குடும்பம், அலுவலகம், நண்பர்கள் என்ற பல்வேறு உறவுகள்தான் நமது உணர்வுகளுக்கு வேண்டிய பலத்தை அளிக்கின்றன. கணவன், மனைவி உறவு, குழந்தைகளின் இயல்பு, பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளின் ஆர்வங்கள், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு, நண்பர்களின் உதவும் மனப்பான்மை, சக பயணிகளின் நடத்தை... என அன்றாடம் நாம் சந்திக்கும் பல மனிதர்களின் குணங்களையும், உணர்வுகளையும் அடிப்படையாக வைத்து இந்த நூலில் ஓர் அருமையான உறவுப் பாலம் அமைத்துள்ளார் நூலாசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன். ஆனந்த விகடன் இதழில் ‘சிறிது வெளிச்சம்!’ என்ற தலைப்பில் வெளிவந்து, வாசகர்களின் இதயக் கதவைத் திறந்த கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்! வாழ்க்கையில் நாம் என்னவெல்லாம் செய்யத் தவறியிருக்கிறோம் என்பதையும், கிடைத்த வாய்ப்புகளை எப்படியெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதையும், நம்மை நாமே பார்த்துச் சீர்படுத்திக் கொள்ளும் கண்ணாடியாக இந்தக் கட்டுரைகள் பிரதிபலிக்கின்றன. அன்றாட வேலைப்பளுவினால், தங்களைச் சூழ்ந்துள்ள மனிதர்களை விட்டு விலகி திசை தெரியாமல் ஓடுகிறார்கள். ரயிலிலோ, பேருந்திலோ பயணிக்கும்போது மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கத் தவறுகிறார்கள். இவற்றையெல்லாம், உண்மைச் சம்பவங்கள், ஆங்கிலத் திரைப்படங்கள், சிறுகதைகள் மூலம் நயமான வார்த்தைகளில் விளக்கியுள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன். நல்ல உணர்வுகளையும் உறவுகளையும் வளர்த்துக்கொள்ள நம்பிக்கை வெளிச்சத்தைக் காட்டும் நூல் இது!
ஒரே இடத்தில் வேரூன்றிவிட்ட வருத்தத்தைப் போக்கத் தான் மரங்கள் பறவைகளுக்கு இடம் தருகின்றன என்கிறது ஆப்பிரிக்கப் பழமொழி, யோசித்தால் நாமும் அப்படித்தான். வாழ்நாளில் நாம் பெற முடியாத அனுபவங்களை, சந்திக்க முடியாத மனிதர்களை, காணமுடியாத நிலப்பரப்பை புத்தகங்கள் வழியாகப் பெற்றுக் கொள்கிறோம். இந்தியா முழுவதும் சுற்றியலைந்து தான் கண்டறிந்த, அனுபவித்த விஷயங்களைத் தனது சுட்டுரைகளின் வழியே பகிர்ந்து தருகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். உலகச் சினிமா, இலக்கியம், பயணம் என்று மூன்று தளங்களில் இக்கட்டுரைகள் இயங்குகின்றன என்பதே இதன் தனிச்சிறப்பு.
S. Ramakrishnan (Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தேவை பணமோ,பதவியோ, செல்வமோ,புகழோ அல்ல நிறைய பயணம், நல்ல இலக்கியம் மற்றும் படங்கள் ,நம்மை சுற்றியிருக்கும் சிறிய பெரிய அற்புதங்களை, இயற்கையை ரசிக்கும், சக மணிதர்களை நேசிக்கும் மணம் இவைதான் என்ற உணர்வை படிக்கும்போதெல்லாம் ஏற்படுத்துவது எஸ்.ரா அவர்களின் எழுத்து.
சிறிது வெளிச்சம் என்ற புத்தகமும் அதற்கு விதிவிலக்கல்ல, ஒவ்வொரு பக்கமும் மனதில் ஓர் நேர்மறை எண்ணத்தை உதிக்க செய்கிறது. பல இடங்களில் நாம் வாழும் முறையை , நமது பழக்கங்களை, நடத்தையை இது சரியா என்று கேள்வி எழுப்புகிறது.
ஒரு சம்பவம் அதற்கு பொருத்தமான ஒரு உலக திரைப்படம் , உலக இலக்கிய படைப்புகள் அவை உணர்த்தும் உண்மை என்று கட்டமைத்த கட்டுரைகள். வாழ்வதற்கே இந்த உலகு வெறுமனே இருப்பதிற்கில்லை என்பார்கள், நாம் வாழ்கிறோமா அல்லது இருக்கிறோமா என சிந்திக்க வைக்கும் அருமையான நூல்.
நம்மிடையே வாழும் நமது கவனம் பெறாத மனிதர்கள்,நிகழ்வுகள்,சம்பவங்கள் மீது சிறு வெளிச்சத்தை உண்டாக்க இந்த புத்தகத்தை எழுதியதாக கூறும் எஸ்.ரா நமது மனதிலும் ஒரு வெளிச்சத்தை பரவ விடுகிறார்.
"சிறிது வெளிச்சம்" - எஸ் ராமகிருஷ்ணன் ----------------------------------
2010 வரை விகடன் வாராந்திரியில் வெளிவந்த கட்டுரைகள். 58கட்டுரைகளை கொண்ட தொகுப்பு இப்புத்தகம்.
ஒரு கருத்தியல், அதனை ஒத்த தனது வாழ்வில் ஏற்பட்ட சம்பவம் அல்லது அது தொடர்பான புத்தகம்/சிறுகதை, பின் அது தொடர்பான திரைப்படம் அல்லது ஆவணப்படம் என முழுதையும் தொடுத்து, மலர்ச்சரம் போல் ஒவ்வொரு கட்டுரையும் படைக்கப்பட்டுள்ளது. இடையிடையே துணுக்கு செய்திகளாக(மதுரையில் பேசும் நூலகம், தற்போதய audible போல/ரயிலில் கழிவுநீர் சேகர தொட்டி), உலகின் பல்வேறு மூலைகளில், அந்தந்த கட்டுரையின் கருத்தியல்ரீதியிலான, நடந்த சம்பவங்களை அரைப்பக்க அளவில் பதிக்கப்பட்டுள்ளது. கணவன்-மனைவி, பெற்றோர், சகோதர-சகோதரி உறவுகளின் உன்னதம் பற்றி, நண்பர்கள் மற்றும் சுற்றியுள்ள மனிதர்களை பற்றி என பற்பல தத்துவார்தங்கள், உலக நியதிகள், சுயபரிசோதனை கேள்விகள் என கதம்பமாக செல்கிறது இக்கட்டுரை தொகுப்பு. நாம் அன்றாடம் கவனிக்க தவறிய விஷயங்களை கூர்ந்து பார்க்கும்படி செய்யும் இக்கட்டுரைகள், எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது.
வாசித்து முடிக்கும்போது நம் மனதை துவைத்து பிழிந்து காயவைத்து இஸ்திரி போட்டு மடித்து வைக்கப்பட்ட துணியை போல உணர்வோம். அப்படியான புத்துணர்வை பெறுவோம்.
புத்தகத்திலிருந்து...
// நாகரீகம், மனிதன் நாக்கை கட்டுப்படுத்தவில்லை. மாறாக, ஓநாயின் நாக்கை போல சதா துடிக்க வைத்துக் கொண்டே இருக்கிறது. தேவைப்பட்டால், எதையும் மனிதனால் சாப்பிட முடியும் என்பதே நிஜம். சாப்ளின் படம் ஒன்றில், பசியோடு உள்ளவனுக்கு சகமனிதன் கோழி போல தோன்றுவான். அடுத்த மனிதனை அடித்து சாப்பிட துரத்துவான். அது வெறும் கற்பனையோ மிகையோ அல்ல; அது எதிர்கால உண்மை //
// அனைவரின் குடும்பமும் ஏதோ ஒரு நம்பிக்கையைப் பற்றிக்கொண்டுதான் துளிர்த்து வருகிறது. கஷ்டத்தைவிடவும் அதை மூடி மறைப்பதுதான் பெருந்துயரம். அவமதிப்பு, வெறுப்பு என எத்தனையோ வலிகளை தாங்கிக் கொண்டு வாழ்க்கையின் மீதான பற்றுடன் இருக்கிறார்கள் மனிதர்கள். சாலைவிபத்து, இவை யாவற்றையும் ஒரே நிமிடத்தில் அபத்தமாக்கிவிடுகிறது.
வாழ்க்கை, அர்த்தம் மிகுந்தது. ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் ஒரு காரணமும் அவசியமும் இருக்கிறது. அதை அறிந்து கொள்வதும் அறியாமல் கடப்பதும் அவரவர் தேடுதல் தொடர்பானது. ஆனால் எந்த மனிதனும் தேவையற்றவன் இல்லை இந்த வாழ்க்கையும் பயனற்றது இல்லை //
// சிறுவர்கள் எப்போதும் கேள்விகளால் சூழப்பட்டு இருக்கிறார்கள் . உலகின் ஒவ்வொரு சிறு செயலும் ஏன் நடக்கிறது என்ற கேள்வி, அவர்களுக்குள் இயல்பாக எழுகிறது. புரிந்து கொள்ளவும், ரசிக்கவும், யோசிக்கவும் விரும்புகிறார்கள் . நமக்கு அதற்கான நேரம் இல்லை ; விருப்பம் இல்லை. அப்படி குழந்தைகள் வளர வேண்டும் என்ற தேவை இல்லை என்ற மனப்பாங்கு நமக்குள் ஆழமாக வேர்விட்டு இருக்கிறது. //
// நமது தவறுகள், நம் குழந்தைகளின் செயலில் எதிரொலிக்கின்றன. நமது குழந்தைகள் நம்மை நம்பித்தான் இருக்கிறார்கள் என்பதே அதிகாரம் செலுத்துவதற்கான முதல் காரணமாகிறது. //
// சாவு, சில கேள்விகளை விட்டுச் செல்கிறது; சில ரகசியங்களை புதைத்து விடுகிறது; சில ஆறாத ரணங்களை உருவாக்கிவிடுகிறது. //
// மனிதகுலம் அதன் கடந்த காலத்தை அறிந்து கொள்வதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. அதுதான் புத்தகம். மனித கற்பனையின் மிக உயரிய விஷயம் 'எழுத்து'. //
// புத்தகம் வெறும் காகிதம் அல்ல. கண்ணாடி நம் முகத்தைக் காட்டுகிறது என்றால், அகத்தை காட்டுவதற்கு புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன. புத்தகம் இன்னொரு பிரபஞ்சம். அதன் உள்ளே, இந்த பிரபஞ்சத்தின் தீர்க்கமுடியாத புதிர்களுக்கான பதில் காணப்படுகிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சுயமாக அனுபவித்து அறிய முடியாத அத்தனை புத்தகம் வழியாக மனிதர்களுக்கு எளிதாக அனுபவமாகிறது. //
// மனிதர்கள் உடனேயே நினைவுகள் அழிந்து போவதில்லை. அவை எழுத்தில், சொல்லில், வரிகளில் ஒளிந்துகொண்டு, தன்னை உயிர்ப்பித்துக் கொள்கின்றன. புத்தகம் என்பது, மூன்று கரை உள்ள ஆறு என்கிறார் கவிஞர் தேவதச்சன். உலகின் நினைவுகளும், கனவுகளும் நம்பிக்கைகளும் ஒன்று கலந்து உருவானதே புத்தகம். அதுவே உலகின் உலகின் ஒப்பற்ற அதிசயம்! //
// முதியவர்களின் கேள்விகள் அறியாமையில் இருந்து எழுவதில்லை. மாறாக ஆதங்கத்தில், இயலாமையில், பயத்தில் இருந்து உருவாகிறது //
// வீட்டின் கதவுகள், ஒரே நேரத்தில் வெளியில் இருந்து எதுவும் உள்ளே நுழைந்து விடாமலும், உள்ளிருந்து ரகசியங்கள் வெளியே போய் விடாமல் தடுத்துக் கொண்டு இருக்கிறது. வீடு நம் நிர்வாணம் அறிந்த கண்ணாடி. //
// ஒவ்வொரு வயதும் ஒரு ரகசியத்தை பாதுகாக்க நினைக்கிறது. ஒளித்து வைக்கிறது. ஆனால், இன்னொரு வயது அந்த ரகசியத்தை அர்த்தமற்றதாகி விடுகிறது. பல ரகசியங்கள் மனிதர்களின் இறப்புடன் சேர்ந்து அழிந்து விடுகின்றன அல்லது புதைக்கப்பட்டு விடுகின்றன. காலம் இதில் சிலவற்றை மிக தாமதமாக கண்டுபிடிக்கிறது. அடையாளம் காட்டுகிறது. ரகசியம் மீட்டெடுக்க படும்போது அதன் பின்புறம் இருந்த வலி உணரப்படுவதில்லை. //
// பல்லி ஒன்றை கற்றுத்தருகிறது. அது, பிரச்சனையில் மாட்டிக்கொண்டு தப்பிக்க இயலாத போது தனது வாலை துண்டித்துக் கொள்ளும். இந்த செயல், நம்மிடம் உள்ள ஒன்றை இழப்பதன் வழியே ஒரு பிரச்சினையில் இருந்து நாம் விடுபட முடியும் தந்திரம். தன் வாலை தானே துண்டித்துக் கொள்வது போன்ற துணிச்சலான தற்காப்பு முடிவுகள் அவசியமானவை என்பதையே உணர்த்துகிறது. அதை நாம் பெரிதாக கவனம் கொள்ளவில்லை. //
// நதிமூலம், ரிஷிமூலம் தேடி காணவே முடியாது என்பார்கள். அத்துடன் வீட்டு சண்டையையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான் . அதன் வேர் எங்கே இருக்கிறது ... விதை என்று முளைத்தது என்று கண்டுபிடிக்கவே முடியாது. ஒருவகையில் இந்த வீட்டு சண்டைகள்தான் வாழ்வின் ருசி. ஒவ்வொரு குடும்பமும், அதற்கான காயங்களை சண்டைகளையும் கொண்டிருக்கிறது. குடும்ப சண்டையில் வார்த்தைகள்தான் பிரதான ஆயுதம். அந்த நிமிடங்களில், தான் இத்தனை வார்த்தைகளை அறிந்து வைத்திருக்கிறோமா என்று ஆச்சரியம் உருவாகிறது. வார்த்தைகளை உபயோகிக்க தெரியாத ஆண், எளிதில் அடி உதைக்கு இறங்கி விடுகிறான். வன்முறை, குடும்பத்தின் பிரிக்க முடியாத பகுதி போலும். //
// கோபப்படுவது எளிதானதல்ல. அதை முறையாக பிரயோகிக்க கற்றுக் கொள்ள வேண்டும். கோபத்தின் கடிவாளம் நம் கையில் இருக்க வேண்டும் அதன் பிடிக்குள் நாம் போய்விடக்கூடாது. அது சாத்தியமானால், நமது கோபம்... ஒளிரும் வெளிச்சமாகும்! //
Movies referred by S.Ramakrishnan, in this book :
The Perfume Poet of the wastes The Fall Its a Wonderful Life The Color Purple Judgement at Nuremberg I am sam The Bucket List Savior Fahrenheit 451 Angela's Ashes 301/302 The King of Masks Hell in the Pacific Thelma & Louise The Terminal The Gods Must be Crazy Stone Reader Not a Penny More, Not a Penny Less A Boy in the Stipped Pyjama Madadayo The War of the Roses Pay It Forward Minuscule(French) The Story of the Weeping Camel The Edukators Seven Pounds Pretty Big Feet Praying with Anger Konikar Ramdhenu Together(Chinese) Sabah The Goat Radio The Dress Limelight 3-Iron Train To Pakistan Disgrace The Birds Into the Wilds A mighty heart The Beautiful Country Ganashastru City Lights The Diving Bell and the Butterfly YARWNG(Roots) Tattooed Head Hunters
So many different topics. I could connect with many of them, as we all would have experienced such situations or met the kind of people that walked through these essays. Always been a fan of S.Ra sir's writing style. He does have his own knack of building the write-up to literally transport us to the locations he has been through and converse with people with whom he had engaged. He lets us soak into such life experiences slowly and throws back questions at our life choices and the way we are as a social being. Enjoyed reading every topic, as i did it slowly covering 3/4 chapters a day. Re-reading passages, that kindles our own thoughts and life experiences. Great read ! Now on to other S. Ra sir's books i had purchased this year ! :)
400+ பக்கங்கள் 2-3 தினங்களில் முடித்தேன் எஸ்.ரா வின் துனையெழுத்து பிடிக்குமா.அப்போ இது உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.எஸ்.ரா வின் எழுத்தாள் மீண்டும் ஈர்க்கப்பட்டேன்.நம்முடனே நேரடி தொடர்புக் கொள்ளும் அவரது எழுத்துக்கள்,மிகவும் எளிமை.நமது வாழ்வில நாம் பார்க்கும் அன்றாட நிகழ்வுகள்,நாம் கவனம் தவறாமல் போன் நிகழ்வுகள்.அதனை பற்றிய தொகுப்பு தான் இந்த புத்தகம்.ஒவ்வொரு நிகழ்வுடன் உலக இலக்கியம் , உலக சினிமாவோடு பேசுகிறார்.உலக இலக்கியம்,உலக சினிமா ; அதனை நானும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் எழுந்துள்ளது.ஒரு சிறிய அட்டவனை போட்டு வைத்திருக்கிறேன்.நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக அதனை தெரிந்துக் கொள்வேன்.
நாம் கடைசியாக கடிதம் எப்பொழுது எழுதினோம்..?வாழ்த்து அட்டை அனுப்பும் பழக்கத்தை விட்டது எப்போது?சார்..உங்க நம்பர் குலுக்கலில் செலக்ட் ஆயிருக்கு..நீங்க ஜோடியா வந்து உங்க பரிசை வாங்கிக்கனும்..இப்படி உங்க செல்பேசிக்கு அழைப்பு வந்துருக்கா..அந்த பரிசை வாங்க போயிரிக்கீங்களா?அகதி..அந்த வழி என்ன..?வீட்டில் சண்டை போடும் நம் மனநிலை..உங்க குழந்தை கேள்வி கேட்கும் போது நீங்க என்ன செய்றீங்க...போன்ற பல நிகழ்வுகளை விவரிக்கிறார்.
படிக்க துவங்கியதும் கண்டிப்பா 2-3 தினங்களில் முடித்துவிடுவிர்கள்.முடிக்கும் போது உங்களுக்குள் பல கேள்விகள் எழும்...
குறிப்பு : திருமணத்திற்கு பின் ஒரு பெண்ணின் மனநிலை பற்றி சொல்லும் அவர் ஒரு ஆணின் மனநிலை பற்றி ஏதும் சொல்லாதது எனக்கு சிறு வருத்தம் தருவதாகவே உள்ளது.
சிறிது வெளிச்சம்: எஸ்.ராமகிருஷ்ணன் மிகவும் எளிய நடையில் அன்றாட நிகழ்வுகளை பற்றிய கட்டுரை தொகுப்பு நூல் இது. ஒவ்வொரு நிகழ்வையும் உலக இலக்கியம், உலக சினிமா, பயண அனுபவம், குறும்படம், இந்திய சினிமா, ஆவணப்படங்கள் என தான் பார்த்தறிந்த பல அனுபவங்களை கட்டுரையின் மையக்கருத்தோடு இணைத்து எழுதி இருக்கிறார். 58 கட்டுரைகளும் உணர்வுபூர்வமான ஒரு செய்தியை நமக்கு உணர்த்தி நாம் கவனிக்க மறந்தவைகளை நினைவூட்டுகின்றன. இந்த புத்தகத்தில் தான் எத்தனை தகவல்கள், இவர் ஒரு தேசாந்திரி என்பதற்கு இதுவே ஒரு சான்று. இந்த நூலில் நான் மறுக்கும் ஒரே விஷயம் இதன் தலைப்பு தான், பெரும் வெளிச்சம் என்று வைத்து இருக்க வேண்டும் எழுத்தாளர் எஸ்.ரா. அவர்கள். நேரமும் ஆர்வமும் இருந்தால் நீங்களும் சிறிது வெளிச்சத்தை பெறவும்.
வெவ்வேறு அனுபவங்கள், சிந்தனைகளின் தொகுப்பு. எஸ். ராவின் எழுத்து எப்போதும் போல மிக எளிமையாக உள்ளது. சர்ச்சையான விஷயங்களை (அரசியல், மதம், சாதி) தவிர்த்து நம் வாழ்க்கையில் நாம் எத்தார்த்தமாக கொள்ளும் எண்ணங்க்களை அலசுவது புதுமையாக உள்ளது. ஒவ்வொரு கட்டுரையும் 4-5 பக்கங்களே இருப்பது சுவாரஸ்யதிற்கு பக்கபலமாக இருக்கிறது.
ஒரு புத்தகத்தின் ஊடே இருள் சூழ்ந்த உலகிலும், மனித ஆழ் மனங்களிலும்l எங்கோ பொதிந்து கிடந்த சில விஷயங்களை நாம் தேடிக்கொள்ள அவர் எழுத்தென்னும் "சிறிது வெளிச்ததத்தை" கொண்டு நம்மை ரசிக்க,யோசிக்க, மீண்டும் இவ்வுலகை ஓர் மீளாய்வு செய்ய தூண்டுகிறார்..!! இருட்டறையில் தங்கம் தேடும் ஒரு சாதாரணனின் கையக குறிப்பு - சிறிது வெளிச்சம்