‘பெரியாரின் இடதுசாரித் தேசியம்’ என்னும் தலைப்பிலான இந்த நூலை எழுத முனைந்த சுப.வீ போன்ற அறிவார்ந்த தோழர்களிடம் நான் தெளிவு பெறுவதற்காக, என் சிந்தனையை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் கேள்வி ஒன்று உண்டு.
பொதுவுடமைச் சிந்தனையாளர் ப.ஜீவானந்தம் எழுதிய ‘நான் ஏன் நாத்திகனானேன்’ என்ற பகத்சிங் கடிதத்ததின் தமிழ் மொழிபெயர்ப்பை ‘பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம்’ மூலம் வெளியிட்ட பெரியார், ஆங்கிலேய அரசு கைது செய்தபோது “இனி இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன்” என்று உறுதியளித்து பின்வாங்கியது ஏன் ~ டாக்டர்.எழில்வேந்தன், 23.7.2023.