பொழுது போக்கிற்காக புத்தகம் வாசிப்பவர்கள் மட்டும் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், ஆழமாக புத்தகம் வாசித்து அதற்குள்ளேயே வாழ்பவர்கள் இந்த புத்தகத்தை தவிர்க்கவும். இது உங்கள் இயல்பு வாழ்க்கையின் நிலைப்பாட்டையும் மனநிலையையும் பாதிக்க கூடும். முடிந்த வரையில் கதாபாத்திரங்களை காதல் செய்யுங்கள் ஏனெனில் யாரோ ஒரு எழுத்தாளருக்கு நாமும் கதாபாத்திரமாகக் கூடும். Pozhuthu pokirkgaga puthagam vaasipavargal mattum intha puthagathai padika vendum endru ketukolgiren, Aazhamaga puthagam vaasithu atharkuleye vaazhbavargal intha puthagathai thavirkanum, ithu ungal iyalbu vaazhkaiyin nilaipaataiyum mana nilaiyaiyum baathika koodum. Mudintya varaiyil kathaapathirathai kadhal seiyungal, eanenil yaaro oru ezhuthalaruku naamum kathapathiramaaga koodum.
#180 Book 21 of 2023-வேசியின் ருசி Author- நந்தா லக்ஷ்மன்
“எல்லா மனுஷனுக்கும் அந்தரங்க மன பசின்னு ஒன்னு இருக்கு,அந்த மனப் பசியை தீக்குறதுக்கு ஒரு தொண வேணும்.”
கல்லூரி மாணவிகளோடு வேசிகளை பழக வைத்து,பிற மாணவிகளையும் வேசிகளாக மாற்றும் ஒரு கல்லூரியின் பிண்ணணியில் இருக்கும் அரசியலை பற்றிய கதை இது.தலைப்பே நம்முள் இக்கதையைப் பற்றிய ஆர்வத்தை தூண்டுகிறது.வேசிகள் எப்படி உருவாகுகிறார்கள்-ஒரு பெண் எப்படி வேசி ஆகிறாள் என்பதைப் பற்றி நிறைய கதைகளில்,புத்தங்களில் படித்திருந்தாலும் இதில் ஆசிரியர் கையாண்டிருக்கும் முறை மிக சுவாரஸ்யமாகவும்,வித்தியாசமாகவும் இருக்கிறது.
முதலில் இது இரு கதைகள்(two-layered story) என தெரிந்த போதே எப்படியும் ஒரு கட்டத்தில் இணையத்தான் போகிறது என தெரிந்திருந்தாலும்,அதை இணைக்கும் விதம் மிக ஆழமாக,மனதை பதைபதைக்கும் விதத்தில் இருக்கிறது.கவிதையாக சில உரையாடல்கள்,எதார்த்தமான சில உரையாடல்கள் என கதை அழகாக நகர்கிறது.
பாகம் இரண்டுக்கான சிறு முன்னுரையை படித்ததும் கண்டிப்பாக பாகம்-2 வெளியிட்டாக வேண்டும் என்று தோன்றுகிறது.பாலியல் தொழில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நிலையில்,அவர்கள் விருப்பப்பட்டு அந்த தொழில் செய்வது வேறு.ஒருவரை வற்புறுத்தி அதில் தள்ளி விடுவது வேறு! இந்த நாள் வரையிலும் இவை எல்லாம் நடந்துக் கொண்டே தான் இருக்கிறது.இந்த மாதிரியான கதைகள் படிக்கையில் அந்த உண்மையை இன்னும் நான் பக்கத்திலிருந்து பார்ப்பது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது.நேர்த்தியான கதை,எழுத்து நடை என எல்லா ரீதியிலும் இந்த புத்தகம் மிளிர்கிறது.இந்த மாதிரியான கதை எழுதுகையில் ஒரு subtleness (நுட்டமான அணுகுமுறை) தேவை.அதை ஆசிரியர் கையாண்டிருக்ககும் விதம் சிறப்பு.