் செய்து கொள்ளவில்லை. யோகாவா விலை குறைவான நவமாணிகளை விற்கும் சிறிய கடை ஒன்றை வைத்திருந்தார்.
இவர்கள் இருவரும் சந்தித்து காதல் கொண்டது ஒரு தனிக்கதை. சில வருடங்களுக்கு முன் நடந்த போரிலே பாண்டிய இராஜசிம்மனுக்கும், இரண்டாம் சேரமான் பெருமாளின் சேனைகளுக்கும் நடந்த பெரும்போரில் சேரப்படைகளுக்கு தலைமையேற்று நடத்தி வெற்றி கண்டவன் பாஸ்கர ரவிவர்மன். இந்த வெற்றியினால் பாண்டியர் வசமிருந்த வேணாடு, ((தற்போதைய கன்னியாகுமரி, கொல்லம், திருவனந்தபுரம்,திருவிதாங்கோடு,கல்குளம் ஆகிய பகுதிகள்)) சேரநாட்டின் வசமானது.
வலிமை குன்றிய பாண்டியப்படையை வெல்வது பாஸ்கர ரவிவர்மனுக்கு கடினமான ஒன்றாக இல்லை.எனவே தன்னை ஒரு தலைவனாக காட்டிக்கொள்ளும் பொருட்டு தனக்குத்தானே எடுத்துக்கொண்ட வெற்றி விழாவில் தன் சகோதரிகளுக்கும், மனைவி பத்மாவதிக்கும் நகை வாங்குவதற்காக வாணிபச்சந்தைக்கு வந்த பாஸ்கர ரவிவர்மன், நவமணி கற்கள் வாங்க யோகோவாவின் கடை���்கு வந்தபோது யூஜியானாவை பார்த்தான்.காதல் கொண்டான். தன் வெற்றி விழாவிற்கும் அழைத்தான். அன்று முதல் அவன் அவளானாள். அவள் அவானானாள். அன்று முதல் யூஜியானாவை இரவு வேளையிலே சந்திப்பதை தன் கடமைகளில் ஒன்றாக கருதினான் ரவிவர்மன்.
இரண்டாம் சேரமான் பெருமாள் கி.பி.798 ல் தன்னுடைய மகன் மார்த்தாண்டனுக்கு முடிசூட்டி அரசைக்கொடுத்துவிட்டு துறவரம் பூண்டு மரணமடைகிறார். இடைக்காலத்தில் மார்த்தாண்டன் ஆட்சிக்கு வந்தவுடன் தாயாதிகளுக்குள் கலகம் ஏற்படுகின்றன. குறிப்பாக பாஸ்கர ரவிவர்மன், அடங்கிக்கிடக்கும் பாண்டியர்கள், கொங்கர்கள் ஆகியோரை எதிர்க்கும் அளவிற்கு மார்த்தாண்டன் வலிமை பெற்றவனல்ல, என எண்ணி, ஒரு வீரனின் கையில்தான் சேரநாடு இருக்க வேண்டும் என்ற நினைப்பில் அரசாட்சியை வலுக்கட்டாயமாக மார்த்தாண்டனிடம் இருந்து பிடுங்கி தான் அரசனாக திட்டம் தீட்டுகிறான்.
இதற்காக தன் காதலி யூஜியானாவை நடன மங்கையாக மதுரைக்கு அனுப்பி அவள் மூலம் பாண்டியப்படையையும், மாதவி என்ற விலைமாதுவை கொங்கு தேசம் அனுப்பி கொங்கு நாட்டுப்படையையும் தந்திரமாக வரவழைத்தான் ரவிவர்மன். பாண்டிய நாட்டுப்படைகள் வஞ்சியின் ஒரு புறமும், பாண்டிய நாட்டுப்படைகள் வஞ்சியின் மறுபக்கத்திலும் பாடி இறங்கின. சேரப்படை வீரர்களிடையே மிகவும் செல்வாக்கு பெற்றவன் பாஸ்கர ரவிவர்மன், அவர்களும் ரவிவர்மனோடு சேர்ந்து கொள்ளவே, அரண்மனை, நம்பூதிரிகள் சபை அனைத்தும் சுற்றி வளைக்கப்படுகின்றன. ரவிவர்மன் சகோதரிகள் மற்றும் மனைவி பத்மாவதியின் உதவியோடு, தன் மனைவி மெல்லிளங்கோதையோடு அகஸ்தீஸ்வரன் காட்டுக்கு, நாடிழந்த மன்னவனாக தப்பியோடுகிறான் மார்த்தாண்டன்.
இந்த திட்டங்கள் அனைத்தையும் தான் செய்தது சேர நாட்டில் உள் நாட்டுக்கலவரம் நேராமலும், வலிமையற்ற அரசனால் பெரும் போர்களை சேரநாடு சந்திக்காமல் இருப்பதற்கே என்று பாஸ்கர ரரவிவர்மன் சமாதானம் சொல்லிக்கொண்டாலும், சேர மக்களாலும், நாராயண நம்பூதிரியாலும் இது நம்பிக்கை துரோகமாகவே பார்க்கப்பட்டது.
இதற்கேற்றார்போல், பாஸ்கர ரவிவர்மன் சேர அரசனாக பதவி ஏற்கும்போது பல அபசகுனங்கள் நிகழ்கின்றன. பாரம்பரியம் மிக்க சேரநாட்டின் கிரீடம் காணாமல் போகிறது. பகவதிதேவியின் சிவப்பு மூக்குத்தி மாயமாகிறது. பாஸ்கர ரவிவர்மன் கண்களுக்கு (மட்டும்)தலைவிரிகோலத்தில் அகோரமாய் ஒரு பெண் தெரிகிறாள். இதனால் பதவி ஏற்பு விழாவே தள்ளிவைக்கப்படுகிறது.
சோழ மன்னன் விக்கிரம சோழன், அவன் மனைவி சோழமாதேவி, அவர்களது முயற்சியால் நாராயண நம்பூதிரி, பாஸ்கர ரவிவர்மா, மார்த்தாண்டன் ஆகியோரிடையே ஒரு உடன்படிக்கை ஏற்பட்டு எல்லோராலும் ஒப்புக்கொள்ளபடுகிறது. அதன்படி சேரநாடு இரண்டாக பிரிக்கப்பட்டு திருவிதாங்கோட்டை தலைநகராக்கி வேணாடு மார்த்தாண்டனுக்கும், வஞ்சியை தலைநகராக கொண்ட சேரநாடு பாஸ்கர ரவிவர்மனுக்கும் பிரித்தளிக்கப்படுகிறது.
மார்த்தாண்டன் தன் தந்தை இரண்டாம் சேரமான் பெருமாள் போலவே பக்தி மார்க்கத்தில் திளைத்தார். அவர் வேணாட்டடிகள் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். தன் தந்தையார் வைணவ அடியாராய் இருந்தபோதிலும் மார்த்தாண்டன் சைவனாகவே வாழ்ந்து வந்தான்.
சேரநாட்டில் பாஸ்கர ரவிவர்மன் தன் பழைய தீய பாதையிலிருந்து விலகி, திருந்திய மனிதாராய் மூனறாம் சேரமான் பெருமாள் ஆக பதவி ஏற்கிறார். அவர் மனைவி பாத்மாவதி செரோட்டி அம்மாள் என்ற பெயருடன் பட்டமகிஷியாகிறாள். இவர்களுக்கும் சரி, வேணாட்டை ஆளும் மார்த்தாண்டன்-மெல்லிளங்கோதைக்கும் சரி, குழந்தை பாக்கியமில்லை. ஒரு வாரிசற்ற சூழலில் சேரம் இருக்கிறது.
இந்நிலையில் யூத அழகியும், சேரமானின் காதலியுமான யூஜியானா கருவுறுகிறாள். பட்டத்துராணிக்கு குழந்தை பேறு இல்லை ஆனால் சேரமான்-யூஜியானா மூலம் யூதர்-சேரர் கலப்பில் வந்த வாரிசு அரசாள்வதா என நம்பூதிரி சபையும் அதன் தலைவருமான நாராயணன் நம்பூதிரியும் கொந்தளிக்கிறார்கள். யூஜியானாவிற்கு பிறக்கும் பிள்ளையால் சேர நாட்டுக்கு மட்டுமல்ல மூன்றாம் சேரமான் பெருமாளின் உயிருக்கே ஆபத்து என்று கதைகட்டி குழந்தை பிறக்கும் முன்பே யூஜியானாவையும் அவர்தந்தை யோகோவாவையும் தனி மரக்கலம் ஒன்றில் இஸ்ரவேலுக்கு வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்புகிறார்கள். சேரமான் பாஸ்கர ரவிவர்மனுக்கு இதில் சிறிதும் உடன்பாடு இல்லையென்றாலும், நாட்டின் பாதுகாப்புக்காக இந்த ஏற்பாட்டுக்கு இணங்கி, அவர்களுக்கு கண்ணீருடன் விடை கொடுக்கிறார். இஸ்ரவேலில் அனைவரும் எதிர்பார்த்ததற்கு மாறாக யூஜியானாவிற்கு பெண் குழந்தை பிறக்கிறது.
யூஜியானாவின் பிரிவிலிருந்து மூன்றாம் சேரமானாகிய பாஸ்கர ரவிவர்மன் கொஞ்சம் கொஞ்சமாக மனம் தேறிக்கொண்டிருக்குபோது, அரேபியாவிலிருந்து ஒரு கலம் வந்து வஞ்சியை அடைகிறது. அதிலிருந்து இறங்குகிறார்கள் பேரழகியான சலீமாவும் அவள் தந்தை மகமதுவும். வஞ்சியில் உள்ள தன் சகோதரி பாத்திமா வீட்டிற்கு சேர நாட்டில் வியாபாரம் செய்வதற்காக வந்திருக்கிறார் மகமது.
சேர நாட்டிற்கு, வெளி நாட்டில் இருந்து வணிகம் செய்ய வருபவர்கள் சில நன்கொடை பொருள்களுடன் அரசரை சந்தித்து அனுமதி பெற வேண்டும் என்பது விதி. அதன்படி சலீமா தன் தகப்பனார் மகமது, தன் உறவுக்கார பெண் ஜெபுன்னிசாவுடன் சேர மன்னர் பாஸ்கர ரவிவர்மரை சந்தித்து கண்டதும் காதல் கொள்கிறாள். ஒரு முறை கடைவீதியில் மதம் பிடித்த யானையிடமிருந்து சலீமாவை காப்பாற்றி மயக்கமுற்றுக்கிடந்த அவளுக்கு அரண்மனையில் வைத்து சிகிச்சை அளித்து அவள் மனதில் மேலும் இடம் பிடிக்கிறார் சேரமான்.
மூன்றாம் சேரமான் பெருமாள் அவ்வப்போது சமய, இலக்கிய,தத்துவக் கலந்துரையாடலில் ஈடுபட்டு பலதுறை அறிஞர்களின் வினாக்களுக்கு விடையளிப்பது வழக்கம். சலீமா, தன் தோழி ஜெபுன்னிசாவோடு அந்தக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு, சேரமானே ஆச்சரியப்படுமளவு, அறிவு செரிந்த கேள்விகளை கேட்டு வியக்க வைக்கிறாள். அந்த கலந்துரையாடல் முடிவில் சேரமான் தவற விட்ட பதக்கத்தினை எடுத்துக்கொள்வதோடு, அதன் உள்ளே வரையப்பட்ட யூஜியானாவின் ஓவியத்தைப்பார்த்து, சேரமானின் காதலியைபற்றியும், அவள் வஞ்சியிலிருந்து இஸ்ரவேலுக்கு அனுப்பப்பட்டதையும் அறிந்து கொள்கிறாள் சலீமா. சேரமான் மீண்டும் அவளிடமிருந்து அந்த பதக்கத்தை மீளப்பெற்றுக்கொள்ளும்போது அதில் சலீமாவின் படம் இருப்பதைக்கண்டு அதிசயிக்கிறார்.
கடற்கரைக்கு மனச்சாந்திக்காக, சென்றபோது, அங்கு தன் தோழியுடன் வந்திருந்து, அலையாடிக்கொண்டிருந்த சலீமாவை அலை இழுத்துச்செல்வதை கண்ட சேரமான், கடலில் குதித்து அவளை மறுபடியும் காப்பாற்றுகின்றார். இருவரும் ஆள் அரவமற்ற ஒரு தீவில் ஒதுங்கி மனதாலும் உடலாலும் ஒன்று சேர்கிறார்கள். வஞ்சி நகரில் ஒரு நாள் இரவு முழுதும் அரசரை காணவில்லை என்பதோடு சலீமாவையும் காணவில்லை என்பதால் நகர மக்களும், அரண்மனை அதிகாரிகளும், நம்பூதிரி சபையும் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி முடிச்சிட்டு "மீண்டும் மன்னர் ஒரு மகமதியப்பெண்ணுடன் காதல் கொண்டுவிட்டார்" என்று கொந்தளிக்கிறார்கள். இந்த நிகழ்வு அரண்மனையில் மட்டுமல்லாது, வஞ்சியில் இருக்கும் மகமதியர் மத்தியிலும் கொந்தளிப்பை உருவாக்குகிறது. சேரமான் சலீமாவை மணந்து கொள்ள மதம் மாறவேண்டும் என்று ஆவேசத்துடன் கோரிக்கை வைக்கிறார்கள்.
சேரநாட்டுக்கு ஒரு மகமதியப்பெண் பட்டத்தரசி ���வதை ஏற்க முடியாது எனவும், சேரமானின் முன்னோர்கள் சமயப்பற்றில் உறுதி மிக்கவர்களாய் இருந்தார்கள் என்பதால் சேரமான் மதம் மாறுதல் என்பது நினைத்துப்பார்க்கவே முடியாத ஒன்று, என நாராயண நம்பூதிரியும், நம்பூதிரி கிராம சபையினரும், வேணாட்டை ஆண்டு வருபவரும் "வேணாட்டடிகள்" என அழைக்கப்படுபவருமான மார்த்தாண்டனும் போர்க்கொடி தூக்குகிறார்கள்.
வஞ்சி நாட்டில் இருந்த யூதர்கள், ய���த அழகியான யூஜியானாவை சேரமான் காதலித்தது மட்டுமல்லாமல் மனைவியாக்கி,ஒரு குழந்தைக்கும் தாயாக்கியதால் யூஜியானாவும் அவள் பெண் குழந்தையும்தான் சேரநாட்டின் உண்மையான வாரிசு என்று வாதிட்டது மட்டுமின்றி, யூஜியானாவையும்,அவளது பெண் குழந்தையும் மீண்டும் இஸ்ரவேலில் இருந்து வஞ்சிமாநகருக்கு வரவழைக்கிறார்கள்.
வாரிசில்லாத சேரநாட்டின் உரிமையுள்ள பட்டத்து ராணி பத்மாவதி...சேரமானால் காதலிக்கப்பட்டு பெண் குழந்தையோடு நிற்கும் யூத அழகி யூஜியானா..!! மனமும் உடலும் ஒன்று சேர்ந்து சேரமானே எனக்கானவர் என உரிமை கோரும் அரேபிய அழகி சலீமா..!!!இதற்கிடையே சின்னாபின்னபட்டு கிடக்கும் சேர நாடு...!!!
"இருவரையும் அவரவர் தேசத்திற்கு, திருப்பி அனுப்புங்கள்" என்று சபைத்தலைவர் நாராயண நம்பூதிரியும் , சோணாட்டின் விக்கிர சோழனும், கேட்டுக்கொண்டாலும் மனம் மாறாத சேரமான் பாஸ்கர ரவிவர்மன். இதன் விளைவாக சேர நாட்டின் நன்மைக்காக பாஸ்கர ரவி வர்மனை கொல்லவும் திட்டமிடுகிறார் நாராயண நம்பூதிரி. இரவில் வஞ்சி அரண்மனையில் சேரமான் பாஸ்கர ரவிவர்மன் தன் காதலியரோடு படுக்கையில் துயில் கொண்டபோது கொலைகாரனொருவனால், அவரை நோக்கி வீசப்பட்ட வேலை தன் மார்பிலே தாங்கி சேரமான் மடியிலேயே உயிர் விடுகிறாள் யூஜியானா. அவளது சடலத்தை கண்டு கதறுகிறார் மூன்றாம் சேரமான் பெருமாள். நடக்கும் நிகழ்வுகளையெல்லாம் கண்டு அந்த சோகத்திலும் ஒரு இறுதி முடிவுக்கு வருகிறார் சேரமான். தனக்கும் யூஜியானாவிற்கும் பிறந்த பெண் குழந்தையை தன் பட்டத்து மகிஷி பத்மாவதியிடம் ஒப்படைக்கிறார் சேரமான்.
நாராயண நம்பூதிரியின் திட்டப்படி பாண்டிய நாட்டுப்படைகள் ஸ்ரீவல்லபன் தலைமையில் வஞ்சிமாநகரை வளைக்கின்றன. சேரமான் தன்னுடைய நாட்டை பனிரெண்டு சிறுநாடுகளாக பிரித்து மார்த்தாண்டவர்மன், தன் சகோதர சகோதரிகள்,சுற்றத்தார், நண்பர்கள், வேலைக்காரர்கள் ஆகியோருக்கு பங்கிட்டு கொடுக்கிறார்.அவர்களிடம் கண்ணீருடன் விடைபெறுகிறார்.
வஞ்சியில் இருக்கும் தொழுகை மண்டபத்தில் மதமாற்ற சடங்குகள் செய்வதாக இருந்த ஏற்பாட்டினை, அங்கே நிலவும் பாதுகாப்பற்ற சூழல் கருதி சற்றுத்தள்ளி வைக்கிறார் சேரமான். பின் அரேபியா செல்லும் கப்பலில் தன் காதலி சலீமாவோடும், அவள் தகப்பனாரோடும் ஏறி அமர்கிறார்.பின்னாலே யூஜியானா வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியும் ஏற்றப்படுகிறது. அனைத்தும் ஏற்றப்பட்டபிறகு சேரமான் மகமதிய மதத்தை தழுவி "அப்துல் ரகிமான் சாமொரின்" என்று பெயர் மாற்றிக்கொள்கிறார். மதமாற்ற சடங்குகள் கப்பலிலேயே நடைபெறுகின்றன.
சிலகல் தூரம் சென்ற பிறகு சலீமா-சேரமான் இருவரும் யூஜியானாவின் சவப்பெட்டியை கடலில் இறக்குகிறார்கள். ஜலசமாதியான யூஜியானாவின் ஆன்மாவும் அவர்களுக்கு விடைகொடுத்தது. கப்பல் அரேபியாவை நோக்கி பயணிக்கிறது.
மூன்றாம் சேரமான் பெருமாள் அப்துல் ரகிமான் சாமொரின் என்ற பெயருடன் மகமதிய மதத்தை தழுவி தன் முஸ்லீம் மனைவியுடன் அரபிக்கரையில் உள்ள "சுகர் முக்கல்" என்ற துறைமுகப்பட்டிணத்தை அடைந்து, அங்கே சிலநாள் இருந்துவிட்டு பிறகு அவ்விடம் விட்டு கடற்கரை வழியாக "ஜபார்" என்னும் ஊரையடைந்துவாழ்கிறார்.அப்பால் உடல் தளர்ந்து மகமதிய பெண்ணின் கண்காணிப்பில் இருந்து ஜபார் என்னும் ஊரிலேயே கி.பி.838 இல் இறந்து விடுகிறார்.
அவருக்கு அந்த ஊரில் சமாதி ஒன்று கட்டி அவர் உடலை அடக்கம் செய்தார்கள். அந்த சமாதியில் "சேர அரசர் அப்துல் ரகிமான் சாமொரின் அடக்கம். இவர் ஏ.எச்.212 ல் வந்து ஏ.எச்.216 இல் இறந்தார்" என்று அரேபிய மொழியில் எழுதப்பட்டுள்ளது. ((A.H.என்பது After Hijira என்பதைக்குறிக்கும்))
மூன்றாம் சேரமான் பெருமாள் (என்ற) பாஸ்கர ரவிவர்மன் (என்ற) அப்துல் ரகிமான் சாமொரின் கி.பி.798-கி.பி.838.
என்று இந்த வரலாற்று புதினத்தை நிறைவு செய்கிறாரார் கவிஞர் கண்ணதாசன்.
இந்த சேரமான் பெருமாள் சமாதியை மிஸ்டர்.உலோகன் என்ற ஆய்வாளரையும்,பிறவற்றை "சேரர் வரலாறு"எழுதிய துடிசைக்கிழார் என்பவரது நூலையும் ஆதாராங்களாக்குகிறார்.
என்னுரை:
தமிழகத்தின் மாபெரும் மன்னர்களான சோழர், பாண்டியர், மற்றும் பல்லவர் வரலாறு பற்றி பல புதினங்கள் வந்து விட்டன. சேரர் வரலாற்றை அடித்தளமாக கொண்டு ஒரு புதினம் வரவில்லையே என்ற தமிழர்களின் மனக்குறையை நீக்கி, இப்போது நிறைவை ஏற்படுத்திவிட்டார் கண்ணதாசன்.
வரலாறோடும், விறுவிறுப்பான கதைப்புனைவோடும் சேர நாட்டின் வழக்கங்களான "மருமக்கள் தாயம்".இஸ்லாமியர்களை "மாப்பிள்ளா" என்று ஏன் அழைக்கிறார்கள், பகவதியம்மன் திருவிழா, போன்றவற்றையும் அற்புதமாக விளக்கியுள்ளார் ஆசிரியர்.
இரண்டாம் சேரமான் பெருமாள், மூன்றாம் சேரமான் பெருமாள் (எ) பாஸ்கர ரவிவர்மன் (எ) அப்துல் ரகிமான் சாமொரின், மார்த்தாண்டன், நம்பூதிரிகள் சபைத்தலைவர் ((நாராயண நம்பூதிரி என்ற பெயர் மட்டும் கற்பனை)) சேரமான் காதலியான மகமதியப்பெண்((சலீமா என்ற பெயர் மட்டும் ஆசிரியரால் சூட்டப்பட்டது)) ஆகிய அனைத்து பாத்திரங்களும் வரலாறு கண்ட உண்மையானவர்கள்.
யூஜியானா என்ற யூதப்பெண்ணின் பாத்திரம் மட்டும் ஆசிரியரின் கற்பனையில் உதித்தது.
இந்த புதினத்தை படித்து முடிக்கும் போது, சேரமான் பாஸ்கர ரவிவர்மன், அவரது காதலிகள் யூஜியானா மற்றும் சலீமா ஆகியோர் நம் மனத்தில் நிரந்தரமாக தங்கிவிடுவது மட்டுமின்றி, கனத்த இதயத்தையும், தொண்டையை அடைக்கும் சோகத்தையும் நமக்கு கொடுத்துவிடுகிறார்கள்.
இந்தப்புதினத்தின் கதையின் நாயகனான பாஸ்கர ரவிவர்மனை புதினத்தில் ஆரம்பத்தில் ஒரு கொடியவனாக, Negative shade ல் காட்டி, பின்னர் படிப்படியாக அவரை மனந்திருந்தியவனாக மாற்றி, இறுதியில் அவருக்காக நேயர்களை கண்ணீர்விடவும் செய்து, அசத்தியிருக்கிறார் கண்ணதாசன் என்றால் அது மிகையாகாது.
ஆசிரியர் கண்ணதாசன் அவர்களை ஒரு தலை சிறந்த கவிஞராக நாம் அறிவோம். ஒரு அற்புதமான எழுத்தாளராகவும் நம் இதயங்களை கொள்ளை கொள்ளுகிறார் ஆசிரியர்.
மொத்தத்தில் ..
என் மதிப்பீடு : 3.5-4 //5. படித்து பாதுகாக்கப்படவேண்டிய சேரர் வரலாற்று புதினம்.
இப்புதினத்தில் எனை மிகவும் கவர்ந்த கவிஞர் கண்ணதாசனின் தத்துவார்த்மான வரிகள்:-
*"குருதி படிந்திருக்கும் வாள்தான் கொற்றவனுக்கு பெருமை தருவது. வேல் எப்போதும் பளபளவென்று இருக்கக்கூடாது. அதைத்துடைத்து வைத்து மினுமினுப்பு தரக்கூடாது. வேலை மினுக்குதல் வீணானது என்பதால்தான், வீணாகச்செய்யும் வேலைகளை "வேலை மினுக்கிட்டு" (வேலை மெனக்கெட்டு) என்கிறோம்." -பக்கம் 154.
*"இல்லம் என்ற வார்த்தைக்கு "எதுவும் இல்லாமல் இருக்கிறோம்" என்பதே போருள்.. இல்லாது வந்தோம், இல்லாது போகிறோம்;இடையில் சிலர் நம்மை இல்லாதவர்கள் ஆக்குகிறார்கள்" -பக்கம் 151.
*"மனஸ் என்ற சொல்லில் இருந்துதான் "மனுஷ்யன்"என்ற சொல்லே பிறந்தது. ஆகவே அனைத்துக்கும் மூலம் மனமே." -பக்கம் 105.
*"கோவிலுக்குள் நுழையும்போது படியின்மீது ஏறிச்செல்லவேண்டும்.திரும்பிப்போகும்போது படியை தாண்டி செல்ல வேண்டும். இதன் காரணம் என்ன தெரியுமா? நாம் படிப்பதற்காகவே கோயிலுக்குள்ளே போகிறோம்.அதனால்தான் இதை "படி"என்று ஆணையிடும் வார்த்தையாகவே வைத்தார்கள்" -பக்கம் 103.
1977ல் முதற்பதிப்பு கண்ட இப்புத்தகம் நான்கு பாகங்களை உள்ளடக்கியது(680 பக்கங்கள் )..கல்கி பத்திரிக்கையில் 15 மாதங்களாக வாரா வாரம் வெளிவந்த தொடரை, நாவலாக பதித்திருக்கிறார்கள் .
மூவேந்தர்களை பற்றி, அல்லது புனைந்து எழுதப்பட்ட பல சரித்திர நாவல்கள் இருந்தாலும் கவிஞரின் இந்த நாவல், வரிக்கு வரி கவித்துவமாக இருப்பதனால், 'தனித்துவமானது' என்றே எடுத்துக்கொள்ளமுடிகிறது . அந்த அளவுக்கு தமிழ் சொற்களை அள்ளி கொடுத்திருக்கிறார் கவிஞர். திகட்ட திகட்ட அருந்தி பருகும்படியான நடை .
கவிஞரின் 10 பக்க முன்னுரையே போதும், சேர வரலாறு தெரிந்துகொள்ள அவ்வளவு தகவல்களை தந்து நம்மை இந்நாவல் வாசிப்பிற்கு தயார் படுத்திவிடுகிறார். அதாவது 8ம் நூற்றாண்டிலேயே சிரிய தேச கிறுஸ்தவர்கள், யூதர்கள், முகமதியர்கள், பௌத்தர்கள், சைவ/வைணவர்கள் என சேர தேசம் பல மதத்தவர்கள் வாழ்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டியர்களை பற்றிய வரலாறும் ஆங்காங்கே இந்நாவலில் இடம்பெற்றுள்ளது.
நம்பூதிரிகளின் அரசியல் எந்த அளவுக்கு சேர நாட்டில் கோலோச்சியிருந்தது என்பதையும் காணமுடிகிறது.
இரண்டாம் சேரமான் - குலசேகர ஆழ்வாராக சென்றுவிடுகிறார். அவரது மகன் மார்த்தாண்ட வர்மன்(பின்னாளில் 'வேணாட்டடிகள்' ஆகிறார்) அடுத்த அரசபொறுப்புக்கு வரமுடியாதபடி, மைத்துனன் மகன் பாஸ்கர ரவிவர்மன் தடுத்து மூன்றாம் சேரமான் பெருமாள் (கிபி 798-838 ) ஆக தன்னை முடி சூட்டி கொள்கிறான்(ர்).
இதற்கிடையே இவருக்கு மனைவி பத்மாவதி, யூத காதலி யூஜியானா(கற்பனை கதாபாத்திரம்) , முகமதிய காதலி பிரதம மந்திரி நாராயண நம்பூதிரி சேர நாட்டின் நலத்திற்க்காக போராடுகிறார்.
பாண்டியர்கள் சோழர்களுடனான போர் பிரச்சனைகள் முடிவில் சேரநாட்டை 12கோட்டங்களாக தன் சொந்தங்களுக்கு பிரித்துக்கொடுத்துவிட்டு, அராபிய சென்று இஸ்லாமியாராக மரிக்கிறார். இன்றும் அவர் கல்லறை அங்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி சென்று முடிகிறது இந்நாவல்.
பொன்னியின் செல்வன் போல திருப்பு முனை சம்பவங்களும், அடுத்து அடுத்து மாறும் கதைக் களமும் இருக்கும் என எதிர்பார்போடு இந்த நாவல் பக்கம் வரவேண்டாம். மற்றபடி, இந்நாவல் மூலமாக பல நூற்றாண்டுகள் பின்னோக்கி சென்று கவித்துவ வாசிப்பு பயணம் செய்யலாம்.
புத்தகத்திலிருந்து…
/ வடக்குத் திசைபழனி; வான்கீழ் தென்காசி குடக்குத் திசைகோழிக் கோடாம்-கடற்கரையின் ஓரமே தெற்காக்கும்; உள்எண் பதுகாதம் சேரநாட் டெல்லை எனச் செப்பு. / / பச்சைப் பசேலென்ற மலைகள். அவற்றின் முடியில் தவழ்ந்தாடும் வெண் மேகங்கள். சில்லென்ற இளங்காற்று. தெருவெங்கும் மார்பிலிருந்து முழங்கால் வரை ஒரே ஆடையைக் கட்டிக்கொண்டு செல்லும் இளம் பெண்கள். இளநீர்க் குவியல்கள், செவ்வாழைத் தார்கள். ஆம்; பொலிந்து பூரித்து நிற்கும் அழகியைப் போலவே வஞ்சி நகரம் இருந்தது. / / எந்த வெற்றிக்கும் தலைவர்கள் மட்டுமே காரணமல்ல படைகள் தாம் பெரும் காரணம் ஆயினும் விழாக் கொண்டாடுவது தலைவனுக்கு மட்டும்தானே! / / பெரியாழ்வார் சொன்னார்: “காமம் உடலிலும் உண்டு; உள்ளத்திலும் உண்டு, உடல் வெறிபிடித்துப் போனால், உள்ளம் ஒத்துவிடுகிறது. உள்ளம் வெறி கொண்டு விட்டால் உடல் ஒத்து விடுகிறது. அவள் உடல் ஒத்துவிட்டது. பக்தியும் ஒருவகைக் காமவெறியே! / / ஈடுகட்ட முடியாத ஒரு தலைவன் தன் இடத்தைக் காலிசெய்யப்போகிறான் என்றால் அடுத்த வரிசையிலுள்ள வர்களுக்குள் பலப்பரீட்சை நடப்பது இயற்கை. முடிதுறக்க முடிவு செய்தபோது அப்படியொரு பலப்பரீட்சையைச் சேரமான் எதிர்பார்க்கவில்லை. காரணம், அவருக்கு வாரிசு இருந்தது. / / உதவியின் மூலம் நண்பனையும், பதவியின் மூலம் எதிரியையும், ஆண்மையின் மூலம் மனைவியையும் திருப்தி செய்பவன் அவர்களை எப்படி வேண்டுமானாலும் ஆட்டி வைக்க முடியும் என்பதை நன்றாக உணர்ந்தவன் ரவிவர்மன் / / நோயாளி பதவியைத் துறப்பதும், சாகக்கிடப்பவன் பொருளைத் துறப்பதும், அனுபவிக்க முடியாதவன் பெண்ணாசையைத் துறப்பதும், ஆற்றாமையின் விளைவுகள். அனைத்திலும் வல்லவன் அனைத்தையும் துறப்பதே ஆண்மை மிக்க துறவு / / நல்லவனுக்குக் கையெழுத்துத் தேவையில்லை தீயவனிடம் கையெழுத்து வாங்கினாலும் பயனில்லை தர்மம் மனத்திலிருந்தே வருகிறது. / / "கோயிலுக்குள் நுழையும்போது படியின்மீது ஏறிச்செல்ல வேண்டும். திரும்பிப் போகும்போது படியைத் தாண்டிச் செல்ல வேண்டும். காரணம் என்ன தெரியுமா? நாம் படிப்பதற்காகவே கோயிலுக்குள்ளே போகிறோம். அதனால்தான் இதைப் 'படி' என்று ஆணையிடும் அவஈ வார்த்தையாகவே வைத்தார்கள். நடுவில் இருக்கும் தாமரை மலர் கல்வியின் சின்னம். திரும்பிப் போகும்போது படித்துக் கொண்டு விட்டோம் என்ற மரியாதையோடு இதை தாண்டிச் செல்லுகிறோம்." / / பிணத்தை வைத்துக் கொண்டு அரசியல் நடத்துவது ஒரு கலை! அதுவும் ஒரு வகை ராஜதந்திரம். "இயற்கையாக அழுது அறியாதவன், செயற்கையாக அழுது பழகுவதற்குப் பெயரே அரசியல்.” அரசியலில் செய்கின்ற காரியத்தைவிட, செய்யப்படும் காலமே முக்கியமானது. பெரும் கூட்டத்தை இழுத்துக்கொண்டு தீமை செய்தாலும், அது நன்மையாகத் தோன்றுகிறது. அதே கூட்டத்தைப் பகைத்துக் கொண்டு நன்மை செய்தாலும், அது தீமையாகத் தோன்றுகிறது / / பாண்டிய மன்னர்கள், சோழ மன்னர்கள் இருவரது பேரும் மெய்க்கீர்த்திகளில் எழுதப்படும்போது, 'தேவர்' என்ற பட்டப் பெயரோடு எழுதப்படுவது வழக்கம். பாண்டிய, சோழ நாடுகளை நீண்ட நாட்கள் ஆண்டவர்கள் மறவர்கள். மறவருக்கான பட்டங்களில் கத்திஉயர்ந்த பட்டம் 'தேவர்' என்ற பட்டமாகும். பாண்டிய நாட்டுப் படைப் பிரிவுகள் மூன்று. ஒன்று கள்ளர் படை; மற்றொன்று மறவர் படை; மூன்றாவது அகப்படை. மூன்றும் மூன்று குலமாக 'முக்குலம்' என்று அழைக்கப்படும். கள்ளர் படை, எதிரியின் நாட்டுக்குள்ளும் கோட்டைக் குள்ளும் சென்று வேவு பார்ப்பது; மறவர் படை. நேரடியாகப் போர்க்களத்துக்குச் சென்று போர் புரியும் படை; எதிரி கோட்டைக்கு வரும்போது கோட்டையைக் காப்பது அகப்படை இந்த மூன்று குலங்களில் மறவர் குலத்தைச் சர்ந்தவர்களே பாண்டிய கோரிடியவர்கள் இவர்களே. மன்னர்களாக இருந்திருக்கிறார்கள். / / சித்தம் எவ்வளவுதான் பக்குவப்பட்டாலும், இரத்தம் பேசத் தொடங்கும்போது மொத்த ஞானமும் கெட்டுப் போகிறது. சைவ வைணவ தர்மங்கள் இல்லறத்தை வெறுக்கும்படி உங்களை வற்புறுத்தவில்லை; அவை துறவறமே மேல் என்று போதிக்கவும் இல்லை. உங்கள் இல்லறமே உங்களுக்கு துறவறத்தை நினைவு படுத்துகின்றன மனைவி என்றொருத்தி வந்த பின்னாலேதான், திருமணம் ஏன் கூடாது என்பதை உணர்கின்றீர்கள். மகன் என்றொருவன் பிறந்து வளர்ந்த பின்னாலேதான், குழந்தைகளை ஏன் பெறக்கூடாது என்பதை அறிகின்றீர்கள் / / சித்தம் செய்யும் முடிவு, சித்தாந்தம்; வேதம் காட்டும் முடிவு, வேதாந்தம், சித்தத்தின் முடிவு தவறாகும்போது வேதத்தின் முடிவு ஆறுதல் தருகிறது / / குருதி படிந்திருக்கும் வாள்தான் கொற்றவனுக்கும் பெருமை தருவது. வேல் எப்போதும் பளபளவென்று இருக்கக்கூடாது. அதைத் துடைத்து வைத்து மினுமினுப்புத் கரக்கூடாது. வேலை மினுக்குதல் வீணானது என்பதால் வேலை மெனக்கெட்டு) என்கிறோம். போர் இல்லாத தான், வீணாகச் செய்யும் வேலைகளை வேலை மினுக்கிட்டு காலங்களில் கைவாளாவது எதன் மீதாவது பதிய வேண்டும் என்பதற்காகவே புரட்டாசி மாதத்தில் வாழை மரத்தைக் கத்தியால் குத்துவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக் கிறோம். எவ்வளவு காலத்துக்கு நாம் அதையே செய்து கொண்டிருப்பது? இல்லை; எவ்வளவு காலத்துக்குத்தான் சேரநாட்டுக்குக் கப்பம் கட்டிக் கொண்டிருப்பது?- இரண்டாம் சேரமான் பெருமாள் முடி துறந்த பிற்பாடு. சேரநாடு நிலைகுலைந்து போயிருக்கிறது. / / விறலிமலை முருகனைத் தரிசித்தார். அந்த முருகனின் முன்னிலையில்தான் சோழநாட்டுத் தேவதாசிகள் பொட்டுக் கட்டித் தங்களை அர்ப்பணித்துக் கொள்வது வழக்கம். அதனாலேயே அந்த மலைக்கு விறலிமலை என்ற பெயரும் வந்தது / / வெற்றி பெற்றவனைச் சுற்றிக்கொள்கிறவர்களும் சிலர் இருப்பார்களே! சில காவலர்கள் அவன் காலைத் தொட்டு வணங்கினார்கள். யார் ஆட்சிக்கு வந்தால் என்ன? அவர்கள் பதவி நிலைக்க வேண்டுமே! / / மணிமகுடங்கள் மனிதர்களால் செய்யப்படுகின்றன. ஆகவே, அவை எந்த சிரசுக்கும் பொருந்தக்கூடியவையே ஒரே சிரசில் அவை அமர்ந்திருந்தால், சிருஷ்டி நாயகளில் இயக்கம் புரியாமல் போய்விடும். காலங்களே சிரசுகளை நிர்ணயிக்கின்றன / / புகழ், பழி,வாழ்வு -இம்மூன்றும் பெருமளவில் வந்தால் தூக்கம் வராது. / / தானே முளைத்து, தானே தண்ணீர் குடித்து, தானே வளர்ந்து, தன்னையே வழங்கும் பனைமரம்போல் தன்னல மற்றுப் பணி புரிந்த உங்களைக் கண்ணன் காப்பாற்றுவான். / / "எதையும் யாரும் இன்னொருவனுக்குத் கொடுத்து விட முடியும். ஆனால் இந்த நிம்மதியை மட்டும் மனிதன் தன்னிடமிருந்தேதான் பெற்றுக்கொள்ள வேண்டும்." / / உலகம் வெறுக்கும்போது, உள்ளம் துணிந்து விடுகிறது. உலகம் மதிக்கும்போது உள்ளம் அணைபோடுகிறது / / 'பகவதி'என்ற பெயரும் ருத்ர தேவதையைக் குறிப்பதாகும். கண்ணகியின் கோபத்தால் பாண்டிய நாடு எங்கணும் வெப்ப நோய் ஏற்பட்டதாகவும், அதைத் தணிக்க மழை வேண்டி அமைத்த அம்மனே மாரியம்மன் எனவும் கூறப்படுகிறது. கண்ணகிக்கு அப்படி மலையாளத்தில் தரப்பட்ட பெயர்தான் பகவதி என்றும் நாம் கருதலாம். / / திருமால் இயக்கத்தில் சங்கும் சக்கரமும் முக்கியமானவை. சக்கரம் சுற்றுகிறது; சங்கு ஒலிக்கிறது. அதன் தத்துவம், உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது; உயிர்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அவன் சங்கொலிப்பது நின்றாலும், சக்கரம் சுழல்வது நிற்காது. இயக்கிவிட்டவன் கவனித்துக் கொண்டிருக்கிறான்; இயங்குகிறவர்கள் ஓடியாடிக்கொண்டிருக்கிறார்கள் /
/"ஏறக்குறைய மன்னர்கள் முடி துறக்கும் கதைகள் எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்" என்றார் சேரமான். மேலும் "ராமன் முடி துறந்தாலும், மனைவியின் மடி துறந்ததில்லை" என்றார் சேரமான். /
Sakithya academy award. One of the rarest works on Cheras. That was what prompted me to read this book. When you read about 50 pages, you will get to know what Kannadasan is very good at. Expressing love and lust through poems. This is a roller coaster historical novel encompassing love, rage, revenge, religion, conspiracies, stupidity and philosophy. In some places the events get finished even before you could notice. The rush in those spots were quite irritating. We cannot fathom whether it was a deliberate attempt to pour in all sorts of emotions into this book. But they have not worked more often. What I liked about this plot is that it never really tried to super glorify Kings like some other historical fictions did. Just when you feel someone has nearly become invincible, right then kannadasan has brought the character to the ground again and again. The flaws of humanity are revealed throughout the entire story. Overall, it was a memorable read. The title of the book is the most scintillating part of it.
This is my first kindle book. At first it seemed like a regular book that talks about the empire and kingship, but it gets exciting when Ravivarma conquers his own place in the Chera land and strives to become a capable leader. The love emotions between Youjina and Ravivarma cannnot be portrayed better. I got into the book so much that I developed some sympathy for Padmavathy, who never had a chance to acquire the King's love.
கண்ணதாசனின் கையெழுத்துக்கள் அனைத்தும் கவிதையே.. கதையா கவிதையா எனப் பல இடங்களில் எண்ணத் தூண்டும் எழுத்துக்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாய் ஆரம்பித்து அதனை கடைசி வரையில் சுழிவில்லாமல் கொண்டு செலுத்துவது மிகப்பெரிய விஷயம். அதிலும் மர்மங்கள் நிறைந்த கதையில் அனைவரின் கதாபாத்திரமும் சிறப்பு. குறிப்பாக தாரங்கிணி.
உண்மையிலேயே மூன்றாம் சேரமான் பெண் பித்துப் பிடித்துப் தான் நாட்டைத் துறந்து முடியை துறந்து தூர தேசம் சென்றானா என்பது மிகப்பெரிய கேள்வியே. ஆனால் சேரமான் காதலியில் அப்படித் தான் அவன் வடிவமைக்கப்பட்டிருக்கிறான். கண்ணதாசனின் வனவாசம் மணவாசம் படித்தவர்களுக்கு இதில் சேரமானின் எண்ணங்களை எப்படி தத்ரூபமாக கண்ணதாசனால் வருணிக்க முடிந்தது என்பது எளிதில் விளங்கும்.
நான்கு பாகங்களாக வரும் இந்த புதினம் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒன்று..
Poets are not the writers, they are magician. Who do tricks with the words.• • Flow of the book is the great magic that he did with words. Still I felt not so impressive coz of sandiliyan & kalki the way they use to tell history’s are pretty much dramatical to read take the breath of the reader, what’s next. Makes the reader turn pages.• • Quite religious storytelling makes me hate it. At the time my mind set was ugh!. Overall very lyrical to read and failed to impress me. In the end I realised poets are magicians not musicians. Details of the history Kerala and cherans was very neat and sweet coz of kanadasan tamil literature. •
This entire review has been hidden because of spoilers.
The only mistake I did was reading the author's foreword before reading the novel! He gave away a cue about who is his imagination amongst the characters. While this being a crucial role that almost drives the story, my mind was constantly thinking about what would have actually happened in the real world. I could not prevent those thoughts since the story is actually based on the fact that the titular character, the Chera king had accepted Islam. Except this one, this is surely a roller coaster ride. The author wrote it so well that I actually finished reading it with a quick pace.
Cheramaan kaadhali this is one of my favourite book I have ever read written by Kannadasan.The only book written based on chera Kingdom. it's a beautiful fiction of Kannadasan which makes readers thrill and eager to know to know next chapter. His philosophy and his way of story makes the book a great to read
Started this book with lots of expectations after many recommendations from fellow readers and the name "Kannadasan", but this book didnt meet my expectations to be honest. The story started very well with limited characters and their unique characteristics traits but got distracted as it proceeded. The genre of the book got changed a lot in later stages. It went from Historic fiction to fantasy to romance to some random story lines. It felt like current TV serials in some parts, where the story goes in different direction for TRP. Still its a good read and has some good parts but not a great book as expected. Mainly the character change in the protagonist is not well justified. He went from a greedy self centric character to a lovely selfless great king all of a sudden without proper character development. It felt very forced. Also he loves every girl he sees as she is the one. So I couldnt accept this as a great love story either. The book should be named as "Chermaan Kaadhaligal" as it potrays multiple love interests of the Chera king. Since, The story revolves around some actual history of Kerala, so fans of Historical fiction can give a try.
Cheramaan Kaadhali... The title itself reveals it is a story of a Chera king and his lover(s), historical fiction penned by the poet "Kannadasan" a very popular and legend like figure in Tamil flim industry. The story is about a Protagonist(Chera king) who was obsessed with the throne at the beginning, for that he goes on to the extent of even to kill the brother like kin an actual successor of kingdom and thereby achieving the dream of emperor, later sacrificing his same empire for his pure beloved ladies for the sake his ultimate commitment of love towards them.
* In Tamil historical fiction genre was sowed and successfully grown by the great "Kalki" thanks to his "Ponniyin Selvan" and later on carried by the likes Sandilyan, Balakumaran and so on. I too read both Kalki(all) and Balakumaran works(Udayar) which is about Cholas empire with Pandiyas as rivals. Though in "Parthiban Kanavu and Sivagamiyin sabatham" Kalki throws light into Pallavas, there is hardly we have even mentions about Cheras in Tamil novels. In that sense "Kannadasan" decided to step into the fresh field of history.
*Meanwhile author carved the historical pieces and excerpts into a poetic novel with his imagination. The novel is filled with the elements like love, spiritualism, nature and especially melancholy(which is predominant in most of the characters).Being a poet author's description of nature, love and customs are highlighting one.
*Many may feel it lacks the trill and pacy characters (spy, war sequences) which makes the work as interesting one to read. But I think that's where it stands out from others. The author's narration is not like straight flowing stream or falls. Its travels like a seamlessly floating boat in a sea. There is no strong characterization to any specific characters. All are equally weighed. It has spices of politics,religion,love,customs and natures as a mix.
*To be precise it's a story which speaks more of a emotional side of the king than his intellectual which is unusual one in historical novels.
CHERAMAN KAADHALI:- THE STORY IS SET DURING LATE 7TH CENTURY IN THE KINGDOM OF CHERA WHICH BEGINS WITH THE THEN KING CHERAMAN II WHO WANTS TO GIVE UP HIS KINGSHIP AND BECOME A VAISHNAVA SAINT. ANSWERS TO THE FOLLOWING QUESTIONS COULD BE THE ACTUAL PAGE TURNER IN THIS EPIC TALE OF LOVE WITH UNEXPECTED TWISTS OF FATE:- 1) WHO WILL BECOME THE NEXT KING, IS IT THE LEGAL HEIR OF CHERAMAN II WHO EVERYONE BELIEVES TO BE (OR) IS SOMEONE SECRETLY PLOTTING TO CLAIM THE POWER? 2) HOW A HERO BECOME A TRAITOR, TRAITOR BECOME A RULER AND WHY HE ABANDONS IT ALL, AND WHO IS IT ACTUALLY? 3) CAN A PERSON HAVE MORE STRONGER EMOTIONS AND SHOW MORE FEELINGS TOWARDS HIS SECOND LOVE THAN THAT OF HIS FIRST? 4) DOES A WOMAN WHO HAPPENS TO BE A QUEEN, WHO LOVES AND CARES FOR HER LEGALLY MARRIED HUSBAND WOULD GO TO AN EXTENT TO GIVE BOTH OF HIS HANDS TO OTHER TWO LOVE OF HIS LIFE? AND AMONG THESE THREE WHO IS THE REAL KAADHALI? EACH CHARACTER AND THEIR INTENTIONS ARE BROUGHT OUT IN SUCH A WAY THAT IT MAKE US UNDERSTAND HOW HUMANS ARE CARRIED AWAY BY THE MATERIALISTIC DESIRES AND FALLS INTO EMOTIONAL TURMOIL. ALTHOUGH WE LIKE CERTAIN CHARACTERS, AUTHOR MAKE US TO THINK BEFORE SUPPORTING THEM WHOLE-HEARTEDLY BUT AT LAST WE ACTUALLY DO. HERE THE VERY CONCEPT OF "HOW WE HUMANS DOES NOT CARE FOR THE OTHER WHEN ALIVE BUT TO HIS/HER GRAVE WE CARRY FLOWERS AND BOUQUETS WITH TEARS AND MEMORIES" IS BROUGHT OUT VERY WELL...
KAVIARASAR KANNADASAN WITH CINEMATIC DIALOGUES AND POETIC DESCRIPTION "KADHAL ILLADHA KALYANAMUM KALYANAM ILLADHA KADHALUM THOLVI YE" CARRIES THE WHOLE NOVEL WITH CONSTANT PACE BUT FOR LAST 90 PAGES PICKING UP THE MOMENTUM.
I WOULD GIVE 4 OUT OF 5 STARS FOR HAVING ALL THE ELEMENTS OF LOVE FOR KAADHALI BUT NOT A SINGLE SCENE OF WAR FOR CHERAMAN.... REQUEST YOU NOT TO READ IT IN PIRATED VERSION...
we all know few historical facts about Chola & Pandiya Kingdom. But Author had a thought to give a brief historical things about Cheran kingdom (that most people never knew/rarely knew) with mixture of Fiction. Characters were wonderfully depicted, But I expected wars with other kingdoms. Simply Its about Sacrifice & Love, and all the religions were treated equally. Kannadasan wrote in poetic way about Yugiyana, padmavathi is wonderful and simplicity of Cheraman is simply superb.
Only a few authors have written about the Cheras and their history. This one is a well written novel based on the historical facts. Interesting, though some of the plots in it are quite guessable and some of the characters that appeared to be prominent are suddenly disappearing from the rest of the novel. Enjoyed reading it, but my opinion is that it could have been better.
A historical master piece. It is heart touching when come to know the Cheran king left the country for his love. Beautiful narration, loved it very much.