Jump to ratings and reviews
Rate this book

மோகினி வனம்

Rate this book
மகாராணி அந்தப் பெண்ணை உற்றுப் பார்த்தாள். அவள் கிடந்த இடத்தில் சென்று அவள் ஆடையையும் ஆராய்ந்தாள். இடைக்குக் கீழே இருந்த ஆடையின் ஒரு பகுதி கிழிந்திருந்தது. அதை யாரோ புரட்டி சாமர்த்திய மாகக் கிழிசல் தெரியாமலும் அந்தப் பெண்ணின் உள்ளழகு தெரியாமலும் மறைத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்ட ராஜமாதா, அந்த மனிதன் தீப்சந்தாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கும் வந்தாள். ராஜமாதா அந்தப் பெண்ணின் அருகில் உட்கார்ந்து தலையின் குழலைப் பிரித்து சோதித்தாள்.
அத்தனை அடர்த்தியான கரிய குழலைக் கண்டு ராஜமாதா சிறிது பொறாமைகூட கொண்டாள். ஆனால் அந்தக் குழலுக்கு இடையில் கசிந்திருந்த ரத்தக் கரையைக் கண்டதும் சினத்தின் பிம்பமாகத் திகழ்ந்தாள், “ தீப்சந்த்! இ&#

348 pages, Kindle Edition

Published October 3, 2022

17 people are currently reading
100 people want to read

About the author

Sandilyan

76 books390 followers
Sandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.

சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.

பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.

கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.

ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
14 (33%)
4 stars
9 (21%)
3 stars
9 (21%)
2 stars
5 (11%)
1 star
5 (11%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Dineshsanth S.
192 reviews42 followers
November 30, 2017
ஜாவுத் கோட்டை முற்றுகையையும் அதிலிருந்து தீப்சந்த் தப்பித்த விதத்தையும் வர்ணித்த விதத்தை தவிர நன்று என்று சொல்வதற்கு ஏதுமில்லை. சுவாரசியமில்லாத நம்பவியலாத திருப்பங்கள், அரதப்பழசான சலிப்பூட்டும் பெண் வர்ணனையும் இது என்ன சரோஜாதேவி நாவலா என்று யோசிக்க வைக்கும் காதற் காட்சிகள் என குறைகள் பல.வாசித்து முடிக்கும் போது ஏன் வாசித்தோம் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது.
Profile Image for Soundar Phil.
130 reviews12 followers
February 21, 2024
தமிழ் சரித்திர நாவல் மீது பற்று கொண்டோருக்கு "சாண்டில்யன்" என்ற பெயர் மிகவும் பரீட்சயப்பட்ட ஒன்றாகும்.

மூன்று பாகங்கள் கொண்ட சாண்டில்யணின் "கடல்புறா"வை தொடங்குமுன் ஒரு முன்னோட்டமாக அவரை அறியும் பொருட்டு நான் வாசிக்க தொடங்கியதே இந்த "மோகினி வனம்"

நாளும் பொழுதும் இன்ப களிப்பில் மூழ்கிய மன்னன் ஆளும் ஒரு நாடும் அதன் நிலைமை எவ்வாறெல்லாம் சீர்கெடும் என்பதையும், நாட்டைக் காக்க வேண்டிய பொறுப்பில் உடையவர்களோ மன்னனின் நிலையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு சிறு ஊர், நாடு என ராஜ்ஜியத்தையே சுற்றி வளைக்க தீட்டிய சதியும், அச்சதியை முறியடிக்க தீப்சந்த் என்னும் வீரனின் முனைப்பும் அவனின் நாட்டுப்பற்றும், அஞ்சா நெஞ்சமும், கூர்புத்தியும் என கதை ஓட்டம் விறுவிறுப்புடன் நகர..,

இன்னொரு புறம் அந்த வீரனின் காதல் வாழ்க்கையும், அவன் வீரத்திற்கு ஏற்றார் போல் அவனின் காதலியும் அவள் புரியும் சாகசங்களும், இவர்கள் இருவரின் காதல் விளையாட்டுகளையும், அன்பு பாராட்டுதல்களையும் நம் கண்முன்னே காட்சிப் படுத்துகிறார்..,

தேசப்பற்று, வீரம், காதல், வெற்றி.
15 reviews
March 1, 2024
இதோ மற்றொரு ராஜபுத்திர சரித்திர நாவல் சாண்டில்யன் அவர்கள் எழுதிய முதல் ராஜபுத்திர சரித்திர நாவல் ஜீவ பூமி என்று நினைக்கிறேன் அதில் இருந்து கணக்கு வைத்தால் 11 ராஜபுத்திர நாவலையும் ராணியின் கனவு என்ற சிறுகதை தொகுப்பையும் எழுதி விட்டார் அவருக்கு ராஜபுத்திர கதைகளை எழுதி தான் பிடித்து இருக்கிறது போல தோன்றுகிறது. மோகினி வனம் இந்த கதை ராஜபுத்திர இறுதி காலத்தை அடிப்படையாகக் கொண்டது காமுக அரசனால் நாடு எப்படி அழிந்தது என்பதை எடுத்து உரைக்கும் கதை உள்நாட்டு சதி அதை காக்க நினைக்கும் வீரன் இதற்கிடையில் மராட்டிய படைகள் ராஜபுத்திர நோக்கி வருககின்றன என்பதை சுற்றி கதை அமைக்கிறது இடையில் ராக்கெட் என்று சாண்டில்யன் ஒரு ஆயுதத்தை கூறிபிடுகிறர் உண்மையில் அப்படி ஒன்று இருந்தா‌. ஆரம்பத்தில் தொய்வு இடையில் அசுர விறுவிறுப்பு இறுதியில் தொய்வு கதையை ஒன்றும் மட்டம் என்று குறிப்பிட முடியாது மிகுந்த அருமையான கதை என்றும் குறிபிட முடியாது ஒரு சாகச கதை படிக்க வேண்டும் என்றால் இதை படிக்கலாம் கதா நாயகி புஷ்பாவதி உண்மையில் கதாநாயகனை மட்டும் கவரவில்லை படிக்கும் வாசகர்களையும் கவர்ந்து விடுகிறாள்
Profile Image for Aargee.
164 reviews1 follower
July 17, 2024
Mewar, Rajputs & how Mathaji Sindhia from MH comes to rescue the cowardly king Rana Bhim Singh, son of Rampyari. Perhaps Deepchand is a fictional character. All said, this is not even close to other novels like கன்னி மாடம், விஜய மஹாதேவி or even ராஜ முத்திரை, forget alone கடல் புறா
This entire review has been hidden because of spoilers.
Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.