தி.ஜானகிராமன் கணையாழி இதழில் தொடராக எழுதி, அவரது மறைவுக்குப் பின்னர் நூல் வடிவம் பெற்ற நாவல் ‘நளபாகம்.’ அவரது நாவல்களில் மையப் பொருளை அவ்வளவு வெளிப்படையாக உணர்த்தாத நாவலும் இதுவே. இந்தப் பூடகமே நாவலை இன்றும் சுவாரசியமான வாசிப்புக்கு உரியதாக நிலைநிறுத்துகிறது. சுவீகாரப் பிள்ளைகள் வாயிலாகவே தொடரும் தனது குடும்ப பாரம்பரியத்தை ரத்த உறவு மூலம் வலுப்படுத்த ரங்கமணி மேற்கொள்ளும் அபாயகரமான செயலே நாவலின் மையம். பச்சாத்தாபம், காமம், ஆன்மீகம் ஆகிய மூன்றின் கலவையான வண்ணத்தில் மிளிர்கிறது இந்தப் படைப்பு.
Thi . Janakiraman (also known as Thi Jaa, or T. Janakiraman ) is one of the major figures of 20th century Tamil fiction. He worked as a civil servant. His writing included accounts of his travels in Japan and the Crimea.
His best-known novel is Mogamul (Thorn of Desire), in which feminine emotions are explored with a story spun around delicate feelings. His short stories such as "Langdadevi" (a lame horse) and "Mulmudi" (Crown of Thorns) follow the same style. Thi Jaa wrote about one hundred short stories and a dozen novels. Two of his novels, Amma Vandhaal and Marappasu, were translated into English as "Sins of Appu's Mother" and "Wooden Cow" respectively. In 1979, he was awarded the Sahitya Akademi Award for Tamil for his short story collection Sakthi Vaidhiyam. Some of his other notable works are Malar Manjam, Uyirthen and Sembaruthi.
'அம்மா வந்தாள்' என்ற ஒரு புத்தகம். அது படிக்கிறபோது அதன் பொருள் பெரிதாக விளங்கவில்லை என்றாலும் அந்த எழுத்தாளரின் துணிச்சலை கண்டு வியப்படைந்தேன். வருடங்களுக்கு பிறகு You Tube -இல் பாவா செல்லதுரையின் பெருங்கதையாடலில் இந்த கதையை அவர் வாயால் கேட்க நேர்ந்தேன். பிரம்மித்துவிட்டேன். நான் வாசித்த பொது அதை புரிந்து கொள்ளும் பக்குவம் என்னிடம் இருக்கவில்லை போலும். அப்பொழுது தான் 'நளபாகம்' என்ற இந்த புத்தகத்தை பற்றி நினைத்தேன். சென்ற மாதம் வாங்கியது. அதே எழுத்தாளரின் படைப்பு. அதை வாசிக்க முடிவு செய்தேன்.
நர்மதா நதியை கடக்கும் யாத்ரா ஸ்பெஷல் ரயிலில் ஆரம்பமாகிறது இந்த புதினம். ரங்கமணி இந்த ரயிலில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்க வருகிறார். தனது குடும்பம் வழி வழியாக சுவீகார பிள்ளைகளால் தான் தொடர்கிறது என்ற ஒரு கவலை அவர்களுக்கு. சுவீகார பிள்ளையான தனது மகனுக்கும் மருமகளுக்கும் குழந்தைகள் இல்லை. அதனால் இந்த தலைமுறையும் சுவீகாரத்திற்கு தான் போகவேண்டும் என்ற அச்சம். யாத்திரையின் போது அவர் சந்திக்கும் ஜோதிடரிடம் இதை பற்றி கேட்கிறார். உங்கள் மகனுக்கு சந்தான பாக்கியம் இல்லை ஆனால் மருமகளுக்கு அந்த பாக்கியம் உண்டு என்று சொல்லி ரெங்கமணியை பதற வைக்கிறார். யாத்ரா ரயிலில் சமையல் வேலைகளை மேற்ப்பார்வை செயகிறவர் காமேசுவரன். நல்ல பக்திமான் அதை விட மிக நல்ல ஒரு மனிதன். அவனை பிடித்து போக; ரங்கமணி தன்னுடைய வீட்டிற்கு வந்து தங்கி விட சொல்கிறாள். காமேசுவரனும் ஒத்துக்கொள்கிறேன். ரங்கமணியின் ஊரான நல்லூருக்கு அவன் போன பிறகு என்ன நடக்கின்றது, புது வாழ்க்கை அவனுக்கு எப்படி அமைகிறது, என்னவெல்லாம் மாற்றம் கொண்டு வருகிறது, மருமகள் பங்கஜத்துக்கு குழந்தை பிறக்கிறதா என்பதை சொல்வதே 'நளபாகம்'.
என்னை முதலில் கவர்ந்தது ஜானகிராமன் அவர்களுடைய எழுத்து நடை. ரயில் நர்மதா நதியின் மேல் பிரயாணம் செயகிறபோதும் சரி, காமேசுவரன் நல்லூரில் சுற்றி திரியும் தருணங்களிலும் சரி காட்சிகளை அப்படி நம் கண் முன்னாள் நிற்க வைக்கிறார். எதோ நானே நல்லூருக்கு போய்விட்ட ஒரு உணர்வு. இந்த கதை எழுதப்பட்ட காலகட்டத்தை வைத்து பார்த்தால்; 'அம்மா வந்தாள்' புதினத்தை போலவே இப்புத்தகமும் மிகவும் துணிச்சலாக எழுதியிருக்கிறார் ஜானகிராமன். பெண்களின் மனதை பற்றியும் அவளின் எண்ணங்களை பற்றியும் மிக அழகாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்கிறார் தி.ஜா. அதுவும் அவர்களில் உண்டாகும் தாபங்களும், இச்சைகளும், வெறுப்புகளும் எல்லாமே மறையேதுமின்றி காட்டியிருக்கிறார். காசநோயால் அவதி படும் ஒருத்தனை மனக்கவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படும் ரங்கமணியின் நினைவுகள் கொஞ்சமே சொல்லப்பட்டிருந்தாலும் அதில் எத்தனையோ அர்த்தங்கள் உண்மைகள். தனக்குள் இருக்கும் ஆசையால் கணவனை கட்டி பிடிக்க கூட முடியாத நிலைமை. நான் கட்டிப்பிடித்தால் ஒடிந்து விடுவாரோ என்ற நினைப்பு இருந்தாலும் அவளையும் மீறி எழும் தாபமானது அவளை கட்டி அணைக்க வைக்கும். ஆனால் நோயாளியான புருஷனால் அந்த அணைப்பை கூட தாங்க முடியவில்லை. இதை சர்வ சாதாரணமாக ஆனால் ஆழமாக சொல்லியிருப்பார் தி.ஜா.
அதை போல தான் பங்கஜம் என்ற மருமகளின் பாத்திரமும் அழகாய் சொல்ல பட்டிருக்கிறது. காமேசுவரன் அவர்கள் நிலையை கண்டு பரிதாப படுகிறான், கவலைப்படுகிறான், கோபம் கொள்கிறான். நாமும் கூட. பெண் என்ன உணர்ச்சி அற்ற ஒரு மரக்கட்டையா; இல்லை கூடத்தை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டிய ஒரு ஜீவனா என்று நாமும் சேர்ந்து சினம் கொள்கிறோம். காமேசுவரனை எழுதியிருக்கும் விதம் அழகு. அவன் வாயிலாக அவனுடன் நமது பார்வையும் விகசிக்கிறது. ரங்கமணியின் மகனாக வரும் துரை மிகவும் வித்தியாசமாக சித்திரிக்கப்பட்டிருக்கிறான். கணவன் மனைவி இடையே இருக்கும் புரிதலை அழகாக சொல்லியிருக்கிறார் தி.ஜா. துரை மற்றும் பங்கஜம் இடையில் நடக்கும் சம்பாஷணைகளின் வாயிலாக. இதனை நாட்கள் திருமணமாகியும் இரண்டு பேருக்கும் இடையே புரிதல் இல்லை என்பது இரண்டு பெரும் உணரும் இடம் அருமை. அதை தாண்டி வந்த பிறகு அவர்களின் இடையே இருக்கும் அன்யோன்யம் அழகு. காமேசுவரன் மற்றும் அவன் தந்தை இடையிலான உறவை சில பக்கங்களில் அடக்கினாலும் அதின் தாக்கம் நம்மில் கதை முழுதும் தொடரும். அவனை வளர்த்த வத்சன், நண்பர்கள் இளங்கண்ணன் மற்றும் ஜகது, முத்துசாமி, நாயுடு, தேவாரம் ஐயங்கார் பாத்திரங்கள் கொஞ்சம் நேரமே வந்தாலும் நம் சிந்தனைகளில் வெகு நேரம் நிற்கின்றனர். அதிலும் காமேசுவரன் மற்றும் தேவாரம் ஐயங்கார் இடையே நடக்கும் சம்பாஷணை ஒன்று இடம் பெறுகிறது. சில பக்கங்கள் தான் இருந்து எத்தனை அர்த்தங்கள், சூட்சமங்கள்.
தமிழ் இலக்கியத்தில் ஜெயகாந்தனுக்கென்று ஒரு தனி இடம் உள்ளது. எதையும் சொல்லும் தைரியமும் துணிவும் உள்ள மனிதன். கன்னத்தில் அறைவது போல் நமக்குள் சிந்தனைகளை திணிக்கிறவர். அவரின் அந்த தைரியமும் தாக்கமும் நான் கண்ட இன்னொரு எழுத்தாளர் தி.ஜானகிராமன். முதலில் நான் சொன்னது போல அந்த காலகட்டத்தில் இப்படி எழுதுவது என்பது அரிது. இந்த வெளிப்படைத்தன்மையும் தைரியமும் தீர்க்கமான தெளிவான பார்வையும் என்னை என்றும் தி.ஜா வின் ஒரு பெரிய விசிறி ஆக்கியது. கண்டிப்பாக எல்லோராலும் படிக்க படவேண்டிய ஒரு புதினம்; ஒரு எழுத்தாளர்.
அம்மா வந்தாள், மோகமுள் ஆகிய புத்தகங்கள் படித்த பிறகு தி.ஜா அவர்களின் எழுத்து மேல் ஒரு தனி அபிமானம் வந்து விட்டது. மிகவும் பிடித்தும் போயிற்று. இந்த புத்தகமும் என்னை ஏமாற்றவில்லை.
Taboo என்று சொல்லப்படும் விஷயங்களை எப்படி இவர் 50-60 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதினார், எதிர்ப்புகள் வரவில்லையா என்று சிந்திக்க வைக்கிறது.
யாத்திரை செல்லும் பிரத்தியேக ரயில். அதில் பயணம் செல்லும் ரங்கமணி, ஜோசியர் முத்துசாமி, மேலாளர் நாயுடு, சமையல் செய்யும் காமேச்வரன் ஆகியோர் பிரதான பாத்திரங்கள் ரயில் பிரயாணத்தில். ரயில் நகர நகர கதையும் கொஞ்சம் கொஞ்சமாக நகர தொடங்குகிறது. தத்து எடுப்பதன் மூலமாகவே வம்சாவளி நீள்கிறது என்ற குறையை முத்துசாமி உடன் கலந்தாலோசிக்க ரங்கமணி முடிவு செய்து சுவீகார மகன் மற்றும் மருமகள் ஜாதகத்தை கொடுக்கிறார். முத்துசாமி அதை பார்த்து வித்தியாசமான ஒரு கணிப்பை கூறுகிறார். மகனுக்கு வாரிசு கிடையாது, ஆனால் மருமகளுக்கு வாரிசு உண்டு என்று ஒரு குண்டை வீசுகிறார்.
குதர்க்கமான கணிப்புக்கு குதர்க்கமான யோசனை ரங்கமணிக்கு. காமேச்வரனை வீட்டுக்கு அழைக்கிறாள். பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. Spoilers வேண்டாம் என்பதால் இதன் பிறகு சொல்ல விருப்பமில்லை.
தி ஜாவின் எழுத்துக்கள் அங்கங்கே பொட்டில் அறைந்தார் போல் இருக்கிறது. சங்கராச்சாரியார் முதல் கொண்டு விளாசி விட்டிருக்கிறார். சாதாரண குடும்ப கதை.. 400 பக்கங்களில் என்ன கிழித்து விடமுடியும் பெரிதாக என்று நினைத்து படிக்க ஆரம்பித்தால் பளீர் பளீர் என்று வாழ்க்கை பாடங்கள் முகத்தில் அறைகின்றன.
உதாரணமாக
1. "மரணம் வரை தான் பகை. மரணத்திற்கப்பால் வெ��ும் அன்புதான். எல்லோரும் கரையேறட்டும். வைரம், வெறுப்பு, வஞ்சம் எல்லாம் எரிந்து மாய்ந்து போகிற இடம்"
2. "எப்பவாவது ஒரு தடவை வருமே - அந்த மாதிரி வந்தது இன்னிக்கி - திடீர்னு எல்லாரும் விட்டுப் போயிட்டாப் போலவும், தன்னந்தனியா நிற்கறாப் போலவும் சிலபோது தோணுமே - அந்த மாதிரி இருந்தது இன்னைக்கு"
3. புளிமிளகாய் விற்கிறவன்களும் கூட்டத்தில் பிதற்றுகின்றவன்களும் எப்படி திடீர் திடீர் என்று எல்லையைத் தட்டுகிறான்கள
இது வெறும் samples தான். இதை போன்று பல வசனங்கள் இருக்கின்றன.
ஆங்காங்கே KB படங்கள் போல் இருக்கிறது. ஒரு வேளை KB உம் இந்த புத்தகங்கள் படித்து inspire ஆகியிருப்பாரோ என்னவோ..
தமிழில் உணவை பற்றியும் பயணத்தை பற்றியுமான நாவல் என்று தான் எனக்கு நளபாகம் அறிமுகப்படுத்தப்பட்டது. தோதாய் முன் அட்டையில் ரயிலும் மிளகும். ஆனால் இப்புதினம் புற இன்பங்களான சுவை, பயண அனுபவங்கள் தவிர்த்து மனித அக உணர்வுகள்-உறவுகள் பற்றியே பேசுகிறது.
நல்ல கதை. மனஓட்டங்கள் தெளிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது. தமிழின் பிராமண இலக்கியங்களுள் குறிப்பிடத்தகுந்தது என்றால் மிகையில்லை.
தி.ஜாவின் எழுத்துக்களை ரொம்ப நாட்களாக படிக்க வேண்டும் என்கிற ஆசையாக இருந்தது. சமீபத்தில் தான் காலச்சுவடில் இவரின் மொத்த நாவல்களையும் வாங்கி வைத்து தினந்தோறும் எடுத்து, பார்த்தவாறு நாட்களை கடத்திக் கொண்டிருந்தேன். நேற்று ஒரு சிந்தனையில் இவர் எழுதிய ' நளபாகம் ' என்னும் நாவலை படிக்கஙாம் என எடுத்தேன். என்னை மிகவும் கவர்ந்ததால் வேகமாக ரசித்து படித்து இன்று முடிக்க முடிந்தது. இந்த நாவல் எனக்கு சில வருடங்களுக்கு முன்னரே அறிமுகம் ஆனது, சிலருடைய விமர்சனம் மற்றும் மதிப்பீடு ஆகியவற்றை படித்ததால் ஆர்வமும் கூடிற்று. இந்த நாவலில் தி.ஜா ஒரு கதைச் சொல்லியாக இன்னும் ஆழம் சென்று விளையாடியிருப்பார் என்பது படித்து முடித்ததும் என்னால் உணர முடிந்தது.
ஒரு நீண்ட பிரயாணத்தில் சந்தித்து கொள்ளும் நிறைய கதாபாத்திரங்கள், அவர்களின் சுயமும், கட்டற்ற உணர்வும் ஒன்று சேர ஆசையும், அழுகையுமாய் பிரவாகம் புரிவதை படிக்கையில் மனிதன் தான் எத்தனை ரகசியங்கள் கொண்டு சூட்சுமம் புரிந்து வாழ்ந்து வருவதை தி.ஜாவின் எழுத்துக்கள் ஆழமாக சென்று அலசி பார்த்திருக்கிறது.
ரங்கமணியும் மருமகள் பங்கஜமும், முத்துசுவாமியும் ஜோதிடமும், பங்கஜமும் இவளின் கணவன் துரையும், ஆன்மீகமும் நாத்திகமும், ஆன்மீகமும் போலித்தனமும், என நாவல் முழுக்க இரண்டும் ஒன்றாகவும், எதிராகவும் இடையிடையே நுண்ணியமான விவாதங்கள் மற்றும் தி.ஜாவிற்கு உரிய நவரசமும் திளைத்து நம்மோடு பயணம் புரிகிறது. முக்கிய கதாபாத்திரமான காமேஸ்வரனை மட்டும் தனியாக குறிப்பிட காரணம், இவன் நளபாகத்தில் சிறந்து விளங்குபவன், இவன் கதாபாத்திரம் மறைமுகமாக நம் மனதில், " எங்கும், எந்தப் பசியும் நிற்கப்போவதில்லை. அதற்கான சமையலும்(யத்தனிப்பும்) நின்றுவிடப் போவதில்லை ", இப்படி மனதில் ஓடிக் கொண்டேயிருக்கும் என்பதில் ஐயமில்லை.
வாரிசு வேண்டி எங்கெங்கோ அலையும் குடும்ப ஆண்களும், பெண்களும் இன்றும் நம் சமூகத்தில் உலாவி கொண்டுதானிருக்கிறார்கள். அதனால் தான் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்த நாவலின் கதைக்களமும், கதை மாந்நர்களும் இன்றளவிலும் நம்மோடு இலக்கிய வட்டத்தில் உரையாட முடிகிறது.
இக்கதையில் அக்கிரகாரத்தில் செல்வ செழிப்போடும், இயற்கை வளத்தோடும், நல்ல மதிப்போடு வாழும் ரங்கமணி என்பவள் காசநோயால் கணவனையும், ஒரு சீரழிந்த பிராமணனின் சாபத்தால் வாரிசு பாக்கியத்தையும் இழந்து, இறுதியாக ஒரு யாத்ரீகம செல்கையில் காமேஸ்வரனை சந்தித்து, தன் மகன் என தீர்மானித்தும் விடுகிறாள். இப்பயணத்தின் போது புகழ் பெற்ற முத்துசுவாமி ஜோதிடரும் ரங்கமணி மற்றும் பங்கஜத்தின் ஜாதகத்தை பார்த்துவிட்டு ஒரு முடிச்சை போடுகிறார். இதனை அவிழ்க்க, ஒரு தந்திரம் அல்லது அசாதாரண செயல் புரிந்து காமேஸ்வரனை தன்னில்லத்திற்கு அழைக்கிறாள், தன்னுடைய மகனாக வேண்டுமென!! காமேஸ்வரனும் சென்று காலையில் தண்ணீர் எடுத்து வந்து பூஜை செய்து அம்பாளை வேண்ட பல புத்தகங்கள் படித்து, மதி வேளையில் திண்ணையில் கொஞ்ச நேரம் சாய்ந்து, மாலையில் காவேரி அருகே ஒரு அந்தணரை சந்தித்து அவரோடு ஊர் மக்களைப் பற்றி புரணிப் பேசி, பின் வண்டு முணுமுணுக்கும் இரவில் உறங்கிவிடுகிறான். இப்படியாக தான், ஒரு மாதம், பல மாதம் என அவனுக்கு இருக்கிறது. பங்கஜமோ, ரங்கமணியை விட காமேஸ்வரனை நன்கு கவனிப்பது இவனுக்கு உறுத்தலும், சில சமயம் தூர நின்று இவளை பார்க்கும் சிலிர்ப்பையும் தந்துவிடுகிறது.
நான் எதிர்பார்க்க முடிச்சு அவிழும் நேரத்தில் திகட்டாத அளவு சொற்களுடன், மிகவும் சிக்கலான தருணங்களை, அந்த அத்துமீறலை ரசிக்கும்படியாக எழுதியிருக்கிறார் தி.ஜா. ஏனெனில், கொஞ்சம் நழுவி போயிருந்தாலும் கதைக்களம் நமக்கு வேறுவித அனுபவத்தை தந்திருக்கும், ஆனால், தி.ஜா இறுதி வரை, " ஒரு சமையல் என்பது கலை என்று நேசித்து செய்தால் எல்லாம் அளவளவாக சேர்க்கப்பட்டதில் ரசனையும், மிகுந்த சுவை கொண்டதாகவும் இருக்கும். அதே போல தான், இக்கதையும் உரையாடல்களில் கூர்மையாகவும், கதை ஓட்டத்தில் அன்பும், அறமும் கலந்தவாறாக இருப்பது படிக்கையில் அமிர்தமே.
ஒரு இடத்தில், " கிட்டே நெருங்க நெருங்கத்தான் தெய்வம் தன்னை விண்டு விண்டு காட்டுவது போல மனிதர்களும் சிறிது சிறிதாகத் தம்மை விட்டு காட்டிக்கொள்கிறார்கள் " மற்றொரு இடத்தில், " .....உலகத்தையே துச்சமாக நினைக்கிற அகம்பாவப் பூச்சி என்றெல்லாம் மனதுக்குள் பல வர்ணங்களாக படங்கள் போட்டோம். ஆனால், கிட்ட போனதும் எப்படி அத்தனையும் அழிந்துபோய் வேறு படமாக மாறிற்று! ". என தி.ஜானகிராமன் கூறுவது அறங்கூற்றே. சகமனிதர்கள் தான் எத்தனை நாடகங்களும், அத்துமீறல்களும் புரிபவர்கள் என்று நெருங்கும் போது மட்டும் தான் புரியும்.
This is, as always, another book with an explosive (at that point of time) theme by T.Janakiraman. Every other book by this author is special for me for three reasons. One, they make me feel as if this author has taken a peek into my life at some point of time or the other. Two, like most classics of Tamizh literature, this one also revolves in and around Thanjavur district – my native place. And, three, every other work by this author, ‘pushes my emotional envelope’ and stretches my mind’s canvas, so that it can contain more of emotions and I could paint some vivid pictures in the same.
The story goes like this – Kameswaran was abandoned by his father and step-mother while he was a young boy and he was brought up by Vatsan who used to cook in the temples. He was brought up in the best of ways and discipline and devotion to God is all that he knows about. Now he makes a living by working as a cook in religious tour trains.
Rangamani is a middle-aged woman whose husband passed away due to TB within a few years of marriage and she was left to suppress both her carnal requirements as well as emotional requirements for a child. She has an adopted son now, but who is also not bearing any child. She is so worried for the future of her daughter-in-law and is in pain thinking that her daughter-in-law’s fate will also end up similar to hers – without any progeny.
Muthuswamy is a famous astrologer, who is travelling in the same train as Rangamani and tells her that as per the family horoscopes, her adopted son will never have a child, but her daughter-in-law will. Rangamani meets Kameswaran in the same train and something deep down tells her that he is the son that she couldn’t bring out from her womb. She asks Kameswaran to come and stay with him as her son. Kameswaran, though reluctant, feels the same love for her and accepts her as a motherly figure.
Meanwhile, thinking over the astrologer’s words, Rangamani has some plans of bringing progeny to her family, by involving Kameswaran with her daughter-in-law, in crude concept of surrogate father. What did transpire? Did Kameswaran see things the same way Rangamani did? What did her daughter-in-law and son think about her plans? What were the emotional struggles? ‘Nalabhagam’ answers all these questions in the own inimitable style of TJ.
Book #16 for the year இந்த புத்தகத்தை படித்து முடித்த பொழுது இரண்டு கேள்விகள் மட்டுமே என் மனதில் உதித்தன “தி். ஜா எப்படித்தான் இப்படில்லாம் எழுதறார் “ “தி். ஜா எதுக்காக இப்படில்லாம் எழுதறார்” என்ன ஒரு அபாரமான படைப்பு, என்ன ஒரு சொல்வீச்சு, என்ன ஒரு மண்ணின் மணம்.. படித்து முடித்து பல மணிநேரங்களான பின்னும் பிரமிப்பு அடங்கவில்லை.. கதை என்னவோ ஒரு மிகவும் சாதாரண கதைதான்.. ஒரு யாத்ரா ஸ்பெஷல் ரயிலில் பல்வேறு விதமான மனிதர்கள் சந்திக்கிறார்கள்.. சித்தியின் கொடுமைக்கு பயந்து வீட்டைவிட்டு ஓடி ஒரு ஶ்ரீவித்யா உபாசகரால் தத்தெடுத்து வளர்ந்து, அந்த ரயிலில் சமையல்காரனாக பணிபுரியும் அம்பாள் பக்தனான காமேஸ்வரன், வம்சத்திலேயே வாரிசு இல்லாமல் வழிவழியாக ஸ்வீகாரப்பிள்ளைகளின் மூலம் வம்சம் விருத்தியாகி தன் மருமகளுக்காகவாவது ஒரு குழந்தை பிறக்காதா என ஏங்கும் ரங்கமணி மாமி உலகப்புகழ் பெற்ற ஜோதிட சிம்மம் முத்துசாமியும் அவர் மனைவியும் , ஆனால் அவர்களுக்கும் வாரிசு இல்லாத குறை உண்டு யாத்ரா சர்வீஸ் காண்ட்ராக்டர் நாயுடு.. இவர்களுடன் கதை ஆரம்பிக்கறது. காமேஸ்வரனின் பக்தி, பேச்சு மற்றும் அன்பினால் ஈர்க்கப்பட்டு ரங்கமணி மாமி அவனை ஹரித்வாரில் தன் குடும்பத்தினருக்காக பிண்டம் போடச்சொல்கிறாள். அதிலிருந்து அவனை தன் இரண்டாவது பிள்ளயாகவே வரிக்கிறாள். அவனை தன்னுடைய வீட்டில் வந்து தங்கி பூஜை செய்யச்சொல்கிறாள், அவன் பரிசாரகனாகவும் பிள்ளையாகவும், பூஜை செய்பவனாகவும் மாறுகிறான். இது அந்த வீட்டில், அந்த ஊரில் வாழும் பலரின் வாழ்க்கையில் எந்த விதமான மாற்றங்களைக் கொண்டு வருகிறது என்பது மீதிக் கதை. அந்த காலகட்டத்தில் நிலவிய சமூக நிலைப்பாட்டையும் வாழ்க்கை முறையையும் , அந்த ஊரின் பல மனிதர்களின் குணாதிசியங்களையும் அவர்களின் வாழ்க்கை எப்படி பின்னிப்பிணந்து உள்ளது என்பதும் நேர்த்தியாக கூறப்பட்டிருக்கிறது. ஒரு சிறு ஊரில் நிலவும் சண்டைகளும் வம்புகளும் வளர்ந்து பலரின் வாழக்கையை புரட்டிப்போடுகிறது என்பது தெளிவாக எடுத்துரைக்கப்ட்டிருக்கிறது. தி். ஜாவின் பலகதைகளப்போல இதிலும் அகம் பற்றி விவரமாக ஆனால் விரசமாக இல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த புத்தகம் 50-60களின் வாழ்க்கையை கண்முன்னே நிறுத்தும் ஒரு அழகான பொக்கிஷம்.
தன் மருமகள் மூலம் ஒரு ரத்த உறவு வேண்டி ரங்கமணி செய்யும் இந்த செயல், காமேச்வரன், பங்கஜ உறவுச் சிக்கல், சக்தி வடிவான காமேஸ்வரனின் ஆன்மீக உணர்வு என இந்த மூன்று புள்ளிகளையும் தி.ஜா நேர்த்தியாக இணைக்கும் விதம், நமக்கு ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்துகிறது.
Group of individuals go for yathra to North Indian spiritual places. Their experiences, short comings and how they try to address it with new experiences. Beautifully woven by Thi Ja. Essence is simple but it’s prolonged narration. At times it feels you are living the story. So many philosophical moments. Thi Ja the most recommended by the contemporary Tamil writers. Good read 👍.
"அவனவன் இருப்புக்கு அவனவன்தான் பொறுப்பு. ஐயமோ, பயமோ நோக்காடோ, சாதனையோ, பேரோ, அவப்பேரோ - எல்லாத்துக்கும் அவனவன் தான் பொறுப்பு இதுக்கெல்லாம் தொடர்பு அவனுக்கும் படைச்சவன்னு சொல்றாங்களே அதுக்கும்தான். மூணாவது ஆளு வந்து எப்படி குறுக்கிட முடியும்? This novel is like a gentle breeze; but makes you think a lot
An interesting book...read within a few days. Thi.Ja always astonishes with the conviction he writes and the way he explains a place/person/any inner thoughts.
It is a refreshing, heart-full,compelling read.THUMPS UP!!!!If you could just think of an author who could make your heart filled with feelings and sucked inside a two dimensions IT IS DEFINITELY T.J. The characters are so real that end up in discrete intense pointless.YES, it is pointless and it is a flawless perfection.I mean forget the book ,the characters,his perspective of the world and his hold and grasp over it matters . Anyone who read T.J. WOULD FIND THE STORY IS NOT ABOUT BEGINNING NEVER AND ABOUT END.Because in his world there is end.It is a world never ends and never moves.IT IS A WORLD THAT ALWAYS BEGINS.THAT ALWAYS ORANGE.
Okay, I am in love with TJ's way of writing. After, Mogamull and the short Amma Vanthal, this was another fantastic, ahead of its time novel from TJ as usual. The more and more I read TJ the more I love him more the Balakumaran, who was my second favorite author in Tamil next to Sujatha, now TJ is taking his place.
This story is about a 35 year old bachelor who's a great cook and does catering in train and he meets a woman in during a travel and decides to stay in her house as her son. And, what happens after he reaches Nallur and what changes he brings to her house and the whole village forms the story.
This is another not to be missed TJ's novel after Mogamull.
The story begins with an Yatra on a train - Though it had a few mentions of the places visited (Badrinath, ..) the narrations of the interactions in the train journey is very realistic - reminded me of a trip we went on a Tamil Nadu temples long back. The environment and the lifestyle during the 1940/50 s is very interesting - I always like the stories happening in the Kumbakonam - Mayavaram area - my inclination with no reason. The characters lining God/No God and the discussions - do exist in my mind . I like Janakiraman for porting me into an earlier era.
Among TJ Books, it is one of his powerful works, twisting and leaving you bewildered at the end.I am not gonna write review for this because I really cannot do this.So, it has pile of inspiring and compelling incidents which is designed by well developed characters which makes is portrayed by a master storyteller.
தி. ஜானகிராமனின் கோடுகள் தாண்டும் பெண் பாத்திரங்கள். மகாபாரதத்தின் சத்யவதி சாயலில் படைக்கப்பட்ட ரங்கமணி பாத்திரம் ஆகட்டும், ஆதி சங்கரர் பற்றி காமேஸ்வரனுக்கும் அவர் சகாவுக்கும் நடக்கும் தர்க்கங்கள் ஆகட்டும், சாதி மறுப்பு கதாபாத்திரம் மூலம் தி.ஜா கிழித்தெறியும் உயர் சாதியின் முகத்திரிகைள் ஆகட்டும்.... எல்லாமே அமிர்தம்
This novel was written probably 50 years ago and one cannot help feeling that this author is probably overrated. Balakumaran who has supposedly assumed thi ja ra's style is lot more effective as a writer. There ramblings by all characters about relationships and life in general. Maybe a bit unfair to the writer as this was meant for a different generation
I thoroughly enjoyed reading this book. The author is successful in making the reader to travel along with the main character Kameshvaran through different cities and observe people in different perspectives.