Jump to ratings and reviews
Rate this book

கங்கை கொண்ட சோழன்: முழுத்தொகுப்பு

Rate this book
கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புகிறார்கள். ராஜேந்திரர் இதானால் கோபமடைந்து ஸ்ரீ விஜயத்தின் மீது போர் தொடுக்க முடிவெடுக்கிறார். ராஜேந்திரர் வீரமாதேவி உடன் நாகைக்கு செல்கிறார் போர் கப்பல்களை வாங்க மற்றும் கைபற்ற முடிவெடுக்கிறார். இதனிடையே இடங்கை வலங்கை படை வீரர்களிடைம் பகை மேலும் வலுக்கிறது. இராஜேந்திரர் ராஜாதிராஜானை இளவரசு பட்டம் கட்டுகிறார் , அவனும் தனக்கு தனியாக சபையை உருவாக்குகிறான். கங்கே யாதவ் சோழ நாட்டிற்குள் புகுந்து இராஜேந்திறரை கொல்ல முயற்சித்து , அரையன் ராஜராஜனிடம் அகப்படுகிறான். அவனிடம் எல்லா பதில்களையும் பெற்றுவிட்டு அவனை கொன்று விடுகிறார். ராஜேந்திரர் அம்மங்காவை வேங்கி நாட்டிற்கு அனுப்புகிறார். அரையன் ராஜராஜனையும் அனுப்புகிறார். சோழர் படை ஸ்ரீ விஜயத்தை நோக்கி வீறு கொண்டு சென்றது.

2312 pages, Hardcover

Published January 1, 2014

1 person is currently reading
1 person want to read

About the author

Balakumaran

252 books579 followers
Balakumaran was born in Pazhamarneri village near Thirukattupalli in Thanjavur district in 1946. As a child, he was highly inspired by his mother, who was a Tamil scholar and a Siromani in Sanskrit, used verses of Sangam and other ancient literature to motivate him when ever he was emotionally down. This created a deep interest in Tamil literature which made literature his passion. His first stories were published in a literary magazine called ‘Ka-Sa-Da-Tha-Pa-Ra’ and for which he was also a founding member, a self-anointed militant literary journal that had been launched with a mission to blaze new trails in modernist literature.

He has also contributed to Tamil periodicals such as Kalki, Ananda Vikatan, Saavi and Kumudam. Later he became a famous Tamil writer, author of over 200 novels, 100 short stories, and dialogue/screenplay writer for over 14 films. His writings are noted for a distinct philosophical and religious tone. He is fondly called 'Ezhuthu Sithar' by his fans. He is a disciple of "Sri Yogi Ram Surath Kumar".

In his many novels he shows immense interest in enlightenment. He is considered as "Maanasiga Guru" for many individuals, who are in search of the formless almighty. His lucid but powerful expressions of man-woman relationship and human-God union is a tribute to mankind.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
1 (100%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
255 reviews33 followers
June 13, 2023
புத்தகம்: கங்கை கொண்ட சோழன்
எழுத்தாளர்: பாலகுமாரன்
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ்
பக்கங்கள்: 1656
நூலங்காடி: ஈரோடு புத்தகக் கண்காட்சி 2022

சோழர்கள் வரலாற்றில் முக்கியமான மன்னர்கள் என்று ஒரு பட்டியலைத் தயாரித்தால், விஜயலாய சோழன் , கரிகால சோழன், ராஜ ராஜ சோழன் என்ற வரிசையில் இடம் பிடிக்கும் அரசன் ராஜேந்திர சோழன். ராஜ ராஜ சோழன் தனது காலத்தில், அவருடைய மத்திம காலத்தில் முழுவதும் போர்க்களத்திலேயே கழித்து, 40 அகவையில் தான் அரியணையில் அமர்ந்தார். ராஜேந்திர சோழனும், தந்தையின் வழியே. ராஜேந்திர சோழனும் பல போர்களில் பங்குக் கொண்டு வெற்றிக் கண்டார். ராஜ ராஜ சோழன் தனது மிகப்பெரிய கனவாக தஞ்சை பெரிய கோவிலை நிறுவினார். சோழ தேசத்து மக்கள் மட்டும் இல்லாமல் சாளுக்கிய, பாண்டிய தேசத்து மக்களும் கோவில் கட்ட உதவி புரிந்தனர். அந்தப் பிரம்மாண்டத்தை அருகிலிருந்து பார்த்தாதுலேயே என்னவோ, ராஜேந்திருக்கும் அது போல கோவில் கட்ட வேண்டும் என்ற ஆசை வந்தது. கோவில் மட்டுமல்லாது, கோட்டை தனக்கென ஒரு அரண்மனை அமைத்துக் கொள்ள திட்டமிட்டார். தனக்கென அவர் அமைத்துக் கொண்ட நகரம், கங்கை நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது, ஆதலால் கங்கை கொண்ட சோழபுரம் என்றானது.


ராஜேந்திரனிற்கு அமைந்த அரசவை, பெரும் திறமைமிக்கவர்களைக் கொண்டது. கிருஷ்ணன் ராமன், வந்தியத்தேவன், அருண்மொழி பட்டன், அரையர் ராஜராஜன் என பெரும் அறிவுசார் பட்டாளம். இவர்களின் உதவியோடு செவ்வனே ஆட்சி வந்தார். சேர தேசத்தைச் கைப்பற்றி அங்கே தனது மகனை அமர்த்தி ஆட்சி செய்ய வைத்தார். அவர் மன்னனைப் போல இல்லாமல் ஒரு நண்பனைப் போல நடந்துக் கொண்டதால் அங்கேயிருந்த எல்லோருக்கும் அவனை பிடித்திருந்தது. ராஜேந்திரன் அவனை போருக்கு வருமாறு அழைத்திருந்தார். சூழ்ச்சியால் அவன் இறந்து போனான். ராஜேந்திரன் நொந்து போய் ஊருக்கு திரும்ப நினைத்த போது, அருண்மொழி பட்டன் அவர் உடன் இருந்து, ஆற்றி, போரில் அவர்கள் வெற்றி கண்டனர்.

ஒவ்வொரு முறை போருக்கு தயாராகும் போது ஒரு நாட்டிற்கு என்னென்ன தேவைப்படும் என்பதை தெளிவாக பார்க்கலாம். அவர்கள் செல்லும் பாதையை செப்பனிட்டு, உணவுக்கு அந்தந்த ஊர்களில் ஏற்பாடு செய்வது, வீரர்களின் உடைமைகளை கூர் திட்டுவது, யானை குதிரைகளை பேணிக் காப்பது, எல்லோருக்கும் தேவையான மருந்து என ஒரு அரசு சகலத்தையும் பார்க்க வேண்டும்.

குந்தவை யின் நடவடிக்கையால் விமலாதித்தன் மிகவும் மனம் உடைந்து போயிருந்தான், மேலும் எதிரிகளின் சூழ்ச்சியால் அவஸ்தைபபட்டு இறந்து போனான். அவனது இரண்டாவது மனைவியின் மகனை அரசானக்க முயற்சிகள் நடந்தது. ராஜேந்திரன் தனது மருமகனான ராஜ நரேந்திரனை அரசானக்க போர் செய்ய வேண்டியதாயிற்று.

அரசவையில் இருந்த முக்கிய முகங்கள் மட்டுமல்லாது, ராஜேந்திரனின் வெற்றிக்கு பெரும் உதவியோடு இருந்தது அவனது மனைவி வீரமாதேவி. அரசி என்றால் அரண்மனைக்குள் இருந்து சேவகர்களிடம் வேலை ஏவாமல், யுத்த களத்திற்கு சென்றவள். கப்பல் கட்டுமானத்தை அறிந்துக் கொண்டு போருக்கு உதவி செய்தாள். அருண்மொழி பட்டனோடு கடலுக்கு சென்று கடல் குறித்தும் அறிந்துக் கொண்டாள்.

யுத்ததில் வெற்றி பெறுகிற நாட்டின் பார்வையில் இருந்தே நாம் பார்த்தால் அது செய்யும் தவறுகள் தெரிவதில்லை. தோல்வி அடைந்த நாட்டில் இருந்து பெண், பொன், பொருள் என எல்லாத்தையும் அள்ளிக் கொள்கின்றனர். சில இடங்களில் ஊரையே எரிப்பதையும் பார்க்க முடிகிறது. யுத்தம் என்றால் இழப்பு இரு பக்கமும் தான்.

புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி .


சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி
வாசிப்பை நேசிப்போம்
Displaying 1 of 1 review