பொன்னியின் செல்வன் – வரலாறும், ஊகங்களும், டூமாவும், புதினமும், திரைப்படமும்: ராஜன் ராதாமணாளன், டான் அசோக், சென் பாலன், கார்த்திக் ராமசாமி, அ சிவக்குமார் ஆகியோரின் முகவுரையுடன்
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவந்ததில் இருந்து நிறைய உரையாடல்கள் நடக்கின்றன. பொன்னியின் செல்வனை பொறுத்தவரையில் வரலாறு, ஊகங்கள், கல்கியின் புதினம், மணிரத்னத்தின் திரைப்படம் என்று வெவ்வேறு விஷயங்கள் உள்ளன. புதினத்தில் (நாவலில்) உள்ளது திரையில் இல்லை என்று சிலரும், வரலாற்றில் உள்ளது புதினத்தில் இல்லை என்று சிலரும் பேசுகிறார்கள். இதனால் பலர் குழம்புகிறார்கள்.
பழந்தமிழர்களின் அரசர்கள் குறித்து பொதுவாகவும், சோழர்கள் குறித்து குறிப்பாகவும் அறிந்து கொள்ளும் ஆர்வம் பலருக்கும் இருப்பதை அவர்கள் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தும் கருத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
எனவே இது குறித்து ஒரு சிறு அறிமுக நூலை எழுதலாம் என்று உந்தப்பட்டு நான் அற