Jump to ratings and reviews
Rate this book

சாயாவனம் [Sayavanam]

Rate this book
சாகித்ய அகாதெமி விருது பெற்றுள்ள சா. கந்தசாமியின் முதல் நாவல் ‘சாயாவனம்’. ஆங்கிலத்திலும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த நாவல், வீடியோ படமாகவும் வெளிவந்துள்ளது. இப்போது காலச்சுவடு பதிப்பகத்தின் கிளாசிக் வரிசையில். சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன், சுற்றுச்சூழல் பற்றி அதிகமும் பேசப்படாத காலத்தில், இயற்கையுடனான மனிதனின் போராட்டத்தை மையமாக வைத்து, தஞ்சை மாவட்டக் கிராமியப் பின்னணியில் எழுதப்பட்ட இந்த நாவல், இன்றைய சூழலுக்கும் பொருத்தமான வாசிப்பனுபவத்தைத் தருகிறது. “ஒன்றையழித்து ஒன்றாக, புதுயுகமென மாறிமாறி முகம் காட்டி முன்னகர்ந்தபடி இருக்கிறது காலம். ஒன்று அழிந்து இன்னொன்று தோற்றம் கொள்கிறது. ‘சாயாவனம்’ நாவல் அழியாத ஒரு குறியீடாக அதைச் சுட்டிக்காட்டியபடி நிற்கிறது” என்கிறார் முன்னுரையில் பாவண்ணன்.

200 pages, Paperback

First published January 1, 1964

17 people are currently reading
226 people want to read

About the author

Sa. Kandasamy

18 books10 followers
Sa. Kandasamy (23 July 1940 – 31 July 2020) was a novelist and documentary film-maker from Mayiladuthurai in the Indian state of Tamil Nadu. He won the Sahitya Akademi Award in Tamil for his novel, Vicharanai Commission in 1998.

Kandasamy's first novel was Saayavanam Puthinam, published in 1968. It was well-received and was later included by the National Book Trust as one of Indian literature's modern masterpieces. Saayavanam is one of the earliest examples of literature focusing on ecological concerns in India, and focuses on forest clearances and industrial development in Tamil Nadu. Kandasamy based on the novel on his own experiences in rural Tamil Nadu, and named the novel after a village that he had lived in with his family, as a child.

His novel, Vicharanai Commission, which dealt with custodial violence and the police, won the Sahitya Akademi Award for Tamil in 1998.

He has published seven novels and several collection of short stories, in Tamil. One of Kandasamy's novels, Tholaindhu ponavargal was adapted for television.

In addition to fiction, Kandasamy wrote several pieces of criticism, focusing on visual arts and writing in Tamil Nadu, as well as introducing a series of Tamil biographies published by the Sahitya Akademi.

Kandasamy's documentary film, Kaval Deivangal, documented history and techniques relating to traditional terracotta art in South India. It won the first prize at the Angino Film Festival, in Cyprus, in 1989. In addition, Kandasamy also directed several other documentaries, primarily on popular Tamil writers and artists, including the sculptor S. Dhanapal, and writers Jayakanthan and Ashokamitran.

Novels:
Saayavanam Puthinam
Suriya Vamsam
Visaranai Commission
Avan Aanathu
Tholaindhu Ponavargal (Those Who Are Lost)
Perum Mazhai Natkal
Neelavan

Awards and honors
(1998) Sahitya Akademi Award - for his novel, Vicharanai Commission
(1995) Lalit Kala Akademi Fellowship - for contributions to literature

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
55 (30%)
4 stars
85 (46%)
3 stars
35 (19%)
2 stars
5 (2%)
1 star
2 (1%)
Displaying 1 - 24 of 24 reviews
Profile Image for Satheeshwaran.
73 reviews222 followers
October 22, 2019

சாயாவனமும் கானகனும்:

“எந்தவொன்றையும் முற்றாக இந்த மனிதர்களால் அழித்துவிடமுடியாது, எல்லா முடிவுகளும் சில எச்சங்களை விட்டுச் செல்கிறதென்பதை இவர்கள் புரிந்து கொள்ளப் போவதில்லை. இந்தக் காட்டின் ஒவ்வொரு எச்சமும் ஒரு பிரபஞ்சத்தின் துவக்கம்தான்.”

சாயாவனம் மற்றும் கானகன் நாவல்களைப் பற்றிய ஒருங்கிணைந்த YouTube பதிவு:

👇🏼

https://youtu.be/5HY5BY6aKcE
Profile Image for MJV.
92 reviews39 followers
August 17, 2020
இந்தப் புத்தகம் பற்றியும் இதன் ஆசிரியர் சா.கந்தசாமி அவர்களைப் பற்றியும் நிரம்பக் கேள்விப்பட்டிருக்கிறேன். பிரபஞ்சன் அவர்களின் புத்தகத்தை நான் படித்தது போலவே, இவரின் மறைவுக்கு பின்னரே சாயாவனம் படிக்கும்படி ஆயிற்று. எழுத்தாளர்களுக்கு எங்கே உள்ளது மரணம்? இதோ சாயாவனம் வழியே அவரின் மொழியைக் கேட்டேனே!

40 வருடங்களுக்கு முன்னரே, இன்று பெரிதாகப் பேசப்படும் ஒரு கருப்பொருளை முன்வைக்கிறார் ஆசிரியர். ஆம் ஒரு வனம் அழிக்கப்படுகிறது. அழிக்க எத்தனிப்பது சிதம்பரம். அவனுக்கும் உதவுவது சிவனாண்டித் தேவராகிய அவனது மாமா. இவர்களையும் அந்த வனம் போன்ற தொப்பையும் மையப்படுத்தி எழுதப்பட்ட கதை. சாயாவனம் என்ற ஊரில் பல தலைமுறைகளைத் தாண்டி நிற்கும் தோப்பை, இலங்கையிலிருந்து வரும் சிதம்பரம் விலைக்கு வாங்குகிறான்.

அவனது கனவு - அந்த வனத்தினை அழித்து அதில் ஒரு கரும்பாலை நிர்மாணிப்பது. இப்படித் தொடங்குகிற கதையில், இயற்கைக்கு எதிரான மனிதனின் போர், உறவுகள், ஊரின் நட்புகள், ஏற்றத் தாழ்வு காட்டாமல் காட்டும் மனிதர்கள், தனி மனிதனின் போராட்டம், இரண்டு தலைமுறைக்கும் நிலவும் இறுக்கம், அது தளரும் பொழுதினில் வரும் பரஸ்பர மரியாதை, எத்தனை முறை தோற்பினும் தளராத வைராக்கியம், முக்கியமாக மனிதனுக்கும் இயற்கைக்குமான யுத்தத்தில் மனிதன் தோற்றாலும், வெற்றியின் விளிம்பினைத் தொட்டாலும் எப்போதும் இயற்கையே மானுடத்தை வென்று நிற்கிறது என்று ஏராளமான அடுக்குகள். மெல்ல சுவைக்கத் தோன்றும் கரும்பின் இனிப்பாய் இருக்கிறது ஒவ்வொரு எழுத்தின் அடுக்குகளும்.

இந்த புத்தகத்தின் வழியே முக்கியமான ஒரு சொல்லக் கற்றுக் கொண்டேன். அகச்சரிவு என்பதே அந்த சொல். எவ்வளவு முக்கியமான சொல். நம் வாழ்வின் ஒவ்வொரு செயலும், நிகழ்வும் நம்மைப் பற்றியே இருக்கும் பொழுதில், நாம் அனைவருமே ஒரு விதமான அகச்சரிவையே சந்தித்து கொண்டே இருக்கிறோம்.

இந்தக் கதையின் நரம்பாய்ப் பின்னிக் கிடப்பது அந்த தோப்பில் இருந்த மரங்களும், அதை நேசித்த மனிதர்களுமே. சில நேரங்களில் எதுவும் சிரமம் இல்லமால் கிடைப்பின், அதன் அருமை தெரிவதே இல்லை. அது போலத்தான் சாயாவனத்து வீடுகளின் தேவைகளை அந்த தோப்பு பல வருடங்களாய் சிவணாண்டியின் உலுக்கல்களில் நிரப்பி வந்திருந்தது.

ஓர் ஊர் எல்லாவிதமான அத்தியாவசியத் தேவைகளைக் குறைவின்றி தன்னகத்தே விளைவித்தால் பல வருடங்களுக்கு முன்னர், பணத்தின் புழக்கம் குறைந்து தானே இருக்கும். பொருளுக்கு பொருளை எடுத்தும் கொடுத்தும் மட்டுமே பழகியிருந்தனர் மக்கள். புளி வண்டிக்கணக்கில் வரும். அதற்கு நெல்லைக் கொடுத்து
கணக்கை நேர் செய்வார்கள்.

இப்படித்தான் அந்த ஊரின் தேவைகள் தீர்க்கப்பட்டு வந்தன. மேலும் அந்த மனிதர்கள் எதனை விடவும் வார்த்தைகளை முழு மனதாய் நம்பினார்கள். அதைத் தாண்டிய பத்திரங்களோ, பண மூட்டைகளோ அவர்களின் வாழ்கைக்குத் தேவைப்பட்டிருக்கவில்லை.

"அவர்கள் வார்த்தகளை நம்பினார்கள். அவர்கள் வாழ்க்கை வாய்ச்சொற்களின் மீது ஆதரப்பட்டிருந்தது."

இப்படி இருந்த ஊரின் நாடியாய், தலைமுறைகள் தாண்டிய தோப்பைதான் சிதம்பரம் அழித்து ஆலை அமைக்க எத்தனித்திருந்தான். தலைமுறைகள் தாண்டி புழக்கம் இல்லாமல் இருக்கும் தோப்பு என்பது இயற்கை முழு வீச்சில் நடத்திய நடனத்தின் சாட்சி. பல மரங்கள் வேர் பிடித்து காடாகி நின்ற தோப்பு. பராமரித்து வளர்க்கும் வீட்டு மரங்களில் இல்லாத வீரியத்தை, வளர்ச்சியின் பெருங்குணத்தை காட்டு மரங்களில் பார்த்திருப்போம். இப்படி வீரியத்தையும், பிரம்மாண்டத்தையும் காட்டுவது எப்போதும் இயற்கைக்கே சாத்தியம்.

அப்படி நிற்கும் தோப்பை அழிப்பதென்பது அவ்வளவு சுலபமில்லை. அதை எதிர்த்துதான் நின்றிருந்தான் சிதம்பரம். சிறிது தாமதமாக வேளைகளில் சேர்ந்தாலும் சிதம்பரத்திற்கு உறுதுணையாக நின்றார் தேவர். இவர்களுக்கு துணையாய் இரு சிறுவர்களும் இருந்தனர்.

"நாளுக்கு நாள், தோட்டம் கடுமையான சோதனைக் களமாக மாறி, அவனை வேதனையுற வைத்தது. சக்தியை உறிஞ்சி விட்டுத்தான் மறு காரியம் பார்க்கும் போலத் தோன்றியது".

இப்படியாக மெல்ல மெல்ல அந்த தோப்பு அழிவதும் அவன் மகிழ்வுறுவதும் அதிகமாய் மாறி மாறி நிகழ ஆரம்பித்து இருந்தது. இந்த கதையில் மற்றவர்களின் உணர்வுகளையும் அறிய இருந்த இடம் சிவணாண்டியின் பெயர்த்தியின் திருமணம். அந்த தோப்பு மெல்ல அழிந்து வரும் நேரத்தில், அதில் இருந்த பல்வேறு விலங்குகள் தன் வாழ்விடத்தை மாற்ற வேண்டிய நேரம் வந்ததும் இயற்கைதானே.

"சிதம்பரம் சற்றே ஒதுங்கி, அவைகளுக்கு வழி விட்டுப் பதுங்கி நின்றான். கடைசியில் சென்ற பெரிய குரங்கு, கூட்டத்திலிருந்து பிரிந்து, அவனை நோக்கிப் பல்லை இளித்து சீறியது. அவன், கொய்யாவின் பின்னே மறைந்து கொண்டான்.

எத்தனையோ காலமாக, மனிதர்களின் குறுக்கீடு இன்றி, விருப்பப்படி பிராணிகள் வாழ்ந்த பகுதி அது. இன்றைக்கு ஒரு தனி மனிதனின் தலையீட்டால் கலவரமுற்றுப் போய்விட்டது. மரம் செடிக்கொடிகள் மாதிரி வண்டுகளும், பறவைகளும் மிருகங்களும் அழிவை நோக்கிக் கொண்டிருந்தன. அவைகளின் அமைதியான வாழ்க்கை நிர்பந்தத்திற்கு உள்ளாகி விட்டது" .

இன்னுமொரு பகுதியில், இயற்கையை வெட்டி அழிப்பது போகவே, தீயிட்டுக் கொளுத்த நினைத்து அதற்கான திட்டங்களைப் பேசி செயல்படுத்த முனைவர். தலைமுறைகள் தாண்டி நிற்கின்ற தோப்பிற்கு தீயிடுவது என்பது, எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற தர்க்கங்களை இடையே பயணிக்கிறது கதை.

"கனன்றெரிந்த கிளைகள் நெருப்புத் துண்டுகளாய்த் தகதகத்துக் கொண்டிருந்தன. ஒரு ஜொலிப்பு! ஜுவாலையின் கம்பீரம்! நெருங்க முடியாத அனல் வீச்சு!"

.......

"சிதம்பரத்தின் கட்டிலில், குருட்டாம்போக்காய் - சிறகைப் படபடவென்று அடித்துக் கொண்டு ஒரு காக்கை விழுந்தது. அவன் திடுக்கிட்டுத் துள்ளிக் குதித்தான். காக்கையைப் பார்த்ததும் புன்சிரிப்பு வெளிப்பட்டது. காக்கையின் காலைப்பிடித்து தீயை நோக்கி வீசியெறிந்தான். ஒரு ஓசையின்றி, சடசடப்பின்றிக் காகம் தீயில் போய் விழுந்தது. இறகு பொசுங்கிக் கருகிச் சாம்பலாகும் காட்சியைக் காண வேண்டும் என்று மனதுக்குள் ஓர் ஆவல். அலக்கை எடுத்துக் கொண்டு முன்னே சென்றான், அனல் வீச்சையும் பொருட்படுத்தாமல்.

காக்கை தீயில் பொசுங்கிக் கொண்டிருந்தது. அலக்கால் குத்தி, எரியும் காக்கையை மேலே தூக்கினான். ஒரு நெடி, வாடை, குப்பென்று அடித்தது. முகத்தைச் சுளுத்திக் கொண்டு காக்கையோடு அழகையும் தீயில் செருகினான். அலக்கு வேகமாக உள்ளே சென்றது".

அகச்சரிவு என்ற சொல்லின் உட்சபட்ச சர���வெனவே இதை உணர்கிறேன். இப்படி அனைத்தையும் அழித்து கரும்பாலை ஒரு வழியாக உருவாகிடும் சாயாவனம் கொண்ட தோப்பினில். இந்த புத்தகத்தின் மொத்த உட்பொருளையும் விளக்கும் வகையில் முடியும் இந்த புத்தகத்தின் கடைசி சில வரிகள். ஆச்சியின் கேள்விக்கு விடையின்றி திணறி நிற்கும் சிதம்பரம்! அந்த கேள்விக்கான விடை யாரிடமும் இல்லாமல் போனது தான் இன்றைய சூழலியலின் சாபமாய் விஞ்சி நிற்கிறது.

நேரம் இருப்பின் படித்துப்பாருங்கள்...
Profile Image for GaneshPandian RK.
12 reviews3 followers
December 8, 2020
எந்த காலத்திலும் பொருந்தி போகும் மிக யதார்த்தமான எழுத்து நடையில் அமைந்த நாவல்.வன அழிப்பை நிறுத்தாவிட்டால் காலநிலை நெருக்கடியை எதிர்த்துப் போராட எந்த வழியும் இல்லை என்பதை உணர்த்தும் நாவல்
Profile Image for Muthu Vijayan.
37 reviews14 followers
November 2, 2022
தோய்வில்லாத நேரடியான எழுத்து நடை.
Profile Image for Dinesh.
128 reviews9 followers
November 22, 2021
நன்றாக தொடங்கிய கதை, சிறப்பாக கொண்டு செல்லப்பட்டு, இடையில் வழிமாறி, சப்பென்று முடிந்து விட்டது.
Profile Image for Sujani Koya.
65 reviews8 followers
November 30, 2020
How exciting can reading about someone cutting trees be? Turns out it can be riveting. Written in 1969 and set in the 20's we see a landscape being transformed in bits and pieces initially and then in a sudden stroke in a few days. Who does this and why and how? Who are the people around the trees? What are they losing or gaining? It is still the sap of a medicinal plant that soothes skin cut by thorny bushes resisting the blade
Profile Image for Praveen (பிரவீண்) KR.
229 reviews33 followers
August 6, 2023
Detailed Review - https://kalaikoodam.blogspot.com/2023...

ஒரு அழிவின் கதையை வாசிப்பது என்பது சற்று கஷ்டமான ஒன்று. எழுத்தாளர் இந்த கதையை சொல்லியிருக்கும் விதம் அந்த வாசிப்பை மிகவும் கடினமாக்குகிறது. அழிவும் சேதாரங்களும் நம் மனதில் ஆழமான ஓர் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சிதம்பரம் தன் வழியில் எது வந்தாலும் அதை ஏறி மிதித்து முன்னேறி செல்லும் ஒருவன். லட்சியத்தை அடைய துடிக்கும் அவன் மன உறுதி அபாரமானது. ஆனால் மறு பக்கத்திலோ அந்த வனமும் தன் முழு பலத்தை வெளிக்காட்டுகிறது. ஆனால் ஒரு கட்டத்தில் அவன் உறுதி வெல்வதை காண்பது வேதனையாக இருந்தது.

இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே நடக்கும் போரை மிக அழுத்தமாக காட்டியுள்ளார் சா.கந்தசாமி. சிதம்பரம் எனது கண்ணில் ஒரு வில்லமாகவே காட்சியளிக்கிறான். பல விதமான மரங்களும் சிறு விலங்குகளும் பறவைகளும் கொண்ட அந்த பூமி கடைசியில் வெறிச்சோடி கிடக்கையில் மனதில் இனம்புரியாத ஒரு நெருடல், ஒரு வலி. வனம் தோல்வியினுள் தள்ளப்பட என் வாசிப்பின் வேகமும் வெகுவாக குறைந்தது. எழுத்தாளரின் பலம் அதில் தென்படுகிறது. நம்முள் அந்த வலியை மிக ஆழமாக கொண்டு வருகிறார். மனித உறவுகளோடு கடந்து செல்லும் இந்த கதையில் எங்குமே வனத்தின் அழிவுக்கு எதிராக ஒரு குரல் கூட கேட்கவில்லை. சிதம்பரத்தினுள் ஒரு சிறு குற்ற உணர்ச்சி ஆழ் மனதில் இருந்தாலும் எந்த பயனும் இல்லை. கதை நடக்கும் காலகட்டத்தை நுணுக்கமாக சொல்லியுள்ளார் சா.கந்தசாமி. பாப்பாவின் கல்யாணம், பண்டம் மாற்றும் முறை, பிறகு காசு என்ற ஒரு பொருளை அங்கு சிதம்பரம் கொண்டு வருவது, அதை முதலில் கையாள தெரியாமல் கஷ்டப்படும் ஜனங்கள், அந்த காலத்து ஊரின் அமைப்பு, கிராமத்து வாழ்க்கை என்று அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் கந்தசாமி அவர்கள்.

வாசிப்பின் போது ஒவ்வொரு மரம், செடி, விலங்கு இவற்றின் பெயர்களை கோடிட்டுகொண்டே வாசித்தேன். போக போக கோடுகள் குறைந்து வெறுமை மட்டுமே மிஞ்சியது. கதையின் ஒரு தருணத்தில் ஒரு கூடு உடைந்து விழுந்து சிறு குஞ்சு ஒன்று பரிதாபமாக இரக்கிறது. சிதம்பரம் கண்ணீர் விட்டான். கூடவே நானும். புத்தகத்திலும் மனதிலும்! ஆங்கிலத்தில் "Sustainable Development" என்று ஒரு வார்த்தை உண்டு. இயற்கையோட இணைந்தது நாமும் வாழுதல் வளருதல் - இதுவே சரியான ஒரு வளர்ச்சி என்பது. நாம் பள்ளிகளில் இதை படித்திருப்போம். அது துளி கூட இல்லாத ஒரு கதை. ஆனால் அதன் முக்கியத்தை உணர்த்தும் ஒரு கதை. "சாயாவனம்" என்ற தலைப்பு கூட ஏதோ சொல்ல நினைப்பது போல் ஒரு உணர்வு. கண்டிப்பாக எல்லோராலும் வாசிக்கபடவேண்டிய ஒரு புத்தகம்.
Profile Image for P..
528 reviews124 followers
October 21, 2020
நகர்மயமாதலின் போது ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் பேசப்படும் அளவுக்கு விவசாய நிலங்கள் உருவாக்க அழியும் காடுகள் பேசப்படுவதில்லை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கடல் தாண்டி ஈட்டிய செல்வத்தைக் கொண்டு தன் தாயின் பூர்வீகத்திற்குத் திரும்பும் நாயகன், கரும்பு ஆலை அமைக்கும் திட்டத்தில் வாங்கிய அடர்வனம் போன்ற நிலத்தை பயிர்நிலமாக மாற்ற படும் போராட்டமே கதை. அக்காலத்தைய கிராம வாழ்வு, சாதி நடைமுறைகள், சடங்குகள், புதுத்தொழில் தொடங்க ஏற்படும் தடங்கல்கள், பண்டமாற்று முறையிலிருந்து பணத்திற்கு மாறும் போது நிலவிய குழப்பங்கள் என
பல தகவல்கள் கதை முழுவதும் இரைந்து கிடக்கின்றன. மரபை உள்ளவாறே ஏற்காமல் அனைத்தையும் சிந்தித்து ஆராய்ந்து அறியும் நோக்கை உடையவனான நாயகன் சிதம்பரம் ஓர் வகையான உன்னதனாக வெளிப்படுகிறான். கதையில் சில இடங்களில் முழு விவரிப்பு இல்லாமல் காரணங்கள் புலப்படா வண்ணம் சம்பவங்கள் நடந்தேறுகின்றன. ஓர் திசையில் பயணித்த கதை இறுதிப் பக்கங்களில் ஒரு கல்யாணத்தைப் பற்றிய விலாவரியான விவரிப்பால் தடுமாறுகிறது. ஒரு சீரில் சென்று கொண்டிருந்த கதை, சொல்வதற்கு இன்னும் மீதம் இருக்கும் என்று படும் இடத்தில் சட்டென்று திருப்தியளிக்காமல் முடிந்து விடுகிறது. அக்காலத்தில் வெளிவந்த பிற நாவல்களைக் காட்டிலும் சாயாவனத்தில் அதிக தத்துவ முதிர்ச்சியும் முற்போக்கும் வெளிப்படுவதால் இப்போது வாசிக்கலாம். ஒரு நல்ல படைப்பு.
Profile Image for Saravanakumar S K.
60 reviews5 followers
May 24, 2020
இது வெறும் இருபதாம் நூற்றாண்டின் நடுவில் சக்கரை ஆலைக்கான வன அழிப்பு பற்றிய கதையாக தெரியவில்லை. இதற்குள் பல சொல்லப்படாத கதைகள் (untold stories)உள்ளன. சிதம்பரத்தின் நுண்உணர்வுகள் முதல் வதந்திகள் வரை, அவனுக்கும் சிவணான்டித்தேவர்க்கும் உள்ள அழகிய அன்புகலந்த Ego என்று ஆசிரியரின் எழுத்து மிக நுட்பமானது.
கதையை ஆசிரியர் அவசரப்பட்டு முடித்ததாகவே தெரிகிறது. ஏனென்றால் கடைசி அத்தியாயத்தில் பல கதைகளுக்கான கருக்கள் இருக்கின்றன.
78 reviews4 followers
August 25, 2023
சா.கந்தசாமியின் 'தொலைந்து போனவர்கள்' நாவலை வாசித்து பல மாதங்கள் களிந்திருந்த நிலையிலும் அந்த நாவலின் மையக்கருத்தை அவர் கதையாக உருவாக்கியிருந்த விதம் மிகவும் எளிமையாக வாசிக்கும் நடையில் தான் இருந்தது. அதே போலத்தான் இந்நாவலையும் அழகான மொழியிலும் எளிமையான நடையிலும் இயற்றியுள்ளார். கதையின் ஆரம்பம் ஓர் வழ��த்தடத்தில் துவங்கி பயணித்துக் கொண்டிருக்கையில் இடையில் விலகி வேறொரு பாதை கதையாக மாறுகிறது என இக்கதையை வாசித்த பலர் விமர்சித்ததுண்டு, ஆனால் நான் இந்நாவலில் வரும் மைய கதாபாத்திரமான சிதம்பரத்தின் வாழ்வியல் மாற்றங்களாக தான் இக்கதையை பார்க்கிறேன்.

இருபது ஆண்டுகளுக்கு மேலாக உறவுகளே இல்லாமல் வாழ்ந்த அவனுக்கு திடீரென்று ஒரு ஊரே சொந்த பந்தமாக மாறுவதும் அதற்காக இவன் இவனுடைய வாழ்க்கையை அவ்வூர் மக்களுக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வாழ துவங்கியது பல இடங்களில் வியப்புடன் கூடிய அந்த அன்பின் நெகிழ்ச்சியும் நெகிழச் செய்தது. சாயாவனத்தில் இருந்த அந்த வனத்தை அழிக்கும் காட்சிகளும் அந்த அழிவில் சிக்கித் தவிக்கும் விலங்குகளும் பறவைகளும் அவர்களுக்கு ஏற்படும் இறப்புகளும் தவிப்புகளும் நெஞ்சை நொறுக்கி எடுத்து விட்டன, என்னை அதிகம் வதைக்க செய்தது இந்த மிருகத்தின் இழப்புகள் தான். அவனுடைய சொந்தங்களாக மாறும் அந்த ஊர் மக்களுக்கு இவனின் உதவிக் கரத்தை பார்த்து அவ்வூர் மக்கள் இவனை வாழ்த்தவும், மறுபுரம் இவன் இவ்வளவு பணத்தை எப்படி சம்பாதித்தான் என புறம் பேசித் தள்ளினார்கள் - பொறாமை கொண்டவர்கள். இதுதானே மனிதனின் இயல்பு.

அவன் அவ்வூருக்கு வந்த லட்சியத்தை அடைந்து அதற்கான வாழ்க்கையை துவங்குவதாகவே இந்நூலின் முடிவு இருந்தது. இந்நாவலை வாசிக்கும் போது இன்று இருக்கும் தொழிற்சாலைகள் எல்லாம் முன்பு ஒரு வனமாகவே இருந்திருக்க கூடும் என்ற நினைவு வந்ததில் இன்னும் தொழிற்சாலைகள் வனமாக செழித்து இருந்திருக்கக் கூடாதா என்று ஏக்கமும் இருந்தது. இந்நாவலின் முடிவு அக்காட்டிற்கு ஏற்பட்ட இழப்பை நியாயப்படுத்த வில்லை என்று ஒரு மனமும், அதை ஏன் நியாயப்படுத்த வேண்டும் என்ற மனதில் தோன்றி, நியாயத்தை பார்த்து வாழ்பவனா மனிதன், அவனின் தேவையை பார்த்து தானே?
Profile Image for Moulidharan.
96 reviews19 followers
February 17, 2023
சாயாவனம்

ஆசிரியர் : சா. கந்தசாமி
நாவல்
199 பக்கங்கள்
காலச்சுவடு பதிப்பகம்

மாற்றம் ஒன்றுதான் இவ்வுலகில் மாறாத ஒன்று. மாற்றத்தை பார்த்து ரசிப்பதும், அதனை வரவேற்பதும் நம் வாழ்வில் நமக்கு பழகிப்போன ஒன்று. மாற்றத்தை எதிர்த்து கேள்விகேட்பவர்கள் பழமைவாதிகள் என்று முத்திரை குத்தப்படுவார்கள். மாற்றத்தை தனக்கென ஒரு விளக்கத்தோடு ஏற்றுக்கொள்பவர்கள் அறிவாளிகளாக முத்திரை குத்தப்படுவார்கள். மாற்றத்தை வெறுமனே வேடிக்கை மற்றும் பார்த்துக்கொண்டு வேறு வழியின்றி அதனை ஏற்றுக்கொண்டு அதன் நன்மை தீமைகளை விருப்பு வெறுப்பின்றி வாழ்க்கையை தள்ளும் வெகுஜன மக்களை பற்றி இலக்கியத்தில் குறிப்புகள் குறைவாகவே உள்ளது. அப்படி பாதிக்கப்பட்ட ஒரு கிராமம் தான் இந்த சாயாவனம்.

சாயாவனம் - தமிழக கிராமங்களின் சான்றாக இந்த உலகிற்கு முன் வைக்க அனைத்து தகுதிகளையும் கொண்ட ஒரு எழில்மிகு, வனப்பான மருதநிலம். சாயாவனத்தில் இருந்து சிறுவயதில் பிழைப்பிற்காக புலம்பெயர்ந்த சிதம்பரம் தான் சொந்த ஊருக்கு திரும்பியவுடன், அந்த ஊரின் மிக பெரிய வனம் ஒன்றை சாம்பமூர்த்தி ஐயரிடம் இருந்து தான் சர்க்கரை ஆலை நிறுவுவதற்காக விலைக்கு வாங்குகிறான். அந்த ஊரில் உள்ள தன் உறவினரான சிவனாண்டி தேவரின் உதவியோடும், ஊர் பெரியவர்களின் உதவியோடும் அந்த வனத்தை ஊடுருவி கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க தொடங்குகிறான். அந்த வனத்தின் அடர்த்தி அவனை பல இடங்களில் தடுத்து நிறுத்தினாலும், விடாமல் போராடுகிறான் அதனை அழிப்பதற்கு. இறுதியில் அந்த வனத்தை தீக்கு இரையாக்கி விரைவில் வனத்தை அழிக்க முடிவு செய்கிறான். சிவனாண்டி தேவரின் உதவியோடு வனத்திற்கு தீவைக்கப்படுகிறது. அவர்கள் எதிர்பார்த்ததை விட தீ ருத்ர தாண்டவம் ஆடுகிறது, தீ அந்த காட்டை மட்டும் அழிப்பதோடு நிற்காமல் அதனை சுற்றியுள்ள புளிய மரங்களையும், ஆல மரங்களையும் தனக்குள் விழுங்கிக்கொள்கிறது. சாயாவனம் மக்கள் அனைவரும் அந்த புளியமரத்தின் புளியின் ருசியால் வளந்தவர்கள். ஒரு கட்டத்தில் ஆலை நிறுவப்படுகிறது. சிதம்பரத்தின் உந்துதலால் கரும்பையே விளைவிக்காத சாயாவனம் ஊர்மக்கள் கரும்பு சாகுபடியில் இறங்குகின்றனர். கோடை முடிந்து மழை காலம் தொடங்கியதும் ஆற்றில் வெள்ளம் அதிகரிக்க, ஆலைக்கு போக்குவரத்து பாதிக்க படுகிறது. ஊரில் பண புளக்கம் அதிகமானாலும், பண்டம் மாற்று முறை மாறி வந்தாலும், ஊருக்கு ஒரு குறை ஏற்படுகிறது, புளி தட்டுப்பாடு. இதனை ஈடு செய்ய சிதம்பரம் பல ஊர்களில் இருந்து புளியை கொண்டு வந்தாலும் சாயாவனம் மக்களை சாந்தப்படுத்த முடியவில்லை. இறுதியில் ஊர் ஆச்சியின் குரல் " அதான் எல்லாத்தையும் கருக்கிட்டியே! இன்னமே எங்கேயிருந்து அனுப்பப் போறே? " அந்த நொடி சிதம்பரத்தின் நினைவு முழுக்க புளிய மரங்கள் நிறைந்தன.

இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன் இயற்கைக்கும் எந்திரத்திற்கும் இடையில் சிக்கி தவித்த பல கிராமங்களின் கதை இது. இந்த கதை முழுக்க ஒரு பெரும் காடு நம் கண்முன்னே மெல்ல மெல்ல அழிவது தெரிகிறது. இந்த கதையில் அந்த காட்டில் குறிப்பிடிருக்கும் 15 செடி வகைகளும், 8 மர வகைகளும் இருந்த தடம் தெரியாமல் பொசுக்க படுகிறது. இக்கதையை வாசிக்கும் பொழுது ஒரு இடத்திலாவது அந்த ஊரில் இருந்து ஒருவராவது அந்த அழிவினை தடுத்து நிறுத்திவிட மாட்டார்களா என்று என் நெஞ்சம் ஏங்கியது. ஆசிரியர் மேல் சற்று கோபம் கூட எழுந்தது. கதைக்காக கூட ஒருவர் அதனை தட்டி கேட்டிருக்கலாமே என்று? என்ன செய்ய இது வெறும் கதையல்ல, நாம் இன்று இருக்கும் நவீன உலகம் கடந்து வந்த கசப்பான வரலாறு.

காற்றின் வேகத்தோடு தீ ஒவ்வொரு மரமாக தாவுவதும், பச்சை இலைகள் பொசுங்கவதும், பறவைகள் பறந்து செல்வதும், கிளைகளை இழந்து மொட்டையாய் நிற்கும் மரங்களும், அலறி ஓடும் விலங்குகளும், எரிந்து சாம்பலாய் கிடக்கும் மாடுகளும், செக்கசிவந்த மண் தரை சில நாட்களில் சாம்பல் நிலமாக மாறுவதும் ஏதோ ஒரு போர் நடந்து முடிந்தது போலவும், அந்த போரில் மனித குலத்தை எதிர்த்து நின்று இயற்கை தோற்றது போலவும் எனக்கு தோன்றுகிறது.

இயற்கை நமக்கானது மட்டுமே என்றெண்ணுவது பெரும் சுயநலம். நம்மை போன்ற பல கோடி ஜீவராசிகளின் பொது சொத்துதான் இந்த இயற்கை. ஆறாம் அறிவு கொண்ட ஆதிக்கத்தால் மட்டுமே நாம் இயற்கையை நம் இஷ்டம் போல அழித்து முன்னேறுவது ஒரு முன்னேற்றம் கிடையாது. ஒரு மரம் வெட்டப்பட்டால் அது வெறும் ஒரு உயிரற்ற மரம் அல்ல அது பல நூறு உயிர்களை தாங்கி நிற்கும் ஒரு சரணாலயம். மற்ற உயிர்களை போல இந்த மண் மேல் விழுந்து உயிர் வாழ தொடங்கிய மனிதர்களாகிய நாம் எந்த காரணத்திற்காகவும் இந்த மண் ஈன்றெடுத்த இன்னோர் உயிரை பரிப்பது கொடுங்குற்றம். இந்த மண்ணில் நம் பார்வையில் எங்காவது ஒரு மரம் வெட்டப்பட்டால் அங்கு ஒரு நிமிடம் நின்று ஏன் என்று ஒரு கேள்வி கேட்போம்! நான் கேட்பேன், நீங்கள்?

---இர. மௌலிதரன்
Profile Image for Kumaresan Selvaraj.
23 reviews4 followers
September 19, 2022
சுற்றுச்சூழல் அழிவு குறித்த எந்தப் பயமும் இல்லாத காலகட்டத்தில், அதாவது தொழிற்சாலை அமைக்கத் துவங்கப்பட்ட காலகட்டங்களில் நடக்கும் கதை தான் சாயாவனம், இந்நாவல் வெறும���ே கதையாகிப்போகாமல், மனிதனின் பேராசையால் சூழல்கள் படும் பாதிப்பையும் அதன் விளைவுகள் மனிதரை மற்றும் அல்லாமல் மற்ற உயிரினங்களையும் பாதிக்கச்செய்கிறது என்பதையும் அக்காலத்திலேயே ஒரு சூழலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையாகவும் அமைத்து இருக்கிறார் சா.கந்தசாமி.

சிலோனில் இருந்து சொந்த ஊர் திரும்பி தொழில் செய்ய முற்படும் ஒருவனின் ஆசையால் அந்த அழகிய மண்ணில், மனிதர்களில், அவர்களின் வாழ்க்கையில், ஏன் இலை தழை செடி கொடி மரங்களும் அடைகிற மாற்றங்களை மையமாகக் கொண்டு அமைந்து இருப்பது இந்த நாவல்.

சாயாவனம் என்னும் அழகிய ஊருக்குத் திரும்பி வரும் சிதம்பரம் அங்கிருக்கும் ஒரு காடுபோன்ற ஒரு தோட்டத்தை வாங்கி அங்கு ஒரு கரும்பு தொழிற்சாலை அமைக்க முனைகிறான். நூலின் பெரும்பகுதி அந்தத் தோட்டத்தை அழிப்பதைப் பற்றியே இருந்தாலும் கொஞ்சம் கூடச் சலிக்காமல் அங்குள்ள மரம் செடி, கொடி, பறவைகள் என எல்லாவற்றையும் எடுத்துக்கூறி ஒரு சூழலியல் சங்கிலியின் கண்ணிகள் எவ்வாறு மாறுபடுகிறது என்பதை நம்மை மட்டும் அல்லாமல் சிதம்பரமும் உணரும் வகையாகவே அமைந்து இருப்பது சிறப்பு.

எவ்வளவு கூலி அதிகம் கொடுத்துக் கூப்பிட்டாலும் செய்கிற இடத்தை விட்டு நீங்காத ஆட்கள், பெரிதும் பணம் பரிவர்த்தனைகளின்றி நெல் முதலிய விலை பொருட்களை வணிகமாகக் கொண்டுள்ள அமைப்பு, கொடுத்த வாக்கினைக் காக்கும் மேன்மை, எனவும் அந்த ஊரில் அக்காலகட்டத்தில் அமைந்த சாதிமுறைகள் குறித்த சிறிய பதிவாகவும் இது அமைகிறது. இப்படியாக நகரும் கதையில் விஞ்ஞானத்தை ஏற்று அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு நகர்வதற்காக மனிதன் இயற்கையை எவ்வளவு சேதாரப்படுத்தி வருகிறான் என்று இந்த வரிகளின் மூலம் நமக்கு உணரச்செய்கிறார் எழுத்தாளர்

"அறிவும் வல்லமையும் மிகுந்த மனிதன், வெல்வதற்கே இயலாது என்று எண்ணப்பட்ட மண்ணைத் தன்னுடைய சுவாதீனத்திற்கு மெல்ல மெல்லக் கொண்டுவந்துவிட்டான். மனித சந்ததி பெருகும்போதெல்லாம், எழில் பூக்கும் பூமியின் ஒரு பகுதி தவிர்க்கவொண்ணாத விதத்தில் மாற்றி அமைக்கப் படுகிறது. அதனுடைய இயற்கையான அம்சம் - மரமும் செடி கொடிகளும் புல்லிதழ்களும் அகற்றப்படுகின்றன."

இறுதியாகக் கதையை முடிக்கையில் சிதம்பரத்தின் ஆலை வளர்ந்துகொண்டிருந்த அதே நேரத்தில் சாயாவனம் தன்னுடைய வாழ்வியலையும் மாற்றி அமைத்துக்கொண்டிருந்தது என்பது ஒரு தனிமனிதனின் முயற்சியில் அமைந்த ஆலை இவ்வளவு நடைமுறைகளை மாற்றும் என்றால் கார்ப்பரேட் நிறுவனங்கள் எவ்வாறு நம் வாழ்வியலை மாற்றி அமைக்கும் என்பதை நினைவுகூராமல் இருக்க முடியவில்லை.

இயல்பான நடை, எதார்த்தமான கதை நகர்வு என்று அமைந்து இருந்ததால் சாயாவனத்தை நாமளும் சுற்றி வந்ததுபோல் இருந்தது, இருப்பினும் படித்து முடிக்கையில் வெட்டப்பட்ட மரங்கள், தீக்கிரையான செடிகொடி, வெந்து கருகிய பறவைகள், அணில்கள், மாடுகள் வாழ்விடத்தை விட்டு ஓடிய வானரக் கூட்டம் என எல்லாவற்றின் இழப்புகளையும் இந்த வரிகளின் வாயிலாக
“மரமும் செடியும் கொடியும் மனிதனோடு நடத்தும் ஒரு போராட்டம். ஒவ்வொரு அடியும் பலமான தோல்வி தான்” நாம் மட்டுமல்ல சிதம்பரமும் உணர்கிறான்.

நன்றி!
21 reviews2 followers
March 25, 2023
சிதம்பரம் தனது மாமனான சிவனாண்டித்தேவருடன் சேர்ந்து சாம்ப மூர்த்தி ஐயருடைய வனத்தின் மரங்களை அழித்து சாயாவனத்தில் கரும்பாலை நிறுவ முயற்சி செய்கிறான்‌. இந்த one liner-ன் ஊடாக காடுகள் அழிப்பு, சூழலியல், மரங்களின் தேவை, நிலத்துக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு ஆகிய பலவற்றை layer ஆக கொடுத்துள்ளார் சா. கந்தசாமி அவர்கள்.

கதை புளிய மரத்தில் புளி பறிப்பதிலிருந்து அதை சமூகத்தின் பல தட்டுகளில் இருப்பவர்க்கும் பகிர்வதில் ஆரம்பித்து இறுதியில் கடைப்புளியின் ருசியின்மையில் முடிகிறது.

தமிழர் வாழ்வியலில் மரங்களின் பங்கு என thesis study வைக்கலாம் போல. திருமண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் தொடங்கி பந்தக்கால் மூங்கில், விருந்தில் பட்டை, புளி, கட்டில் செய்ய, தொட்டில் செய்ய இறுதியில் பாடை செய்யக்கூட அதே மரம்தான் வருகிறது. அதே இழப்பை நினைத்து வருந்தி அழவும் மரம் தான் தேவையாய் இருக்கிறது.

சிதம்பரம் ஒருபுறம் மரத்தின் இந்த தாய்மைக்கொடைகளை அனுபவித்துக்கொண்டே எவ்விதக் குற்றவுணர்ச்சியும் இன்றி நாள்தோறும் வனத்தை அழிக்கிறான். அதனோடு அவன் வீடும் அழிகிறது. இறுதியில் நெல் விளையும் பூமியில் கரும்பைத் தேடும் முட்டாள் ஆகிறான்.

நாவலில் பணத்திற்கு பதிலாக நெல்லைப் பண்டமாற்றிய காட்சிகள் எல்லாம் நாம் நிச்சயம் வாசிக்க வேண்டியவை.

வனம் என்றால் வெறும் மரம் மட்டும் அல்ல. அங்கே அணில் இருக்கும்.‌பாம்புகள் இருக்கும். நரிகள் இருக்கும். பறவைகள் வாழும்.‌ நிலத்தை வாங்கும் நாம் அவைகளையும் வாங்க முடியுமா? தன்னலமாய் மரம் அழிக்கும்போது அந்த உயிர்களையும் சேர்ந்தே கொல்கிறோம். ஆனால் தான் தான்.‌தன் வாழ்க்கை தான் என இருக்கும் மனித இனத்திடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

செத்த பறவையையும் சுட்டு எரித்து ரசிக்கும் சிதம்பரம் ஒட்டுமொத்த நவீனமயத்தின் பிம்பமாகவே தெரிகிறான்.‌காடழிப்பின் போது பசுங்கன்று இறக்கிறது. அதே நேரம் அக்ரஹாரமும் எரிந்து ஒரு குழந்தை இறக்கிறது. இயற்கையின் பார்வையில் இரண்டும் குழந்தைகள்தான்.‌ தன்னிடம் இருந்து தன் குழந்தையைப் பறித்ததால் இயற்கை அவன்‌ மனித இனத்தில் ஒரு குழந்தையை எடுத்துக்கொள்கிறது.

நெருப்பை வைத்து தன்‌ செல்வமான மரங்களை அழித்த சிதம்பரத்தை நீரின் மூலமாக அவன்‌ செல்வத்தை பறித்து பழிவாங்கிக்கொள்கிறது. காட்டினை அழிக்க வைத்த தீ அவன்‌ ஆசையாய்க் கட்டின வீட்டை எரித்தும் அவன் வெறி அடங்கவில்லை.

இயற்கையான ரோஜாவைப் பறித்து விற்றுவிட்டு அங்கே plastic ரோஜாவை வைத்தால் பார்க்க அழகாய்‌ இருக்கும். ஆனால் தேனீக்கள் சீண்டாது.
Profile Image for Gurunathan.
16 reviews1 follower
May 1, 2021
நாம் நிறைய  பழைய  கட்டிடங்களைக் கடந்து இருப்போம். அதன் அழகு நேர்த்தி எல்லாவற்றையும் பற்றி பேசி இருப்போம் ஆனால் ஒரு முறையாவது அந்த கட்டிடம் தோன்றுவதற்கு முன்பு அந்த இடம் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்தது உண்டா. அது ஒரு வனமாக  இருந்திரந்தால் அப்போது எப்படி அழித்துருப்பார்கள் என்று நம்முள் எழக்கூடிய யோசனயை தீனி போடுவது தான் இந்த நாவலின் சுருக்கம்.

இக்கதையில் நிறைய கதை மாந்தர்கள் வந்தாலும் பிரதானமான கதாபாத்திரம் சிதம்பரம்,தேவர் மற்றும் வனம்,நரி,குரங்கு,பறவை. இரண்டு விதமாக இக்கதையை உணரலாம் ஒன்று வனத்தின் பார்வையில் மற்று ஒன்று சிதம்பரம் பார்வையில்.போர் போன்ற காட்சி அமைத்து வனத்தை சிதம்பரம் எப்படி அழிக்க முற்படிகிறான்  என்று சொல்லுவது சிறப்பு. பிரம்பு, காரை, தாழை, புன்னை போன்ற மரம், செடி, கொடிகளின் குணத்தை அப்போரில் அருமையாக விளக்கியுள்ளார்.


அதிகமாக கேள்விப்படும் காட்டுத்தீ  போன்ற சம்பங்கள் நம் மனதைக் காயப்படுத்தும் அது போல் இங்கே ஒரு தீ வனத்தைச் சுற்றி பரவி அங்கு வாழும் உயிரினங்கள் மீதும் தொட்டு செல்லுகையில் கண்முன்னே நடப்பதை போல காட்டியுள்ளார் சா.கந்தசாமி. நான் நிறைய செடி , கொடி, பறவை  பார்த்திருக்கிறேன் ஆனால் அதனுடைய பெர்கள் தெரியாது இதில் அவர் அதன் பெயர்களைப் பற்றி அழகாக பதிவுட்டுள்ளார்.


நம் தேவைக்காக காட்டை அழிக்கிறோம் ஆனால் பின்பு தான் தெரிகிறது காடு என்பது நம் தேவைக்குதான் என்று.

http://tamilvasagasaalai.blogspot.com...
Profile Image for Sheik Hussain A.
40 reviews2 followers
August 22, 2021
ரொம்ப நாட்களாக படிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. இறுதியாக படித்து முடித்துவிட்டேன். கதை ஒரு கிராமத்தின் தோப்பில் ஆரம்பம். அதனை ஒருவன் விலைக்கு வாங்கி கரும்பு ஆலை அமைக்க அவன் என்னவெல்லாம் செய்தான் என்பதை கதை. புளிய தோப்பினை குறிப்பிடும் போது அதன் வாசனை நம்மை கிறங்க வைக்கிறது. அத்தோப்பின் பின் இருக்கும் காடு(வனம்) எளிதில் அழிக்க முடியாத அளவு இருக்கிறது. இறுதியில் நெருப்பை கொண்டு அழிக்கும் போது எத்தனை காட்டு விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வன அழிந்தன என்பது அந்த நெருப்பிற்கு மட்டும் தான் தெரியும். இக்கதை 1940 களில் எழுதியுள்ளார். ஆனால் இன்றளவு கூட நமது தேவைக்காக காட்டினை அழித்து வருகிறோம். ஒரு நாள் இயற்கை இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் அன்று நாம் வருத்தபட்டு பயனில்லை என்பதை நிதர்சனம்.
Profile Image for Subiksha  Bharathi .
12 reviews5 followers
June 30, 2021
சாயாவனம்- சா.கந்தசாமி

சுற்றுச்சூழல் குறித்து நம்முள் எப்போதும் ஒரு பயமும் அலச்சியமும் சேர்ந்து நெருடிக் கொண்டுள்ளது.இப்படைப்பு மேலும் ஒரு கலக்கத்தை உண்டாக்கும். பல வருடங்களுக்கு முன் எழுதி இருப்பினும் இன்றும் நடக்கக்குடிய பல சுற்றுச்சூழல் பாதிப்புகளை நினைவு படுத்துகிறது. சாயாவனம் என்னும் சிற்றூரில் தனிமனிதனின் சுயநலத்திற்காக அழிக்கப்படும் பொதுநலமும் அதை வளர்ச்சி என்று நியாயப்படுத்தும் மனித குணமே சாயாவனம்.
Profile Image for இரா  ஏழுமலை .
137 reviews8 followers
December 10, 2025
வெளிநாடு சென்று கை நிறைய பணத்தோடு ஊர் வரும் இளைஞன் சிதம்பரம். இங்கு தொழில் தொடங்க இடம் வாங்கி காட்டை அழித்து தொழில் தொங்குவதோடு நாவல் முடிகிறது. இது ஒரு சூழலியல் நாவல் என்று சொல்கிறார்கள், காட்டை அழிப்பதால் ஊடே காட்டு விலங்குகள் அழிகிறது அழிவின் மூலம் நிலம் மாறுவதால் நிலத்தின் தன்னை மாறி அங்கு விளையும் புளி சுவை மாறுகிறது.. இதான் மொத்த நாவல் சொல்லும் செய்தி.எந்த விதத்திலும் இந்த நாவல் எனக்கு நல்ல வாசிப்பு அனுபவம் கிடைக்கவில்லை. சுமாரனா நாவல் தான்..
Profile Image for Kalaiselvan selvaraj .
134 reviews19 followers
January 28, 2018
Subject: wreck of the forest 🌳

Foreign return guy has purchased the land to build sugar factory. How he made his dream. What he did to build the factory.

Finally what’s the losses👎& what’s the gains 👍 .
1 review
February 12, 2022
சாயாவனம்

அமைதியாக நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு கிராமத்தின் வாழ்க்கை எப்படி முன்னேற்றம் என்ற பெயரில் சீரழிகிறது என்பது கதையின் கரு. ஆனால் அதைச் சொல்லியிருக்கும் விதம், நடை.. ஆகா மனதை விட்டு நீங்காத வர்ணனைகள்.
1 review1 follower
May 6, 2014
Very good novel. Excellent presentation. I pulls the reader into the story field.
Displaying 1 - 24 of 24 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.