“என்னடி செய்யப் போற?” “உன் கேள்வி புரியலை!” “நம்ம வீட்ல நிறைய இடம் இருக்கு! சொந்த வீடு வேறு! நான், உங்கப்பா, தங்கச்சிதான்! நீ தாராளமா வந்து இருக்கலாம்! குழந்தைக்கு இங்கே பக்கமா இருக்கற மாதிரி ஒரு ஸ்கூல்ல மாத்திப் போட்ரலாம். அப்பா ஆபீசுக்குப் போகும்போது உன்னை ட்ராப் பண்ணிடுவார்” “எல்லாம் சரிம்மா கிழவியை நான் என்ன செய்யறது?” “சொந்தக்காரங்க வீடு இல்லையா?” “'சரிப்படாதும்மா!” “ஏண்டீ... புருஷனோட ஒரு தனிக் குடித்தனம் அது இதுன்னு ஒரு நாள்கூட ஃப்ரீயா நீ இருந்ததில்லை! அவர் வெளிநாடு போயிட்டும், இந்தக் கெழத்தைக் கட்டிண்டு அழணும்னா, எப்படி?” “அதான் எனக்கும், எரிச்சலா இருக்கு!” காதம்பரியின் தங்கை வந்தாள். “அக்கா! உன் மாமியாரை அவங்க பிள்ளைகூட ஃபாரினு