இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையாளரும் அரசியல் செயல்வீரருமான காந்திக்கு இன்றைய தகவல்தொழில்நுட்ப யுகத்தில் பின்நவீனத்துவ காலகட்டத்தில், மார்க்ஸியம் போன்ற உலகை மாற்றும் பல கோட்பாடுகள் தோல்வியடைந்துவிட்ட சூழலில், என்ன மதிப்பு இருக்கமுடியும் என்று ஆராயக்கூடிய நூல் இது. காந்தியின் வாழ்க்கையையும் அவரது அரசியல் செயல்பாடுகளையும் அடிப்படைச் சிந்தனைகளையும் குறித்த விரிவான ஒரு பொதுவிவாதம்.
காந்திமீது முன்வைக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் ஐயங்களையும இந்நூலில் ஜெயமோகன் விரிவாக ஆராய்கிறார். காந்தியின் தனிவாழ்க்கையையும் அவரது போராட்டமுறைகளையும் பரிசீலிக்கிறார். காந்தியப் போராட்டவழிமுறைகள் இன்றைய சூழலுக்கு எந்த அளவுக்குப் பொருத்தமானவை என்றும் காந்தியின் கிராமசுயராஜ்யம் என்ற இலட்சியத்தின் இன்றைய பெறுமானம் என்ன என்றும் விவாதிக்கிறார். பல்வேறு வாசகர்களுடனான கேள்விபதிலாக ஆரம்பித்த உரையாடல் இந்நூல் வடிவை அடைந்துள்ளது.
உலக சிந்தனையில் காந்தி இன்று வகிக்கும் இடம் என்ன என்பதை இந்நூல் இன்றைய இளம் வாசகனுக்குக் காட்டும்
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions. --- தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ
கடந்து போன ஒரு எளிமையான மனிதரைப் பற்றிய ஒரு தொலை நோக்கு சித்திரம். மகாத்மா என்ற பெயருக்கு சொந்தக்காரர். அவர் அதை ஏற்றுக் கொண்டாரா என்ற வரலாறு ஒரு புறமிருக்க அவரைப் பற்றிய நினைவுகள் நேர் மறையாகவும் எதிர் மறையாகவும் இன்றும் அவதானித்துக் கொண்டே இருக்கின்றன. என்னளவில் அந்த மகாத்மாவை பற்றிய சித்திரம் பள்ளியின் வயதில் பெருமை மிக்கதாய் அமைய காலப்போக்கில் திரிந்த வரலாற்றில் சுதந்திரப் போராட்டத்தில் அவரும் ஒருவர் என்ற கீழ்மட்ட எண்ணத்தை தோற்றுவித்தது எனது அபாக்கியமே. தேடல் இல்லாது எதுவுமில்லை தேடலில் கிடைக்காதது எதுவுமில்லை. மீண்டும் அவரைப் பற்றிய தேடலுக்கான தொடக்கம் ஆரம்பித்தது ஏ.கே.செட்டியாரின் பயணக்குறிப்புகளின் முழு தொகுப்பை படிக்கத் தொடங்கிய போது ஏற்பட்டது. காரணம் அந்த எளிய மனிதருக்காக இன்னொரு எளிய மனிதர் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அவருக்கானத் தேடலில் செலவிட்டதே. முதலாய் சத்திய சோதனை புத்தகத்தை படிக்க தொடங்கிய போதே அவரின் எளிமையையும், குழந்தைத் தனத்தையும், சுயநலச்சார்பில்லா பொது சேவகத்தையும் கண்டு வியப்பைக் கொடுத்தது. இந்தியாவின் சுதந்திரத்தில் பெரு வாரியான மக்களை தன் எளிமையான செயல்பாட்டால் தன்னுள் இழுத்துக் கொண்ட விதம் மனதில் அவரைப் பற்றிய ஒரு தொலைநோக்கு சிந்தனையைப் படர விட்டது. அப்படி இருந்தும் மனதில் ஒரு நெருடலாய் அவரைப் பற்றிய அவதூறுகளும் ஓடிக் கொண்டே இருக்க அந்த தேடலின் வரிசையில் காந்தியைப் பற்றிய புரிதலைக் கொண்ட ஜெயமோகனின் “இன்றைய காந்தி” யைப் படிக்கத் தொடங்கினேன். என்னை மட்டில் புத்தகம் எண்ணங்களை விரிவடையச் செய்ய வேண்டுமே தவிர வாத விவாதங்களுக்காய் அமைவதில் எந்த பலனும் இல்லை. காரணம் அவரவருள் ஒருவரைப் பற்றிய எண்ணத் தொகுப்புகள் அவர்களைச் சார்ந்தே கட்டி எழுப்பப்படுகின்றன. இந்த புத்தகம் காந்தியை பற்றிய புரிதலை அவருக்கே உரித்தான நடையைக் கொண்டு சொல்லுவதே. மிக எளிமையான மனிதரைப் பற்றிய அவதூறுகளுக்கான மிகப்பெரிய விளக்கங்களை மிக அழகாய் விவரித்துக் கொண்டே செல்லுகிறது இந்த புத்தகம். சம கால அளவில் நோக்கும் போது காந்தியைத் தூற்றும் ஒவ்வொருவரும் அவருடையக் கோட்பாடுகளோடு ஒன்றிய அரசியலை தொடங்கியருப்பதுமே அவரது கோட்பாட்டிற்கு கிடைத்த வெற்றியே. இந்த புத்தகத்தில் அவரின் வாழ்க்கை முறையையும் அவர்களது குழந்தைகளின் வாழ்வையும் விரித்து சொல்லி அன்றைய சமூக சூழ்தளத்தில் அவருக்கென்று தனியான யாரும் அணுக முடியாத இடத்திலிருந்தும் தனது செல்வாக்கினால் இம்மியளவு சுகத்தையும் அனுபவிக்காமல் தன்னையும் தன் குடும்ப உறுப்பினர் அனைவரையும் பொது வாழ்வில் ஈடுபடுத்தியது போற்றுதலுக்குரியதே. சமகாலத்தில் எளிமையாகவே தூற்றப்படும் மனிதராகவே மாற்றி வைத்திருக்கும் அத்துனை அறிவு ஜீவிகளையும் அவர் உயிரோடிருந்தால் மனமார ஆசிர்வதித்திருப்பார் என்பதே நிதர்சனம். தொடர்புகள் ஏதும் இல்லாத காலத்தில் நாம் அடிமைகளாக இருக்கிறோம் என்ற எண்ணமே இல்லாத பன்முகத் தன்மைக் கொண்ட கலாச்சாரக் குழுவை தனது எளிமையான யுக்தியால் இரத்தம் சிந்தாமல் எதிரியை எதிர்க்காமல் அவர்களோடிணங்கிய ஒரு போராட்டத்தை வகுத்து அதில் வெற்றியும் பெற்று அதற்கான வெகுமதியாய் அவருக்கு நாம் கொடுத்துக் கொண்டிருப்பது என்ன என்பதை மீண்டும் சொல்லத் தேவையில்லை. போட்டி கலாச்சாரத்தை வளர்த்து விட்டு இன்று நாகரீகம் என்ற பெயரில் நுகர்வு கலாச்சாரத்தைப் பெருக்கி அதனூடாகவே நமது சமூகத்தில் நமது அந்தஸ்த்தை உயர்த்திக் காட்டிக்கொண்டிருக்கும் இந்த மாயக் கலாச்சாரத்தின் ஒப்பற்ற அடிமைகளாய் மாறிப் போய் அதற்கான சுயமதிப்பீட்டையும் போலியாய் இட்டு வாழ்வை நடத்திக் கொண்டிருக்கிறோம். மக்களின் கவனம் இந்த மாயத்தோற்றத்திலிருந்து மெதுவான ஒரு பின்னோக்கிய நகர்தலை தொடங்க ஒரு துவக்கத்தை ஆர்கானிக் என்ற பெயரில் துவக்கியிருப்பதே. ஆனால் இதுவும் ஒரு மாயத் தோற்றத்தைக் கொண்ட ஒரு நுகர்வே என்பது இதன் விலைகள் நமக்குணர்த்தும். இந்த விதமான மாய நுகர்வுகளைப் புறந்தள்ளி உண்மையான எளிமையான நுகர்விற்கான வழிகளைத் தேடவும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுமான தேவைகளை துவக்க வேண்டிய தருணத்தில் இருக்கும் பட்சத்தில் அவரைப் பற்றிய ஒரு நிறைவானத் தேடலுக்கு இந்த புத்தகம் நமக்கு உதவியாய் இருக்கலாம். எளிமைக்கு முன்னோடியே இந்த மகாத்மா என்பதில் என்னளவில் சந்தேகமில்லை. அவரது வாழ்வில் சில முரண்பட்ட நிகழ்வுகளை அவரே சொல்லியிருக்கிறார் அவை கடத்தி விட வேண்டியவைகளே. அதை தவிர்த்த அந்த எளியவரின் பார்வை மிக மகத்தான ஒரு கண்ணோட்டத்தை இந்த புத்தகம் நமக்கு கொடுக்கலாம். அஹிம்சை போராட்டத்தின் வெற்றியின் இடைச்செருகலாய் சுபாஸ் சந்திர போஷை பலரும் தூக்கிக் கொண்டாடும் நேரத்தில் அவருடைய படையால் இந்தியாவின் சுதந்திரம் நிர்ணயிக்கப் பட்டிருக்குமா என்பதில் எனக்கிருந்த கேள்விகளுக்கான விடைகளும் தெளிவும் பெற முடிந்தது. இன்றைய சமகாலத்தில் இனங்களாய், மதங்களால், மொழியால் நாம் அடையாளப் படுத்தப்படுகிறோம். இதன் மூலம் இன்றையத் தலைமுறையினரை ஒரு இனவெறி குழுவாய் மாற்ற நடக்கும் அரசியல் கேலிக் கூத்துக்களை பார்த்துக் கொண்டிருக்க இந்த கூத்துகளுக்கு நம் அரசியல்வாதிகள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டியே அவர்களின் ஜீவாதாரத்தை பெருக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. மொழி வெறியின் உதாரணத்திற்கு ஒப்பீட்டளவில் இலங்கையில் தனி ஈழப் போராட்டம் என்ற பெயரில் இந்தியாவிலிருந்து கட்டமைக்கப் பட்ட ஒரு கூட்டத்தின் எழுச்சியின் அகால முடிவிற்கும் அதில் மாண்ட லட்சக் கணக்கான மக்களுக்கும் யார் பொறுப்பாக முடியும். ஹிம்சைதான் எல்லா முடிவுகளுக்கும் தீர்வென நகரும் இந்த மாய லோகத்தில் அதன் பலனையும் அதன் விளைவுகளையும் யார் சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்று இன்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் நமக்கு தேவைப்படுவது காந்தியப் பார்வையே. இதில் எதிரிகளையும் பணிய வைக்கும் ஆயுதமிருக்கிறது என்பதே இதன் மிகச்சிறந்த விசயம். இனியொரு காந்தி பிறக்கப் போவதில்லை இதிலிருந்து நாம் கற்க வேண்டியது ஆயிராமாயிரம் உயிர்களைக் காப்பாற்றலாம். இனியாவது காந்தீயக் கோட்பாடுகளை தோற்கடிக்கும் எண்ணத்தை விட்டு அதை இளைஞர்கள் மத்தியில் முன்னோக்கிக் கொண்டு செல்லும் முயற்சிகளை மேற்கொள்ளும் எண்ணத்தைக் கையிலெடுக்கலாம்.
This is one of the few books in Tamil that approaches Gandhi in a scholarly manner. First started as a simple questions and answers about misinformation about Gandhi, then expands to his philosophy, his effect in Indian tradition, politics and social life. Jeyamohan read about Gandhi extensively (he provides references about the books he read) and distills it to the readers in an objective manner. Gandhi’s plus, minus, quirks all are discussed here.
The essays to reread were his interactions with Ambedkar in dalit politics, Gandhian nationlism and the self-rule.
This book will open the doors for you to read about Gandhi and my suggestion will be to start reading the reference books Jeyamohan suggested (comes to almost 20, excluding 100 volumes of Gandhi’s writings).
A true challenge for a reader. The most intensive non-fiction I've read till now. Its a monumental work by the author "Jayamohan", one of the great minds of contemporary literary world. This book is only for serious reader who're accustomed to in-depth reading. About the book, the author "Jayamohan"(who declined the"Padma Shri" award last year) deconstructs the common populist image and opinion of "Mahatma Gandhi" thereby he constructs the "Mohandas Gandhi" as thinker and man of actions of his era to understand him without any prejudiced opinions. Jayamohan analyses "Gandhi" with historical, cultural, philosophical backgrounds in various perspectives to discover his true self. To be precise, the book is dialogue between writer and reader about Gandhi in detailed "Postmortem" approach.
மகாத்மா ஏன் மகாத்மா என அழைக்கப்படுகிறார் என்பதை உரக்கச்சொல்லும் புத்தகம். காந்தியம் சார்ந்த கேள்விகள், காந்தியின் மீதான அவதூறுகள், காந்தியை புரிந்து கொள்வதில் உள்ள தடைகள் என பல தளங்களை விரிவாகப் பேசும் நூல். கட்டுரைகள் / பதில்கள் அனைத்தும் சிறப்பானவை. நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம் !
Since i like Jeyamohan for his philosophical knowledge, It made me to read his books, I wonder the amount of work which he needs to do, to come up with a book like இன்றைய காந்தி....Jeyamohan tries to answer the Critics of Gandhi in this book,to an extend he as succeeded in it. For me it took some time to read this book....
Well written. All prejudices and comments made on Gandhi have been encountered argument with evidences. Some place it points the mistakes of Gandhi, in gentle manner, with insight into his principles and microscopic observation on his life. Gandhi's actions have been rationally justified and it would be one of the fine books to common men of future generation.