வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் பிறகு ஊர் திரும்பும் கால் நடைகள் மாதிரி நகர்ந்து கொண்டிருந்தன.
பரமு நாற்காலியைத் தூக்கி இன்னும் வராண்டாவின் கைப்பிடிச்சுவருக்கு அருகே போட்டுக் கொண்டான். முடிந்தவரை வானம் முழுவதும் அங்கிருந்தே பார்க்க ஆசைப்பட்டான்.
Balakumaran was born in Pazhamarneri village near Thirukattupalli in Thanjavur district in 1946. As a child, he was highly inspired by his mother, who was a Tamil scholar and a Siromani in Sanskrit, used verses of Sangam and other ancient literature to motivate him when ever he was emotionally down. This created a deep interest in Tamil literature which made literature his passion. His first stories were published in a literary magazine called ‘Ka-Sa-Da-Tha-Pa-Ra’ and for which he was also a founding member, a self-anointed militant literary journal that had been launched with a mission to blaze new trails in modernist literature.
He has also contributed to Tamil periodicals such as Kalki, Ananda Vikatan, Saavi and Kumudam. Later he became a famous Tamil writer, author of over 200 novels, 100 short stories, and dialogue/screenplay writer for over 14 films. His writings are noted for a distinct philosophical and religious tone. He is fondly called 'Ezhuthu Sithar' by his fans. He is a disciple of "Sri Yogi Ram Surath Kumar".
In his many novels he shows immense interest in enlightenment. He is considered as "Maanasiga Guru" for many individuals, who are in search of the formless almighty. His lucid but powerful expressions of man-woman relationship and human-God union is a tribute to mankind.
"நெருப்புக்குள் நெஞ்சை வைத்து நெஞ்சுக்குள் நெருப்பை வைத்து விந்தையங்கு செய்தானடி - கிளியே வேடிக்கை உலகமடி'' ஒரு சிறு பொறியாய் ஆரம்பித்து பெரு நெருப்பாய் நெஞ்சைக்கவர்ந்து விடும் எழுத்து. போதையில் இது என்ன வகை என்று புரியாத நிலையில் படித்து முடித்த பின் எழும் உணர்வு. இதுதான் பாலகுமாரன் எழுத்து. சட்டென்று விளங்கும் வகையில் பிரித்து விளக்கி உள்ளிழுக்கும் கலைக்கு சொந்தக்காரர், இந்த முறை தேர்ந்து எடுத்த களம் இயந்திரங்களின் இடையே என்றாலும், மானுடத்தை அதன் வழியே ஆராதித்து அதையும் தாண்டி கை பிடித்து அழைத்துப் போக முயல்கிறார்...
கடவுளால் எல்லா இடத்திலும் இருக்க முடியாது என்பதால் தான் தாயைப் படைத்தார் என்று சொல்வதுண்டு. ஆனால் தந்தையை மறந்து விடுகிறோம் நாம் சில சமயங்களில்.
" unsung heroes " மாதிரி ஆகிவிடுகிரார்களோ ? பல வீடுகளில் .
ஒரு குழந்தை பிறக்கும் போது தான் தாயும் பிறக்கிறாள். ஆனால் மனைவி கர்ப்பமானதுமே இளம் கணவன் தந்தை பொறுப்பை ஆசையாய் ஏற்கிறான் என்று தான் சொல்ல வேண்டும்.
அங்கே ஆரம்பிக்கிறது ஒரு தந்தையின் கடமை. தன மனைவியை குழந்தை போல் பாவித்து , பேணிப் பாதுகாத்து அவள் விருப்பங்களை நிறைவேற்றுவதில் ஆரம்பிக்கிறது அவன் கடமை.
சுமப்பதை ஒரு இன்பமகவே கருதுகிறான் . குழந்தை பிறந்த பிறகு ,தாய்க்கோ ஒரே சீராட்டலும்,கவனிப்பும் தான் ஆனால் தந்தையை யாருமே கண்டு கொள்வதில்லை. ஆனால் அதற்காக அவன் தன் கடமைகளிலிருந்து பின்வாங்குவதில்லை..
குழந்தை வளர வளர அவனுடைய பொறுப்பும் அதிகமாகிறது. சான்றோனாக்கும் கடமையை நிறைவேற்ற ஒரு அப்பா படும் கஷ்டம் இருக்கிறதே.........
LKG அப்ளிகேஷன் வாங்குவதற்கே நடு இரவில் "Queue" வில் நிற்பதில் ஆரபிக்கிறது.அங்கிருந்து ,கராத்தே கிளாஸ் ,பாட்டு கிளாஸ் , கம்ப் யுட்டர் கிளாஸ் ....... கல்லூரி ,என்று தொடரும் பணி . தாயுடன் கூடவே பயணிக்கிறான் . தன மகனின்/மகளின் வெற்றியில் .....ஆஹா.....அவன்கொள்ளும் பெருமிதம் இருக்கிறதே........சொல்லி மாளாது . மகன்/மகள் ஒரு வேளையில் அமரும் வரை தொடர்ந்து ,பின் திருமணத்தில் முடிவது போல் தோன்றும்......
இந்தப் பொருளாதாரத் தேவைகளுக்காக தன்னையே மெழுகுவத்தியாக்கும் தந்தைகள் ஹீரோக்கள் தான்.
இது தான் நான் சமீபத்தில் வாசித்த பாலகுமாரன் அவர்களின் ”தாயுமானவன்” கதைச்சுருக்கம். மனதை நெகிழ வைத்த கதை. அங்கங்கே கண்ணீர் துளியும் துளிர்த்தது….
ஒரு ஆண் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியம், அதை விட ஒரு வீட்டில் ஒரு ஆண் சம்பாதிக்க முடியாத நிலையில் அந்த வீட்டுப் பெண் சம்பாரிப்பதால் எவ்வளவு பிரச்சினைகள் என்பதை பரமு என்ற நடுத்தர மனநிலை ஆணின் மனதின் வழியாக விவரிக்கிறது 'தாயுமானவன் '
பரமு ஒரு கார் உற்பத்தி தொழிற்சாலை யில் வேலை பார்க்கும் தொழிலாளி மற்றும் தொழிற்சங்கத் தலைவன் . தொழிலாளிகளின் பிரச்சினைகளை நிர்வாகத்தோடு பேசி சுமூகமாகத் தீர்ப்பதில் வல்லவன். இதனால் இரு தரப்பினரிடமும் நல்ல பெயர் வாங்கிய புத்திசாலி. அன்பான அனுசரணை யான மனைவி, பாசத்தைப்பொழியும் மகள் , மகன். அவர்களோடு தினந்தோறும் கழியும் மாலை வேளைகள், வார இறுதி என்று இருக்கும் ஒரு நடுத்தர குடும்பஸ்தன்.
நிர்வாகத்தின் கவனக்கோளாறால் ஏற்படும் ஒரு பிரச்சினை யை சரி செய்ய அவன் எடுக்கும் ஒரு முடிவால் ஏற்படும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவனைத்தூக்கி கொண்டாடிய தொழிலாளர் களையும் நிர்வாகத்தையும் விட்டுக்கொடுக்க முடியாமல் பிரச்சினை க்கு தானே வலிய பொறுப்பேற்று வேலையை விட்டு விடுகிறான்.
அதிலிருந்து ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து அவனுக்கு பம்பாயில் வேலை கிடைத்து போகும் வரை பரமனின் நிலையிலிருந்து சொல்லியிருக்கிறார் பாலகுமாரன். பக்கத்து வீட்டு பாலியல் பிரச்சனைகள், மகள் பருவம் எய்தியிருக்கும் சூழ்நிலையில் அனைவரும் பெண்ணின் தாயை மட்டுமே தேடுவதிலிருந்து, பல்வேறு சூழ்நிலைகள் நேரில் பார்த்தது போலவே இருக்கிறது.
எத்தனை கடமைகள் ........... சுமப்பதே சுகம் என்று குடும்பத்திற்காக மெழுகாய் உருகும் தாயுமானவனாய் இருக்கும் அப்பாக்களுக்கு என் நன்றி கலந்த வணக்கம்.
தொழிற்சாலையில் நிகழும் அரசியல் மாற்றங்களால் தொழிற்சங்க தலைவன் பரமு வேலையை இழந்து வீட்டில் தாயுமாய் தந்தையுமாய் அல்லாடும் கதை. எடுத்தவுடன் இப்படி சொல்லிவிட்டானே, சோக கதையாக இருக்குமோ என்று பயந்துவிட்டீர்கள் என்றால் ஒரு நல்ல மனதுக்கு இதமான புத்தகம் படிக்கும் வாய்ப்பை இழந்து விடுவீர்கள்.
வேலையை இழந்து வாடும் பரமு அடுத்த வேலை கிடைக்கும் வரை வீட்டில் அல்லாடும் பரமுவின் பார்வையில் விரிகிறது கதை. தொழிற்சாலையில் கம்பீரமாக சிங்கம் போல் வேலை வாங்கிவிட்டு வேலை போன பின் எப்படி நாட்களை தள்ளுகிறான் என்று போகிறது கதை. தனது பெண் குழந்தை வயதுக்கு வந்ததாக பள்ளியில் இருந்து அழைப்பு வந்தபின் பள்ளிக்கு சென்றபின் அனைவரும் அம்மா எங்கே என்று கேக்க, என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பது, பக்கத்து வீட்டு பெண் உடன் ஏற்படும் பாலியல் பிரச்சனைகள், அதனை பார்த்து அவனை சந்தேகப்படும் மனைவி, அடுத்த வேலைக்கு அலைந்து திரிவது என்று நம் கண் முன்னே காட்சிகள் தத்ரூபமாக விரிகின்றன.
புத்தகத்தில் பின்வரும் பத்தி என்னை மிகவும் கவர்ந்தது. அங்க காடு மாதிரியே வளர்த்து சிங்கம், புலியெல்லாம் அவுத்து வுட்டுருக்காங்களாம். கயிறு கிடையாது. கம்பி கிடையாது.'' '' ஆனா, ஒண்ணும் வெளிய வராது. அது பாட்டுக்கு, ஓடும், ஆடும், விளையாடும். கூண்டு மாதிரி இருக்காது. ஆனா கூண்டுதான்.'' தகப்பன் இடி முழக்கமாய்ச் சிரித்தான்.
இந்த ஓட்டம் அநாவசியம். இந்த உழப்பல் அநாவசியம். நான் யாரையும் தாங்கவில்லை. எவரும் என்னைத் தாங்க வில்லை. அவரவரை அவரவர் தாங்கிக் கொண்டிருக் கிறார்கள். அது அது அதனதன் காரியத்தைச் செய்து கொண் டிருக்கிறது. இதில் எனக்கும் மற்றவர்க்கும் தொடர்பில்லை. தொடர்பிருப்பதாய் நினைத்துக் கொள்கிறேன். இயக்கம் நிரந்தரம். குமிழிகள் உந்தி ஆறு போகவில்லை. ஆறு இயக்கம்... குமிழிகள் நாம்.
Purpose of life cant be explained in much simpler way than above.
Excellent novel by Balakumaran.Must read book. After reading Udaiyar 4 Parts , I was searching for other books written by him. Thanks to 4+ Rating in Amazon .Also thanks to Amazon for making this book available in Kindle unlimited.
The story about Paramu, who had lost his job due to a decision taken by him(receive lashes from his close peers too) and had to stay at home for an year, before he gets a job in another city. This book narrates what he goes through in that one year, his mind swinging to his past and present, how his family support him, and how difficult it becomes to satisfy the regular wishes of his family.
பரமு என்கிற பரமசிவம், புதிய வேலைக்காக பம்பாய் செல்லும் இரயில் பயணத்தில் தன் வாழ்க்கையில் சமீபத்தில் நடந்த நிகழ்வுகளை எண்ணி பார்ப்பதில் இக்கதை செல்கிறது. அதாவது ஒரு கார் தொழிற்சாலையில் யூனியன் லீடராய், அசெம்பிளி போர்மனாய் இருந்த அவர் ஏன் அந்த வேலையை விட்டார், அதனால் அவரும் அவர் குடும்பமும் அனுபவித்த இன்னல்கள், தொழிற்சாலையில் பதவிக்காக நடக்கும் அரசியல் பற்றியது.
After my previous experience with 'Thozhan' by Balakumaran, I kept searching for his 'saintly' touch all through this book. In that aspect, this book failed to meet my expectation a little because I found that touch nowhere except in the last few pages. The story-line wasn't so exceptional. The ending was almost obvious. After all, you can expect every book to be a masterpiece.. :)
Very simple and interesting book about the life of a workman/labor union leader and the happenings in his small family of two children. The maturity of the characters, narrative and flow of the story made it an highly enjoyable read in Tamil !
the value of this piece of work can not be expressed in words. Must read for any family where the head of the house goes through a change of job. Highly inspiring work.