#book_marathon_2023
இந்த வருடத்திற்கு நான் முடிக்கும் 45ஆவது புத்தகம்.
புத்தகத்தின் பெயர்: மகுடபதி
ஆசிரியர்: அமரர் கல்கி
எழுதிய வருடம் : 1942
மொத்த பக்கங்கள்: 176
மொத்த அத்தியாயங்கள்: 27
இது கல்கி அவர்களின் மூன்றாவது சமூக நாவல். சரித்திர நாவலான பார்த்திபன் கனவு எழுதும் அதே காலத்தில் தான் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார் அமரர் கல்கி. ஒரு சாதாரண கதை, சாதாரண தொகுப்பு, ஆஹா என்று சொல்லும் அளவிற்கு எதுவும் பிரமாதமாக இல்லை ஆனால் படிக்கும் வரை சலிக்கவில்லை. கோவையில் நடக்கும் ஒரு காதல் கதை அதில் காலா காலமாக நடக்கும் சினிமா பாணியில் உள்ள கதைக்களம். ஹீரோ காங்கிரஸ்காரன், ஹீரோயின் ஒரு சாதாரண பெண், அவள் மேல் காதல் கொள்ளும் வில்லன். ஹீரோ சாதாரண ஆள், ஹீரோயின் பாவப்பட்ட பெண், வில்லன் பெரிய தொழிலதிபர். வில்லனுக்கு ஹீரோயின் மேல காதல் ஆனால் ஹீரோயின் ஹீரோ மேல் காதல் வசம் பெற்றால். ஹீரோ வில்லன் சண்டை, கிளைமாக்ஸ்,வில்லன் திருந்தினான். இதுவே மகுடபதி.
அமரர் கல்கி புத்தகத்தில் (படித்தது வரை) - வரலாற்று நாவலாக இருந்தால் சோழன் அல்லது சோழன் சார்ந்த மனிதன் ஹீரோ, புத்தப்பிக்ஷு, காலாமுகன் போன்றவர்கள் வருவது வழக்கம். அதே போல சமூக நாவலில் காங்கிரஸ்காரன் ஹீரோ என்பது வழக்கமாகிவிட்டது. அதில் ஆங்காங்கே மகாத்மா காந்தி, விடுதலை போன்ற சம்பவங்களும் உண்டு.
மொத்தத்தில் சாதாரண சமூக நாவல், ஒரு முறை மாற்றத்திற்காக படிக்கலாம். முன்பே கூறியவாறு ஆஹா ஓஹோ என்று இல்லை அதே சமயம் சலிக்கவும் இல்லை.
மதிப்பெண் 3/5