தமிழ் சினிமாவில் வெளிவரும் பெரும்பாலான நாயக வழிபாட்டுத் திரைப்படங்கள், அடிப்படையில் தங்கள் கதை சொல்லல் முறையில் ஒரு காப்பியத் தன்மையைக் கொண்டுள்ளன. வாழ்க்கை விதிகளின் படி, நல்லவர்கள் எவ்வளவு தூரம் சிரமங்களை அனுபவித்தாலும், கெட்டவர்களால் துன்புறுத்தப்பட்டாலும், கடைசியில் எப்படியாவது நீதி வென்றுவிடும். வெற்றி நல்லவர்களுக்கே கிடைக்கும். இதுதான் காப்பியங்களும் புராணங்களும் நமக்கு உணர்த்தக்கூடிய செய்தியாக இருக்கிறது. இந்த மரபின் நீட்சியாகத்தான் தமிழ் சினிமா நாயகர்கள், அநீதிக்கு எதிராகப் போராடி நீதியை நிலைநாட்டுபவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.
ஆனால் யதார்த்தத்தில் மனிதர்கள், அன்றாடம் அல்லல் படுபவர்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பன்னெடுங்காலமாகவே இந்த உலகம் வலிமையானவர்களுக்கு மட்டுமானதாகவே இருக்கிறது. தமிழ் சினிமாவில் காட்டப்படுவதைப் போன்ற “எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை” த்தனமான வாழ்க்கை எல்லோருக்கும் அமைவதில்லை. பிரச்சனைகளுடன் போராடுவதிலேயே தங்கள் பெரும்பகுதி வாழ்நாளைக் கழிப்பவர்கள் இங்கு அனேகம். இந்த உண்மையைப் பதிவு செய்வதன் வழியாகத்தான் இலக்கியங்கள் ஒரு மகத்தான நிலையை அடைகின்றன. இருத்தலியல் தத்துவத்தின் எழுச்சிக்குப் பிறகு பெரும்பாலான இலக்கியங்கள் மனித வாழ்வின் வீழ்ச்சிகளைப் பதிவு செய்துவரும் நிலையில், சினிமாவில் பணியாற்றும் மனிதர்களினூடே இந்த உலகத்தின் அசலான அவலத்தைப் பேசும் நாவலாக அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் இருக்கிறது.
1931ம் ஆண்டு செப்டம்பர் 22ந் தேதி, ஆந்திர மாநிலத்தில் உள்ள சிகந்தராபாத்தில் பிறந்தவர். இயற்பெயர் ஜ. தியாகராஜன். தமது இருபத்தொன்றாவது வயதில் (தந்தையின் மறைவுக்குப் பின்) குடும்பத்தினருடன் சென்னைக்குக் குடியேறி, ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றத் தொடங்கினார். அப்போது அகில இந்திய வானொலி நடத்திய ஒரு நாடகப் போட்டிக்காக "அன்பின் பரிசு" என்னும் நாடகத்தை எழுதினார். அதுவே அசோகமித்திரனின் முதல் படைப்பு. 1954ம் ஆண்டு வானொலியில் அந்நாடகம் ஒலிபரப்பானது.
அசோகமித்திரனின் முதல் சிறுகதை "நாடகத்தின் முடிவு". 1957ம் ஆண்டு கலைமகளில் இது பிரசுரமானது. கலைமகளில் அவரது இரண்டாவது சிறுகதை "விபத்து" பிரசுரமானதையடுத்து, மணிக்கொடி கி.ரா. மூலம் ந. பிச்சமூர்த்தியின் அறிமுகமும், அவர் மூலம் "எழுத்து" பத்திரிகைத் தொடர்பும் கிடைத்தது.
சுமார் நாற்பதாண்டு காலத்துக்கும் மேலாகத் தமிழின் மிக முக்கியமான புனைகதை எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்படும் அசோகமித்திரன், அமெரிக்கா, சிங்கப்பூர், ஜெர்மனி, இலங்கை ஆகிய நாடுகளுக்கு அழைப்புகளின் பேரில் இலக்கியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அவரது பல படைப்புகள், பல இந்திய அயல் மொழிகளில் மொழியாக்கம் பெற்றிருக்கின்றன. அப்பாவின் சிநேகிதர்' என்கிற சிறுகதைத் தொகுப்புக்காக, அசோகமித்திரனுக்கு 1996ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.
This book was recommended by a friend some time back and then I again came across this book in Vedikkai Paarpavan.
The book deglamorizes the cinema industry and focuses on the lives of Assistant Directors, production assistants, group dancers and drivers. Though the period seems like 1970s, the book must be relevant even today. Given the film crew includes so many daily wage laborers who are impacted by a canned movie or a schedule delays - the book captures their lives well.
The approach is not a typical story of individuals. It conveys the angst through multiple stories and lives. The dialogues are raw and the characters are tired. It almost seems like one of the movies from the same period.
இந்த நாவல் எனக்கு சாரு நிவேதிதா மூலம் அறிமுகமாகியது. சாருவுடய “பழுப்பு நிற பக்கங்கள்” முதல் தொகுதியில் அசோகமித்திரனுக்கு இரண்டு அத்தியாயங்கள் ஒதுக்கி, இந்த நாவலை அவரின் மிக சிறந்த படைப்பாக எடுத்து வைக்கிறார்.
எனக்கு சிறிது ஏமாற்றமே.
இந்நாவல் எழுதப்பட்ட காலத்தில் திரைக்கு பின்னால் உள்ள கலைஞர்களின் கண்ணீர் கதைகள் மக்களுக்கு புதுமையாக இருந்திருக்க கூடும். பொழுதுபோக்கு துறை பற்பல பரிமாணங்களில் வளர்ந்த இந்நாளில் பகட்டுக்கு பின்னால உள்ள சிக்கல்களும் வேதனைகளும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகி விட்டது. ஆகையினால் கதை களம் என்னை கவரவில்லை.
நவீன தமிழ் இலக்கியத்தில் முன்னோடியாக கருதப்படும் அசோகமித்திரனின் எழுத்தை அனுபவிக்கவே இக்கதையை தேர்ந்தெடுத்தேன்.
நடராஜன், ராஜகோபால், சம்பத், ரெட்டியார், ராம ஐயங்கார் முதலியோர் முக்கிய கதாபாத்திரங்களாகவும் ஜெகந்நாத ராவ், ஜெயசந்திரிகா, பாச்சா ஆகியோர் சிறிய பாத்திரங்களாகவும் வருகிறார்கள். ஒரு கதையின் இலக்கணமான முதலும் முடிவும் இல்லாமல், இவர்களின் வாழ்க்கையில் சில பக்கங்களாக இந்த நாவல் அமைந்துள்ளது. அசோகமித்ரனின் நடை கொஞ்சமும் மிகை இல்லாமல் மனதை தொடுகிறது. பக்கத்து பக்கத்து வீட்டில் இருக்கும் இரண்டு பேர் ஊர் நடப்புகளை பகிர்ந்து கொள்வது போல ஒரு உணர்வு.
link to my Blog Reading Karaindha Nizhalgal gives you a feel like you suddenly met people from the movie industry and you are travelling with them.
The title 'Karaindha' means dissolved which is what the book is totally about. It's about the Unsuccessful people, movies with issues, producers who are in trouble and those who work behind the screen, every chapter is said from different persons account.
Just like G. Naga Rajan's 'Naalai Matrum Oru Naale' this one also goes into a day of a person. Doesn't have a story but just the casual and realistic conversations without any novel/dramatic/cinematic structures.
கரைந்த நிழல்கள் - நாவல் | புலிக் கலைஞன் - சிறுகதை | அசோகமித்திரன்
தமிழ் இலக்கியத்தில் மிகமுக்கியமான நாவலாகக் கருதப்படும் 'கரைந்த நிழல்கள்', 1970-ல் புத்தகமாக வெளியிடப்பட்டது. எனவே இந்த வருடம் இந்நாவல் பொன்விழா ஆண்டை நிறைவு செய்கிறது. இந்தக் காணொளியைப் பதிவு செய்ய உட்காரும்வரை இது எனக்குத் தோன்றவே இல்லை. முழுவதும் தற்செயலாக, இந்த ஆண்டில் கரைந்த நிழல்கள் பற்றிப் பதிவிட சமயம் அமைந்து வந்ததில் பெருமகிழ்ச்சி.
கவர்ச்சிகரமான, பிரம்மாண்டமான துறையாகக் கட்டமைக்கப்படும் திரைத்துறையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தினக்கூலிகளின் ஏழ்மையான, அவலமான வாழ்க்கையை, அவர்களின் உழைப்பு சுரண்டப்படுதலை, அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுதலை, ஆகச் சிறப்பாகப் பதிவு செய்யும் நாவல் 'கரைந்த நிழல்கள்'.
அவரின் 'புலிக் கலைஞன்' என்ற புகழ்பெற்ற சிறுகதையையும் இந்த நாவலுடன் சேர்த்து வாசிக்கையில் இன்னும் முழுமையான புரிதல் நமக்குக் கிடைக்கும்.
எனவே, இந்தக் காணொளியில் கரைந்த நிழல்களையும், புலிக் கலைஞனையும் சேர்த்தே பதிவு செய்ய முயன்றிருக்கிறேன்.
Usually I highlight a lot of quotes so that I can revisit. But the way Ashokamithran puts one word after an another makes me want to give up the highlights.
Felt that there is nothing quite like this book the first time I read, that feeling still persists, I don't know if anyone else can describe fallible men and yet be non judgemental like AM.
Here he turns the tamil cinema world inside out with characters that walk out and speak to you on their own. They all have a chapter for themselves but linger in the chapters of others as well.
Problems are a plenty: an eloping heroine, early morning shoots, unpaid salaries, a stressed production manager, a bankrupt studio boss, several dancing girls, a wayward son, Czech film groupies, studio cars going across Madras and a monologue that defines a generation.
So much drama, yet never dramatic. Full-on cinema, yet never cinematic. Simple sentences, yet they strike the heart like bullets.
Either I'm not mature enough to understand Asokamithran's writing style or I believe the story is dry and did lose my interest and it failed to clutch me through out.
Planning to re-read once I get in touch with more Tamil literature based.
The novel captures the lives of the people working in a cinema production house. Set as chapters that capture the events of various events associated with the process of film making, one can see how fortunes change so drastically in this world of shadows.
ஒரு திரைப்படத்தின் படபிடிப்பு கைவிடப்படுகிறது அந்த படத்தின் தயாரிப்பாளர் ரெட்டியார், நடிகை ஜெயசந்திரிகா , புரெடக்ஷன் மேனேஜர் நடராஜன், உதவி இயக்குனர்கள் ராஜகோபால் மற்றும் சம்பத்.
கால ஓட்டத்தில் ரெட்டியார் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து காணாமல் போகிறார், ஜெயசந்திரிகா பிரபல நடிகையாகி உதவி இயக்குனராக இருந்த ராஜகோபாலை திருமணம் செய்துகொள்கிறார் , சம்பத் வெற்றி பட இயக்குனராக ஆகிறான் , புரெடக்ஷன் மேனேஜராக ஒரு காலத்தில் சகலத்தையும் கவனித்த நடராஜன் பிச்சைகாரானாக ஆகிறார்.
ஆனால் இந்த கால ஓட்டத்தை ஒரே நேர்கோட்டில் எடுத்து செல்லாமல் நான் லீனர் என்று அழைக்கப்படும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வழியே கதையை சொல்லும் யுக்தியை அன்றே பயன்படுத்தி நாவலை வடிவமைத்துள்ளார் அசோகமித்திரன் அவர்கள்.
ஒரு திரைப்படம் எடுக்க எத்தனை பேரின் உழைப்பும் , முயற்சியும் தேவைப்படுகிறது என்பதையும் கதாநாயகன், நாயகி , இயக்குனர் , இசையமைப்பாளர் தவிர குரூப் டான்சர்கள், டிரைவர்கள், உதவியாளர்கள் இன்னும் எத்தனை எத்தனை அடிமட்ட தொழிலாளர்கள் அதை நம்பி இருக்கிறார்கள் , அவர்களின் கஷ்ட நஷ்டங்கள் , கனவுகள், நம்பிக்கைகள் , குடும்ப சூழல் போன்றவற்றை பேசி சினிமா என்னும் கனவுலகின் நிதர்சனத்தை பதிவு செய்கிறது இந்த கரைந்த நிழல்கள்.
பணம், புகழ் இந்த இரண்டிற்காகத்தான் பெரும்பாலும் பலர் சினிமாவுக்கு வருகிறார்கள். ஆனால் சினிமா என்ற போலி பிம்பத்தில் ஜெயித்தவர்களும் துன்பப்படுகிறார்கள். தோற்றவர்களும் துன்பப்படுகிறார்கள். பிரபல தயாரிப்பாளர், ஸ்டூடியோ ஓனர், நட்சத்திர நடிகை, உதவி இயக்குனர், ஸ்டூடியோ உதவியாளர்கள், துணை நடனக்கலைஞர்கள் என்று பெரும்பாலும் எல்லோருமே படும் அவலத்தை மிக நுட்பமாக பதிவு செய்திருக்கிறார் அசோகமித்திரன். சினிமாவின் பகட்டை, ஆடம்பரத்தை, அதன் கவர்ச்சியை திரை விலக்கிக் காண்பிக்க முற்படுகின்றது இந்நாவல்.
குறைந்த பக்கங்களில் முடித்துக் கொண்ட போதும்கூட இந்த ஒரு தனித்துவமான நடை பெரிதாய், நுணுக்கமாய் பாதிப்புகளை விட்டுச் சென்றது. இப்படி ஒரு சிறந்த கதைசொல்லி, கையாண்ட உத்திகள், மறுவாசிப்பு என்பது முக்கியமான தேவை. இவரின் எழுத்துக்களை படிக்கிறோம் என்பதே ஒரு தனி கர்வம் கொள்ள வைக்கிளது.
சினிமா என்றால் பிரச்சினைகளா இருக்காது; ஓடிப்போன ஹீரொயின் பின் அறியப்படும் முடிவு, விடியற்காலை படப்பிடிப்பு தளம் எப்படி ஒரு அரக்கபரக்க நிலையில் இருக்குமோ, சம்பளம் எதிர்பார்க்காத, வாங்காத, மறுக்கப்பட்ட என பல நிலைகளில் சினிமாவில் பணிபுரியும் இளைஞர்கள் உண்டு, ரீச் கேர்ள்ஸ் என ஆட்டத்திற்கு வரும் பெண்கள், இவர்களின் நாற்றம் என தத்ரூபமாக காட்டிய வண்ணம், பெரிய தயாரிப்பாளர், கிட்டத்தட்ட ஒரு குட்டி சாம்ராஜ்ஜியத்தை வைத்திருந்தும் இதனை விரும்பாத மகன், இவனின் காரணங்கள் என ஏன் என்றும், அவ்வளவு தானா என்றும் மனதில் எண்ணங்கள் பல விதங்களில் முளைத்தன; இந்த உரையாடல் கிட்டத்தட்ட ஒரு தலைமுறையை முன்னிறுத்தி விடுகிறது.
சினிமாவில் சொல்வது போல எல்லோருக்கும் ஒரு கதை இருக்கிறது, அந்த கதைகளில் அனைவரும் ஒவ்வொரு விதத்தில் அகப்பட்டு விடுகிறார்கள். இதுதான், யதார்த்தமும் கூட.
தற்போது தான், உதவி இயக்குனராக பணியாற்றிய நிலையில் இதனை படித்த போது ஏற்பட்ட அனுபவம் இதை தாண்டி, காட்சியாய் கண்முன் வந்து போனது. கரைந்த நிழல்கள் என்பதை விட தொலைந்த மனிதர்கள் எனவும் கூறலாம். ஆம், இது போரில் காணாமல் போனவர்களின் கதையல்ல, சினிமா என்னும் நிழலில் தன்னை தொலைத்தவர்களின் கதை.
இந்த எந்த ஒரு விடயத்தையும் முன்னிறுத்தி நகரவில்லை, மாறாக இணைக்கப்பட்ட கதைகளின் வழியே, ஒவ்வொரு கதையாய் மீள்கிறது, நம்மிடம். கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாசித்த தமிழ் நாவல். சினிமாத்துறை பற்றி எழுதப்பெற்ற மிகமுக்கிய படைப்பு. எழுதப்பட்டு 45 ஆண்டுகள் கடந்தும், இக்காலத்தில் புகழப்படும் டராண்டினோ ஸ்டைல் nonlinear அத்தியாயங்கள், ஒரே நிகழ்வை இருவேறு கதாபாத்திரங்கள் மூலம் சொல்லும் telescope perspective, முதல்-உச்சம்-முடிவு cliche இல்லாத கதாபாத்திர வடிவமைப்பு என இந்நாவல் தொடும் உச்சம் மிக அதிகம்.
கரைந்த நிழல்கள் - உலக நாவல் கதையாடலில் ஒரு மகத்தான மைல்கல்.
An important novel describing the vagaries of the glitzy world of Cinema. This and Sujatha's "Kanavu Thozhirchalai" are the only two novels in Tamil that effectively portray the unfair world of cinema production.
சினிமாவின் பின்புறம் வேலை செய்யும் எளிய மனிதர்களின் வாழ்க்கையை அவர்கள் பாடுகளை, வீழ்ச்சி எழுச்சி பற்றி பேசுவதால் மட்டும் இது நல்ல நூல் என்று ஆகுமா ? அல்லது தமிழில் இப்படி ஒரு நாவல் முதல் முறையாக வந்ததால் இவ்வளவு புகழா ?
பத்தொன்பது வயது சினிமாக்காரனாகிய நான், என் குறுகிய கால சினிமா அனுபவங்களையும் நான் வரும் காலங்களில் அனுபவிக்கப்போவதையும் இரத்தமும் சதையுமாய் பிண்ணி எழுதிய நாவல்!
சினிமாவை ஒட்டிய கதைக்களங்கள் மிகவும் குறைவு. அதுவும் சினிமா நட்சத்திரங்களைக் காட்டிலும் திரைக்குப் பின்னால் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்களைப் பற்றிய கதைக்களம் அதனிலும் குறைவு. அதில் ஒன்றாக இருப்பது அசோகமித்திரனின் இந்தக் கதை. சந்திரா கிரேஷன்ஸ் என்ற ஒரு தயாரிப்பு நிறுவனம் நொடித்துப்போய் மூடப்படுவதால், ஐந்துக்கும் பத்துக்கும் அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என்ன ஆகிறார்கள் என்பதை விவரித்திருக்கிறார் ஆசிரியர். ரெட்டியார், நடராஜன், ராஜகோபால், ராம்கோபால் ஐயங்கார், சம்பத் ஆகிய கதாபாத்திரங்களைக் கொண்டு வடிவமைத்திருக்கிறார். இப்புத்தகை ஒன்று, இரண்டு, மூன்று, என்று எண் வாரியான அத்தியாயங்களாய் பிரிப்பதை விட, இந்த கதாபாத்திரங்களின் பெயர்களை வைத்துப் பிரிந்திருக்கலாம் என்று தோன்றிற்று.
We have seen a lot of success stories in the Tamil cinema industry. But this is a very good book which captures the life of people who has failed in the Tamil film industry. Ashokamitran has done a good job in capturing the daily life of the Blue collar cinema workers.
வண்ணமையமான சினிமா உலகத்தின் வெளிப்புற தோற்றம் பார்வையாளனுக்கும் ரசிகனுக்கும் சினிமா துறையை பற்றி ஒரு கவர்ச்சிகரமான பிம்பத்தை இன்றும் ஏற்படுத்துகிறது. ஆனால், சினிமா துறையில் உழலும் ஊழியர்களின் இருளடைந்த வாழ்வும், அவர்களின் வலியும் தான் எதார்த்தமே.
அசோகமித்ரனின் "கரைந்த நிழல்கள்" சினிமா துறையில் பல்வேறு மட்டங்களில் இருக்கும் மனிதர்களைப் பற்றிய கதை. படத் தயாரிப்பாளர், உதவி இயக்குனர், புரடக்க்ஷன் மேனேஜர், கோஷ்டி நடன பெண்கள், ஓட்டுநர்கள், செட் அஸிஸ்டன்ட், மற்ற கடைநிலை ஊழியர்கள் என பல மனிதர்களின் வாழ்க்கையையும், பசியையும், அவமானங்களையும், பொருளாதார நிலையையும் அப்பட்டமாக பதிவு செய்யும் நாவல்.
கோடி கணக்கில் பணம் புரளும் தயாரிப்பாளரின் சகல வசதிகள் கொண்ட வீட்டை விவரிக்கும் அதே சமயம் அவரின் நிம்மதியற்ற வாழ்வும், சிதைவுற்ற குடும்ப நிலையும், நிச்சயமற்ற வியாபாரமும் தரும் மன அழுத்தத்தையும் உள்ளது உள்ளபடி சொல்கிறது இந்நாவல். ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் வீழ்ச்சியால் வாழ்வாதாரம் இழக்கும் ஊழியர்கள், பின்னாளில் பிச்சை எடுக்கும் அந்த நிறுவனத்தின் சிறந்த புரடக்க்ஷன் மேனேஜ��் போன்றோரின் நிற்கதியான நிலை நம் கண்முன் விரிகிறது. அந்த நிறுவனத்தின் அலுவலகம் காலி செய்யப்படும்போது, அவர்கள் கடைசியாக எடுத்த காட்சியின் கிளாப் போர்ட்டை ஒரு கடைநிலை ஊழியன் உரிமையாக பிடுங்கிக் கொள்ளும் காட்சி சிறிதும் melodramatic ஆக இல்லாமல் அசோகமித்ரனின் எழுத்தில் வெளிப்படுகிறது. இந்நாவல் 1960-களின் சினிமா பற்றிய விவரணையானாலும், தங்கள் பசியை தேநீரின் சூட்டிலும், அவமானங்களை சிக���ெட்டின் கசப்பான புகையிலும் போக்கிக் கொள்ளும் உதவி இயக்குநர்களின் சித்தரிப்பு இன்றும் பொருந்தும்.
சினிமாவில் உழலும் மனிதர்களின் தோல்வியை பற்றி பேசும் மிகச் சிறந்த நாவல் "கரைந்த நிழல்கள்". நாவலில் வரும் எந்த கதாப்பாத்திரத்திலும் தன் கருத்தை திணிக்க முற்படாமல், அவர்களின் செயல்களை மதிப்பிடாமல், அவர்களின் இயல்பை மட்டும் கூறி நமக்கு அவர்களின் உலகத்தை அறிமுகம் செய்கிறார் அசோகமித்ரன்.
I was first introduced to 'Karaintha Nizhalgal' by Na. Muthukumar in his book 'Vedikkai Paarppavan'. In Vedikkai Paarppavan, Na. Muthukumar had written that when he decided to go to Chennai to pursue a movie direction career, his father recommended him to read 'Idhu Raajapaatai Alla' written by Sivakumar and 'Karaintha Nizhalgal'. This way Na.Mu's father wanted to make sure Na.Mu takes an informed decision about a cine career. Na.Mu had written that even after reading these 2 books he stood up for his decision to pursue a cinema career. I don't know if Na.Muthukar liked it or not - but it is our fortune that he became a lyricist/poet and not a director. But who knows what we missed from Na.Mu's movies?
Coming to 'Karaintha Nizhalgal'.. In the prologue Ashokamitran has written that it is not a book about 'cinema'. Rather it's a book about different kinds of people who live behind the screens. He says he would be a failure if decades later people call it as 'a good book about cine industry'. I don't know why he felt so, but this certainly is a book about the cine industry that prevailed in 1960s. Despite all the struggles that the people in the industry had to go through to make ends meet, it is indeed a wonder that Tamil cine industry survived 100 years.
A very short novel. What I love about this book is there are lots of parallel stories and we have not been told what happens eventually to the characters in some of the parallel stories.
After the passing away of Asokamithran re-read this wonderful classic of his, Its one of the best modernist novels centered around the film industry. The film industry is the canvas on which Asokamihtran explores the ever underlying themes that he always wants to talk about , the absurdity of modern life and his wry smile on it. Film industry is the epitome of any modern industry, film making is definitely an art but its also an industry where fate of people associated with it is written in manner no one can ever fathom . Things change so drastically where lives are uprooted and displaced with ever happening continuity which is very particular to it. In this manner it captures the ruthlessness of the modern industry, its assault on the individual, the meaninglessness and absurdity that this novel captures is so depressing.
In the best of modernist traditions it captures so much by so little, like how a painter through simple strokes captures the essence of the frame. In this novel Asokamithran just captures the whole essence of the life of modern film industry through the chapters in the novel. The chapters are nonlinear but they all fit in brilliantly portraying the life of people in this world of shadows.
முதல் புத்தகம், சில நாட்கள் முன்பு புத்தகம் வசிகலம் என்று முடிவெடுத்து சினிமாவில் சிறுவயதில் இருந்தே ஆர்வம் என்பதால் அது சார்ந்த ஒரு புத்தகமும்,அரிசியால் சார்ந்த ஒரு புத்தகமும் வைங்கினேன்,அதில் சினிமா சார்ந்த புத்தகமாக @missedmovies அவர்களின் பரிந்துரையில் "கரைந்த நிழல்கள்" வாங்கினேன்
ஒவ்வொரு கதாபாத்திரமும், ஒவ்வொரு அத்தியாயமும் மிகவும் நெருக்கமாக எழுதியிருக்கிறார் அசோகமித்திரன் படிக்க ஆரம்பித்தவுடன் சில நொடிகளிலே பக்கங்களை மறந்து படிக்க ஆரம்பித்து விட்டேன், திரைக்குப்பின்னால் பணிபுரிபவர்களின் வேதனைகளை மிகவும் அழகாகவும் துல்லியமாகவும் பதிவுசெய்துள்ளார் எதார்த்த தன்மை எங்கும் விட்டுப் போகாமல் நம் அருகாமையில் இருப்பது போல் உணர வைத்திருந்தார் அசோகமித்திரன்
Ashokamitran's deceptively minimalist style of storytelling throws light on the hitherto unexplored faces behind the dream factory of Kollywood. In a novel based on Kollywood, we do not get to meet popular stars or successful technicians. Rather, we get to meet tireless production managers, assistant directors who have lost jobs, female extras who suffer in sweat under glitzy dresses and film producers on the verge of bankruptcy. The author says very little and leaves the rest to our imagination. For a novel based on the Kollywood of 1960s, that is quite an ironical achievement.
அசோகமித்திரன்! வாழ்வின் அபத்தங்களை அன்றாட அழைக்களிப்புகளை...இவ்உலகம் எனும் இருளில் கரைகின்ற நிழல்களாய் மனிதர்களின் வாழ்வியலை சினிமாவின் மருட்சியை அதற்கு பின்னால் நடக்கும் நாடகமற்ற மனிதர்களின் இன்னல்களை அனாயாசமாக பிரதிபலித்திருக்கிறார்...சினிமா எனும் துறையை தாண்டி பல உணர்வுகளை உள்ளடக்கிய அம்மனிதர்களின் மனநிலையை பேசக்கூடிய ஒரு ஆகப்பெரிய பொக்கிஷம்!!!
சனிமாவின் ஆடம்பரத்திரைக்குப் பின்னால் நிகழும் சம்பவங்களும் அதில் சிக்கி சிதையண்டு போகும் மனிதர்களைப் பற்றிய அற்புதமான பதிவு. பசியில் வாடி கனவுகளைத் துரத்திக்கொண்டு பிழைத்துவரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அருமை.
First five chapters are well linked and written well but the same efforts are not reflected till the end but it should be lauded for good writing experiment novel..
சினிமாத்துறைப் பற்றி தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று என்பதாகவே அசோகமித்திரனின் "கரைந்த நிழல்கள்" நாவல் குறித்து அறிந்து வைத்திருந்தேன். ஆனால் இந்நாவல் குறித்து அசோகமித்திரன் குறிப்பிட்டிருப்பது போல இது சினிமா பற்றியதோ, சினிமா ஸ்டூடியோ பற்றியதோ அல்ல. சினிமாத் துறையில் உழன்று திரியும் மனிதர்களைப் பற்றியது.
நிச்சயமில்லாத தொழிலில் எப்படியும் ஒரு நாள் வெற்றிப் பெற்றுவிடுவோம் என்று போராடும் உதவி இயக்குனர்கள், வியர்வை நாற்றத்தில் ஒரு வேனுக்குள் அடைப்பட்டு வேலைக்கு வரும் பின்னணியில் ஆடும் நடனப்பெண்கள், "ஸார் ஸார்" என எதிர்படும் எல்லோரும் அழைக்கும் அளவிற்கு முக்கியமான ஒருவராக இருந்த போதும் ஐந்து பேர் தாராளமாக படுத்து உறங்குவதற்கு வசதியில்லாத வீட்டில் வசிக்கும் நடராஜன் என்ற புரடக்க்ஷன் மேனேஜர், வசதி வாய்ப்புகள் என எல்லாம் இருந்தும் குடும்பத்தில் யாரும் தன்னோடு பேசாமல் இருப்பதன் பொருட்டு மன நிம்மதி இல்லாமல் தவிக்கும் விநாயக ஸ்டூடியோ முதலாளி ராமஐயங்கார் என இன்னும் பல கதாப்பாத்திரங்கள். இவர் தான் நாவலின் முக்கியமான கதாப்பாத்திரம் என யாருமே இல்லை. அதுவே இதுவரை நான் வாசித்த நாவல்களில் இருந்து இதனை தனித்து நிற்கச் செய்கிறது.
ராஜ்கோபால். 34 வயது. முன்வழுக்கை தொடங்கியிருக்கிறது. இன்னும் திருமணமாகவில்லை. யாரும் பெண் தரவில்லை. காரணம் நிலையான வருமானம் இல்லாத உதவி இயக்குனராக பத்து வருடங்களுக்கும் மேலாக கழித்துவிட்டான். மாதம் முழுதாக 200 ரூபாய் சம்பளம் வாங்கியது இல்லை. அவன் வேலை செய்து கொண்டிருந்த கடைசிப் படம் பாதியில் நின்று போய் சில மாதங்கள் ஆனபோதும் கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் அவனுடைய பழைய சைக்கிளை எடுத்துக் கொண்டு கோடம்பாக்கம் பாலத்தின் மீது ஏறி இறங்குகையில் டயர் பஞ்சர் ஆக அதை ஒரு கடையில் கொடுத்து விட்டு பக்கத்தில் வடபழனியில் இருக்கும் ஸ்டூடியோவில் யாரேனும் தெரிந்தவர்கள் இருந்தால் ஒரு ரூபாய் வாங்கி கொண்டு அப்படியே சாப்பிட ஏதாவது கிடைத்தாலும் மகிழ்ச்சியே என கிளம்புகிறான். சிலரை சந்தித்து வாய்ப்பு கேட்டுவிட்டு தெரிந்த நண்பர்களுடன் சேர்ந்து மதிய உணவு வாங்க சென்று கடைசியில் நண்பன் ஒருவனின் அறையில் கஞ்சா புகைத்துவிட்டு வீடு திரும்புகையில் அந்த நாள் மட்டுமல்ல அதுவரை அவன் சந்தித்த அத்தனை நாட்களின் கசப்பும் தான் இந்த சினிமாவின் பின்னால் சென்று தோற்றுவிட்டோம் என்று உணர்வு அவனுடைய அம்மாவை பார்த்தவுடன் பீறிட்டு எழ "நான் மோசம் போய்ட்டேன்மா" என்று அம்மாவை கட்டிக் கொண்டு ராஜ்கோபால் அழும் போது சட்டென கண்கள் கலங்கிவிட்டன.
1967-ல் எழுதப்பட்ட இந்நாவலிலிருந்து சினிமாத் துறையும் அதிலேயே உழன்று திரியும் மனிதர்களின் வாழ்க்கையும் எந்த அளவிற்கு மாறியிருக்கிறது என்று தெரியவில்லை. வெளிச்சத்தைத் தேடி ஓடும் விட்டில் பூச்சிகளாய் சினிமா நோக்கி படையெடுக்கும் கூட்டம் மட்டும் இன்னும் குறைந்தப்பாடில்லை என்பது மட்டும் தெரிகிறது.
'The magic is only in what book say, how they stitched the patches of the universe together into one garment for us.' Thank to Ray Bradbury for his timely words for giving perfect head for this review of this great novella. Ashokamitran is widely considered as a legend of post-modern literature by his fellowmen and this is my first book of him.
The great things often looks as very simple as 'the truth'. That's why we might be obsessed with fiction, thrillers, fantasy, mystery so and so. "How long is it since you were really bothered? About something important, about something real?” Again thanks to Ray for his wisdom. This book is one such real one which may look so plain. But it's your ability how much you gain. Its where lies its greatness.
Firstly you have to understand the nature and idea of Post-modernism in literature to read and perceive this kinda work. There are several themes and techniques are indicative of writing of the Post-Modern literature. The major themes behind this works are: Ironies,black humor,Pastiche,Historiographic Meta-fiction,Fragmentation and so. I don't wanna explain all these things with the references from this work. Rather once you get into this stuff, you will start to understand them.It's my opinion just to throw glimpses of ideas regarding the work instead of revealing out plot themes and explaining it. In my context, it might lead to prejudice.
Now the work... The title ("Dissolved Shadows) suggests that the work is about disappeared and lost peoples. Not in the battle field but in the cine field. Yeah,its about the life of commoners set at the back drop of glittering "Movie industry" where their shadow and life falls. The stand out things are: 1) Shear- Realism.The author acts as clear mirror in-front of the life, just reflecting them as it is.You won't get feel of reading a book but the experience of the life. 2) Brevity is soul of wit.The simple and effective narration, the brand of Ashokamitran. 3) My most favorite moment in the book is the conversation between a father and son which was highly appealing for me.
What is the 'Ashokamitranisque'? (i) Hyper-Exteriority: Disparate events are continuously unfolding and people are doing their bits in the unfolding of these fractured events before readers' eyes. Things happen and there is simply no time for people to showcase their inner, psychological depth. The non-exterior is not the interior (i.e., psychology), but is what the readers do not see (or are too slow to see) within the world full of happenings. (ii) The 'Unknown' Force: People live as though a bigger 'something' that is unknown to them, is driving their disconnected lives and events . Readers are aware of this 'unknown' force ('Cinema', in case of Karaindha Nizhalgal), but the characters are not aware of or have less awareness about what actually drives them. (iii) Nonchalant social realism: Stories are real and they happen within the inescapable and suffocating historical/socio-political contexts. Yet, the narrator maintains an attitude of indifference towards people who suffer or struggle to make ends meet within this realistic world. (iv) Interchanged Center-Periphery: The peripheral becomes the center and the center is forcefully showcased as being at the periphery. In Karaindha Nizhalgal, for instance, most events revolve around transportation and food, while film-making itself, the center, takes a back-seat. (v) Connect through Disconnect: The connections between events and people happen through disconnections amongst them. The disconnect is so evident that it is that which hints at the connections that readers can easily figure.
சினிமா என்றால் நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் அத்துறையில் உள்ள பணம், நடிகர்களின் ஆடம்பரிய வாழ்க்கை, பேர், புகழ் ஆகியவை. இந்த புத்தகம் திரை உலகத்தை பின்னணியாக வைத்து எழுத பட்டது. அனால், இதில் வரும் கதாபாத்திரங்கள் யாரும் புகழுடனோ பெரும் மகிழ்ச்சியுடனோ வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இல்லை. பின்னணியில் வேலை செய்து கொண்டிருக்க கூடிய சாதாரண மக்கள் தான் இந்நாவலின் முக்கிய கதாபாத்திரங்கள்.
இந்நாவல் மற்ற நாவல்களுடன் சற்று வேறு பட்டது. ஏன் என்றால், இதில் வரும் ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒரு புதிய கதாபாத்திரத்தின் கண்ணோட்டத்தில் கதை சொல்ல படுகிறது. ஒரு அதிகாரத்தில் ஒரு தயாரிப்பு நிர்வாகத்தின் அதிகாரி ஒரு படப்பிடிப்பை வெற்றிகரமாக நடத்தி கொடுப்பதற்கு படும் கடினங்களை நாம் வாசிக்கிறோம், இன்னொன்றில் ஒரு துணை இயக்குனரின் சொந்த வாழ்க்கையிலும் வேளையிலும் நேரும் சிக்கல்களை பார்க்கிறோம், இன்னொன்றில் நஷ்டத்தை நோக்கி சென்று கொன்றிருக்கும் ஒரு தயாரிப்பு நிர்வாகத்தின் முதலாளி எப்படியாவது அதை மீட்க எடுக்கும் முயற்சிகள் காண படுகின்றன, இன்னொரு அதிகாரத்தில் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளர் தன் மகனை சீரழிந்து போகாமல் இருக்க கூறும் அறிகுறிகள்; ஆகியவை போல் ஒவொரு அதிகாரமும் ஒரு சிறுகதையை போல் எழுத பட்டுள்ளது.
கடைசி அதிகாரத்தில் நாம் அதுவரை கண்ட கதாபாத்திரங்களின் விதிகள் என்னவென்று தெரிந்து கொள்கிறோம். சினிமா துறையில் இருக்கும் நிலையற்றத்தன்மையை வெளிப்படுத்துமாறு, சிலர் முன்னேறி வெல்கிறார்கள், சிலர் அனைத்தயும் இழைக்கிறாரகள்.
மொத்தத்தில், இது ஒரு வித்யாசமான நாவல். பல கதாபாத்திரங்களை நாம் சந்திக்கிறோம், எழுபதுகளின் சினிமா உலகத்தை உள்ளே சென்று பார்க்கிறோம். இந்த கதாசிரியரின் மற்ற நாவல்களையும் வாசிக்க ஒரு ஆர்வத்தை உண்டாகியிருக்கிறது ‘கரைந்த நிழல்கள்’.
தமிழ் நாவல்களில் சினிமாவைப் பற்றி கதைகள் இருந்தாலும் இந்நாவல் சினிமாவில் வேலை செய்யும் மக்களின் வாழ்வியல்புலத்தைப் பற்றிப் பேசுவதில்தான் வேறுபட்டு நிற்கிறது.
சினிமா எடுப்பதிலேயே ஆயிரம் கஷ்டங்கள் இருக்கும்போது அதில் இருக்கும் Lightboy, Group dancers, Driver, Production Incharge போன்ற சின்னச்சின்ன தொழிலாளிகளின் வாழ்வில் கிடைக்கும் சொற்ப சம்பளத்துடன் நாட்களை நகர்த்துவதில் உள்ள கஷ்டங்களை கரைந்த நிழல்கள் பேசுகிறது.
திரைப்படத்துறையின் பிரம்மாண்டம் நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒரு இருபது நொடி வந்து போகும் நடனக்காட்சியின் பின்னால் இருக்கும் உழைப்பும் வியர்வையும் நம் கண்களுக்குத் தெரிவதில்லை. Spot light ன் பின்னால் இருக்கும் Technicianகளின் உருவங்கள் மட்டுமல்ல, நிழல்களும் கூட பேரொளியில் கரைந்து விடுகிறது.
ஐம்பது வயதான படத் தயாரிப்பாளர் ரெட்டியார், குழந்தை குட்டி என குடும்ப வாழ்க்கை நடத்தும் அவர் மேனேஜர் நடராஜன், முப்பத்து நான்கு வயதாகியும் திருமணமாகாத ராஜ்கோபால், சினிமா தியேட்டர் கட்டிக் கொடுக்கும் நடேச மேஸ்திரி, முதுமையைத் தொட்டுக் கொண்டிருக்கும் வெற்றிகரமான ராம அய்யங்கார் என வெவ்வேறு life platform backgrounded characters சினிமாத்தொழில் எனும் ஒரு புள்ளியில் இணைகிறார்கள்.
இவர்கள் வாழ்வில் சினிமா எத்தகைய மாற்றத்தைக் கொண்டு வருகிறது? பணம் சம்பாதிக்க வேண்டும் என சிலர், பேர் புகழுக்காக சிலர் என எல்லோருக்கும் சினிமாவில் ஒரு நோக்கத்துடன் இயங்கினாலும் இவை அடைந்தால் வாழ்க்கை முற்றுப் பெற்று விடுமா? வாழ்வின் தேடல் எங்கு செல்லும்போது நிறைவடையும் எனும் Existential crisis Questions-ஐ நம் முன் நிறுத்துகிறது இந்நாவல்.