Jump to ratings and reviews
Rate this book

திரைகள் ஆயிரம் [Thiraikal Aayiram]

Rate this book
ஒரு வல்லுறவுச் சம்பவம். பாதிப்புக்கு ஆளான மரியம்மை தன்னைப் பலியாக்கியவர்களுக்கு எதிராக வழக்காடுகிறாள். அவள்மீது அனுதாபம்கொண்ட வழக்கறிஞர் ஞானமணி துணைநிற்கிறார். அவளுக்கு அடைக்கலம் தரும் பொன்னம்மை முதலில் கரிசனம் காட்டுகிறாள். உண்மை தெரிந்ததும் விரட்டுகிறாள். சம்பவத்தின் சூத்திரதாரியான குஞ்சுப் பிள்ளை இன்னொரு உண்மையைச் சொல்கிறான். விவகாரத்தைச் செய்தியாக்கிப் பலன்கண்ட இசக்கி உண்மையை விற்கிறான். இவற்றையெல்லாம் தொகுத்துச் சொல்லும் கதைசொல்லி இன்னொரு உண்மைக்கு அதிர்கிறார். எது உண்மை, யார் சொல்வது உண்மை, உண்மைக்கு என்ன நிரூபணம் இவை குறுநாவல் எழுப்பும் கேள்விகள். உண்மை என்பது அவரவர் காணும் தோற்றம். ஆனால் முற்றான உண்மை இருக்கிறது.

81 pages, Kindle Edition

Published October 1, 2008

6 people want to read

About the author

Sundara Ramaswamy

61 books217 followers
Sundara Ramaswamy (1931–2005), fondly known as "Su.Ra" in literary circles, was one of the exponents of Tamil modern literature. He edited and published a literary magazine called Kalachuvadu. He wrote poetry under the penname "Pasuvayya". His novels are Oru Puliya Marathin Kathai (The Story of a Tamarind Tree), J.J Silakuripukal (J.J: Some Jottings, tr, A.R Venkadachalapathy, Katha, 2004) and Kuzhanthaikal, Penkal, Aankal (Children, Women, Men).
Ramaswamy was born on 30 May 1931, in Thazhuviya MahadevarKovil,[1] a village in Nagercoil). At 20, he began his literary career, translating Thakazhi Sivasankara Pillai's Malayalam novel, Thottiyude Makan into Tamil and writing his first short story, "Muthalum Mudivum", which he published in Pudimaipithan Ninaivu Malar.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (25%)
4 stars
1 (25%)
3 stars
1 (25%)
2 stars
1 (25%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Elankumaran.
142 reviews25 followers
August 8, 2024
திரைகள் ஆயிரம் ❤️

வாழ்க்கை, திரைகள் ஆயிரம் மறைத்த ஓர் வண்ண ஒவியம். ஒவ்வொரு திரையும் விலக விலக, ஓவியத்தின் சாயல்கள் புதுப்புது அர்த்தங்களை விரித்துக்கொண்டிருக்கின்றது. நாம் அறிந்தவையும் தெரிந்தவையும் ஒவ்வொரு திரை விலகலிலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு நம் புரிதல்கள் மாற்றங்களுக்கேற்ப புதுத்தோற்றம் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளாகிறது.

சுந்தர ராமசாமியின் எழுத்தில் 1966ல் விரிந்த இந்த ‘திரைகள் ஆயிரம்’ குறுநாவலும் இதே கருத்தில், ஒரு பதற்றமான சம்பவத்தை களமாகக் கொண்டு அதில் இருந்து வெளிப்படும் வெவ்வேறு கோணங்களிலான பார்வைகளையும், மனிதனின் மனக்கணக்குகளையும், சமூகத்தில் பெண்களின் நிலை, கற்பு, அதிகாரவர்க்கத்தின் ஆதிக்கக்கரங்கள் என பலதையும் திரை போட்டுக்காட்டுகிறது.

“பார்க்காதது எல்லாம் நடக்காததுன்னு நெனச்சுக்காதே. பார்க்கறதுதான் உண்மைனும் நெனச்சுக்காதே. நம்மால கொஞ்சம் போலதான் பார்க்க முடியும். மலையெப் பாத்தா மலைக்குப் பின்னாலே என்ன இருக்குன்னு தெரியாது நமக்கு. ஒரு எலுமிச்சம் பழத்தைக் கண் முன்னாலே நீட்டிப்பிட்டா மலையே மறைஞ்சு போயுடறது நமக்கு.”
-புத்தகத்திலிருந்து
Profile Image for Arun Bharathi.
108 reviews2 followers
November 20, 2023
சுந்தர ராமசாமியின் "திரைகள் ஆயிரம்"

சுந்தர ராமசாமியின் "திரைகள் ஆயிரம்", நாளிதழ் ஒன்றில் வெளியாகும் ஒரு வல்லுறவு சம்பவத்தின் செய்தியில் தொடங்குகிறது. பாதிக்கப்பட்ட பெண் தொடரும் வழக்கில் பல பெரும் பணக்காரர்களும், அதிகாரிகளும் பெயரிடப்படுகின்றனர். அதிகாரத்தின் ஆதிக்கத்தாலும், ஊடக சுதந்திரத்தின் துஷ்பிரயோகத்தாலும் உண்மைகள் விற்கப்படுகின்றன. எது உண்மை என்பதை எழுத்தாளன் ஒருவன் தேட முற்படுகிறான், அவனது கதையாடலில் இந்நாவல் பல திருப்புமுனைகள் கொண்டு பயணிக்கிறது.

எது உண்மை எது பொய் என்பதை தாண்டி சமூகத்தில் பெண்களின் நிலை, அதிகாரத்தின் வரம்பு மீறல், மக்களின் ஒருதலை சார்பு மற்றும் preconceived notion, அரசாங்கம் மற்றும் பண பலம் படைத்தோர் நீதிமன்றங்களின் மீது செலுத்தும் தாக்கம் என சமகால அரசியல் மற்றும் சமூக சூழலுக்கும் பொருந்தி போகிறது இந்நாவல்.

ஒரு sensitive subject-ஐ சுற்றி பயணித்தும், அழுத்தமான வசனங்கள் இல்லாமல் தட்டையாக அமைகிறது இக்கதை.

http://arunbswaminathan.blogspot.com/...
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.