Jump to ratings and reviews
Rate this book

My Father's Friend

Rate this book
Ashokamitran published the collection of stories called Appavin Snehidar (My Father's Friend) in 1991. It is his tenth anthology of fiction, and brings together a short novel, a novella and nine short stories, all of which were written between 1990 and 1991.

Translated from the Tamil by Lakshmi Holmstrom.

207 pages, Hardcover

First published December 1, 1991

20 people are currently reading
279 people want to read

About the author

Ashokamitthiran

83 books225 followers
1931ம் ஆண்டு செப்டம்பர் 22ந் தேதி, ஆந்திர மாநிலத்தில் உள்ள சிகந்தராபாத்தில் பிறந்தவர். இயற்பெயர் ஜ. தியாகராஜன். தமது இருபத்தொன்றாவது வயதில் (தந்தையின் மறைவுக்குப் பின்) குடும்பத்தினருடன் சென்னைக்குக் குடியேறி, ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றத் தொடங்கினார். அப்போது அகில இந்திய வானொலி நடத்திய ஒரு நாடகப் போட்டிக்காக "அன்பின் பரிசு" என்னும் நாடகத்தை எழுதினார். அதுவே அசோகமித்திரனின் முதல் படைப்பு. 1954ம் ஆண்டு வானொலியில் அந்நாடகம் ஒலிபரப்பானது.

அசோகமித்திரனின் முதல் சிறுகதை "நாடகத்தின் முடிவு". 1957ம் ஆண்டு கலைமகளில் இது பிரசுரமானது. கலைமகளில் அவரது இரண்டாவது சிறுகதை "விபத்து" பிரசுரமானதையடுத்து, மணிக்கொடி கி.ரா. மூலம் ந. பிச்சமூர்த்தியின் அறிமுகமும், அவர் மூலம் "எழுத்து" பத்திரிகைத் தொடர்பும் கிடைத்தது.

சுமார் நாற்பதாண்டு காலத்துக்கும் மேலாகத் தமிழின் மிக முக்கியமான புனைகதை எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்படும் அசோகமித்திரன், அமெரிக்கா, சிங்கப்பூர், ஜெர்மனி, இலங்கை ஆகிய நாடுகளுக்கு அழைப்புகளின் பேரில் இலக்கியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அவரது பல படைப்புகள், பல இந்திய அயல் மொழிகளில் மொழியாக்கம் பெற்றிருக்கின்றன. அப்பாவின் சிநேகிதர்' என்கிற சிறுகதைத் தொகுப்புக்காக, அசோகமித்திரனுக்கு 1996ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
20 (33%)
4 stars
23 (38%)
3 stars
8 (13%)
2 stars
4 (6%)
1 star
4 (6%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Vino Kumar Ponnu Krishnan.
87 reviews
May 27, 2021
8 சிறுகதை தொகுப்புக்கு 1996 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற புத்தகம்.

அருமையான சிறுகதைகள், படித்தால் எழுத்தாளர் சுயசரிதை போல் இருந்தது

எல்லா சிறுகதைகளும் சரியான முடிவு இல்லாமல் முடிவடைகின்றன, இருந்ததும் இது போன்ற கதைகளுக்கு இது ஒரு சிறப்பு.

1940 முதல் 1960 வரை பெரும்பாலான கதைகள்.

செகந்திராபாத் மற்றும் ஹைதராபாத் அப்போதைய நிலவரம் குறித்து நிறைய தகவல்கள்.

கூடுதலாக 2 குறுநாவலும் அடங்கும் இந்தப் புத்தகத்தில்
1. விழா மாலைப் போதில்
2. இன்ஸ்பெக்டர் செண்பகராமன்
Profile Image for Saravanan Meivel.
179 reviews8 followers
September 3, 2017
A good story invokes feelings into spectator's heart,this book did that job nicely..simple story but elegant narration made to read this outstanding book again and again..
Profile Image for Dr. Johnson B.
20 reviews
April 19, 2020
அசோகமித்திரன், இந்திய எழுத்தாளர்களின் புகழ்மிக்கவராக விளங்கியவர். அவர் ஒரு எளிமைத் தோற்றமுடைய பெருங்கலைஞன். கரையாத நிழலாய் என்றும் நம் மனங்களில் நீங்காமல் இருப்பவர். புனைவுலகில் புலிப்பாய்ச்சலைக் காட்டியவர். கதை தொடங்குவதற்கு முன்னதான வருணனைகளைக் கைக்கொள்ளமாட்டார். படிக்கும் வாசகனின் மனநிலையைப் புரிந்துகொண்டு அதனை உணர்ந்து, எழுதும் எழுத்தாளர்களில் இவரும் குறிப்பிடத்தக்கவர். மிகச்சில சொற்களிலேயே மனித வாழ்க்கையின் உன்னதத்தைக் தொட்டுக் காண்பித்துவிடுவார். அவருடைய சிறுகதைகளில் வெளிப்படும் சமூகத்தின் தாக்கம் இன்றும்கூட உணரமுடிகிறது. அவருடைய எழுத்துகளில் அவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
அசோகமித்திரனின் கதாபாத்திரங்கள் எல்லோருமே ஏதோஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்களாக, அனுதாபத்திற்கு உரியவர்களாக இருக்கிறார்கள். அதிகாரத்தில் இருப்பவர்களை விடவும், அத்தகைய மனிதர்களால் துன்பத்திற்கு ஆளாகிறவர்கள் அதிகமாக அவருடைய எழுத்துகளில் கவனப்படுத்தப்படுகிறார்கள். கதைமாந்தர்கள் அனைவரும் சலிப்பூட்டும் வாழ்க்கையைத் தொடர்பவர்கள், பெரும்பாலும் பெரும் கனவுகளோ, பேராசைகளோ இல்லாதவர்கள். வயிற்றுக்காகவும் தன்மதிப்புக்காகவும் போராடுகிறவர்கள். அவர்களது அன்றாடச் செயல்களில் அவர்களே அறியாத நுண்ரகசியங்களையே அவர் கதையாக மாற்றினார். வெற்றிபெற்ற மனிதர்களின் கதைகளை அல்ல. தோல்வியில் துவண்டு வாழ்க்கையை மீட்க விரும்புகிறவர்களே அவர் தேர்ந்தெடுத்த மனிதர்கள்.
நவீனத் தமிழ் எழுத்துகளில் அறுபது ஆண்டுகாலம் திளைத்த அசோகமித்திரன், பற்றிய கருத்தாக்கத்தைப் பலரும் வியந்து கூறியுள்ளனர். எளிமையும் சாதாரணத் தன்மையும் அவருக்கு இயல்பாகவே அமைந்தவை. அவரின் பல்வேறு படைப்புகளுள் அப்பாவின் சிநேகிதர் தொகுப்பிலும் அதனை நாம் அவதானிக்க முடியும்.

_----------------------

முனைவர் போ. ஜான்சன்
Profile Image for Sangaranarayanan.
5 reviews
February 8, 2018
அ.மியின் படைப்புலகம் என்பது நிஜமான மனிதர்கள் வாழும் உலகம்
Profile Image for Sanjay Rajan.
22 reviews
October 16, 2016
A Good Book. Mostly based on the nizam period's Hyderabad. The stories are like mostly author's own experiences and it is rather interesting too.
Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.