குறைந்த பக்கங்களில் முடித்துக் கொண்ட போதும்கூட இந்த ஒரு தனித்துவமான நடை பெரிதாய், நுணுக்கமாய் பாதிப்புகளை விட்டுச் சென்றது.
இப்படி ஒரு சிறந்த கதைசொல்லி, கையாண்ட உத்திகள், மறுவாசிப்பு என்பது முக்கியமான தேவை.
இவரின் எழுத்துக்களை படிக்கிறோம் என்பதே ஒரு தனி கர்வம் கொள்ள வைக்கிளது.
சினிமா என்றால் பிரச்சினைகளா இருக்காது;
ஓடிப்போன ஹீரொயின் பின் அறியப்படும் முடிவு,
விடியற்காலை படப்பிடிப்பு தளம் எப்படி ஒரு அரக்கபரக்க நிலையில் இருக்குமோ,
சம்பளம் எதிர்பார்க்காத, வாங்காத, மறுக்கப்பட்ட என பல நிலைகளில் சினிமாவில் பணிபுரியும் இளைஞர்கள் உண்டு,
ரீச் கேர்ள்ஸ் என ஆட்டத்திற்கு வரும் பெண்கள், இவர்களின் நாற்றம் என தத்ரூபமாக காட்டிய வண்ணம்,
பெரிய தயாரிப்பாளர், கிட்டத்தட்ட ஒரு குட்டி சாம்ராஜ்ஜியத்தை வைத்திருந்தும் இதனை விரும்பாத மகன், இவனின் காரணங்கள் என ஏன் என்றும், அவ்வளவு தானா என்றும் மனதில் எண்ணங்கள் பல விதங்களில் முளைத்தன; இந்த உரையாடல் கிட்டத்தட்ட ஒரு தலைமுறையை முன்னிறுத்தி விடுகிறது.
சினிமாவில் சொல்வது போல எல்லோருக்கும் ஒரு கதை இருக்கிறது, அந்த கதைகளில் அனைவரும் ஒவ்வொரு விதத்தில் அகப்பட்டு விடுகிறார்கள்.
இதுதான், யதார்த்தமும் கூட.
தற்போது தான், உதவி இயக்குனராக பணியாற்றிய நிலையில் இதனை படித்த போது ஏற்பட்ட அனுபவம் இதை தாண்டி, காட்சியாய் கண்முன் வந்து போனது.
கரைந்த நிழல்கள் என்பதை விட தொலைந்த மனிதர்கள் எனவும் கூறலாம். ஆம், இது போரில் காணாமல் போனவர்களின் கதையல்ல, சினிமா என்னும் நிழலில் தன்னை தொலைத்தவர்களின் கதை.
இந்த எந்த ஒரு விடயத்தையும் முன்னிறுத்தி நகரவில்லை, மாறாக இணைக்கப்பட்ட கதைகளின் வழியே, ஒவ்வொரு கதையாய் மீள்கிறது, நம்மிடம்.
கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம்.