தனது சரித்திரம் முழுதும் உக்ரைன் பல்வேறு தரப்புகளால் மிதி பட்டிருக்கிறது. அனைத்துக்கும் உச்சமாக சோவியத் யூனியனில் இருந்த காலத்தில் அத்தேசம் அனுபவித்த கொடுமைகள் சொல்லுந்தரமற்றது. சோவியத் என்னும் கட்டமைப்பு சிதறி, இதர தேசங்கள் தத்தமது வழியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு சுதந்திரமாக வாழத் தொடங்கிய பின்பும் உக்ரைனின் விதி அதற்கு நிம்மதியைத் தருவதாக இல்லை. மீண்டும் இப்போது ஒரு ரஷ்யப் படையெடுப்பு. உக்ரைனின் பிரச்னைகளை, ரஷ்யப் படையெடுப்பின் காரணங்களை, உக்ரைனைப் பகடைக் காயாக வைத்து மேற்கு நாடுகள் ஆடிக்கொண்டிருக்கும் ஆட்டத்தை இந்நூல் விவரிக்கிறது. உக்ரையீனா, மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில் தொடராக வெளிவந்து ஏராளமான வாசகர்களின் பாராட்டைப் பெற்றது.
Raghavan was born in Adyar, Chennai and spent his early years in many villages of Chengalpet District because of the frequent transfers of his father in his job. In the mid-1980s, his family shifted and settled in Chennai where Raghavanfinished his school and college studies in 1988. Even though he has completed a course in Mechanical Engineering, he did not want to take a job in a factory because of the interest in writing. Raghavan started his career as a sub-editor in Amudhasurabi Monthly Magazine. The famous weekly magazine kalki offered him the post Assistant Editor in 1992 after he showed his talent in humorous articles and stories.
Raghavan worked as an assistant editor in Kalki for about 8 years and joined in kumudam the No.1. Tamil weekly magazine in 2000. After completing a full year in Kumudam as Assistant Editor, he was appointed as the Editor in Charge for then newly started by monthly Kumudam Junction.
Raghavan left the magazine industry and became involved in publishing in 2003 and presently leading the Tamil Division (‘'Kizhakku Pathippagam'’) of New Horizon Media Private Limited.
ரஷ்யா உக்ரைன் மேல் போர் தொடுத்து நான்கு வருடத்திற்கு மேல் ஆகிறது. உலக நாடுகள் பல உக்ரையினருக்கு ஆதரவளித்தாலும் உக்ரைன் ரஷ்யாவின் பிடியிலிருந்து விடுதலையாவது அவ்வளவு எளிதல்ல என்பதுதான் கசப்பான உண்மை. இப்போருக்கான விடையின் சாவி ரஷ்யாவிடம் மட்டும்தான் உள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது போர் செய்ய காரணங்களாக நம்மில் பலரும் அறிந்தவை: உக்ரைன் NATO அமைப்பில் இனைந்து விட கூடாது என ரஷ்யா நினைப்பதும் உக்ரைனின் கிழக்கு மாகாணம் ரஷ்யாவிற்கு சொந்தமானது என்று அவர்கள் எண்ணுவது. ஆனால் இந்த காரணங்களையெல்லாம் தாண்டி அடிப்டையான காரணங்கள் என்னவென்று நாம் தெரிந்து கொள்ள இந்த புத்தகம் உதவும்.
சோவியத் காலத்திற்கு முன்பிருந்தே ஆரம்பிக்கும் அந்த சிக்கலான வரலாற்றை அவருக்கே உரிய எளிய இயல்பான நடையில் கட்டுரைகளாக வடிவமைத்துள்ளார் பா. ரா. தன் வளங்களின் பலம் அறியாமல் ரஷ்யாவிற்கு முன் கைகட்டிக்கொண்டு நின்ற அவர்களின் வரலாற்று பிழை, அவர்களின் மீள முடியாத தற்போதைய நிலை வாசிக்க வாசிக்க மனதில் பாரம் ஏறியவாறே இருந்தது.
மேலை நாடுகள் உக்ரைனை எவ்வாறெல்லாம் ஆதவளிக்கிறது என்பதையும் இந்தியா சீனா போன்ற நாடுகள் ரஷ்யா பக்கம் சாய்ந்திருப்பதின் பின்னணியையும் தெளிவாக விளக்கட்டபட்டிருக்கிறது இக்கட்டுரைகளில். இந்தியா கடைபிடிக்கும் இறையாண்மை இந்தியாவிற்கு மட்டும்தானா என்ற கேள்வியை சிறப்பாக முன்வைத்திருக்கிறார் பா.ரா. ரஷ்ய பிரதமர் புதின் இரண்டாம் உலக போரிலிருந்து வரலாற்றிற்கு அறிமுகம் ஆகிறார் என்பதை வாசிக்கும்போதே திகில் உண்டானது. ஏன் உலக நாடுகள் அனைத்தும் அவரை கண்டால் இப்படி நடுங்குகிறது என்பதற்கு விளக்கம் அங்கு சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது.
உக்ரைனிற்கு ஆதரவாக எந்த குரலும் ரஷ்யா நாட்டில் எழ கூடாது என்று வெளிப்படையாக எச்சரிக்கை விட்டிருக்கிறது. உக்ரைன் மக்களின் குரல் உலக மேடைகளில் ஒலித்தாலும் அதற்கும் மறைமுகமாக முட்டுக்கட்டை போட்டுவிடுகிறது ரஷ்யா என்பதற்கு ஒரு உதாரணமாக எனக்கு தென்படுவது கடந்த வருடம் புக்கர் பரிசு குறும்பட்டியலில் ரஷ்யா உக்ரைன் போரை மையமாக வைத்து எழுதப்பட்ட 'Endling' நாவல் இடம்பெறாமல் போனது. இவ்வளவு இன்னல்களையும் உக்ரைன் இவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கப்பதற்கு காரணமாக இருப்பது அந்நாட்டு மக்களின் ஒற்றுமை. அவர்கள் நாட்டின் மீது அவர்களுக்கு இருக்கும் தேசப்பற்று. உதாரணமாக என் உக்ரைன் தோழியின் பெற்றோர் என் தோழி வாழும் இடமான ஜெர்மனிக்கு குடிபெயர்ந்து வாருங்கள் என்று அவர்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக மன்றாடி கொண்டிருக்கிறாள். ஆனால் அவர்களின் பதில் எங்கள் நாட்டை விட்டு நாங்கள் வெளியேற மாட்டோம் என்பதே.
திடமான மனதை கொண்ட உக்ரைன் மக்களுக்கு விரைவில் விடிவு காலம் பிறக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் இந்த புத்தக வாசிப்பை நிறைவு செய்தேன்.