'கோட்டைபுரத்து வீடு' என்கிற பரபரப்பான தொடரினை ஆனந்த விகடனில் எழுதின கையோடு அதன் வெற்றிக்கான ஒரு பரிசாக நான் உடனடியாகப் பெற்ற மற்றொரு தொடர் இந்த 'ஐந்து வழி - மூன்று வாசல்!'.
ஆனந்த விகடனில் எழுத வாய்ப்புக் கிடைப்பதே அரிய விஷயம். அதிலும் அதன் வைர விழா ஆண்டில் வாய்ப்புக் கிடைப்பது என்பது பாக்கியமான ஒரு விஷயம். தான் பாக்கியம் செய்வதன் என்பது பின்பே எனக்குப் புரிந்தது. கிடைத்த சந்தர்ப்பத்தை எல்லா வகையிலும் சிறப்பாகப் பயன்படுத்தத் திட்டமிட்டு புதுமையான இந்த இரட்டைத் தொடரைப் படைத்தேன். யாரும் இதற்கு முன் செய்திருக்கக்கூடாது; அதே சமயம் வழக்கம் போலவும் இருக்கக்கூடாது - என்கிற அடிப்படையில் இந்த சரித்திர + சமுக தொடர் முயற்சிக்கு நான் முனைந்தபோது முளையிலேயே இதன் வீர்யத்தைத் துல்லியமாக உணர்ந்து என்னைப் பெரிதும் ஊக்குவித்தார் விகடன் ஆசிரியர் அவர்கள்.
நடுநடுவே என் கற்பனை ரசம் கரடுமுரடுகளில் சிக்கிடாதபடி எனக்கு முன்னே ஒரு சாரதிபோல் அமர்ந்து வழிப்படுத்தியும் தந்தார். விகடனில் தொடர் எழுதுவது என்பது ஒரு எழுத்தாளனுக்கு பெருமைக்குரிய விஷயம் மட்டுமல்ல பயிற்சி, நுட்பம் போன்ற பல விஷயங்களுக்கு அடிப்படையான ஒன்றும்கூட.
என்னைப் பொருத்தமட்டில் இந்த தொடர் எனக்கு மகத்தான அனுபவங்களைத் தந்தது. பேசவே இனிக்கும் இனிய தமிழில் தங்கு தடையின்றி எழுதி மகிழ சரித்திரம் வாய்ப்பளித்தது. நிகழ் காலத்தில் நான் நடைபோட சமூகம் வாய்ப்பளித்தது. சமூகத்தைவிட சரித்திரக்கதை அனேக வாசகர்களை மிகுதியும் கவர்ந்திழுக்கவும் செய்தது.
சரித்திரக் கதையை நான் வெறும் கற்பனைச் சரக்காக விரும்பவில்லை. நிஐ சரித்திரம் ஒன்றின் பரபரப்பான பகுதிக்காக நூலகங்களில் தவம் கிடந்தேன். நானிருக்கிறேன் என்பதுபோல் அகப்பட்டார் புலித்தேவர். தென்றல் சிலிர்க்க மனக்கண்ணின் கொட்டி முழுக்கியது அவர் வசித்த மேற்குத் தொடர்பு மலைப்புரங்கள். இந்த நாட்டு விடுதலைக்காப் பாடுபட்ட இவரை விடவா ஒரு பவித்ரமான மனிதர் எனக்குக் கிட்டிவிட முடியும்? இவரோடு கூடி பல கற்பனைப் பாத்திரங்களை இணைத்தேன்... கதையை வளர்த்தேன். அவர்களில் ஐம்னாலால் என்னும் அந்த வடக்கத்தியர் வாசகர் உள்ளங்களைப் பெரிதும் கொள்ளை கொண்டுவிட்டார். தொடரின் சோக முடிவு பலரைப் பாதித்ததை நேரில் கடிதத்தில், தொலைபேசியில் என்னால் அறிய முடிந்தது. புதுமை முயற்சி வெற்றிக் கொடியைப் பறக்கட்டதில் என் பேனா குதூகலப்பட்டது.
'ஐனரஞ்சகமான இதழ்களில் சுவாரஸ்யமாகத்தான் கதை சொல்ல முடியும். அனுபவ பூர்வமாக மிக எதார்த்தமாக வாழ்க்கையை வாழ்க்கையாக நல்ல தீர்வுகளோடு காட்டமுடியாது' என்பது இன்று பலரின் நம்பிக்கை. நான் அதை அவ்வப்பொழுது மீற விரும்புகிறேன். எனது இந்த இரட்டைத் தொடரைப் போலவே ஒரு தொடரை அமரர் கல்கி அவர்கள் முன்பே எழுதியிருப்பதாக ஒரு வாசகர் எனக்குக் கூறியபோது எனக்குள் ஆச்சரியம்!
'ஆனால் அது சற்றே பூர்வ ஜென்ம வாசனையைக் கொண்டது. உங்களது முற்றிலும் சரித்திரம்! அடிப்படையில் நிறைய வேற்றுமைகள் உண்டு' என்றும் குறிப்பிட்டார். எனக்கு முற்றிலும் புதிய தகவல் அது. என்றோ அமரர் கல்கிக்குத் தோன்றிய ஒரு முனைப்பு இன்று எனக்கும் ஏற்பட்ட அந்த ஒற்றுமை எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
மகத்தான அந்த எழுத்தாளரின் பாதையில் நான் நடந்திருப்பது தெரிந்தபோது புளகாங்கிதமாக இருந்தது. இதற்கு மதிப்புரை தந்திருக்கும் திரு. கெளதம நீலாம்பரனும், பாலகுமாரனும் நான் மிக மதிக்கும் எழுக்கும் எழுத்துலக வேங்கைகள். இளைய தலைமுறையில் பழுத்த அனுபவத்தோடு சரித்திரம் படைப்பதில் கெளதமநீலாம்பரன் தான் இன்று முன் நிற்பவர். முதல் சந்திப்பிலேயே எவராகை இருந்தாலும் அவரிடம் நல்ல மதிப்பைச் சம்பாதித்திக் கொள்ளும் பழகும் தன்மை இவரது மிகப்பெரிய பலம். பக்குவமான சொற்கள், பரந்த பதமான உச்சரிப்பு... பத்திரிக்கைத் துறையில் இவர் ஒரு சிறந்த மனிதர்.
தத்துவ பூர்வமாக வாழ்க்கையை அலசும் வல்லாளர் பாலகுமாரன்,கவிதைகளில் தான் இவர் முதலில் என்க்கு அறிமுகமானவர். கதைகளில் இவர் காட்டும் எதார்த்த உடையாடல்கள் பல நூற்றாண்டு வாழும் தன்மை கொண்டவை. நுனிப்புல் மேயவே இவருக்குத் தெரியாது என்னும்படியான ஒரு அழுத்தத்தை இவரின் ஒவ்வொரு படைப்பிலும் காணமுடியும். எழுத்தின் சக்தியை இவர் மூலம் நாம் பலருக்கு அடையாளம் காட்டலாம்.
இவர்கள் இருவரின் மதிப்புரைகளுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.
Blog link: https://kalaikoodam.blogspot.com/2020... தற்பொழுது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மர்ம தேசம் தொடரை பார்த்தபொழுது தான் இந்திரா சௌந்தரராஜன் புத்தகங்களை படித்து பலநாட்கள் ஆகின்றதே என்ற நினைப்பு வந்தது. நண்பன் தாஸ் முன்பு எப்பொழுதோ பரிந்துரைத்தபடி சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய "ஐந்து வழி மூன்று வாசல்" நினைவில் வர அதை வாசிப்பது என்ற முடிவுக்கு வந்தேன். ஒய்வு பெற்ற ப்ரொபஸர் ராமநாதன் குற்றாலம் மலைப் பகுதியில் ஒரு பழைய வீட்டை வாங்குகிறார். கெட்ட சக்திகள் உலவுகிறது என்று அவ்வூர் மக்கள் வீட்டை பற்றி எச்சரித்த பிறகும் பிடிவாதக்காரர் ஆன அவர் அதை வாங்குகிறார். தன மகள் ஜெயந்தியுடன் வீட்டில் வசிப்பதற்கான வேலைகள் பார்க்கின்ற பொழுது ஒரு பழங்கால தாழி ஒன்று கிடைக்கின்றது. அதனுள் மூலிகைகளால் பாதுகாக்கபட்டிருக்கும் ஒரு மனிதனின் சடலம். யார் தடுத்தும் அதை பற்றி தெரிந்து கொள்ள முற்படுகிறார், அங்கு பொக்கிஷம் உள்ளதாகவும் அதை தான் கண்டறிவேன் என்றும் அவர் முற்படுகிறார். பல அசம்பாவிதங்கள் நடுவில் ராமநாதன் காணாமல் போக; அவர் இறந்து விட்டதாக முடிவு செய்கிறார்கள். அவரின் பழைய மாணவனும் காட்டு இலாக்கா அதிகாரியுமான கலாதரன் இந்த மர்ம முடிச்சை அவிழ்க்க முற்படுதே முக்கிய கதை களம். இதே பகுதியில் பல வருடங்கள் முன்பு அதாவது புலித்தேவர் ஆட்சி செய்த காலத்தில் நடந்த ஒரு கதையும் 'இன்று - அன்று' என்ற தலைப்பில் புத்தகம் முழுக்க இரண்டாம் கதையாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. இரண்டுக்கும் உள்ள பந்தமும் இப்புத்தகத்தில் வாயிலாக நமக்கு தெரிய வருகின்றது. அதில் காதல், வீரம், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட்டம் என்று பல நிகழ்வுகள் கடந்து செல்கிறது. முன்பு சொன்னது போல இரண்டு காலகட்டத்தில் கதை நகர்கின்றது. இதை அழகாகவும் மிக நேர்த்தியாகவும் எழுத்தாளர் கையாண்டிருக்கிறார். கதையின் வேகத்திற்கு எங்கும் தடை போடாத வண்ணம் இரண்டும் சமமாக நகர்கிறது. பழைய காலகட்டத்தில் வரும் காதல் இன்றய கால்கட்டதுடன் அழகாக இணைக்கப்படுகிறது. பிரிவோம் சந்திப்போம் என்பது போல்.ஒவ்வொரு பாத்திரமும் நன்றாக வரையப்பட்டிருக்கிறது. வரலாறு,ஆன்மீகம், காதல், மர்மம் என்று எல்லாத்தையும் சரிசமமாக கையாண்டிருக்கிறார். புலித்தேவர் என்றுமே என்னை வியப்படைய வைத்த ஒரு மாவீரர். அவருக்கும் மாபூஸ் கானுக்கு இடையிலான யுத்தமும் அதில் அவர் கையாளும் யுக்தியும் அருமை. கதையின் முடிவை அழகாக இணைத்துள்ளார் இந்திரா சௌந்தர்ராஜன். ஒரு காலகட்டத்தின் துயரமான முடிவு இன்னொரு காலகட்டத்தின் நன்மையாக முடியுது. நன்மைக்கும் அன்புக்கும் என்றும் அழிவு இல்லை என்ற ஒரு கருத்தை ஆணித்தரமாக நிலைநாட்டுகிறார் "ஐந்து வழி மூன்று வாசல்" வாயிலாக. வரலாறு, காதல், மர்மம் என்று பல கோணத்திலுள்ள கதைக்களங்களை விருப்பப்படுபவர்கள் கட்டாயம் ரசிக்கும் விதமான ஒரு கதை.
I picked up this book on hearing the news of Mr.Indira Soundarrajan's passing. His speciality are books that play at the intersection of rational and mysticism and there would always be a fan following for the generations that were trying to make sense of the stories.
This book runs in two timelines. One is a love story from the times of Pulithevar, the Tamil small kingdom in the hilly region that stood up to the British against taxes. The second is happening in the present where a archeologist finds a clue to a possible treasure hidden in the region. Alternating between the two timeliness the author builds a story that will eventually intersect.
Reading this book today, you realise this book may not be celebrated generations from now. Damsels in distress, crass descriptions, cheap thrills make for a book that can be dubbed cringe. However, it is reality that this was the from a different time where this was entertainment.
There was nothing to like or dislike in the story. I loved the audio cd format of the book performed by Bombay Kannan and team.
Wonderful adventurous journey of treasure hunt by a historian along with history narrated back and forth on the different timelines of present and era of early stages of the India's struggle for independence.