Jump to ratings and reviews
Rate this book

கோபல்லபுரம் #1

கோபல்ல கிராமம்

Rate this book
பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெற்கு நோக்கி ஓடி வந்த தெலுங்குக் குடும்பம் கோபல்ல கிராமம் என்னும் புதிய கிராமத்தை உருவாக்கி, பல குடும்பங்களாகப் பெருகியபின், அந்த மக்களின் பிரச்சினைகளைச் சித்திரிக்கும் நாவல் இது. கரிசல் காட்டுக் கிராம மக்களின் பேச்சு வழக்கையும் சொலவடைகளையும் சரளமாகக் கையாண்டு வாய்மொழிக் கதை மரபில், புதிய வடிவத்தில் இந்த நாவலை உருவாக்கியுள்ளார் கி. ராஜ நாராயணன்.

199 pages, Paperback

First published January 1, 1976

162 people are currently reading
2302 people want to read

About the author

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (Ki. Rajanarayanan) கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.

கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்றவர். 2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது.

Ki. Rajanarayanan (Ki. Ra for short) was born in Idaiseval village in 1923. He dropped out of school in the seventh standard. He was appointed a professor of folklore at Pondicherry University in the 1980s. He held the title of Director of Folktales in the university's Documentation and Survey Centre. He was a member of the Communist Party of India and went to prison twice for his participation and support in the CPI organised peasant rebellions during 1947–51. In 1998-2002 he was a General council & Advisory board Member of Sahitya Akademi.

Ki. Ra.'s first published short story was Mayamaan (lit. The Magical Deer), which came out in 1958. It was an immediate success. Ki. Ra.'s stories are usually based in Karisal kaadu (scorched, drought stricken land around Kovilpatti ). He centres his stories around Karisal country's people, their lives, beliefs, struggles and folklore. The novels Gopalla Grammam (lit. Gopalla Village) and its sequel Gopallapurathu Makkal (lit. The People of Gopallapuram) are among his most acclaimed; he won the Sahitya Akademi award for the latter in 1991. Gopallapuram novels deals with the stories of people living in a South Indian village before the arrival of the British. It involves the migration of people escaping brutal kingdoms north of Tamil Nadu. As a folklorist, Ki. Ra. spent decades collecting folktales from the Karisal Kaadu and publishing them in popular magazines. In 2007, the Thanjavur based publishing house Annam compiled these folktales into a 944-page book, the Nattuppura Kadhai Kalanjiyam (Collection of Country Tales). As of 2009, he has published around 30 books. A selection of these were translated into English by Pritham K. Chakravarthy and published in 2009 as Where Are You Going, You Monkeys? – Folktales from Tamil Nadu. Ki. Ra. is well known for his candid treatment of sexual topics, and use of the spoken dialect of Tamil language for his stories (rather than its formal written form). In 2003, his short story Kidai was made into a Tamil film titled Oruthi. It was screened in the International Film Festival of India.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
573 (44%)
4 stars
536 (41%)
3 stars
138 (10%)
2 stars
28 (2%)
1 star
13 (1%)
Displaying 1 - 30 of 147 reviews
Profile Image for Vivek KuRa.
279 reviews51 followers
March 19, 2024
2024 மறுவாசிப்பு


கரிசல் இலக்கிய விரும்பிகளுக்கு இந்த படைப்பு ஒரு சுவையான விருந்து. கரிசல் மண்ணில் வளர்ந்த என்னால் கி.ராவின் இந்த முக்கியமான படைப்பை என் இருதயத்தின் அருகில் வைத்து பார்த்து ரசித்து ருசிக்க முடிகிறது. என்னால் பலமுறை படிக்கப்பட்ட சில புஸ்தகங்களில் இதுவும் ஒன்று. Magnum Opus of கி .ரா. கரிசல் இலக்கியத்தின் மூத்த முன்னோடி கி.ரா .
Profile Image for Ashish Iyer.
870 reviews634 followers
July 17, 2021
I have this amazing friend who told me how her ancestor came from Telugu land to Tamil Nadu. My friend's ancestor used to be in army of Vijayanagara Empire and she told me how they moved to Tamil Nadu and started everything from scratch. This story made me so intrigued that i was looking for similar story of Telugu people in Tamil Nadu. Luckily, i came across this book. Here the story is bit different. A community of Telugu speakers migrates to the Tamil land to escape Muslim atrocity. It also give you the glimpses of Telugu people and their modus vivendi. The novel is unique on its own, it gives you vibe of rustic village lifestyle. This book make you feel like you are reading anthology but those stories are weaved into one novel.
Profile Image for Subhashini Sivasubramanian.
Author 5 books188 followers
November 5, 2021
நீண்ட நாட்களாகப் படிக்க வேண்டும் என்று நினைத்து நினைத்து ஆசை ஆசையாய் எடுத்து படித்த நூல். ஆனால் பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

1. நூலின் 32 ஆவது பக்கத்தில் நடந்த கொலையில் இருந்து கதை வேறு இடத்திற்குப் போகிறது. மீண்டும் கதைக்குள் 150 பக்கம் முடிந்த பின்னரே நூல் வருகிறது. எனக்குப் போதும் போதுமென்று ஆகிவிட்டது. This is a massive detour which left me bored. All I felt was indifference to whatever happened in those pages.

2. பின்கதை சொல்லலாம். ஆனால் நூலே வெறும் பின்கதைகளின் தொகுப்பாக இருப்பது அலுப்பாக இருந்தது. ஊரின் வரலாறு, மக்கள் ஒவ்வொருவருக்கும் பட்டப்பெயர் வந்ததன் வரலாறு, ஒவ்வொரு விவசாய முறையும் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு என்று வெறும் தகவல் தொட்டியாகவே நூல் போகிறது. நூலில் கதையெங்கே என்று தேடிப் பிடிப்பது போல இருந்தது. தகவலுக்காகத் தான் நூலே என்றால், அதை புனைவிலி நூலில் படித்துக் கொள்வேனே! அதைப் புனைவில் வலிந்து வைத்தது படிக்க அயற்சியாக இருந்தது.

3. ‘பணக்கார ஆதிக்க சாதி வீட்டின் அழகு பெண்ணொருத்தியின் மீது இசுலாமிய மன்னன் ஒருவன் மயங்குகிறான். அவளை அடைய நினைக்கிறான். மாட்டுக்கறியை உண்ணக் கொடுக்கிறான். அதனால் அவர்கள் புலம்பெயர்கிறார்கள்’. இதே கதைகளை எத்தனை முறை தான் கேட்பது! ஆதிக்க சாதி இந்துக்களுக்கும் இசுலாமிய மன்னர்களுக்கும் பின்னர் வந்த ஐரோப்பியர்களுக்கும் இருந்த வணிக உறவு, அரசியல் மோதல் இதையெல்லாம் கணக்கில் கொஞ்சமும் எடுக்காமல் ‘அழகு இந்துப் பெண், அரக்க இசுலாமிய மன்னன்’ என்று கதையைச் சுருக்கும் அதே அபத்தத்தை கி. ராவின் நூலிலும் எதிர்பார்க்கவில்லை. அந்தப் பகுதி வரும் போதே போதும் போதுமென்றாகிவிட்டது.

4. மக்கள் கொலைகாரனைக் கழுவில் ஏற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள். ஒரே ஒருவர் மட்டும் அதற்கு மனதிற்குள் எதிர்ப்பு வைக்கிறார். அவர் யாரென்றால் ஒரு தீவிர இராம பக்தர், அதனால் தான் அவர் மனம் வாடுகிறது. மேலே சொன்ன சிக்கலையும் இதையும் சேர்த்து பார்க்கும் போது, கி.ரா தனது நூலில் வைக்கும் அரசியல் பார்வை எனக்குச் சிறிதும் உவப்பாக இல்லை.

5. இவையனைத்தையும் தாண்டியுமே நூலில் கதையென்று எதுவும் இல்லாதது தான் நூலை முடிக்க எனக்குப் பெருந்தடையாக இருந்தது. இப்போது இரண்டாவது நூலைப் படிக்க வேண்டுமே என்று நினைக்கும் போதே அயற்சியாக இருக்கிறது. 😓

கோபல்ல கிராமம் | கி ராஜநாராயணன் | Tamil Book review | Gopalla Gramam https://youtu.be/TPCkEVLkivc
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Godwin.
36 reviews6 followers
March 15, 2021
கி.ரா.வின் படைப்புகள் பற்றிய சில கட்டுரைகளை வாசித்திருந்தாலும் இதுவரை அவர் எழுதிய கதைகளையோ, நாவல்களையோ வாசித்ததில்லை. அந்த வகையில் இது கரிசல் பூமியை நோக்கிய எனது கன்னிப் பயணம். வார்த்தைகளைக் கொண்டு ஓர் உலகத்தை உருவாக்கி இந்தா, இதனுள்ளே வாழ்ந்து கொள்ளுங்கள் என்று வாசகனிடம் தந்திருக்கிறார். வாசித்து முடித்த பின்னும் அந்த உலகத்திலிருந்து வெளியேறத் தோன்றவில்லை.
Profile Image for Harikrishnan.
74 reviews8 followers
February 27, 2021
அருமையான நாவல்.
வெட்டுக்கிளி படையெடுப்பு பற்றிய பகுதி வியப்பில் ஆழ்த்தியது..
Profile Image for Tarun.
115 reviews60 followers
May 18, 2021
An interesting but very brief account of life in a village called Gopallapuram situated in an arid region of Tamil Nadu. Village life is dominated by a family of Telugu Nayakkars, some of whose members are the principal characters of this story.
This book is basically a collection of vignettes that are linked together in the manner of folk tales. Set in the early- to mid-nineteenth century.
Profile Image for Girish.
1,155 reviews260 followers
November 9, 2020
What a quaint little book about one particular village in the karisal land! Told through many stories the book covers the creation of the village as a settlement, stories of it's people, origin of their beliefs and anecdotes that bring to life the decisions of a village.

The book is centered on the family of Nayakkars who escaped from the Nizam's rule to settle down in Gopallam. They create the village by burning down the 'karisal kadu' to make a settlement. A farming village held together by a simple system facing the threat of the times like famine, dacoits and crimes ends on the note of Queen's rule.

The book had primarily male characters despite the two stong women characters who probably were instrumental in the entire origin story. The narrative starts from one crime and then goes all the way back to the origin and back to the punishment. In that sense, the book was non-linear.

The book does raise the anticipation of the sequel. A worthy read.
8 reviews1 follower
January 8, 2024
கோபல்ல கிராமத்தை பற்றி ஒரு வரியில் சொல்வதென்றால் ஒரு கதைக்குள் ஓராயிரம் கதைகள் ஆங்கிலேயரின் ஆட்சி நிலை பெறுவதற்கு முன்பான காலகட்டத்தில் ஆந்திர தேசத்தில் இருந்து இடம் பெயரும் மக்கள் தங்களுக்கென ஒரு கிராமத்தை உருவாக்குவதே கதை.தொடக்கத்தில் வரும் ஒரு கிராமம் கண் விழிக்கும் காட்சி அத்தனை செழுமையாக எழுதப்பட்டுள்ளது. முள் காட்டைத் திருத்தி விளைநிலமாக்கும் பகுதி, ஊராரின் காரணப் பெயர்கள், கிராமத்தினரின் வேடிக்கை பேச்சுகள் என்று பல இடங்கள் ரசிக்க வைத்தன.
Profile Image for Satheeshwaran.
73 reviews222 followers
August 12, 2019
கி.ராஜநாராயணன் அவர்களின் 'கோபல்ல கிராமம்' நாவல் பற்றி YouTube பதிவு:

youtu.be/zoCXn582n_Y

நன்றி!
19 reviews1 follower
February 18, 2025
ஒரு கொலையில் ஆரம்பித்து இன்னொரு கொலையில் கிட்டத்தட்ட முடியும் கதை. இரு கொலைகளுக்கு மத்தியில் இந்த நாவல் ��கர்ந்தாலும் எந்த பரபரப்பும் இன்றி கிழித்த கோட்டில் செல்லும் நீர் போல சுவாரசியத்துடன் நகரும் கதையாடல். ஓர் இனக்குழு ஒரு சில காரணங்களுக்காக சொந்த மண்ணில் இருந்து இடம் பெயறுகிறது. நடுவில் சில துயரங்கள் நம்பிக்கைகள் கதையை நகர்த்துகின்றன. ஒரு நூற்றாண்டுக்கு பிறகு புலம்பெயர்ந்ததன் எந்த சுவடும் இன்றி வாழும் இடத்தின் இயல்போடு பின்னிப்பிணைந்த வாழ்வியலே நாவலின் அடிநாதம். கதையில் நாயகன் இல்லை. நாயகியில்லை. அதிரடிகள் இல்லை ஆரவாரம் இல்லை. அதிக விவரணைகளோடு உள்ள கோட்டையார் வீடு கூட புலம்பெயர்ந்த வரலாற்றைச் சொல்லும் காரணியாகவும் நிகழ்கால இருப்பியலை சொல்லும் சாட்சியாக மட்டுமே நாவலில் உள்ளது. மற்றபடி உணர்வதற்கு இலகுவாக பக்கங்கள் அனைத்திலும் நிறைந்து இருக்கிறது கோபல்ல கிராமம்
Profile Image for Prashanth Bhat.
2,142 reviews137 followers
February 23, 2022
Gopallapuram - k rajanarayanan

ಬ್ರಿಟಿಷ್ ಆಳ್ವಿಕೆ ಭಾರತಕ್ಕೆ ಕಾಲಿಡುವ ಮೊದಲಿನ ಕಾಲದ ಕಥೆ ಇದು. ಎಣಿಸಿ ಇನ್ನೂರು ಪುಟವೂ ಇಲ್ಲದ ಕಥೆ. ಸಣ್ಣ ಸಣ್ಣ ಅಧ್ಯಾಯಗಳು.
ಆಗಿನ ಕಾಲದಲ್ಲೇ ಎಷ್ಟು ದೊಡ್ಡ ಕತೆಯನ್ನು ಆದಷ್ಟೂ ಕಡಿಮೆ ಶಬ್ದಗಳ ಬಳಸಿ ಹೇಗೆ ಹೇಳಿದ್ದಾರೆ ಅಂದರೆ ಅಚ್ಚರಿಯಾಗುತ್ತದೆ.

ಮನೆಯಲ್ಲಿ ಜಗಳವಾಡಿಕೊಂಡು ಬಂದ ಗರ್ಭಿಣಿ ಹೆಂಗಸಿನ ಮೇಲೆ ಡಕಾಯಿತನೊಬ್ಬ ದಾಳಿ ಮಾಡಿದ್ದಾನೆ.
ಅವಳ ಕೊಂದು ನಗ ದೋಚುವ ಸಮಯದಲ್ಲಿ ಅವ ಸಿಕ್ಕಿ ಬಿದ್ದಿದ್ದಾನೆ.
ಆ ಊರೇ ಗೋಪಾಲಪುರಂ.

ಆ ಊರಿಗೇ ಒಂದು ಕರಾಳ ಇತಿಹಾಸವಿದೆ. ಮುಸ್ಲಿಂ ದಾಳಿಕೋರರಿಂದ ತಮ್ಮ ಮಾನ ರಕ್ಷಿಸಿಕೊಳ್ಳಲು ಓಡಿ ಬಂದ ಗುಂಪು ನೆಲೆ ನಿಂತ ಜಾಗ ಅದು.
ಡಕಾಯಿತರ ಗುಂಪನ್ನು ಊರಿನವರೇ ಉಪಾಯ ಹೂಡಿ ಸದೆ ಬಡಿದ ಊರು ಅದು.

ಅವರಿಗೂ ಸ್ಥಳ ಪುರಾಣಗಳಿವೆ,ದೇವತೆಯಂತ ಸೌಂದರ್ಯದ ಹುಡುಗಿ ಇದ್ದಾಳೆ. ಕಾಪಾಡುವ ದೈವ ದೇವರುಗಳಿದ್ದಾರೆ.

ಇತಿಹಾಸ ಬಾಯಿಂದ ಬಾಯಿಗೆ ಹರಡಿ ಪುರಾಣವಾಗುವ ಸಶಕ್ತ ಚಿತ್ರಣ ಇದು.

ಇದನ್ನು ಓದುವಾಗ ಬೇಡವೆಂದರೂ ದೇವನೂರರ ಕುಸುಮಬಾಲೆ ನೆನಪಾಗುತ್ತದೆ.
251 reviews38 followers
July 23, 2021
தெலுங்கு தேசத்திலிருந்து இங்கு குடியேறிய ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள், எப்படி அவர்களுக்கான கிராமத்தை அமைத்துக் கொண்டனர் என்பதை கூறுகிறது.  
🔅மேலும் நூற்றாண்டை கடந்த கதை என்பதால், மங்கத்தாயரு என்னும் பூட்டியை  பாலமாக படைத்திருக்கிறார். மங்கத்தாயருவின் பாத்திரம்  மட்டும் இல்லாமல் சென்னாதேவி, துளசி, கோவிந்தப்ப நாயக்கர், அக்கையா என்று அனைத்து மனிதர்களும் வெவ்வேறு  குணத்தில் இருந்தாலும் கதையில் முக்கிய மனிதர்களே.
🔅சென்னாதேவியின்  அழகில்  மயங்கி துளுக்க ராஜா ஒருவன், அவளை திருமணம் செய்து கொள்ள ஆசைபடுகிறான். அவளின் குடும்பம் அவனிடம் இருந்து தப்பித்து நெடுந்தூரம்  பயணப்படுகிறார்கள்.இப்போது கிராமம் இருக்கும் அந்த இடத்தில் பெரிய காடு இருந்தது. அதை எவ்வாறு மாற்றி கிராமமாக மாற்றினார்கள் என்பதை அழகாக கூறியிருக்கிறார்.  ஒரு நாள் காட்டில் இருந்து பசு இந்த கிராமத்திற்கு வந்தது. அன்றிலிருந்து பசு மாடுகள் நிறைய வந்துவிட்டன. “கோபல்ல”  என்று பெயர் வந்தது அதனால் தான்.
🔅அந்த கிராமத்தில் குடிவந்த போது ஒவ்வொரு குடும்பத்தின் சார்பாகவும் ஏரியின் கரை ஒரமாக  ஒரு மரம் நடப்பட்டது. தலைமுறைகளைக் கடந்தும் அந்த மரங்கள் கம்பீரமாக இருக்கின்றன. விக்டோரியா மகாராணியின் ஆட்சி பரவியிருந்த காலம் அது. சுதந்திர தீ அப்போதுதான் கொளுந்து விடத் தொடங்கியது கோபல்ல கிராமத்தில். 🔅கோபல்லபுரத்து  மக்களின் என்று நூலின் முதல் பாகமே இந்த புத்தகம்.
முன்னேயே படித்திருந்தால் கோபல்ல கிராமம் பற்றி தங்களின் கருத்தைப் பதிவிடுங்கள்.
♥️புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால்  இணைவோம் ,
♥️பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி .
Happy reading …..
Profile Image for Siva Prasath T R.
76 reviews4 followers
July 17, 2021
கதைக்குள் கதை கேள்விப்பட்டிருப்போம் ஆனால் ஓர் கதைக்குள் இத்தனை கதை வைக்க முடியுமா என்றால் முடியும் என்று காட்டியுள்ளார் ஐயா கி.ரா. இந்த கோபல்ல கிராமத்தை வாசிக்கத் தொடங்கியதும், ஏதோ கதை சொல்ல வருகிறார் இது தான் இந்த கதையின் மையம் என நினைப்போம் ஆனால் அந்தக்கதையை அங்கேயே கிடப்பில் போட்டுவிட்டு இன்னோரு கதையை தொடர்கிறார் சரி இதாவது மையக்கதையாக இருக்குமா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். இன்னோரு கதையை உள்ளேநுழைப்பார், இத்தனை கிளைக் கதைகளைக் கொண்டிருந்தாலும், இன்னது தான் கதையென்று யூகிக்க இயலாவிட்டாலும் விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது. எங்கேயும் கதை நிற்காது,நம்மால் நிற்கவும் இயலாது, அது பாட்டிற்கு போய்க்கொண்டே இருக்கும், நாமும் ஐயா கைப்பிடித்து சென்று கொண்டே இருக்கலாம். இந்த கரிசல் இலக்கியம் பல்வேறு வியப்பை உண்டாக்குகிறது. எவ்வாறு ஒரு மனிதன் இவ்வாறெல்லாம் தனது கற்பனை சக்தியை பிரயோகித்து, இப்படி ஒரு வரலாற்று சிறப்புமிக்க நூலை படைக்க இயலுமா?? புலம்பெயர் மக்களின் நிலையினை வலிகளை வேதனைகளை படம்போட்டு காட்டினால் கூட இந்த நூலின் அளவுக்கு நுட்பமாக காட்ட இயலுமா என்று தெரியவில்லை. அவ்வளவு தத்ரூபமாக நம்மையும் அவர் கூடே அழைத்து செல்லும் விதம் பிரம்மிப்பு. கதாப்பாத்திரங்களை நுட்பமாக கையாண்ட விதம் மேலும் ஆர்வத்தை ஊட்டுகிறது, ஏகப்பட்ட கதைமாந்தர்களை வாழும் மனிதராக நம்முன்னே நிலைநிறுத்தியுள்ளார். ஒரே இடத்தில் தேங்கவிடாது நம்முடைய கற்பனைத் திறனை மேலும் மெருகேற்றுகிறது. ஐயா கி ரா அவர்கள் கதைசொல்லும் விதம் கேட்டுக்கொண்டே பேகலாம், கரிசல் வாழ்வை அனுபவிக்கலாம்.
Profile Image for P..
528 reviews124 followers
January 14, 2020
நலிந்த நிலையில் காணப்படும் தற்காலத்தைய நாயக்கர் வீட்டில் தொடங்கி, அவ்வீட்டில் முன்பு வாழ்ந்த அவர் மூதாதையர்கள் கதைக்குத் தாவி, அவர்களின் மூலம் ஆந்திராவிலிருந்து குடிபெயர்ந்தவர்களின் வரலாற்றை உரைத்து, நாடோடி வாழ்க்கையின் பலவித கோணங்களை அலசி, ஒரு கிராமம் உருவாகி தழைப்பதன் சுவாரஸ்யத்தை சுமந்து, இறுதியில் ஆங்கிலேயர் வருகையால் ஏற்பட்ட கசப்புகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போக, அதை எதிர்த்துக மக்கள் கிளர்ந்தெழும் புள்ளியில் கதை நிறைவடைகிறது. இரண்டாம் பாகமான "கோபல்லபுரத்து மக்கள்" நூலிற்கான அடித்தளமாகவே இக்கதை இருப்பினும், வழக்கத்திற்கப்பாற்பட்ட கதைசொல்லலாலும் ருசியான பல கிளைக்கதைகளாலும் நம் ஆர்வத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது "கோபல்ல கிராமம்".

வயதான மங்கத்தாயாரு அம்மாள் பிரதான பங்கு இக்கதையில் வகித்தாலும், ஏழு ஆண்மக்கள் நிறைந்த நாயக்கர் வீட்டில் உள்ள பெண்களில் ஒருவரைக்கூட கதையில் குறிப்பிடாமலிருப்பது பெரும் omission−ஆகவே படுகிறது. அக்கால வாழ்வின் அசல் பிரதிபலிப்பாக, வரலாற்றையும் வாழ்வுமுறைகளையும் பத்திரமாக ஆவணப்படுத்தும் பொக்கிஷமாக இருப்பினும், கதையில் தென்படும் பிற்போக்கு பழக்கவழக்கங்கள் சில சோர்வடையச் செய்கின்றன.
Profile Image for Gautami Raghu.
229 reviews22 followers
August 27, 2023
ஓர் அசாதாரணமான கிராமியக் கதை!

"கிடை"-யின் சாயல் ஆங்காங்கே இருந்த போதும், ஒரு கிராமத்தின் ஆச்சரியம் மிக்க மற்றொரு முகத்தைக் கண்டேன். நகரத்திலேயே வாழ்ந்து வளர்ந்த எனக்கு ராஜநாராயணன் அவர்கள் விவரிக்கும் கிராமமானது மிக வசீகரமாகவும், சிந்தனைக்கு உள்ளாகும் விதமாகவும் இருக்கிறது.

கதைக் களம் ஒன்றாம் பக்கம் முதல் சுவாரசியமாக ஆரம்பிக்கிறது. கோபல்ல கிராமத்தின் அன்றாட வாழ்க்கை, அக்கையாவின் குறும்புகள்,சென்னாதேவியின் கதை, தீவட்டிக்காரன்களின் பயம் கொள்ள வைக்கும் கொள்ளைகள், ஊர்கூட்டத்தின் முக்கியப் பிரமுகர்களின் பெயர்களும் பெயர்காரணங்களும், "தழையிறது", "கழுவன்" என என் கண்களை விரிய வைத்தவைகளைக் கூறிக் கொண்டே செல்லலாம்.

ஆனால், இவைகளையும் தாண்டி மனதில் அதீத தாக்கத்தை உண்டாகியது: நாயகர்கள் ஊர் விட்டு ஊர் பெயர்ந்து கோபல்ல கிராமத்தைப் புதிதாக உருவாக்கிய விதமும், விவரங்களுமே. அயராத உழைப்பு, பிள்ளைக் காடு, பாம்பு நெய், காட்டுப்பசு, இறுதியாக விளைச்சல், கம்மாய், ஒரு குடும்பத்திற்கு ஒரு மரம் நடுதல், வணிகம் என கிராமத்தை ஒரு ஒரு கல்லாய் செதுக்கிய விவரங்கள் மனதைக் கவர்ந்தன!
குருவி சேர்த்தது போல் உழைப்பால் ஒரு ஒரு அடிக்கல்லாகக் கட்டப்பட்ட கோபல்ல கிராமம் விட்டில்களாலும், ஆங்கிலேயர்களாலும் சிதலமடைய ஆரம்பிப்பதைக் காணவே வலிக்கிறது.

கோபல்ல கிராமத்தை ஒரு கதை போல் வாசிக்காமல், அங்கே புதிதாய் சென்ற ஒருவன் அவர்களின் வரலாறு, வாழ்க்கை, ஒவ்வொருவரின் ஆளுமை, வாழ்வியல், கதைகள் அனைத்தையும் அவனின் கண்ணோட்டத்தில் கவனித்து அறிந்து கொள்வான் அல்லவா? அது போல் அறிந்து கொள்ளப் பார்த்தால், கோபல்ல கிராமத்தின் தனித்துவம் உங்களுக்கு இன்னும் வெகு அழகாகத் தெரியும்!

"கோபல்லபுரத்து மக்கள்"-யை சீக்கிரமாகவே வாசிக்கத் தூண்டுகிறது கோபல்ல கிராமம்.
Profile Image for Nallasivan V..
Author 2 books44 followers
November 17, 2017
This is not a novel as much as an anthropological documentation of life in a village - or rather the life of a village.

A group of telugu nayakkers are forced to migrate from their ancestral village when their King wants to marry the youngest daughter of the family. After a long arduous journey south they settle down in a forest patch in south tamil nadu, clear it and start a living there. We follow five generations of their story till 1858, just after her majesty takes India over from the East India Company.

From the flow of the story and the style, you could sense that this might have been a real story, passed down orally through the generations. It has a folk lore kind of mysticism to it, gained probably through its many retellings.

A murder that happens just outside gopalla giramam forms the loose canvas on which the brilliant anthropological exhibit is painted on. As the case of the murder is tried, we travel back and forth between the village's history, each character's personal story and the present - somewhat like the character flashbacks from the movie, City of God. One can think of Naipaul's Miguel Street as a literary parallel. But Miguel Street chronicled only a single point of time - capturing the vibrancy of one street and one community. Gopalla Giramam goes further. It is a sort of an origin story - of a particular culture and a way of life. And it has a sequel.
Profile Image for Satheesh Kumar.
35 reviews17 followers
February 11, 2015
3.5/5

வேறு தேசத்தில் இருந்து குடி பெயரும் மக்கள், எப்படி ஒரு கிராமத்தை உருவாக்கி, அதில் குடியேறுகிறார்கள் என்பதை சுவாரிசயமான நிகழ்வுகளுடன் விவரிக்கும் நாவல். ஒரு கிராமம், பிறப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக் வளர்வதை அப்படியே நம் கண் முன்னே நிறுத்துகிறார் கி.ரா. கிராம வாழ்க்கையின் ஆழமான விவரிப்பு மிக அருமை. கிராம மக்களின் வாழ்வு நிகழ்வுகளை மிகவும் ரசித்தேன்(குறிப்பாக அக்கையா பண்ணும் குறும்புகள்!).


ஆனால் ஒரு விஷயம் ஒரு பெரிய குறையாக எனக்குப் பட்டது. நாவலில், கதை நகரும் விதம் ரொம்ப fracturedஆக இருந்தது. தொடர்ச்சியாக பல அத்தியாயங்கள் கதாபாத்திரங்களை விவரிப்பதிலேயே போகும். திடீரென்று ஒரு 5,6 அத்தியாயங்கள் கதையை நகர்த்தும். கதை நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் போது மீண்டும் ஒரு பெரிய break வந்து விடும். கதை போக்குக்கு ரொம்ப பங்களிக்காத பகுதிகள் இன்னும் கதையோடு நன்றாகக் கலந்து புனையப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இறுதி 10 அத்தியாயங்களில் தான் கதை கொஞ்சம் வேகமாக நகர்ந்து வரலாற்றோடு இணைந்து முடிகிறது.



சுவாரஸ்யமாக நாவல் தான். இருந்தாலும்...
கி.ராவுக்காகப் படிக்கலாம்!

Profile Image for Rajesh Arumugam.
144 reviews3 followers
March 5, 2014
Regular books have a story around a set of characters and the story developing.
But Gopalla Gramam was very different. It brings out how people from Andhra come down to Ramanad district in TN. How they form a village. How they do get into farming, maintain domestic animals etc.
It talks about the village through various incidents and moves forward by intertwining them. The story is about Gopalla Gramam.

It was a refreshing read compared with other novels. Surprised such a novelistic presentation of a village was written in 1976 itself.

And now, I curse myself because writer Ki.Rajanarayanan stays just the back side of my house. Till last year he stayed above my house (just 10 steps). I haven't seen the diamond above my head for almost 20 years.
Profile Image for Karthik.
17 reviews7 followers
December 8, 2018
சிறு வயதில் என்னுடைய கிராமத்தில் சந்தித்த , ரசித்த பல மனிதர்களை இந்த புத்தகத்தில் மீண்டும் சந்தித்தேன்... அப்படியே நம்மை கோபல்ல கிராமத்தின் பிரஜையாக வாழ வைக்கிறார் கி.ரா.. இன்னும் இரண்டு முறையாவது மறு வாசிப்பு செய்தால் தான், இந்த புத்தகத்தை முழுமையாக சுவைக்க முடியும்
Profile Image for Arun A.
59 reviews10 followers
October 1, 2018
போற போக்கிலே அப்படியே ஒரு வெளியூர்கார்ட்ட பேசிக்கிட்டே அந்த ஊரை பத்தி அவர் சொல்றதை கேட்டுகிட்டே ஒரு பயணம் போனது மாதிரி ஒரு உணர்வை கொடுத்திருக்காரு கி.ரா. இதில சொல்லப்பட்ட நெறைய கதைகள் அநேகமா நெறைய ஊர்ல பேச்சு வாக்கிலே கேட்ட கதைகள் தான்....

துலுக்க ராஜாவுக்கு பயந்து ஓடிவரும் தெலுங்கு தேச ஆளுங்க, நாளாக நாளாக தமிழ் நாட்டோட ஒரு தென்கோடியில் ஒரு கரிசல் நிலத்தை புடிச்சு, ஊரா மாத்திரத்தும் அங்க அவங்க வாழ்ந்த வாழ்க்கையும் தான் மொத்த கதை... அதில ஒரு கதையில பூவரசமரம் சாஞ்சு வந்து ஒரு ஓடையை தண்டி போறதுக்கு உதவின மாதிரி சொல்லிருப்பாரு. இதே மாதிரி எங்க ஊர்ல வன்னிமரம் ஒன்னு மேல இடிவிழுந்து ஓடைக்கு குறுக்க விழுந்து, அதிலயும் இதேமாதிரி ஒரு குடும்பம் பொண்ண காப்பாத்த தப்பிச்சி போனதும், அவங்க ஓடையை தாண்டினதுக்கப்புறம் அந்த மரம் அப்படியே ஓடையில அடிச்சிட்டு போய்டும் என்பது போல ஒரு கதை உண்டு... ஆகமொத்தம் கி.ரா ஒவ்வொரு கதையையும் சொன்ன விதம் செம்மையா இருக்கும் ஆனா எங்க நடந்தது யார் சொன்னது என்பதெல்லாம் ஆராய்ச்சிக்கப்பாற்பட்டது.

நல்லாயிருந்த நாலைஞ்சு விஷயம்:

1. மொத்த ஊரும் ஒண்ணா சேந்து உழைக்கிறது! கரையெடுக்கிறது, கரிச காட்டை அளிக்கிறது (விளைநிலமாக்க) இப்படி எல்லாரும் ஊர் கூடி தேரிழுப்பங்க.
2. நுணுக்கமான நிறைய விஷயங்கள். உதாரணமா மொத்த காட்டை அளிக்காம, ஒரு யோசனை பண்ணி வேணும்ன்ற இடத்தை மட்டும் அழிச்சி பயன்பாட்டுக்கு கொண்டுவரது. ரெட்டை கலப்பை போட்டு உழுது நேரத்தை மிச்சைப்பிடிக்கிறது, இப்படி சின்ன சின்ன விஷயம் நல்லா யோசிக்க வைக்கும்.
3. ஒரு பெரியகுடும்பமா இருந்த வேலையை பங்குபோட்டு பாத்து நெறைய சொத்தும் நல்ல பேரும் சம்பாதிக்கிறது.. அதுமட்டுமில்லாம ஊருக்கு ஒரு கஷ்டமான அப்படிப்பட்ட பெரிய குடும்பங்கள் உதவி பண்றது...
4. கிராமத்துக்கே உரிய நக்கல் நையாண்டி, குபுக்குனு சிரிக்க வைக்கிற குட்டி காமெடிக்கதைகள்
5. கதையை மெல்ல மெல்ல அதே சமயம் விறுவிறுப்பு குறையாம, வரும் கதாபாத்திரங்களோட வரலாறையோ, கதாபாத்திரங்களே கதை சொல்ற மாதிரியோ எதாவது ஒரு வகையில ரிலே ரேஸ்ல ஓடுருவங்க கையில இருக்க குச்சி மாதிரி கதையோட ஓட்டம் ஆள் மாறி மாறி போயிட்டே இருக்கும்.
6. தீவட்டிகொள்ளைக்காரங்களை மொத்த ஊரே சேர்ந்து எதிர்ப்பது...

நல்லா இருந்திருக்கலாம்னு ஒரு நாலைஞ்சு விஷயம்:
1. ஒரு பொண்ணை காப்பாத்திரத்துக்கு ஒரு குடும்பமே ஓடி தப்ப���ச்சாங்கன்னா நம்பலாம். ஆனா ஒரு 70 பேருக்கு மேல மொத்தமா தப்பிச்சி வர்ற மாதிரி அங்கங்க சொல்லறது கொஞ்சம் மிகையா இருக்கும். இதில பாதி பேரு துலுக்க ராஜ வீட்ல விட்டுட்டு....
2. முன்னுரையே முக்காவாசி கதையே சொல்லிடும்... முன்னுரை = முன்கதை சுருக்கம் !!!
3. ஆந்திராவில இப்படி கதையெல்லாம் இருக்குமான்னு தெரியலை, எனக்கு தெரிஞ்சு இதில் சொல்லப்பட்ட நெறைய கிளைக்கதைகள் மத்த ஊர்களிலையும் (தமிழ்நாட்ல) இருக்கு. ஆக இது கோபல்ல (அ) இடைசெவல் கிராமத்தில நடந்த கதை மட்டும்னு சொல்ல முடியாதுனு தோணுது...
4. கழுவன் கால்ல கடிபட்டு, தண்டடிக்காக கொலை செஞ்சதை கடைசிவரைக்கும் ஞாபகம் வச்சுக்கணும். அங்க ஆரம்பிக்கிற கதை, ஆந்திரா போயி, மறுபடியும் அரவதேசம் (தமிழ்நாடு) க்கு வரும்..

ஆக மொத்தம் பொறுமையாவும், எதாவது விஷயத்துக்காகவும், கிராம வாழ்க்கையை விரும்புவோர்கள், கிராம பாஷைகள் புரிந்தோர்கள் கண்டிப்பா இந்த நாவலை படிக்கணும். அதேமாதிரி கோபல்லபுரத்து மக்களும் தான்..
Profile Image for Prabhu R.
22 reviews32 followers
September 2, 2014
ரொம்ப நாளாக எனது அலமாரியில் உறங்கிக் கொண்டிருந்த புத்தகம் தான் கோபல்ல கிராமம்.நீண்ட முன்னுரை படித்தலிருந்து , இந்தப் புத்தகத்தை படிக்க தொடர்ந்து நேரம் கிடைத்தால் தான் முடியும் என்ற‌ பிம்பம் மனதில் உருவாகியிருந்தது . அப்படியொரு நேரம் கிடைக்குமென , "உனக்கு அடுத்த முறை நல்ல சம்பள உயர்வு வாங்கித் தரேன்" என மேனஜரின் சொல்லை நம்பி அடுத்த முறைக்காக காத்திருக்கும் ஐ.டி இளைஞன் போல நானும் காத்திருந்தேன்.அந்த நல்லவிதமான அடுத்த முறை வரவேயில்லை.


பொறுத்தது போதுமென சென்ற வாரம் கையில் இந்தப் புத்தகத்தை எடுத்துவிட்டேன்.ஏகப்பட்ட கதாப்பாத்திரங்களின் அறிமுகங்கள் ,ஆரம்பத்தில் சற்று தடுமாற வைத்தது.முதல் சில பக்கங்களில் ஏகப்பட்ட தெரியாத வார்த்தைகள் வேறு.

கிடை,உடை மரங்கள்,சிள் வண்டு,கூகை,கரிச்சான்,தண்ணிர் கோழி,கதுவாலிப் பறவை,ஊருணி,குரவை மீன்,மர நாய்கள்,வெருகுப் பூனை, பாம்படங்கள்(தோடு?), லேஞ்சி(வேட்டி?), பைதாக்கள், ஓணி, கவனை(அருவாள்?), லஞ்சை(வெட்கம்?), தொரட்டி(மூக்குத்தி?), புல்லாக்கு,மேழி(மண்)பொடுதலை இலை ...

என பட்டியல் நீள்கிறது[என்னிடமுள்ள அகராதியிலும் சிக்கவில்லை,தெரிந்தவர்கள் சொல்லவும்] ,சரி இதுவும் கடந்து போகுமென பட்டியலை மட்டும் குறித்துவைத்துவிட்டு தொடர்ந்த வாசிப்பு போகப்போக ரெக்கை கட்டிப் பறந்தது.கதாப்பத்திரங்களின் பிம்பங்களோடு கிராமத்தை கண்டிப்பாக நம் கண்முன்னை வார்த்தைகளின் வழியாக வரைந்து விடுகிறார் கி.ரா.நாம் அறியாமல் புன்னைகை சிந்தும் இடமும் உண்டு கண்களை கசங்க வைக்கும் இடமும் உண்டு.கதையினை பற்றி சொல்லாமல் இந்நாவலை மேலும் விவரிப்பது சிரமம் என்பதால் எனக்குப் பிடித்த சில வரிகளையும் , வார்த்தைகளையும் இங்கே பகிர்கிறேன்.....

//
அவர்கள் சூரியோதத்தைப் பார்த்ததும் அப்படியே நின்று விட்டார்கள்!இந்தச் சூரியோதயம் ஒன்றை எத்தனை தரம் பார்த்தாலும் சலிப்பதில்லை,அது ஒருநித்தப்புதுமை,அன்றலர்ந்த மலர்போல.இந்த கண் கூசாத சூரியனை,பூப்படையாத மங்கையைப் பார்ப்பது போல கூசாமல் பார்க்கலாம்.!
//

//
கோபல்ல கிராம‌மும் சுற்றுப்புறமும் கும்பினியின் ஆட்சிக்குக் கீழே வந்து பல வருஷங்கள் ஆகியும் எந்தவித மாறுதலும் உண்டாகிவிடவில்லை.மாறுதல் என்று ஒன்றைச் சொன்னால்வேண்டுமானால் அப்போது ஆகாயத்தில் தோன்றிய வால் நட்சத்டதிரத்தை வேண்டுமானல் சொல்லலாம்.
//

ருசிக்கல் - சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு உப்பு என்று சொல்ல கூடாதாம்.

அத்தாளம் - dinner desserts

அரவ தேசம் - தமிழ்நாடு

ஏணி நாற்காலி - படிவைச்ச ஸ்டூல் [நீளமுள்ள‌ கூந்தலை உணர்த்திக்கொள்ள உதவும்]

நல்ல நாவல்.வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக படிக்கவும்
Profile Image for Arvind Srinivasan.
326 reviews18 followers
January 21, 2020
The book starts with a big bungalow in ruins in a village, and moves towards kumbini period - pre independence era and shifts to mughal period via flashback. The book never comes to the reason why the big bungalow went into ruins till the end. The book in the middle explains on respected people of the village, moves towards tragedy on by passer being killed / punishment to the killer and also talks on a theft on the village. All of these in the mix and match makes reader get confused on the plot. Making it difficult to understand the flow.

But even with these flaws the way in which the story is narrated, the words and phrases used, how the writer could bring the mood into the book are great examples of a very good writer. The explanation on how a forest is being slowly converted into a village, how people tackle the difficult times, how nature helps them are well explained and brings in great understanding on human kind. The different characteristics of people and their way of life is interesting.

I have always wondered how certain section of people alone get lot of respect in an area, I could get a different thought process on this. If you looking to understand the villages of pre independence india, how places got converted in village, different kinds of people that you could see in a village and the way people tackled their problems in the past, then this book would be a very good read. This book is a different read and help you understand the world bit more, go for it.

சிந்தனைகள் தமிழில் : https://www.youtube.com/watch?v=BbmrL...
Profile Image for Sankara.
28 reviews21 followers
March 27, 2012
அருமையான நாவல். இந்த நாவலின் வெளிப்பாட்டு மொழியும் வடிவமும் நாட்டார் தன்மையுடன், வட்டார வழக்குகளுடன் கூடியது தான். ஆனால் இந்த நாவல், தெளிவான வரலாற்று பிரக்ஞையுடன் எழுதப் பட்டுள்ளது என்பது அதன் சிறப்பு. அந்த வகையில் தமிழில் முன்னோடி படைப்புகளில் ஒன்று என்றே கருதலாம். இஸ்லாமியப் படையெடுப்பினால் இந்தியாவின் தெற்கு நோக்கி இடையறாது புலம்பெயர்தல் பல நூற்றான்டுகளுக்கு நடந்து கொண்டே இருந்திருக்கிறது - சௌராஷ்டிரர்கள், ராஜபுத்திரர்கள், நாயக்கர்கள் என்று பல சமூகங்கள் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளன. அந்த சித்திரத்தின் ஒரு துளி இந்த நாவலின் முற்பகுதியில் கிடைக்கிறது. புதிய இடத்தில் தங்களை அந்த சமூகம் மீள்கட்டமைத்துக் கொள்வது, அதன் திட்டவட்டமான ஆசாரங்கள், அதே சமயம்
அவற்றில் அவர்களே செய்து கொள்ளும் சமரசங்கள் அனைத்தையும் சிற்சில கோடுகள் கொண்ட ஒரு நவீன கோட்டோவியம் போன்று சித்தரித்துக் காட்டும் படைப்பு இது. இறுதியில் சுருக்கமாகக் கூறப் படும் விட்டில் பூச்சிகள் வயலை
அழிக்கும் படலம் ஆழ்ந்த குறியீட்டுத் தன்மை கொண்டது.
Profile Image for ManoJ M.
14 reviews5 followers
August 1, 2018
கி.ரா அவர்கள் கதை அமைத்த விதம் கதையில் வருகிற காலகட்டத்தில் வாழ்ந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. வேகமற்ற வாழ்க்கை, குறுகிய வட்டமாயினும் நெருங்கிய வட்டமாய் வளரும் சூழல், கிராமத்தில் இருக்கும் பழக்க வழக்கங்களுக்கு, சொலவடைகளுக்கு மூலம் இவை தான் என காட்டியது ரசிக்கும் விதமாய் உள்ளது.
Profile Image for Novel  Review.
34 reviews6 followers
November 2, 2018
கோபல்ல கிராமம் (Gopalla Gramam), This is not a regular novel. I just fell in love with this novel while reading. I started reading around 8.00pm so hooked was I into it, I just completed by 10.00pm then only had dinner. இது போன்ற கதைகள் கொண்ட Novel'gal அரிது.

To hear more about this book, please click : https://youtu.be/Qeyj7fpoFBE
Profile Image for ABIMANYU C.
11 reviews1 follower
May 11, 2024
காலத்தின் பின்னோக்கிய பயணம்...
Profile Image for Balaji M.
220 reviews14 followers
September 9, 2023
கோபல்ல கிராமம் - கி.ராஜநாராயணன்

கட்டபொம்மன் காலத்திற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திராவில் இருந்து பல காரணங்களால் குடி கிளம்பி வந்து, தமிழ்நாட்டில், குருமலை சரிவுகளில் குடியேறிய கம்மவாரின் வரலாற்றை நாட்டு மக்களின் கண்ணோட்டத்தில் காண்பது இந்த நாவல். 1976ல் முதற்பதிப்பு கண்டது.

கதை தொடக்கத்தில், ��ளங் கர்ப்பணியானவள், அவளின் பாம்படத்திற்காக கள்வன் ஒருவனால் நீரில் அழுத்தப்பட்டு இறக்கிறாள். அப்போது அக்கள்வனின் கால் கட்டை விரலை, அவள் கடித்தபடி இருந்ததனால் துண்டாகிறது*. அதனை அங்கு வந்த குடியானவன் கண்டுபிடித்து கோட்டையார் கோவிந்தப்ப நாயக்கர் முன் நிறுத்தி, அவனுக்கு தண்டனையளிக்கும் விதமாக கழுவேற்றுகின்றனர். இச்சம்பவங்களுக்கு நடுவேதான் மங்கத்தாயார் எனும் பூட்டி, அவர்கள் புலம் பெயர்ந்த கதையை கூறுகிறாள்.

அதாவது,

ஆந்திர தேசத்து தெலுகு கம்மவார்கள், அவர்கள் வீட்டு பெண்ணை(சென்னா தேவி) மணம் முடிக்க சுல்தான் அழைக்கிறான் என்பதற்காக, அவனுக்கு பயந்து தெலுங்கு தேசத்திலிருந்து தெற்குநோக்கி புறப்படுக்கின்றனர். அத்தகைய பயணங்களில் பசி, பஞ்சம், நோய், காடு, கள்வர்கள் தொல்லை என பல இன்னல்களுக்கு இடையே பயணிக்கின்றனர்.

வழியில் அவர்களுக்கு பெருந்தெய்வம் ஒன்று, அக்கூட்டத்து பெண்ணின் மேல் அருள் பிரசன்னமாகி, கோவில் எழுப்பச் சொல்லியும், அதன் சுற்றுப்புறத்தில் உள்ள காட்டை திருத்தி விளைநிலங்களாக்கி பயன்படுத்தும்படியும் உத்தரவிடுகிறது. காலப்போக்கில் கோட்டையார் தலைமை பெருங்குடும்பம் அவர்களை வழி நடத்துகிறது.

மேற்சொன்ன சம்பவங்களின் போது 9 வயது பெண் குழந்தையாக இருந்த மங்கம்மா, 137 வயது பூட்டியான பின், மங்கத்தாயாராக தனது சந்ததியினருக்கு தங்களது வரலாறை கூறுகிறாள்.

இம்மாபெரும் தேசத்தில் தாம் வசிக்கும் இந்த கிராமம், கும்பினியாரின்(East India Company) ஆட்சியில் உள்ளதா அல்லது முஸ்லீம் ராஜாக்களின் ஆட்சியில் உள்ளதா எனத் தெரியாத அளவில் அக்கிராமத்தினர் இருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது

மேலும் அக்கிராமத்தில் நடந்த சிறு சிறு சம்பவங்களை கூறும்போது, அதுவே ஒரு சிறுகதையாகவும் அமைந்திருக்கிறது.
உதாரணத்திற்கு, திருடர்களை அக்கிராமத்தினர் எதிர்கொள்வது, காடுகளை திருத்துவதற்கு எரியூட்டப்பட்ட யுக்தி, அப்போது காட்டிலிருந்து வெளிப்படும் உயினங்களைப் பிடித்து எப்படி பயன்படுத்திக்கொள்வது, தாய் பசுவை இழந்த கன்றுக்குட்டியை இன்னொரு (பிற கன்றை சேர்க்காத) தாய்ப்பசுவிடம் பால் அருந்த சேர்த்து வைக்கும் யுக்தி, ஊர்மக்களுள் உள்ள பல குடும்பஸ்தர்களின் பெயர் காரணங்கள், அவரது குணங்களை பற்றிய விவரணைகள், கோவிந்தப்ப நாயக்கரின் அத்தை வெங்கடம்மாவின் வீட்டிற்கு அக்கையா விதைக்கம்மல் புள் கொடுத்துவிட்ட சம்பவம் என துணுக்கு செய்திகளும் குறுங்கதைகளும் நிறைந்திருக்கிறது.

கடைசியில், கும்பினியார் எனும் ஆங்கிலேயர் நட்பு, கோட்டையாரைய் கிராம மணியமாக நியமிப்பது, பின்பு கும்பினியாரிடமிருந்து விக்டோரியா ராணியின் ஆளுமைக்கு கீழ் இந்த தேசம் வந்தது, கொஞ்சம் கொஞ்சமாக 'நாட்டுக்கு பீடை பிடித்துவிட்டதாக'வும், 'புயலுக்கு முன்னுள்ள அமைதி' எனவும் சொல்லி நிறைவடைகிறது நாவல் .

பல கதைமாந்தர்கள் இருந்தாலும், கோவிந்தப்ப நாயக்கர், ஊர்குடும்பன் அக்கையா, மங்கத்தாயார் என முதன்மை கதைமாந்தர்களே கதை நெடுகிலும் பரவலாக பயணிக்கின்றனர்.

இந்நூலை முற்போக்கு, பிற்போக்கு என்று வறட்டுத் தனமாக மதிப்பிட முடியாது. நாட்டு பண்பாட்டு மரபில் தோன்றிய ஒரு வரலாற்று நாவல் இது. இதில் மெய்யியல் பார்வை விஞ்சியும், இயல்பியல் (Naturalism ) குறைந்தும் காணப்படுகிறது.
நாட்டுப் பண்பாட்டை (ஒரு சாதியாரின்) பரிபூரணமாக வெளிப்படுத்தும் சிறந்த படைப்பிலக்கியம்
இந்நூல்.

திரு கி.ராஜநாராயனின் இந்நாவல், 200லிருந்து 300 ஆண்டுகளுக்கு பின்னோக்கி அழைத்து சென்று, புலம் பெயர்தல், நாட்டார் வழக்கு வாழ்வியல் போன்ற அறிய தகவல்களை சுவாரசியமாக சொல்லியபடி செல்கிறது.
திரு. கி.ரா தனது "கோபல்லபுரத்து மக்கள்" எனும் நாவலை இரண்டாம் பாகமாக வாசிக்கலாம் என அதன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

* - முதல் மரியாதை எனும் திரைப்படத்தில் கால் கட்டை விரல் சம்பவம் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்படத்தக்கது.


புத்தகத்திலிருந்து....

\\
தெலுங்கு அரசர்கள் இங்கே ஆட்சி செலுத்தியதையொட்டி வந்தவர்கள், பஞ்சம் பிழைக்க வந்தவர்கள், முஸ்லிம் ராஜாக்களுக்கு பயந்து கொண்டு வந்தவர்கள் இப்படி இப்படி .

கம்மவார் என்று பெயர் வந்ததற்கு மங்கத்தாயாரு அம்மாள் சொல்லும் காரணம் ...காதுவளர்த்து வளையம் போன்ற "கம்ம" என்ற காது ஆபரணத்தை இந்த பெண்கள் அணிந்து கொள்வதால் இப்பெயர் வந்தது என்று சொல்லுவாள்.

கம்மவாரின் முதல் தோன்றலை பற்றியும் ஒரு பூர்வ கதை சொல்லுவாள். நாகார்ஜுன மலையில் வீரம் நிறைந்த ஒரு ராட்சத பெண் இருந்தாளாம். அவளை அடக்க யாராலும் முடியவில்லையாம். அழகும் வீரமும் கொண்ட ஒரு பிராமணன் அவளை அடக்கி அவளுடைய மூக்கில் துறட்டியை போட்டு இழுத்துக்கொண்டு வந்தானாம்.

மூக்கில் தொறட்டியை போட்டு அவளை இழுத்துக்கொண்டு வந்ததால் அந்த தொரட்டியையே அவள் ஆபரணமாக விரும்பி போட்டுக் கொண்டாளாம். ஆகவே தான் அவர்களுடைய சந்ததி ஆகிய நமது பெண்டுகள் இன்றும் மூக்கில் தொறட்டி என்ற ஆபரணத்தை அணிந்து கொண்டிருக்கிறோம் என்பாள் .
//

\\
உதடுகள் புன்னகைக்கும் போது வாயின் அழகு பல அதிகமாகிவிடும், சிரிப்பை அடக்க உதடுகளை நமட்டும் போது அவைகள் இளஞ்சிகப்பின் எல்லையைத் தாண்டி குருவி ரத்தம் போல் செஞ்சிக்கப்பாகிவிடும்.

அவளுடைய மூக்கில் தொங்கும் புல்லாக்கின்கீழ் ஒரு முத்து தொங்கும். பற்கள் மின்ன அவள் சிரிக்கும் போதெல்லாம் அந்த முத்துக்கும் பற்களுக்கும் போட்டிதான்! புல்லாக்கில் அப்படி ஒரு முத்தைக் கோர்த்து, பற்களுக்கு நேராய் தொங்கவிடணும் என்று ஒரு ஆசாரிக்குத் தோணியிருக்கே, அது எப்பேர்ப்பட்ட ரசனை!
//

\\
"ஆத்மா பிரிந்து பயணப்படும் போது நாம் அழுதால் நம்முடைய கண்ணீர் போல் அது சென்று கொண்டிருக்கும் வழியில் குறுக்கே வெள்ளம்போல் பரவிப் பெருகி அதனுடைய பயணம் தடைப்பட்டு போகும். ஆத்மா பிரிந்த பிறகும் அழலாம். பிரிந்து கொண்டிருக்கும்போது அழவே கூடாது."
//

\\
ஸ்ரீரங்கத்தை பார்த்து ஜனங்கள் சாரை சாரையாய் போய்க் கொண்டிருந்தார்கள். அது திருவிழா காலம்.

நாங்களும் மெல்ல எழுந்து நடந்தோம்.

காவிரியில் எங்கள் உடலை நினைத்தோம்.

ஸ்ரீ ரங்கநாதனை போய் பார்த்தோம். உலகத்துக்கெல்லாம் படி அளந்து விட்டு மரக்காலைத் தலைக்கடியில் வைத்துக்கொண்டு நிம்மதியாக படுத்திருக்கிறான்.

வெள்ளை நிறமுள்ள ஒரு பெரிய கிளி ஆலம்பழத்தின் நிறத்திலுள்ள தன் சிகப்பு அலகை திறந்து "ரங்கா...ரங்கா" என்று சொல்லிக் கொண்டே இருந்தது அந்த பெரிய கோயிலில்.
//

\\
காலையிலிருந்து சாயங்காலம் வரை முப்பது பெண்கள் அவரது பொறையில் வந்து உழைத்தார்கள். உழைப்பு நேரத்தின் மத்தியில் அவர்களுக்கு இரண்டு விடுப்பு நேரம்(இடைவேளை) உண்டு. நாள் ஒன்றுக்கு கூலியாக அவர்களுக்கு கைநாழிக்கு இரண்டுபடி கம்மம்புல் தானியம் கொடுத்தார். இந்தப் பொறைதான் சமுதாயத்தில் தோன்றிய முதல் தொழிற்சாலை!
//

\\
கல்யாணம் ஆகாதவர்கள் அந்தக்காலத்தில் திருமணத்தன்று தான் முகச்சவரம் செய்து கொள்வது வழக்கம். அதுவரையும் முகத்தில் தாடிதான்! எங்கட்ராயுலுவுக்கு கல்யாணமே ஆகவில்லை. கல்யாணவயசைத் தாண்டி அவருக்கு ரொம்ப வருஷங்கள் ஆகிவிட்டது. அதனால் தாடியும் நிலைத்து விட்டது. இந்த 'கட்டு'வை முதலில் மீறியவர் அந்த தலைமுறையில் அக்கையா ஒருத்தர் தான். அந்த தைரியம் வேறு யாருக்கும் அப்போது வரவில்லை.
//
\\
இந்த இந்தச் செடிகள் இந்த வருஷம் அதிகம் முளை த்திருக்கிறது. ஆகவே மனிதர்களுக்கு இந்த வருஷம் இந்த இந்த நோய்கள் அதிகமாகக் காணப்படும் என்று சொல்லுவார்!
//

\\
தீண்டாத ஜாதியை சேர்ந்தவர்கள் வைத்தியத்துக்கு வந்தால், அவர்களுடைய கையின் மேல் போட்டுப் பார்ப்பதற்கு ஒரு மெல்லிய பட்டுத்துணி வைத்திருக்கிறார். அதை போட்டுத்தான் நாடி பார்ப்பார்.
//

\\
தன்சாவு இல்லாத கர்ப்பிணிகளை அடக்கம் செய்வதற்கு முன்னால், வயிற்றில் குழந்தையோடு புதைக்க மாட்டார்கள். வயிற்றைக் கீறிக் குழந்தையை எடுத்து பக்கத்தில் வைத்துத்தான் புதைப்பார்கள்.

இந்த சமயத்தில் என்ன செய்வது என்று ஒரு கேள்வி வந்தது. "அவளை ஒரு 'கோலமு'ம் செய்ய வேண்டாம்; அப்படியே புதைச்சிடுங்கய்யா" என்று கேட்டுக் கொண்டார் ஆசாரியார்.

'அப்படியே புதைத்தால் சுமைதாங்கி கல் வைக்கணுமே' என்று கூடியிருந்தவர்களில் ஒரு குரல் கேட்டது.
//

\\
மண்வெட்டியால் மண்ணை இழுத்து குழிக்குள் தள்ளினார்கள். சடலத்தின் மேல் மண் விழும்போது திட்திட் என்று ஒரு சத்தம் கேட்டது.பாதிக் குழி நிறைந்தவுடன் ஒருவன் குழிக்குள் இறங்கி நன்றாக மண்ணைக் காலால் மிதித்து இறுக்கினான். மண் விழ விழ எல்லாப் பக்கங்களிலும் நடந்து அவன் மிதித்தான். முக்கால்வாசி நிறைந்தவுடன் இலந்தை முள்ளைப் போட்டு அமுக்கி அதன்மேல் மண் போட்டார்கள். இது நரி, ஓநாய் போன்ற காட்டு மிருகங்கள் வந்து தோண்டி உடலை தின்று விடாமல் இருக்க. குழி நன்றாக மூடப்பட்டுவிட்டது. இப்பொழுது அந்த இடத்தில் ஈர மண்ணால் ஆன ஒரு சிறிய மேடு மட்டுமே மிஞ்சியது.
//

\\
அப்போது அந்த கருப்பு அதிகாரி சொல்லுவார். 'மிருகங்களில் மட்டும், பின்வாங்கி ஓடுவதை ஜெயித்த மிருகம் துரத்தாமல் விட்டுவிடுகிறது; ஆனால் மனிதனில் மட்டும் ஏன் அப்படி இல்லை?'

இந்த கேள்வியிலுள்ள தாத்பரியத்தை அந்த வெள்ளை அதிகாரி வெகுவாக ரசித்தார். பிறகு சொன்னார்; 'மனிதர்களிலும் எப்படி சில உயர்ந்த பண்புகள் உண்டோ, அதைப் போலவே மிருகங்களிடத்திலும் அவைகளுக்கு என்று சில உயர்ந்த பண்புகளும் இருக்கின்றன' என்றார்.
//
9 reviews
October 11, 2025
கி.ராவின் கோபல்ல கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொரு நாயக்கரும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவமானவர்கள். வாழ்வில் ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்று என்னை நினைக்க வைத்த கதாபாத்திரம் அக்கையா தான்.
கி.ராவிற்கே உரிய வட்டார வழக்கில் கதை அழகாக நகர்கிறது.
Displaying 1 - 30 of 147 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.