Jump to ratings and reviews
Rate this book

யூதர்கள்-வரலாறும் வாழ்க்கையும்

Rate this book
Noble prize winners, Oscar Winners, Greatest Artists, Scientists, Doctors - if you make a list of top people in any field, you'll be surprised to see the list of Jewish names in those list. Apart from their achievements, they have suffered all through the history right from the days of Moses till the Israel-Palestine issue. This book clearly brings out the life of jews and their battles, sufferings, customs, beliefs, strategies etc.

264 pages, Paperback

First published April 1, 2007

72 people are currently reading
927 people want to read

About the author

Mugil

31 books50 followers
Mugil, a renowned, best-selling Tamizh writer contributing to various platforms like Weekly Magazines, Books, Television and Cinema. Mugil's works focus on introducing History & Research based Historical content to the current generation of young readers. Born 1980, Native Tuticorin, Tamilnadu and Mugil lives in Chennai.

முகில், முழுநேர தமிழ் எழுத்தாளர். புத்தகங்கள், தொலைக்காட்சி, சினிமா என்று மூன்று தளங்களில் இயங்கி வருகிறார். 35-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருக்கிறார். சரித்திரத்தை எளிய மொழிநடையில் வலிமையாகச் சொல்லும் இவரது பாணி தனித்துவம் வாய்ந்தது. 1980-ல் பிறந்த இவரது சொந்த ஊர் தூத்துக்குடி. வசிப்பது சென்னையில்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
81 (33%)
4 stars
86 (35%)
3 stars
45 (18%)
2 stars
15 (6%)
1 star
12 (5%)
Displaying 1 - 20 of 20 reviews
Profile Image for Balaji M.
220 reviews14 followers
February 6, 2017
இப்புத்தகத்திற்கு, யூதர்கள்(Jews) என்ற பெயருக்கு பதில், "இனம்" என்றிருந்திருக்கலாம்.

இயேசுவை காட்டிக் கொடுத்த "Judas Iscariot"ன் காலத்தில் ஆரம்பிக்காமல்,
கடவுள், மனித படைப்பு, மோசே, ஆபிரகாமிய மதங்கள், யூதம், கிருத்துவம், இசுலாம் எனச் சென்று..

பின் வரலாறாக..,இனஎழுச்சி, அதனால் பிற இனமக்களால் துரத்தியடிப்பு அல்லது கொலையுறுதல், அதன்பின் உலகப்போரில் யூதர்களின் நிலை, தற்கால வளர்ச்சி, சடங்கு சம்பிரதாயங்கள் வரை விவரிக்கப்பட்டிருக்கிறது.

உலகின் தலைசிறந்த அறவியல் வல்லுநர்கள், மேதாவிகள் பலர் யூத இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது நாம் அறிந்ததே!

மேலும் யூதர்கள் பற்றிய பல தகவல்களை இப்புத்தகம் மூலம் அறியக்காணலாம். உதாரணமாக,

* இயேசு 3 நாட்களுக்கு பின் உயிர்த்தெழுந்தார் என நம்பியவர்கள் கிருத்துவர்களாகவும்,
அவர் ஒரு தீர்க்கதரிசி, மறைந்துவிட்டார் என நம்பியவர்கள், யூதர்களாகவும் தொடர்ந்தனர்.
அவர்கள் ஜெருசலமை புனிதநகரமாகவும், சாலமோன் தேவாலயத்தின் மீதமான சுவரை பிரார்த்தனை பிம்பமாகவும் வழிபடுகின்றனர்.

*உலகின் எந்த மூலைக்கு விரட்டியடிக்கப்பட்டாலும், யூதர்களின் எண்ணமும் செயலும் தங்கள் தேசமான ஜெருசலமையும் அதனை சுற்றியுள்ள பகுதியையும் நோக்கியே இருக்கும். அது ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்களின் மீள்குடியேற்றித்திலும் காணலாம். அந்த பகுதியே தற்போதைய இஸ்ரேல்.

*அகதிகளாய் எந்த தேசத்துக்கு துரத்தியடிக்கப்பட்டாலும், அந்த தேசத்து மக்களோடு இணக்கமாக செயல்பட்டு முன்னேறும் இனமாக யூத இனம் இருந்து வருகிறது.
(தற்போதெ ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த மக்களின் வளர்ச்சியும் அப்படியே உள்ளது.)

*யூதர்களின் தாய்க்கு பிறந்தவர்களையே அந்த இன மக்கள், யூதர்களாக ஏற்கின்றனர்.

இப்படி...

பற்பல போர்களையும், இன அழித்தொழிப்புகளையும், சித்ரவதைகளையும், ஹட்லர் போன்ற கொடுங்கோலர்களையும் மீறி,
யூத இனம் பிழைத்து, தற்போது உலகையே பின்னாலிருந்து இயக்குகிறதென்றால், அதற்கான காரணம் அவர்களின்
இன ஒற்றுமையும், இனப் பாசமுமே
ஆகும்.
2,121 reviews1,108 followers
October 8, 2019
ஓர் இனத்தின் வரலாற்றை முழுவதும் அறியத் திரும்பிப் பார்த்தோமானால் ஆங்காங்கே இரத்த கறைகள் இருக்கத் தான் செய்யும் ஆனால் இரத்தத்தாலே தோய்த்தெடுத்த ஓர் இனம் இருக்குமென்றால் அது யூதர்கள் தான்.

இரண்டாம் உலகப்போரைப் பற்றிப் படிக்க நினைத்த போது அதன் நாயகன், வில்லன், காரணகர்த்தா என்று சொல்லப்படும் ஹிட்லர் தான் ஞாபகத்திற்கு வந்தது. ஹிட்லர் ஞாபகத்திற்கு வரும் போது யூதர்களும் சேர்ந்து வருவது தானே சரித்திரம் விட்டுச் சென்ற சுவடு.

மனிதக் குலம் உண்டான காலத்திலிருந்து இப்புத்தகம். தொடங்குகிறது. தேவகுமாரன் என்று போற்றப்படும் மோசஸ் எகிப்தில் துன்பத்தால் அவதிப்பட்ட யூதர்களைக் கடவுளின் நிலம் நோக்கி நகர்த்தி வந்ததிலிருந்து இரத்தத்தில் நனையும் சரித்திரம் தொடங்குகிறது.

இஸ்ரேல் கடவுள் யூத இனத்திற்காக அளித்த பூமி என்பதை ஆண்டாண்டு காலமாக பற்றிக் கொண்டு உயிரையும் துச்சமாக மதித்து இனப் பெருமையை நிலைநாட்ட அவர்கள் செய்யும் அர்ப்பணிப்பு ஆச்சரியங்களையே கொடுக்கிறது.

தாங்கள் மட்டுமே கடவுளின் படைப்பில் உயர்ந்தவர்கள் என்ற இவர்களின் நம்பிக்கையே மற்ற இனங்கள் இவர்களை வெறுக்கக் காரணம் என்று தெரிந்தாலும் அதில் மாற்றமில்லாமல் இன்றளவும் இனத்தைத் தூக்கிப் பிடிக்கும் காரியத்தை அவர்கள் நிறுத்தவில்லை.

ஏசுவைக் காட்டிக் கொடுத்தவன் யூதன் என்பதனால் அதுவே அவர்களின் அடையாளமாகக் காட்டப்படுகிறது.

ஏசுவின் இறப்பிற்குப் பிறகு சில யூதர்கள் தன் இனத்திலிருந்து பிரிந்து கிறிஸ்துவ மதத்தைத் தோற்றுவித்தது மற்றொரு இரத்த சரித்திரத்தின் தொடக்கமாகவே மாறிவிட்டது.

இஸ்லாமியர்களின் தூதுவர் என்று போற்றப்பட்டவரும் இஸ்ரேலின் அதே புனித இடத்தில் காட்ட மதப்பிரச்சனைகள் எழ ஆரம்பித்து மனிதத்தை விட மதமே உயர்ந்தது என்று மக்களின் மனதில் விதைத்துவிட்டார்கள்.

இப்புத்தகம் யூதர்களைப் பற்றி ஒரு முழுமையான புரிதலைக் கொடுக்கிறது. இடமில்லாமல் எவரின் உதவியும் கிடைக்காமல் நாடோடி வாழ்க்கை வாழ்ந்தாலும் கிடைத்த இடத்தைத் தனதாக்கும் இராஜதந்திரத்தைக் கைவரப் பெற்றவர்களுக்கு அதுவே நன்மைகளை அளிக்கும் அட்சயபாத்திரமாகுகிறது.

உலகம் மொத்தமும் சேர்ந்து ஓர் இனத்தை ஓட ஓட விரட்டியடித்தால் அவர்கள் கொடுக்கும் பதிலடி நயவஞ்சகத்தின் வழியே தான் வரும்.

கூட்டுச் சமூகத்தின் உயர்வை யூதர்களின் பாதையில் தான் உணரமுடியும். அதுவே அவர்களின் பலம் . அது இருக்கும் வரை எக்காலத்திலும் அவர்களை அழிக்க முடியாது தான் என்று தோன்றுகிறது.
10 reviews2 followers
May 18, 2012
Best & Must Read to understand my religion - Christianity. Clearly understood the Israel-Palestine problems.
Profile Image for Remy Moses.
35 reviews4 followers
August 1, 2021
ஓர் இனத்தின் அல்லது ஒரு போராட்டக் குழுவின் வரலாற்றினைத் புரட்டிப்பார்த்தால் ஒரு சில ரத்தக் கறைகள் இருப்பது சாதாரணம் தான்.ஆனால் யூதர்களின் வாழ்க்கையும் வரலாறும் இன்றுவரை ரத்தத்தால் மூழ்கியுள்ளது .இந்தப் புத்தகத்தினை வாசித்த பிறகு தான் யூதர்கள் குறித்தும், ஹிட்லர் ஏன் யூதர்களை குறிவைத்து கொன்றொழித்தார் என்பதையும் என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. ஹிட்லரின் வதை முகாம்கள் பகுதியினை வாசிக்கும் பொழுது மனம் பதைபதைக்கிறது .மேலும் அந்த புத்தகத்தில் யூதர்களின் முன்னோர்கள் அவர்கள் எவ்வாறு தோன்றினார்கள், அவர்களின் வரலாறு ,அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே இன்று வரை நிகழ்ந்துவரும் யுத்தம்,தனி நாடு கேட்டு போராடிக் கொண்டிருந்த யூதர்களை எவ்வாறு ஹிட்லரின் செயல்களே மறைமுகமாக தனிநாடு பெறச் செய்தது என்பதையும் அவர்களின் மத நம்பிக்கை,பண்டிகைகள், சமூகம், சடங்குகள் ,சம்பிரதாயங்கள் ,மேலும் இந்தியாவில் யூதர்களின் நிலை என்ன என்பதனை குறித்து எழுத்தாளர் முகில் அவர்கள் மிகவும் சுவாரசியமாக தன்மையிலும் ,வரலாற்று புத்தகமாக இருந்தாலும் சுவையாக கொடுத்திருக்கின்றார்.யூதர்கள் பற்றி தெரிந்து கொள்வதற்கு உகந்த புத்தகம்.
Profile Image for Saravana kutty.
1 review
December 14, 2014
யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்
197 reviews7 followers
February 3, 2022
I have been longing to read about the history of Jews since many years, this book was an absolute treat.

It kind of changed my perspectives i had about three religions - Christianity, Islam and Judaism. You will really get to know about the detailed reasons behind the Israel Palestine burning issue..

Who are Jews where they come from and how are they able to run and grow around in any country even after being hunted out from their places, their history is full of blood and wars. What makes them go ahead is there utmost belief on God and having a country for them..

They have been great in all fields, that can be known from the list of Nobel prize Winners..

Have their history been such to show complete sympathy over them, have they not done any mistakes? They have quite a few of them too.. But no one can forgive and forget the holocaust that happened on them during second world war.. Really Atrocious..

It also briefs about their way of life, celebrations, marriage, death, their festivals . Interesting stories are behind each of the celebration. During Sabath, the rest day of the week, they will not do anything literally any thing( that much they believe and ensure to follow their laid out customs)

The cherry on the cake was, i was able to read it Tamil, which made me to completely immerse myself, sympathise, get angry at times and empathize, understand about Jews.. Who cannot know about Mozart the secret agency of Israel(which is far more superior than CIA)

One thing that was interesting and astonished me was that, this religion has not tried to do any conversion. By the way, even if you want to it is near to impossible to be converted ( with all the difficult things one has to go through)..

Complete satisfaction was the outcome and learning and getting a different perspective was also ensured through this book. Many things were known to me first time, which made it very informative too..
Profile Image for Kalaiselvan selvaraj .
134 reviews18 followers
March 15, 2020
ஜெருசேலம் - இந்த இடம் யூத மக்கள் வாழ இறைவன் அருளியது. இந்த இடம்தான் இறைத் தூதர் இயேசு பிறந்ததும் மறைந்ததும். இங்கு இருக்கும் ஒரு மலை குன்றிலிருந்து தான் இறைவன் தோன்றி முகம்மது நபி(இறைத் தூதர்) அவர்களை ஆசிர்வதித்தார். யூத, கிருஷ்துவ, இஸ்லாமிய ஆகிய மூன்று மதங்களின் புனித பூமி ஜெருசேலம். புனித பூமி ஜெருசேலம் யாருக்கு சொந்தம் என நடந்த சண்டையில் மாண்ட மனிதர்களின் எண்ணிக்கைக்கு கணக்கு இல்லை. இஸ்ரேல்(யூதர்கள்) இன்று இந்த இடத்தை முழுவதுமாக கைப்பற்றிவிட்டார்கள் அவர்களின் கனவு சாலமன் ஆலயம் மீண்டும் ஜெருசேலமில் கட்டப்பட வேண்டும் என்பதே இந்த கனவை நோக்கியே யூத மக்கள் ஒவ்வொருவரும் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
யூதர்கள் வரலாற்றில் பல இன்னல்களை சந்தித்தவர்கள், கொடுர(ஹிட்லர்) மனிதன் கையில் சிக்கி கொத்துக் கொத்தாக செத்தவர்களின் எண்ணிக்கை பத்துலட்சத்தை தாண்டுமாம். ஜெருசேலம் நகரத்திற்காக யூதர்களின் ரத்தம் ஆற்று வெள்ளமான வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பே இந்த புத்தகம். -கலைச்செல்வன் செல்வராஜ்.
Profile Image for N S MUTHU.
51 reviews7 followers
June 30, 2021
அற்புதமான பாரம்பரியம்!
அசாத்தியமான வரலாறு!
ஆபத்தான வாழ்க்கை!
இதுவே யூதர்களின் நிலைமை... இவர்களின் கதையை படிக்கையில் வரலாற்றின் பல்வேறு காலக்கட்டங்களில் பலரால் கும்மி எடுக்க பட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால் தங்களின் அறிவு நுட்பத்தால் இன்றளவும் பலரை குமுற செய்கிறார்கள்.

ஒரு சமூகமாக வாழ நினைப்பவர்கள், ஆனால் அச்சமூகம் யூத சமூகமாக குறுகி நிற்பதே வேதனை. தாங்களே உயர்ந்தவர்கள் என்ற இவர்களின் எண்ணமே பல நேரங்களில் இவர்களை பந்தாட காரணமாக இருந்து இருக்கிறது.

இன்றைய இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்சனைகளை புரிந்துக் கொள்ளவும் இந்நூல் உதவுகிறது. யூதர்களின் துவக்ககால கதைகள் முதல் அவர்களின் சடங்குகள் சம்பிரதாயங்கள் வரை அனைத்தையும் அற்புதமாக நூலாசிரியர் கூறியிருக்கிறார்
Profile Image for Senthil Kumar  Thiru.
16 reviews2 followers
February 3, 2019
This books clears most of my doubts about the earliest abrahamic religion. Also underlines that Jews are not the sole owners of Jesulaem and details the travails of Palestinian Arab Muslims and how the native Arabs lost the Jewish 'plot'.
Profile Image for Yuvaraj.
12 reviews
December 19, 2024
Well researched, but the following events should have been told in details 1. Holocaust, 2. Ottamon empire imposition of jizya on Jews, 3. PLO terrorism on Jews and Munich Olympic terror attack, 4. India remained a land for Jews, where they never faced any problems because of being a Jew.
Profile Image for Jeeva Jsb.
2 reviews
November 30, 2016
The writing from the author is good. When I start to read, I can't leave the book until I finish. The first book (Other than subject book) which I read continuously till I finished.
Profile Image for Vairavel.
142 reviews4 followers
January 22, 2018
அருமையாக தொகுக்கப்பட்ட நூல். இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லி இருக்கல்லாம்.
10 reviews1 follower
February 4, 2018
நல்ல புத்தகம்

ஒரு விறுவிறுப்பான திரைப்படம் பார்த்த அனுபவம் கிடைத்தது. மிகவும் தெளிவாக எழுதி இருக்கிறார்.ஆசிரியர் இதுபோல் அறிவியல் / கணித புத்தகங்களை எழுத வேண்டும். ஒரு நல்ல புத்தகம் .
9 reviews2 followers
January 9, 2016
Very good information regarding the birth of Christianity and Islam, more importantly the history of Jews and their struggle.
Displaying 1 - 20 of 20 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.