ग्यारहवें भारतीय ज्ञानपीठ पुरस्कार के विजेता प्रसिद्ध तमिल साहित्यकार श्री पी बी अखिलब्बण्डम साहित्य में 'अखिलन' के नाम से विख्यात है । 'अखिलन' का जन्म तिरुचिरापल्ली जिले के एक छोटे-से नगर फेरुलूर में 7 फरवरी, 1923 को हुआ । मेदिष्ट्रलेशन काते-न-करते यह सप्पूर्ण रूप से देश के स्वतन्त्रता संग्राम से जा कूदे, फिर अन्त में स्वय भी कारावासों हुए । अखिलन की रचनाएँ, उपन्यास भी, कहानियों भी विभिन्न मा/तीय भाषाओं से तो सर्वाधिक अनूदित और प्रकाशित हुई ही है, कई विदेशी भाषाओं में भी उनका अनुवाद हुआ है । साहित्य अकादमी ने उन्हें 'वेंगेयन मनिदन' शीर्षक उपन्यास के लिए 1964 में पुरस्कृत किया । ज्ञानपीठमुरस्कार विजेता उपन्यास 'चित्तिरप्पावे' स्वय लेखक के विचार में ही नहीं, पारखियों की दृष्टि में भी उनकी सर्वश्रेष्ठ रचना है ।
பல சமூக முரண்களை அற்புதமாக வர்ணித்திருக்கிற ஆசிரியர். கதையில் 3 முக்கிய கதை மாந்தர்கள் - அண்ணாமலை , ஆனந்தி மற்றும் மாணிக்கம். வணிகம், கலை, நம்பிக்கை, அறம் என்ற மடிமம்களை மனிதன் எவ்வாறு எதிர்கொள்கிறான் என்று அழகாக வர்ணிக்கிறார் ஆசிரியர்.
மேலோட்டமாக பார்த்தல் மாணிக்கம் தன் எதிரி , அண்ணாமலை மற்றும் ஆனந்தி அப்பாவிகளாக தெரிகிரகள். அனால் படித்து முடித்தபிறகு சனக்யனின் சொல்லு ஒன்று என் நினைவுக்கு வந்தது "எது தேவையோ அதுவே தர்மம்".
இந்த தத்துவத்தின் அடிப்படையில் பார்த்தல் அண்ணாமலை மற்றும் ஆனந்தியின் துன்பத்திற்கு அவர்கள் மற்றுமே காரணம் என்பது நமக்கு புரியும். இதை சாரதாவின் கதாபாத்திரம் முலம் அருபுதமாக வெளிபடுத்துகிறார் ஆசிரியர்.
அகிலனின் - சித்திரப்பாவை . தமிழில் நான் படித்த முதல் நாவல். . ஞானபீட விருது பெற்றது. . அறம் சார்ந்து, நமது இயல்பு வாழ்க்கையில் நடக்கும் பல சமூக முரண்களை பல இடங்களில் அற்புதமாக சுட்டிக்காட்டியுள்ளார். . பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல். . ஓர் ஓவியக் கலைஞனின்(அண்ணாமலை) வாழ்வில் ஏற்படும் காதல் (ஆனந்தி), துரோகம் (மாணிக்கம்), நட்பு (சாரதா), கைவிட முடியாத உறவாய் (சுந்தரி) என மிகச் சில கதாபாத்திரங்களை கொண்டு வாழ்வில் நிகழும் மாற்றங்களைத் தன் கதையின் மூலம் எடுத்துரைத்திருப்பார் எழுத்தாளர் அகிலன்.
ஓர் ஓவியக் கலைஞனின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைத் தன் கதையின் மூலமாக எடுத்துரைத்திருப்பார் எழுத்தாளர் அகிலன்.
(அண்ணாமலை) கதையின் நாயகன், படிப்புச் சற்றே பிடிபடாதக் காரணத்தாலும் மற்றும் அவனுள் இருக்கும் கலையை அவன் எப்படி வெளிகொண்டுவந்தான்? யார் மூலமாக அது வெளிவந்தது? கதையின் பிற்பகுதியில் எப்படி அண்ணாமலை ஓர் ஓவியக் கலைஞனாக உருமாறுகிறான் என்பதைக் கதையின் மூலமாக நேர்த்தியாகக் கூறியிருப்பார்.
மாணிக்கம் நாயகனின் நண்பனாக வலம்வந்து அண்ணாமலைக்கே தெரியாமல் அவனை எப்படியெல்லாம் ஆட்டிவைகிறான் என்பதையும் ஒரு தொய்வில்லாமல் எழுத்தாளர்ச் சொல்லியிருப்பார்.
ஆனந்திக் கதையின் நாயகி. அண்ணாமலைக்கும், ஆனந்திக்கும் எப்படிக் காதல் மலர்கிறது, அவர்களிடம் ஒரு மென்மையான அழகான புரிதல் இருந்ததையும், மற்றும் இந்தப் புரிதல் எப்படி யாரால் பிரிக்கப்பட்டது என்பதை எழுத்தாளர் உருக்கமாகக் கூறியிருப்பார்.
அவர்களின் காதல் எப்படிக் கனவாக மாறியது மற்றும் காலத்தின் கட்டாயத்தில் ஆனந்தி ஏன் வேறு மனிதனைக்கல்யாணம் செய்து கொள்கிறாள் போன்றதை அவர் பாணியில் எழுத்துவடிவத்தில் கொடுத்திருப்பார்.
அண்ணாமலைக்கு எப்படித் திருமணம் நடக்கிறது, கணவன்மனைவியாக அவர்கள் சந்தோஷமாக எப்படி இருந்தார்கள் என்பதையும் சுவாரசியம் குறையாமல் வெளிப்படுத்தியிருப்பார் எழுத்தாளர்
காலம் பொல்லாத்தது அஃது எப்படி ஆனந்தி மற்றும் அண்ணாமலையின் மனைவி(சுந்தரியை) எப்படியெல்லாம் ஆட்டிப்படைத்தது , திடீர் சுந்தரியின் மறைவு எப்படி அண்ணாமலையை உலுக்கியது என்பதைச் சொல்லியிருப்பார்.
ஆனந்தியின் வாழ்கையில் எப்பேர்ப்பட்ட போராட்டங்களை அவள் சந்தித்தாள் என்பதையும் தொய்வில்லாமல் கதையைச் சொல்லியிருப்பார்.
கடைசியாக அண்ணாமலை, ஆனந்தி, ஆனந்தியின் தந்தை, மாணிக்கம், வாழ்வில் என்ன நடந்தது என்பது தான் இந்த சித்திரப் பாவை நாவல் பாலமுருகன்.லோ
எத்தனையோ இக்கால நூல்கள் பெற்றிருக்கும் அளவிளான மதிப்பீடுகள் கூட இந்த ஜனானபீட விருது பெற்ற நூலுக்கு கிடைக்கவில்லையே என்ற ஏமாற்றம் எனக்கு.
நான் எத்தனையோ நூல்களை வாசித்து உள்ளேன் ஆனால் இது ஏற்படுத்திய தாக்கத்தை எதும் ஏற்படுத்தவில்லை என்றே கூறுவேன்.
இந்த நூல் நகரத்திற்கும் கிராமத்திற்கும் ஆன வித்தியாசத்தை கனகச்சிதமாக எடுத்துரைகின்றது.
மனிதன் எப்படி மனிதனாக இருக்கவேண்டும் என்பர்தர்க்கு உதாரணமாக அண்ணாமலை, கதிரேசன், ஆனந்தி, சாராத, சரவணன் நமக்கு எடுத்துரைக்கின்றனர்
மனிதன் எப்படி மிருகம் ஆகிறான் என்பதை மாணிக்கம் நமக்கு கூறுகிறான்.
காதல், அன்பு, கோபம், வஞ்சகம், பழி, துரோகம், காமம், நட்பு, கலை, இயற்கை, என அனைத்தையும் உள்ளடக்கியிருக்கிறது.
அண்ணாமலை - தான் எவ்ளோ கோபம் கொண்டாலும் அதை வெளிக்காட்டாமல், கோபம் தலைக்கு ஏறிய போதெல்லாம் தன்னை தனிமை படுத்திக்கொண்டு கோபம் அடங்கிய பின்பே மீண்டும் வெளிபடுவான் ... இதுவே மனிதனுக்கும் மிருகத்துகும் உள்ள வித்தியாசம்.
My first and best novel in Tamil language.. It inspired me in various categories regarding art , love, colonialism, betrayal, hatred, difference between love and infactuation. We can see some other perspective of the remarriage. It may arose everyone up against this remarriage at that time period of the novel being written.. It uses reasonable facts and readable decent language usage. Hands off to great author akilan...
A contemporary Tamil social novel about love, marriage, and missed chances. The story centers on Annamalai, a gentle, dreamy painter, whose life is shaped by four key relationships: his love for Anandi, the betrayal and rivalry with Manickam, his deep friendship with Sarada, and his unavoidable, complicated marriage to Sundari.
Through these few characters, Akilan shows how people end up in mismatched marriages and lives that do not quite fit them, but still try to live decently inside social expectations. Anandi’s forced choices and Sundari’s position as a wife whose husband’s heart is elsewhere highlight the constraints placed on women, especially around reputation and duty.
The novel is full of love, loyalty, anger, betrayal, and regret, but written in simple, vivid language that makes the characters feel very close to real urban life. Chittirappavai will appeal to readers who like emotionally grounded stories about regret, timing, and the quiet ache of lives that could have gone differently.
An Excellent Book about life. How the person person should be, And Discipline is more important than money. We should not follow duplicate things in life. Happiness is important than Rat race for money. What is love? Life. Every line touchable our heart, Loved the way Akilan sir written. Every one must read. Best Social awareness book. We should proud to had such a excellent writer in TamilNadu.
உலகத்ததில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். இந்த சமூகம் வகுத்த வாழ்க்கைக்குள் பொருந்த இயந்திரம் போல் ஓடிக்கொண்டிருப்பது ஒரு விதம். மற்றொரு ரகம் கலை கவிதைகளில் ஆர்வம் கொண்டு இயற்க்கையோடு ஒன்றி எளிமையாக வாழ்பவர்கள். இந்த கதை அவ்விரு வர்கத்திற்கும் நடக்கும் போராட்டம் தான்.
சிறுவயதில் இருந்தே ஓவியம் வரையும் திறன் பெற்றவன் அண்ணாமலை. அவனுக்கு பயிற்ச்சி அளிக்கும் கலைஞரின் மகள் ஆனந்தி. கலை ஆர்வம் கொண்ட இருவரும் காதலிக்கின்றனர் ஆனால் மனம்விட்டு சொல்லிக் கொண்டதில்லை. சூழ்நிலை காரணமாக இருவரும் வேறொருவரைத் திருமணம் செய்து கொள்கிறார்கள். இருவரும் தமது இல்வாழ்வில் அனுபவிக்கும் சித்திரவதை நம்மையே சோகத்தில் ஆழ்த்திவிடும். இறுதியில் அவர்களது வாழ்வு என்ன ஆனது என்பது தான் கதை.
தான் ஏமாற்றப் படுவது தெரியாமல் அனைத்தையும் பறிகொடுத்திடும் கதாநாயகன். கலாச்சாரம் பண்பாடு என்று தன் வாழ்க்கையை தொலைக்கும் கதாநாயகி. என்னால் இவர்களை ரசிக்க இயலவில்லை. மாறாக அவர்கள் மீது அதீத கோபம் தான் ஏற்பட்டது. ‘Money heist’ வலைதொடரில் ‘Arturo’ எப்படியோ, அதுபோல் தான் ஆனந்தியின் கணவன் மாணிக்கம். இவனைப் போன்ற இளிவான மனிதர்கள் இந்த உலகத்தில் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
‘கயல்விழி’ மற்றும் ‘வேங்கையின் மைந்தன்’ வாசித்ததும் நான் முடிவு செய்துவிட்டேன், திரு அகிலன் தான் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் என்று. காதல் நிரம்பி வழிந்தோட ஆரம்பித்த கதை, முதல் பாகத்தின் இறுதியில் என்னை வேதனைக்குள்ளாக்கியதும் அகிலன் இப்படி ஏமாற்றிவிட்டாரே என்று நொந்து கொண்டேன். ஆனால் கதையின் முடிவை வாசிக்கையில் தான் புலப்பட்டது இப்படைப்புக்கு ஏன் ஞானபீடம் பரிசளிக்கப்பட்டது என்று. அகிலன் ஒப்பற்ற எழுத்தாளர் என்று மற்றுமொருமுறை உணர்ந்தேன்.
எம்பதுகளில் வெளிவந்த black&white திரைப்படங்களை விரும்புபவரா நீங்கள்? அப்படியானால் இந்த படைப்பு உங்களுக்காக!
This novel was published in 1968 if I am right. But accurately giving current city life and it's pathetic way of life. Great write and characterization of each characters. It's novel portraying life of an artist Annamalai. The enmity between Annamalai and Manikkam. The untold love between him and Anandhi. Saradha a strange character known for true friendship. Almost all characters including smaller ones were thoroughly superb and more over close to reality. Very nice narration and kudos to Akilan!
Old book but that story still telling the current scenario . How selfish people behave and innocent people lives in that circumstances,the way narration is good . I hated the innocent Annamalai because of him how he missed his love . Sometime I got angry on writer why he didn't give any punishment to Manickam?
கலை,காதல், வாழ்கை நெறி, இந்த சமூகத்தின் கட்டுபாட்டு விலங்குகள் (சங்கிலி), மனித எதார்த்த பண்பு, என அனைத்தையும் அப்பட்டமாக படம் பிடித்துக் காண்பித்து ஒரு எழுச்சியையே இங்கு தூண்டி விட்டுவிடுகிறாரே அகிலம்!
காலத்திற்கேற்ப பெண்கள் எவ்வாறு மாற வேண்டும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம். ஆனந்தி போல் இல்லாமல் புதுமை பெண்ணாக பெண்கள் இருக்க வேண்டும். இல்லையென்றால் நாமும் படுகுழியில் விழலாம்.