வேங்கையின் மைந்தன் புதினம் கற்பனையோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம் என்றாலும் அது நிகழும் காலக்கட்டத்தில் வாழ்ந்த வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றிச் சுழல்வதாக அமைகிறது. விஜயாலய சோழன்(கி.பி 847 - 871) பல்லவர்களும் பாண்டியர்களும் பலமாக இருந்த காலத்தில் அவர்களை வென்று சோழர்களின் பொற்கால ஆட்சியை தோற்றுவித்த பெருமைக்குரியவர். அவருடைய மகன் ஆதித்த சோழனும் பல்லவர்களையும் கொங்கு நாட்டையும் வென்று விஜயாலய சோழன் தோற்றுவித்த சோழர் பேரரசை விரிவாக்கினார். அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஆதித்த சோழனின் மகன் முதலாம் பராந்தக சோழன்(கி.பி 907 - 955) ஈழத்திலும் பாண்டிய நாட்டிலும் பெற்ற வெற்றிகளே, பிற்காலச் சோழ மன்னர்களில் புகழ்பெற்றவர்களான இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன் மற்றும் முதலாம் குலோத்துங்க சோழன் ஆகிய மூவரும் சோழ சாம்ராஜ்ஜியத்தை தென்னிந்தியாவின் முதல் பேரரசாக விரிவுபடுத்தப் பெரிதும் உதவின.
முதலாம் பராந்தக சோழன் தன்னுடைய இறப்பிற்கு முன்னால் பெற்ற வெற்றிகளையும் அதனால் விரிவடைந்த சோழ சாம்ராஜ்ஜியத்தைப் பற்றிய விவரங்களும் தெளிவாகக் கல்வெட்டுக்கள் மூலம் கிடைக்கின்றன. முதலாம் பராந்தக சோழனின் ஆட்சிக்காலத்தின் இறுதியில் மூன்றாம் கிருஷ்ணன் தலைமையிலான இராஷ்டிரகூடர்களுடனான போரில் சோழ இளவரசன் இராஜாதித்தன் தக்கோலத்தில் இறந்ததோடு மட்டுமல்லாது தொண்டை நாடும் இராஷ்டிரகூடர்கள் ஆதிக்கத்துக்குள்ளானது இதன் காரணமாக சோழர்களின் அரசின் வட எல்லை தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி அளவிலேயே நின்றது. இந்தக் காலக்கட்டத்துற்குப் பிறகான சோழ மன்னர்கள் கண்டராதித்தர், அரிஞ்சய சோழர், இரண்டாம் பராந்தக சோழர், ஆதித்த கரிகாலன், மதுராந்தக சோழர் முதலாம் இராஜராஜ சோழர், முதலாம் இராஜேந்திர சோழர் மற்றும் அவரைத் தொடர்ந்தவர்கள் ஆவர்.
முதலாம் இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்திலேயே (கி.பி. 1012), அவரது மகன் இராஜேந்திர சோழன் இணை அரசனாகப் பொறுப்பேற்றுப் பின் இரண்டு ஆண்டுகளில் பட்டத்து அரசனாக முடிசூட்டப்பட்டான். அவன் தனது ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே தன்னுடைய மகனான இராஜாதிராஜ சோழனை இளவரசனாகப் பட்டம் சூட்டி ஆட்சிப் பொறுப்புக்களை அவனுடன் பங்கிட்டுக் கொண்டான். இராஜாதிராஜ சோழன் கி.பி. 1018ல் இருந்தே தந்தையுடன் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வந்தான். ஏறக்குறைய 26 ஆண்டுகள் இருவரும் இணைந்து சோழப் பேரரசை நிர்வகித்து வந்தனர்.
முதலாம் இராஜராஜ சோழன் தொடங்கி வைத்த ஈழத்தின் மீதான படையெடுப்பை நிறைவு செய்யும் விதமாகவும், பராந்தக சோழன் காலத்திலேயே தேடப்பட்டுக் கண்டறியமுடியாமல் போன, பாண்டிய அரசர்களால் சிங்கள அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்ததாக கருதப்படும் இரத்தினக் கற்கள் பொறித்த வாளையும் முத்து மாலையையும் கண்டறியும் நோக்கோடும் ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டின் மீது கி.பி. 1018ல் மீண்டும் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பில் பெரும் வெற்றி பெற்று இராஜேந்திரன் ஈழத்தின் முக்கிய இடங்களை கைப்பற்றி[1] சிங்கள பட்டத்து அரசன், அரசி, இளவரசி ஆகியோரைச் சிறைப்படுத்திச் சோழநாட்டிற்குக் கொண்டு வந்தான். சிங்கள அரசன் ஐந்தாம் மஹிந்தா பன்னிரெண்டு ஆண்டுக்காலச் சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலேயே இறந்து போனான். இதைப்பற்றி சிங்கள சுயசரிதைக்கு ஒப்பான "மஹா வம்சமும்" கூறுகிறது.
இந்தக் காலக்கட்டத்தைத்தான் அகிலன் தன்னுடைய வேங்கையின் மைந்தன் வரலாற்றுப் புதினத்திற்கான கதைக்களமாகத் தேர்ந்தெடுத்துள்ளார். சங்க காலம் முதல் பிற்கால வரலாற்றிலும் அழியா இடத்தைப் பெற்றது கொடும்பை மாநகரம். சோழ நாட்டிலிருந்து பாண்டிய நாட்டுக்குச் செல்லும் சாலையில் இரு நாடுகளுக்கும் எல்லை வகுத்து விட்டு இடையில் வளர்ந்த சிற்றசர் நகரம் அது. காலங்காலமாக அதை ஆண்டுவந்த வேளிர்கள் தம் வீரத்துக்குப் பேர் போனவர்கள். பிற்காலச் சோழர்களுடன் நெருக்கமான மண உறவு கொண்டிருந்த குலம் அது. முதலாம் இராஜராஜனின் மனைவியும் இராஜேந்திர சோழனின் தாயுமான வானவன்மாதேவி கொடும்பாளூர்க் குலப்பெண். இக்கதையின் நாயகன் இளங்கோ கொடும்பாளூர் குலத்தோன்றல். இராஜேந்திரன் பாண்டிய நாட்டு முடியை ஈழத்திலிருந்து மீட்டு வந்த நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு அதற்கு முன்னும் பின்னுமாக இப்புதினத்தின் கதை பின்னப்பட்டுள்ளது.
Akilan (Tamil: அகிலன்) was a Tamil author noted for his realistic and creative writing style. Akilan was a freedom fighter, novelist, short-story writer, journalist, satirist, travel writer, playwright, script-writer, orator and critic.He is also a children's novelist.
Early life
Akilan was the pen name of Akilandam, who was born on 27 June at Perungalore . He spent his childhood in a small hamlet called Perungalore near Pudukottai. His father Vaithiya Lingam Pillai was an accounts officer and adored his only son Akilan very much. Unfortunately, the boy lost his loving father at an early age. But his mother Amirthammal was a loving person, and being a creative person herself, she moulded her son into a writer. The author was attracted by Gandhian philosophy during his school days and he discontinued his college education at Pudukotai to join the freedom struggle. Later, after Indian independence, he joined the Railway Mail Service, after which he joined the AIR (All India Radio) and became a full fledged writer. His stories began to appear mostly in small magazines.
Awards won
In 1975 the novel Chitra pavai (சித்திர பாவை) won the prestigious Jnanpith Award.[1] This work of his has been translated in all Indian languages.In 1963 his historical novel Vengayin Mainthan (வேங்கையின் மைந்தன்) was awarded by Sahithya academy of Govt of India. Engepogirome a peculiar socio-political novel of his, won the Raja sir annamalai award in 1975. His children's book Kanana kannan won the special prize given by Tamil Nadu educational department. The author has written about 45 titles, most of which have been translated in all Indian state languages. Apart from this his works has been translated in other foreign languages such as English, German, Czech, Russian, Polish, Chinese, and Malay.
Historical novels
Vengayin maindan This is one of the famous works of Akilan, read by thousands and thousands of Tamilian's all over the globe. This historical fiction captures the history of chola dynasty. This book was dramatized by Late.Mr.Shivaji Ganesan on stage and was a huge hit.
In this novel, Akilan gives insight about the life and achievement of the great Rajendra Chola who was a Vengaiyin Maindhan to the rest of the world.[1] RajendraCholan is the son of Rajaraja Cholan and his period can be referred as the height of Tamil empire in art, literature and administration. He captured many countries including Indonesia (Kadaaram), Sri Lanka, Malaysia, southern and eastern coastal parts of India. He lived around 1010 AD and his dynasty had many business relationships with foreign countries. This novel depicts his victory over Kadaaram and the building of new city Gangaikonda Cholapuram upon his victory over northern part of India. The newly built temple and the city internally had so many architectural designs for war-time and peace activities. Along conquering the nations, Ilango Vel conquered the hearts of beautiful girls Arulmozhi and Rohini. Their love and affection was depicted in simple yet powerful words by Akilan. Vandhiya Thevan appears in this novel as an elderly counselor, who guides Rajendra Cholan in war and administration. Because of the narration and depiction of historic facts during Chola period using proper language there is no wonder this novel received the Sakithya Academy Award from Government of India. (Sakithya Academy award winning novel) Chola's historical novel Kayalvizhi. Tamil Nadu government award - Pandiya's historical novel-Akilan's Kayalvizhi is a gripping saga set in the Pandiya kingdom background.-Filmed by M.G.R as Madurai meeta sundarapandian. Vetrithirunagar- ( historical novel based on Vijayanagara Empire
Social novels
Chitrai Pavai. A contemporary social novel written by Akilan, who vividly brings Annamalai’s character to our eyes. The hero Annamalai’s calm and dreamy nature surely takes our mind. The ending of this novel was highly appreciated on those days and its simply the best.- Mr.
Really nice work which portrays the life of Emperor Rajendra Chola... In the last page, the author Akilan will be thinking of the olden times of how our ancestors lived, how good their way of life was, how much proud they were having in themselves as a Tamil, how much they patronized art and literature, how many magnificient temples they built, how cruel they were to their enemies, how strong they were in wars and so and so... But when he thinks about the present situation of Tamilakam he says two drops of tears comes to his eyes... It's the same for every artistic readers - no wonder it got Sahitya Academy award...
புத்தகம் : வேங்கையின் மைந்தன் எழுத்தாளர் : அகிலன் பதிப்பகம் : தாகம் பக்கங்கள் : 800
🔆சோழப் பேரரசின் ஒப்பற்ற அரசரான ராஜராஜ சோழனின் பெருமைகளையும் சிறப்புகளையும் நாம் அறிந்ததே .புலிக்குப் பிறந்தது பூனை யாகுமா என்ற கூற்றின்ப் படி அவரது மகன் இராஜேந்திர சோழன் , வடக்கே கங்கையிலும் , தெற்கே கடாரத்தைக் கடந்தும் புலிக்கொடியை நாட்டினார் .
🔆அவ்விரண்டு விடயங்களுக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் , எதிர்க்கொண்ட சவால்கள் , அனைத்தையும் இந்தப் புத்தகம் கூறுகிறது . அதுவரை சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக விளங்கியது தஞ்சை . இராஜேந்திர சோழர் அவர்கள் , தனது கனவு நகரமான கங்கை கொண்ட சோழபுரத்தை கட்ட தீர்மானித்தது , நேர்த்தியான அதன் வடிவமைப்பு போன்ற விடயங்களை இந்த புத்தகம் வாயிலாக தெரிந்துக் கொள்ளலாம் . (முழுமையான தகவல்களை அறிந்துக் கொள்ள - பாலகுமாரன் எழுதிய கங்கை கொண்ட சோழன் புத்தகத்தை வாசிக்க வேண்டும் .)
🔆அரண்மனைப் பெண்கள் கனவு கண்டால் என்னவாகும் , அவர்கள் கண்ணீர் சிந்தினால் என்னவாகும் என்பதை நிருபிக்க இரு பெண்கள் – சோழ இளவரசி : அருண்மொழி மற்றும் ரோகணத்து இளவரசி : ரோகினி . சில இடங்களில் அவர்கள் செய்வது நமக்கு கோவத்தை ஏற்படுத்தினாலும் , இராஜேந்திரரும் இளங்கோவும் நாடுகளை வென்றது போல இந்த இரு பெண்களும் நமது மனங்களை வென்று விட்டார்கள் .
🔆வேங்கையின் மைந்தன் – நல்ல வாசிப்பு அனுபவமாக அமைந்தது .
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
ராஜேந்திர சோழரின் ஈழப்படையெடுப்பையும் அதனையடுத்து தமிழகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்ட இந் நாவல் ராஜேந்திர சோழரின் புகழைப் பறைசாற்றும் கங்கை கொண்ட சோழேஸ்வரம் கோவில் நிர்மாணம், வங்காள மன்னர்களை புறமுதுகிடச் செய்து கங்கை நீரை எடுத்து வந்தமை, கடார வெற்றி பற்றியும் சுருக்கமாக குறிப்பிடுகின்றது.சக்கரவர்த்தி ராஜேந்திர சோழர், கடமை வெறிக்கும் காதலுக்கும் மத்தியில் தத்தளிக்கும் நாயகன் இளங்கோவேள், இளங்கோ மீதான காதலாலும் தம்பி காசிபன் மீதான பாசத்தாலும் இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கும் ரோகிணி, நிதானமும் புத்திசாலித்தனமும் குறும்புத்தனமும் உடைய வல்லவரையர், இளங்கோவின் மீதான காதலை வெளிப்படுத்தாமல் அவனையே எண்ணி ஏங்கும் அருள்மொழி, கடமையுணர்வும் கோபமும் மிக்க பெரிய வேளார், கோழைத்தனத்தினதும் தந்திரத்தினதும் கலவையான மகிந்தர், தந்திரசாலியான அவர் அமைச்சர் கீர்த்தி என முக்கிய பாத்திரங்கள் சிறப்புற படைக்கப்பட்டிருந்தாலும் இளங்கோ- ரோகிணி காதல், அருள்மொழி - ரோகிணிக்கிடையேயான பாசப்பிணைப்பு சில இடங்களில் மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றியது. கதையோட்டம் வாசகர்களுக்கு சலிப்பூட்டாத வகையில் சீரான வேகத்தில் நகர்ந்தாலும் சுவாரஸ்யத்தை அதிகரிக்கக் கூடிய திருப்பங்கள் அதிகமில்லாமை, ஊகிக்கக்கூடிய கிளைமாக்ஸ், நீண்ட வர்ணனைகள் மற்றும் விவரிப்புகள், சுவாரஸ்யமற்ற போர் வர்ணனை விடயங்கள் காரணமாக சராசரியானதாகவே தோன்றியது.
My first attempt at an historical novel. I've been avoiding these for quite a long time but on an impulse decided on trying out one for a change. I was truly inspired by the weaving of characters and the narration of the different incidents. Akilan has indeed written a masterpiece. The only thing I feel which could have been better is the characterisation of Rohini. Numerous times she puts Ilango in trouble and feels it could be corrected by asking for forgiveness.
The story not worth for Shakitya academy award at all... All the characters are the flat ones and the story not evolves much about king Rajendran as title of the book was promised...
நாவலுடன் ஒரு நல்ல பயணம். நடுவில் நாவல் கொஞ்சம் சினிமாத்தனமானது என்று நினைத்தேன், க்ளைமாக்ஸை நானாக யுகித்தேன் (என்ன யுகுத்தேன் என்று ஸ்பாய்லர் காரணமாக சொல்ல முடியாது) ஆனால் உண்மையான க்ளைமாக்ஸ் வித்தியாசமாக இருந்தது. புத்தகம் மூன்று பகுதிகளைக் கொண்டது. பகுதி 1 நன்றாகவும் வேகமாகவும் இருந்தது, பாகம் 2 இன் முதல் பாதி நன்றாக இருந்தது ஆனால் இரண்டாம் பாதி இழுபறியாக இருந்தது. 3வது பாகத்தின் முதல் பாதி வரை இழுத்தடிப்பு தொடர்ந்தது ஆனால் க்ளைமாக்ஸ் சிறப்பாக இருந்தது. மொத்தத்தில் நாவலை ஒரு முறையாவது படிப்பது நல்லது.
வேங்கையின் மைந்தன்... இந்திய அரசால் 1963 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது இந்த நாவலுக்காகத் திரு அகிலன் அவர்களுக்கு 15 மார்ச் 1964யில் புதுத் தில்லியில் வழங்கப்பட்டது. கதைக்களம் முழுவதும் சோழப்பேரரசை மையமாக வைத்துப் புனையப்பட்டது.
இந்த வரலாற்றுப் புதினத்தை நாம் படிக்கும் போது நம் உடம்பு முழுவதும் சிலிர்க்கும், அந்தளவுக்கு எழுத்தாளர்த் தன் கற்பனைத் திறனைக் கலைநயத்தோடு மற்றும் உணர்ச்சிப் பொங்க அவரது எழுத்துக்களால் பிரதிபலித்திருப்பார்.
மாமன்னர் இராஜராஜச் சோழர் வீரத்தில் வேங்கையாகவும், அரசியலில் பெருந்தன்மையால் சிங்கமாகவும் விழுங்கியவர். வேங்கையின் மைந்தன் இராஜேந்திரரோ சளைத்தவரல்லத் தம் தந்தை அமைத்துக் கொடுத்த வழித்தடத்தில் நடைபோட்டவர்.
வரலாற்றைப் பார்க்கும் போது இராஜேந்திரன் தன் தந்தையிடம் இருத்து ஆட்சிப் பொறுப்பு பெற்ற காலத்தில் அவருக்குச் சுமார் ஐம்பது வயது இருக்கும்.
இப்போது நாம் கதைக்குள் வருவோம்.. சோழப்பேரரசு, மூன்று முறைப் படையெடுத்தும் நமது தமிழ் முடியை மீட்டெடுப்பதற்காக எடுத்த முயற்சியில் தோல்வியைச் சந்தித்தது. ஈழத்து மன்னர்கள் தங்களிடம் இருக்கும் தமிழ் மணிமுடியைத் தர மறுத்து ரோகணத்துக் காடுகளில் ஓடிப்போய்ப் புகுந்துகொள்வார்கள் இதனாலேயே சோழப் பேரரசுத் தமிழ் மணிமுடியைத் திரும்பிப் பெறமுடியவில்லை.
காலம் செல்லச் செல்ல இராஜேந்திரர்த் தனது படைகளை எப்படித் தயார்ப் படுத்தினார் என்பதை அழகாக உணர்ச்சிப் பொங்க உரைத்திருப்பார் எழுத்தாளர் அகிலன் அவர்கள்.
இராஜேந்திரருக்கு நம்பிக்கையுடைய நபராக வ��ளங்கியவன் வீரன் இளங்கோவேள். நமது கதையின் நாயகன். யார் இந்த இளங்கோவேள் கொடும்பாளூர் இளவரசன். கொடும்பாளூர்ச் சிறிய வேளாரின் இரத்தம். மதுராந்தக வேளாரின் மகன்.
மதுராந்தக வேளார் மாமன்னர் இராஜந்திரருக்கு உறவு முறையாகும். அரசர்க் கூறும் செயல்களைச் செய்து முடிப்பவர்.
வல்லவரையர் வந்துயத்தேவர்; மன்னருக்கு வலது கரமாக விளங்கியவர் ராஜேந்திரச் சோழருக்குச் சாமந்த நாயகர் மற்றும் நமது நாயகன் இளங்கோவுக்குப் போர்ப் பயிற்சி மற்றும் அனைத்து நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தவர்.
வீரமல்லன்; இளங்கோவோட நெருங்கிய நண்பன், அவர்கள் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள் இளங்கோவுக்குப் பக்கபலமாக வீரமல்லன் திகழ்ந்தான் ஆரம்பக் காலகட்டத்தில், பிறகு ஏன் அவன் எதிரியா மாறினான். நாவலைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
படிக்கப் படிக்கச் சுவாரசியம் அதிகமாகுமே தவிரக் கட்டாயம் குறையாதவாறு எழுத்தாளர்க் கவனித்துக் கையாண்டிருப்பார்க் கதை முழுவதும்.
அருள்மொழி நங்கை; யார் இவர் இராஜேந்திரரின் மூத்த மகள். இவர் இளங்கோ மீது ஒரு தலையாக் காதல் வாய்ப்பட்டு இளங்கோவிடம் பேசும் சொற்கள் அனைத்தும் கலைநயத்துடன் கூறியிருப்பார் எழுத்தாளர். ஒரு வகையில் பார்த்தால் அருள்மொழி நங்கை இளங்கோவுக்குப் போருக்குப் போகும் முன் ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து அனுப்பியவள்.
கடல் மார்க்கமாக இராஜேந்திரர் இளங்கோ, வல்லவரையர் வந்துயத்தேவர் மற்றும் சோழப்பேர்ரசுத் தன் வீரர்கள் அனைவரையும் எப்படிக் கப்பல் மற்றும் படகுகளில் கூட்டிச்சென்றார் என்பதை எடுத்துரைத்திருப்பார் எழுத்தாளர்
ஈழத்தில் படகுகள் வந்து சேர்ந்தவுடன் ரோகணத்து மலைகளையும், காடுகளையும்; வர்ணித்திருப்பார்ப் பாருங்கள். நாம் அந்தக் காடுகளில் மற்றும் மலைகளில் சுற்றித்திரியும் போன்று ஒரு வகையான எண்ணத்தை யதார்த்தமாகக் கண் முன் கொண்டுவந்திருப்பார் எழுத்தாளர்த் திரு அகிலன்.
கதையின் நாயகி ரோகிணி, இவர் ஈழத்து மன்னரின் மகள். இளங்கோ, ரோகிணி முதல் சந்திப்புத் துடங்கி அவர்கள் எப்படிக் காதல் வயப்பட்டனர் என்பதை நளினமாக ரசிக்கதக்கவகையில் ஒவ்வோர் இடங்களிலும் எடுத்துச் சொல்லியிருப்பார்.
ஈழத்துப் போரில் இளங்கோவுக்கு வெற்றிக் கிட்டியதா? அவன் எப்பேர்ப்பட்ட போராட்டங்களைச் சந்தித்தான் மற்றும் மணிமுடியை ரோகணத்துக் காடுகளிலிருந்து மீட்டுச் சோழப் பேரரசரிடம் ஒப்படைக்கிறானா? அருள்மொழி நங்கை, ரோகிணி, இளங்கோ அவர்களுக்கு என்ன நடந்தது? இவர்கள் இனைந்தார்களா? என்பது தான் இந்த நாவல். எழுத்தாளரின் எழுத்து உணர்ச்சிப்பூர்வமாக வெளிவந்திருக்கும். அவர் எளிய உரைநடை அனைவரையும் கவரும் அதற்கு மாற்றுக் கருத்தே கிடையாது. பாலமுருகன்.லோ
I am not sure if my expectations are too high when I read Tamil historical fiction books since my tryst with this genre started with Kalki's classics. Having said that, I bought this book to know more about the expeditions / conquest of Rajendra Chola I since he was overshadowed by his father's greatness in history irrespective of his far greater achievements. The book's failure didn't end with not explaining that but also on keeping the readers engaged with the story too. Even with all these flaws, it is a good read since we don't have many books on this genre in Tamil.
Thanks to akilan for this book and his experiments. Really awesome book..story about rajendrar who is son of rajarajar... All characters are good. Akilan's writing is awesome. Such a nice book.
Akilan is one of the finest authors. I am already a fan of Kayalvizhi...and now this book is one of my favourite 🥳
This story depicts the bravery and rule of the great Rajendra Cholan. He is the ‘Vengayin Mainthan’ mentioned in this book. After reading this book I badly wanted to go to Gangai Konda Chola puram 🥰
The hero of this story is Ilango, the Kodumbalur prince. Though this book is about the war which Rajendra Chola fought at that time, the hero’s triangular love story plays a major role in the plot.
My favourite character is Arulmozhi...the Chola princess 👸🏻. Her straight forward and clear cut attitude and love for Ilango will definitely capture our hearts 💕
Though the author has given a happy ending, I am not satisfied with the ending for the love stories 😕
Anyway...you would love this book if you would like to know more about Rajendra Cholan, the wars he fought and the new capital he established for his empire 💐
முழுக்க முழுக்க வரலாறு தழுவியதோர் காதல் கதை. பொதுவாக கல்கி விட்டு சென்ற ஏனைய கதாபாத்திரங்கள், மற்ற ஆசிரியர்களின் கதைக்களத்திற்கான நாயகனாக மாறியதில் பெரிய ஆச்சர்யம் இல்லை. கடம்பூர் இளவரசன் கந்தமாறனை நாயகனாக வைத்து அனுஷா வெங்கடேஷ் எழுதிய காவிரி மைந்தன் போல இதில் கொடும்பாளூர் இளவரசன் இளங்கோ தான் நாயகன். இரண்டிலும் சில விஷயங்கள் பொதுவாக இருந்தாலும், அகிலனின் வேங்கையின் மைந்தன் முழுமையான வரலாற்று காதல் சரித்திரம்.
இரண்டிலும் பொதுவான விஷயம், பாண்டியர்களின் சந்திரகாசமும் மணிமுடியும் தான். அதை இலங்கை அரசனிடம் கைப்பற்ற நடைபெறும் கற்பனை நிகழ்வுகள் முக்கியாக பாகங்களாக வருகின்றன. எது உண்மை என்பதை காலம் தான் அறியும்.
ராஜேந்திர சோழன், கொடும்பாளூர் பெரிய வேளார், வந்தியத்தேவர், முத்தரையர் வம்சத்தை சேர்ந்த பெரும்பிடுகு முத்தரையர், ஈராயிரம் பல்லவராயன் மற்றும் வீரமல்லன், ராஜேந்திரரின் மகள் அருள்மொழி, அம்மங்கை தேவி, வேங்கி இளவரசன் நரேந்திரன், மாங்குடி மாறன், இலங்கை அரசர் மகிந்தர், அவர் மகள் ரோகினி, பாண்டிய மன்னர் சுந்தர பாண்டியன் மற்றும் பல முக்கியமான கதாபாத்திரங்களோடு அமைந்த ஒரு காதல் கதை.
இலங்கை போரில் ஆரம்பித்த இளங்கோ மற்றும் ரோகினியின் காதல், கதையின் இறுதிவரையில் தொடர்ந்து, கடைசியில் வெற்றி பெறுகிறதா இல்லையா என்பதே கதை.
முக்கியமான நிகழ்வுகளில் கூட காதல் காட்சிகளையே மையப்படுத்தி எழுதியிருப்பதால் சில இடங்களில் சலிப்பை தரும். ஆனாலும் படிப்பதில் சோர்வில்லாமல் படிக்கலாம்.
Vengayin Maindhan predominantly revolves around the life of a character Elango, the prince of Kodambalur. it does cover the conquest of Eelam and the birth of cholapuram. But if you are looking to read the story of Rajendra Cholan, well this will be a brief book on his various acheivements.But as the author himself said in the prologue, this will be a story of a young character Elango,and his life in the reign of Rajendra Cholan, but the book manages patronising Rajendra Cholan in every possible way. The author has been really poetic at times and tried to rope in vivid scenes to keep the readers engaged. However the story does'nt seem to be deep enough, especially towards the end. It was like bringing in a simple play to end the story. The end was quiet abrupt in my opinion.
The best historical novel with the plot in Rajendra Chola's reign marvelled me the most.
The depiction of Thennavan ElangoVel of Velir clan is the best hero ever. The bravery and love of this character takes us to some extreme pride of cholas and their dedication towards the chola kingdom.
The story took place in Eelam is great with the brave acts of Elango. The usage of historical figure Vandhiyathevar is thought provoking.
1961ஆவது வருடமே இந்த நாவலின் முதல் பதிப்பு வெளியாகியுள்ளது. 1964 ஆம் ஆண்டு இந்த நூல் சாகித்ய அகாதமி விருதையும் பெற்றுள்ளது.
பொன்னியின் செல்வன் நாவல் சுந்தர சோழரையும் அவரது மகன்களாகிய ஆதித்த கரிகாலனையும், இராஜராஜ சோழனையும் அந்த அரியணையில் யார் ஏறப்போகிறார் என்பதையும் சுற்றி கதை நடக்கும். இந்த நாவல் இராஜராஜ சோழனின் மைந்தனாகிய இராஜேந்திரரின் ஆட்சியை பற்றியும், காலம் காலமாக அவர்கள் திரும்பி கொண்டு வர நினைத்த இலங்கையில் உள்ள மணிமுடிக்கான போராகவும் தான் இந்த நாவல் இருக்கிறது.
கொடும்பாளூர் என்கிற சிற்றரசின் இளவரசனான இளங்கோவேளும், வீரமல்ல முத்தரையனும் மலைகளில் பயணிப்பது போல கதை தொடங்குகிறது. சோழர்களின் மணிமுடியை நட்பு முறையில் கேட்டும் கூட இலங்கை மன்னர் தராததால் போர் தொடுக்க ஆயத்தமாயினர் சோழர்கள். யார் இலங்கைக்கு படையை வழி நடத்தி சென்றார்? மணிமுடி கிடைத்ததா? அதன் பிறகு என்ன நடந்தது என்பதே இந்த நாவல்.
ஒவ்வொரு கதாப்பாத்திரமும் மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருந்தது. பொன்னியின் செல்வனுக்கு சற்றும் குறைவில்லாத கதையையும் எழுத்தையும் கையாண்டிருக்கிறார் எழுத்தாளர் அகிலன் அவர்கள்.
வந்தியத்தேவருக்கும் இளங்கோவுக்கும் நடக்கும் கலந்துரையாடல்கள் வேடிக்கை. அருள்மொழிக்கு இளங்கோ மீதான அன்பு, ரோகிணி மீது இளங்கோவின் காதல் என காதலையும் மனித மனதையும் அருமையாக கையாண்டிருக்கிறார் அகிலன். இலங்கையில் நடக்கும் காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்தன. இலங்கையில் இருந்து திரும்பி வரும் போது சோழர்களின் படைகளை அவர் விவரித்தது மிகச் சிறப்பு.
வீரமல்லனிடம் ஏற்படும் மாற்றம், ரோகிணியின் திடீர் திடீர் மாற்றங்கள், பாண்டிய மன்னன், மகிந்தர், காசிபனின் சூழ்ச்சியென இந்தக் கதை பரப்பரப்பாக செல்கிறது. கங்கைக் கொண்ட சோழபுரத்தின் உருவாக்கம், கங்கை நீரைக் கொண்டு வரும் காரணம், ஏரியில் கட்டப்பட்டிருக்கும் மண்டபம், இறுதியில் வீரமல்லன், ரோகிணி, அருள்மொழியின் செயல்கள் என அனைத்தும் மனதில் நிற்கும் காட்சிகள்.இந்தக் கதையை எப்படி முடிக்க முடியும், எப்படி முடிக்கப்போகிறார் என்று மிகவும் ஆர்வமாக காத்திருந்து வாசித்து முடித்தேன். மிகச் சிறப்பான முடிவைக் கொடுத்திருந்தார் அகிலன். எப்போதுமே வரலாற்று நாவல்கள் என்பது சிறப்பான அனுபவத்தை தரக்கூடியது. அந்த வகையில் இந்த நாவல் அனைவரும் ஒரு முறையாவது இந்த நாவலை வாசிக்க வேண்டும். இந்த நாவலை அறிமுகப்படுத்திய அண்ணண் சேரன் செங்குட்டுவனுக்கு எனது நன்றிகள் ❤️ 🙏.
_____________________ Subscribe: https://www.youtube.com/novelreview Website : https://reviewnovels.wordpress.com/ Novel Review: Tamil's first Book Tube channel. Find summary, information & review of books in Tamil. தமிழின் முதல் Book Tube channel, Novel Review. One of the best booktube in Tamil.
great plot actually with a lot of twists and turns. i loved how the extremely well written romance formed the main plot of the story and brought it forward beautifully. but the parts where sir akilan describes the achievements of chakravarthi rajendra is abit overblown and could be more realistically written
கொடும்பாளூர் இளவரசர் இளங்கோவின் வீரத்தை கொண்டாடும் நூல் . கங்கை கொண்ட சோழபுரம் கோவிலை எலும்பிய இராஜேந்திரர் போர் நுட்பங்களை கூறும் நூல்.. காதல் போர் வீரம் துரோகம் என கதைகளம் பொன்னியின் செல்வன் புத்தகத்தை நினைவுட்டுகிறது
The worst thamizh book I've read so far and one of the worst books I've ever read. The standards of Sahitya Akademi must be pretty low to confer an award on a work like this. If you love historical novels and thamizh history in particular, please do not read this novel.
The book that caught me hooked up to Tamil story books. There is something special reading the exploits of bravery, betrayal, love and culture in one’s own mother tongue.